![]() |
|
யாழ்தேவி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19) +--- Thread: யாழ்தேவி (/showthread.php?tid=960) |
யாழ்தேவி - kanapraba - 02-09-2006 ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில தூரத்தில் புள்ளிகளாக யாரோ சில பிள்ளைகள் ரயில் விளையாட்டு விளையாடுவது போல ஒரு உணர்வு மனதை நிறைக்கின்றது. " சுக்குபக்கு சுக்குபக்கு கூ, கடகட வண்டி காமாட்சி வண்டி போகுது பார், சுக்குபக்கு சுக்கு பக்கு கூ" முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/ - Aravinthan - 02-27-2006 அருமையான பதிவு கானாபிரபா. கானாப்பிரபா இப்பதிவுக்கு பிறகு வீடு என்ற புதியபதிவினை ஆரம்பித்துள்ளதால், இவரின் யாழ்தேவிபற்றிய பதிவினை http://kanapraba.blogspot.com/2006/02/blog-post.html பார்க்கவும் முன்பு யாழ்தேவியில் பிராயணம் செய்தபோது நடந்த பல சம்பவங்கள் எனக்கு ஞாபகத்துக்கு வருகிறது. 91ம் ஆண்டு ஆங்கிலப்புதுவருடத்தில் வவுனியாவில் இருந்து யாழ்தேவி தனது பிரயாணத்தினை ஆரம்பித்தது. அதற்கு முதல் மதாவச்சியில் 2ம் ஈழப்போர் காரணமாக மதவாச்சியில் இருந்து தான் யாழ்தேவி பயணிக்கும். நான் பயணம் செய்த புகையிரதப்பெட்டியில் பல தமிழர்களும், சில சிங்களவர்களும் பயணித்தார்கள். அவர்களில் சிலர் பலாலி இராணுவத்தினர் விடுமுறைக்காக பயணித்தார்கள். அவர்கள் அறைகுறைத்தமிழில் இதனை உரத்துச்சொன்னார்கள். அவர்கள் எல்லோரும் மதுபானம் அருந்தியவர்களாக நிதனாம் தவறிக்காணப்பட்டார்கள். சில தமிழ் ஆண்களிடம் தமிழ் பெண்கள் பற்றி விசாரித்தார்கள். சிலருக்கு அடித்தார்கள். ஆனால் எல்லாத்தமிழர்க்கும் அடிக்கவில்லை. எனக்கும் விழவில்லை. சில தமிழ்ப்பெண்களின் தலையில் குட்டினார்கள். வேறு சிலதமிழ்பெண்களிடம் கிட்டச்செல்லும்போது சில சிங்களவர்கள் அவர்களைத்தடுத்தார்கள். பிறகு கணக்க சோடாப்போத்தல்கள் வாங்கினார்கள். சிங்களவர்களுக்கு கொடுத்தார்கள். சிலதமிழர்களை சிங்களவர் எனனினைத்து அவர்களுக்கும் குடிக்கக்கொடுத்தார்கள். சிங்களவர்களுக்கு மட்டும்தான் குடுப்போம் என்று கத்தியவண்ணம் சோடாபோத்தல்கள் வாங்கிக் கொடுத்தார்கள். மகோ, பொல்காவலைச்சந்திக்கிட்டவரும்போது அவர்களுக்கு வெறி எல்லாம் முறிந்து நிதானத்து பிறகுவந்தபோது தான் எங்களுக்கு நிம்மதிப்பெருமூச்சு வந்தது. - Snegethy - 02-27-2006 வணக்கம் கானாபிரபா ரயில் அனுபவங்களைத் தூண்டி விட்டிருக்கிறது உங்கள் பதிவு.என்னையும் அக்காவையும் மாமா ஒரு நாள் ரெயின்ல கூட்டிக்கொண்டு போனார்.ரெயின்ல தொங்கட்டானை துலைச்சுப்போட்டு அழுதழுது போனான் வீட்ட.அதுக்குப்பிறகு ரெயின்ல ஏறவே பயம்.ஆனால் மாத்தளையில இருக்கும்போது ரியூசனுக்கு ஒவ்வொருநாளும் ரெயின் தான்.2ம் வகுப்பில படிச்சதெயல்லாம் ஞாபகம் வச்சிருக்கிறீங்கள். "வட வட பார்லி" நான் கேள்விப்படலையே. - Mathan - 02-27-2006 வடையை கூடைகளில் வைத்து விற்பவர்கள் வடே வடே வடே என்றும் ஒரேஞ் பார்லி விற்பவர்கள் பார்லி பார்லி பார்லி என்றும் கத்திக்கொண்டு ரயிலில் செல்வார்களே பார்த்ததில்லையா :? - கந்தப்பு - 02-27-2006 நல்ல பதிவு. 77,79 கலவரங்களில் யாழ்தேவிப்பிரயாணத்தில் சிங்களக் காடையர்களினால் பல தமிழர்களின் உயிர்கள் பலிபோனதும் யாபகத்துக்கு வருகிறது. எனக்குத்தெரிந்த சிலரும் அனுராதபுரத்தில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையில் 70 இறுதிகளில் வரும் மாதம் அல்லது வாரச்சஞ்சிகை ஒன்றில்(பெயர் மாறந்து போய்விட்டது.) பாதிக்கப்பட்ட மக்களின் உண்மைக்கதைகளும், சிறு கதைகளும் வாசித்த யாபகமும் வருகிறது. 90ல் யாழ்தேவியில் பிரயாணிக்கும்போது, குருனாகல் பகுதியில் சில விசமிகள் யாழ் ரயிலுக்கு கல்வீச நான் இருந்த பெட்டியில் உள்ள சிலருக்கும் காயம் ஏற்பட்டது. - Aravinthan - 02-27-2006 நான் சிறுவனாக இருந்தகாலத்தில் எனது அப்பம்மா,அம்மம்மா போன்றவர்கள் தங்களது பழையகாலத்துச்சம்பவங்கள் சொல்வதுண்டு. முதன் முதலாக யாழ்தேவி இணுவிலுக்கு வரும்போது இணுவில் மக்கள் எல்லோரும் போய் யாழ்தேவியைப்பார்த்தது என்றும் அப்பம்மா சொல்லுவா. வெள்ளைக்காரர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த கதைகள், முதன்முதலாக இணுவிலுக்கு மின்சாரம் 3 மணித்தியாலம் இணுவில் கந்தசுவாமி கோவிலடியில் வழங்கும்போது மக்கள் இரவில் பாய்,தலையாணிகளோடு போய் கோவிலில் இருந்த கதைகளும் சொல்வார்கள். 2ம் உலகப்போர் காலத்தில் ஜப்பான் குண்டுபோடப்போறார்கள் எனப்பயந்த கதைகளும் சொல்வார்கள். 79,80களில் குப்பிளானுக்கு முதன்முதலாக தொலைக்காட்சி வந்தபோது பாணனின் மண்டபத்தில் குப்பிளான் மக்களோடு அண்ணன் ஒருகோவில் பார்த்ததும் யாபகம் வருகிறது. தலைப்போடு சம்பந்தம் இல்லாமல் எதோ யாபகத்தில் வந்தவற்றையும் எழுதிவிட்டேன் - Aravinthan - 02-28-2006 சிறுவனாக இருக்கும்போது சிலவருடங்களுக்கு ஒருக்காத்தான் கொழும்புக்கு யாழ்தேவியில் போறதால் எனக்கு கொழும்பு எதோ சொர்க்கம் என்று நினைப்பதுண்டு.(பிறகு நான் கொழும்பு,சென்னை,லண்டன்,கன்பரா,சிட்னி போன்ற இடங்களில் வாழ்ந்தவற்றை ஒப்பீட்டுப்பார்க்க, நான் பிறந்த குப்பிளான் மண் தான் இப்பொழுது சொர்க்கமாகத்தெரிகிறது.) நான் எப்பொழுதும் ஜன்னல் சீட்டில் தான் இருந்து யாழில் இருந்து கொழும்புக்குப்போவேன். கொடிகாமம் நெருங்க அழகிய தென்னந்தோட்டங்கள், பிறகு டெலொ இயக்கத்தின் தாக்குதலினால் அழிக்கப்பட்ட யாழ்தேவியின் பெட்டிகள் விழுந்துகிடந்த காட்சிகள், ஆனையிரவு உப்பளம்,பரந்தன் இரசாயனக்கட்டிடம், வவுனியாக்காடுகளில் எதாவது மரத்தில் குரங்குகள் நிற்கின்றனவா என்று பார்த்தது, அனுராதபுரத்துக்கு கிட்டவர அபயகிரி ,ரூவான்வெலிசயா விகாரைகள் நீண்டனேரங்களுக்கு தூரங்களுக்கும் தெரிந்தகாட்சிகள், குருனாகல் வர எருமைகள், பிறகு மலைகள்,கம்பகா, கொழும்பு வர உயர்ந்த கட்டிடங்கள் எனப்பார்த்து ரசிப்பேன். எனக்கு இன்றசிட்டி ரயிலில் போகப்பிடிக்காது. அது வேகமாகப்போய்விடும் என்பதினால்தான். 15 வருடங்களுக்குப்பின் சென்றவருடம் யாழ்ப்பாணத்துக்கு வாகானத்தில் பிரயாணம்செய்தேன். வவுனியாவில், எமது மண்ணில் சிங்கள இராணுவத்தினர் நிற்பதினைப்பார்க்கக்கவலையாக இருந்து. ஒமந்தையில் அன்புடன் அழகிய தமிழில் வரவேற்ற எமது தமிழிழக்காவல்துறையினர், கிளி நோச்சியில் உள்ள தூயதமிழில் எழுதப்பட்ட வியாபாரனிலையங்களின் பெயர்ப்பலகைகள், மக்களுக்கு உதவுவதற்காகச் செல்லும் போராளிகள், பாண்டியன் சுவையூற்று உணவு, இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். - sinnakuddy - 02-28-2006 யாழ் தேவியிலை .காங்கேசன்துறையிலிருந்து வவுனியாவரையும் நம்மடையாக்களின்ரை அட்டகாசம் தான் வவுனியா தாண்டி வர பெட்டி பாம்பாகி சத்தங்கள் அடங்கி போவதை பார்க்க பரிதாபமாக இருக்கும்... யாழ்தேவி போறது இடையில் ஒருதரும் இருதரும் குகைக்காலை போககைக்காய் இருட்டிக்கும்..அந்த நேரத்தில் சின்னம் சிறுசுகளின்ரை இச்சு சத்தமும் சீ.....என்ற சத்தமும் கேட்க தவறுவதில்லை.. - RaMa - 03-04-2006 ஆகா யாழ்தேவியில் அறிமுகமான ஒரு சகோதர உறவை இன்னமும் தேடிக்கொண்டு இருக்கின்றேன். இந்தியான் ஆமியுடன் தமிழ் குழுக்கள் சேர்ந்து இயங்கிய காலம் அது. நானும் எனது அம்மம்மாவும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்தோம். அப்போது பக்கத்து இருக்கையில் 3 அண்ணாக்கள் பயந்து பயந்து வந்து கொண்டிருந்தார்கள். தமிழ் குழுக்களுக்கு பயந்து கொழும்பில் தங்கியிருந்தார்கள். கையில் கொண்டு வந்த பணங்கள் எல்லாம் முடிந்தவுடன் அதற்கு மேலும் அவர்களின் வீட்டு பொருளாதரம் அங்கு இருக்க முடியமால் பண்ணியது. ஆகவே ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது வவுனியாவில் வைத்து பல ஆண்களை பிடிப்பது தமிழ்குழுக்களுக்கு கை வந்த கலை. ஆகவே அதில் ஓரு அண்ணா தன்னை ஆமி பிடித்தால் என்னை தன் அண்ணா என்றும் இருவரும் மட்டுமே வருகின்றோம் என்றும் சொல்லச்சொன்னார். அன்று எனக்கு மிகுந்த கவனிப்பும். சோடா வடை என்று நல்ல கவனித்தார்கள். வவுனியாவும் வந்தது. வழமை போல் நமது பெட்டிக்குள் வந்தவன் அந்த அண்ணாவை எழும்பி தன்னுடன் வரும்படி கூறினான். உடனே அந்த அண்ணா என்னை பார்க்க நானும் அவரின் கையை பிடித்துக்கொண்டு எழுந்தேன். உடனே அவன் என்னவோ அவருக்கு சொல்லிவிட்டு போய்விட்டான். அவருக்கு நல்ல சந்தோசம். என்னால் தான் தான் தப்பினேன் என்று. சிறுவயது என்றாபடியால் அவரின் விபரங்கள் தெரியலை. ஆனால் சாவகச்சேரி அவரின் பிறப்பிடம் என்று மட்டும் தான் தெரியும். பழைய நினைவுகளை மீட்டுத்தந்த கானாபிரபாவிற்கு எனது நன்றிகள். - Snegethy - 03-04-2006 ஆஹா றமாக்கா...நல்ல விசயம்...அந்தண்ணா மட்டும் இதை வாசிச்சார் ரொம்ப சந்தோசப்படுவார்.நானும் ஒரு அண்ணாவைத் தேடிக்கொண்டிருக்கிறன்..பெயர் சுமந்திரன்.கொழும்பில எங்களுக்கு உதவி செய்தவர்.பிறகு சந்திக்கவே இல்லை.அந்த கொழும்புப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தவர்.பெற்றோரிடம் அமெரிக்கா போகப்போவதாகச்சொன்னார். - Snegethy - 03-04-2006 :oops: :oops: :roll: - வர்ணன் - 03-04-2006 இந்த தலைப்பை இன்னிக்குதான் கவனிச்சன் - எல்லாம் வாசிச்சன் - கானா பிரபா போல- திறமை உள்ளவர்கள் ஆக்கங்களை கவனிக்காமல்விட்டது - குற்ற உணர்வா இருக்கு ! அற்புதம் பிரபா- தொடருங்கள்! 8) நானும் இனி உங்க ரசிகன்! - kanapraba - 03-04-2006 கருத்துகளைத் தந்த அரவிந்தன், சின்னக்குட்டி, கந்தப்பு, ரமா, வர்ணன் உங்களுக்கு என் நன்றிகள். சினேகிதி, சுமந்திரன் என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலும் ஒருவர் இருக்கிறார், - Aravinthan - 03-27-2006 யாழ் தேவியில் புதிய தமிழகத்திரைப்படம் ஒன்று படமாக்கினார்கள் . தமிழ் சினிமா இணையத்தளத்தில் வந்த செய்தி. http://www.tamilcinema.com/CINENEWS/Hotnew...arch/250306.asp - sOliyAn - 03-27-2006 Aravinthan Wrote:யாழ் தேவியில் புதிய தமிழகத்திரைப்படம் ஒன்று படமாக்கினார்கள் . தமிழ் சினிமா இணையத்தளத்தில் வந்த செய்தி.http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2006/march/250306.asp இந்த செய்தியில் பல விபரங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. விபரம்: http://tamilamutham.net/amutham/index.php?...d=248&Itemid=34 பாடல்கள்: http://tamilamutham.net/amutham/index.php?...id=19&Itemid=38 - Sujeenthan - 03-27-2006 சோழியன் அண்ணா. உண்மையை உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி. - Snegethy - 03-27-2006 யாழ்தேவி பாடல்கள் ஏற்கனவே தமிழமுதத்தில் கேட்டிருந்தாலும் இப்போ படமாக வெளிவருவது மகிழ்ச்சி.படம் பற்றிய ஏனைய தகவல்களையும் தாருங்கள். |