Yarl Forum
இஸ்ரேல் பிரதமர் ஆபத்தான நிலையில்..! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: இஸ்ரேல் பிரதமர் ஆபத்தான நிலையில்..! (/showthread.php?tid=899)



இஸ்ரேல் பிரதமர் ஆபத்தான நிலையில்..! - kuruvikal - 02-11-2006

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41316000/jpg/_41316916_sharon203body.jpg' border='0' alt='user posted image'>

இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் மீண்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவருக்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் செய்திகள் கூறுகின்றன..! "ஸ்ரோக்" தாக்கத்துக்கு உள்ளான சரோன் பெப்ரவரி 4 இல் இருந்து கோமா நிலையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மூளையில் ஒரு சத்திரச்சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.

பலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் தேர்த்தல் வெற்றியால் பிராந்திய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேலுக்கு சரோனின் இந்த நிலை மிகுந்த தாக்கத்தை உண்டு பண்ணலாம்..! Idea

தகவல் மூலம் - பிபிசி.கொம்


- Mathan - 02-11-2006

அரியல் ஷரோனுக்கு அவசர அறுவைச் சிகிச்சை

இஸ்ரேலிய பிரதமர் அரியல் ஷரோன் அவர்களுக்கு அங்குள்ள மருத்துவர்கள் அவசரமான அறுவைச் சிகிச்சை ஒன்றை செய்து முடித்துள்ளார்கள்.

அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாகவும், ஷரோனின் நிலைமை ஸ்திரமாக இருப்பதாகவும் அவரின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

அறுவைச் சிகிச்சைக்கு நடப்பதற்கு முன்பாக ஷரோனின் உயிருக்கு உடனடி ஆபத்து இருந்ததாக மருத்துவமனை அறிக்கை ஒன்று கூறுகிறது.

கடந்த மாதம் ஏற்பட்ட மூளைப்பக்கவாதத்தை அடுத்து 77 வயது அரசியல் முன்னோடியான ஷரோன் தொடர்ந்தும் நினைவிழந்த நிலையில் இருந்துவருகிறார்.

இவரது பணிகளை பொறுப்பேற்றிருக்கும் அவரது சகாவான எகுட் ஒல்மேர்ட் அவர்கள், அடுத்த மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஷரோனின் கடிமா கட்சிக்கு தலைமை தாங்குகிறார்.

BBC தமிழ்