02-11-2006, 04:58 PM
மாணவி கடத்தல் மீசாலையில் பரபரப்பு
தென்மராட்சி மீசாலைப் பகுதியில் வைத்து பாடசாலை மாணவி ஒருவர் இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மீசாலையில் புத்தூர் சந்திக்குச் சமீபமாக நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீசாலை, புத்தூர் சந்திப் பகுதியில் மில்
ஒழுங்கையில் வசித்து வருபவர் த.அனுஷா. இவர் கொடிகாமம் வீரசிங்கம் மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்விகற்றுவருகின்றார். இம்மாணவி வழமைபோல் நேற்றும் பாடசாலைசென்றுவிட்டு தன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தார்.
இம்மாணவி பாடசாலையிலிருந்து வீடு திரும்பும் வழியில் ஆட்டோ ஒன்றில் ஏற்கனவே தயாராக நின்றிருந்த இனம்தெரியாத கும்பல் ஒன்று அம்மாணவி தமது ஆட்டோவை நெருங்கியதும் அவரை பலவந்தமாக பிடித்து ஆட்டோவில் ஏற்றியுள்ளனர்.
வீதியில் நடந்துவந்து கொண்டிருந்த மாணவி ஆட்டோவில் பலவந்தமாக ஏற்றப்படுவதை அவதானித்த அப்பகுதி மக்கள் மாணவியை ஆட்டோவில் ஏற்றிய கும்பலை மடக்கிப்பிடிக்க முற்பட்டுள்ளனர்.
எனினும் மக்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாத அக்கும்பல் மாணவியை ஏற்றிக் கொண்டு ஆட்டோவில் தப்பி ஒடித் தலைமறைவாகியுள்ளனர்.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் கொடிகாமம் பொலீஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
தினகுரலிருந்து சுருட்டியது