![]() |
|
சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் (/showthread.php?tid=901) |
சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் - வினித் - 02-11-2006 சரசம்': பெண் இன்ஸ்பெக்டர்காவலர் டிஸ்மிஸ் பிப்ரவரி 11, 2006 திண்டுக்கல்: 28 வயதே ஆன போலீஸ்காரருடன் காதல் லீலையில் ஈடுபட்டார் 48 வயது பெண் சப்இன்ஸ்பெக்டர். இருவரும் காவல் நிலையத்தையே காம நிலையமாக மாற்றி குடும்பம் நடத்தியதால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டராக இருந்த விஜயா (48)வுக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஜீப் டிரைவராக இருந்த போலீஸ்காரர் சந்திரசேகரனுக்கும் (28) காதல் பத்திக்கிச்சு. இந்த சந்திரசேகரன், வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படையில் இருந்தவர் என்பதால் ரூ. 3 லட்சம் துட்டும், பதவி உயர்வும், வீட்டு மனையும் வழங்கப்பட்டவர். விஜயாவுக்கும் சந்திரசேகரனுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதோடு, காவல் நிலையத்திலேயே இருவரும் காதல் லீலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர். குறிப்பாக இரவுப் பணியின்போது இருவரும் ஸ்டேசனிலேயே குடும்பம் நடத்த ஆரம்பித்துவிட்டனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் போனது. இதையடுத்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறைரீதியில் விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் விஜயாவையும் சந்திரசேகரனையும் டிஸ்மிஸ் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு காவலர் குடியிருப்பில் தரப்பட்ட வீடுகளையும் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. http://thatstamil.oneindia.com/news/2006/0.../11/police.html |