Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 1848 online users.
» 0 Member(s) | 1844 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,132
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,114
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,561
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,558
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,967
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,352
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,015
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,961
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,223

 
  தனிப்பட்ட செய்தி அறிவித்தால்
Posted by: yarlmohan - 09-16-2003, 07:29 PM - Forum: களம் பற்றி - Replies (2)

தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்களத்தில் பல புதிய அம்சங்களை இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஒருவிடயம் கருத்தெழுதுபவர்களின் தனிப்பட்ட விடயத்துடன் சம்பந்தப்படுவதால் இதனை இங்கு தெரிவிக்கின்றேன்.


இங்கு இந்த புதிய Forumல், Admin பொறுப்பில் உள்ள ஒருவரால் ஒருவருடைய தனிப்பட்ட செய்தியை பார்க்கக்கூடிய வசதியையும் செய்துள்ளார்கள். (பல கருத்துக்களத்தில் ஒரு சிறு Script இணைப்பதன் மூலம் admin இன்னொருவருடைய தனிப்பட்ட செய்தியினைப் பார்வையிட முடியும்). இதுவரை காலமும் அவ்வாறு ஒரு Script இனை இங்கு இணைத்திருக்கவில்லை. தற்போது இதைச் செய்தவர்கள் இதை இணைத்துள்ள படியால் இதை நீக்குவது மிக இலகுவான விடயமாகவும் இருக்காது என்பதால் மாற்றங்கள் எதுவும் செய்யப்படமாட்டாது.

இங்கு Admin பொறுப்பில் உள்ளவர்கள் (Moderators அல்ல) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவருடைய தனிப்பட்ட செய்தியினைப் பார்வையிடமாட்டார்கள் (பார்வையிடக்கூடாது) என இங்கு உறுதியளிக்கப்படுகின்றது.

நன்றி
மோகன்

Print this item

  உதவி
Posted by: Paranee - 09-16-2003, 05:44 AM - Forum: களம் பற்றி - Replies (34)

உதவி

கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள்.
தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால்
கீழே தரும் உதவியை கையாளுங்கள்.


[b] Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit



நட்புடன் பரணீதரன்

Print this item

  செய்திகள்
Posted by: Mathivathanan - 09-16-2003, 12:39 AM - Forum: புலம் - Replies (3)

தற்போதெல்லாம் செய்திகள் என்ற பெயரில் ஏதோ சொல்லப்படுகின்றது.. நாங்களும் கேட்கின்றோம். செய்திகள் தாங்கள் தங்களது நிருபர்களுக்கூடாக என்ற நிலை மாறி ஒரு ஊடகத்தில்.. ஒரு இணையத்தளத்தில்.. ஒரு வானொலியில் தெரிவிக்கப்பட்டது.. என்று எங்கெங்கோ போகிறது.
புதினம் இணையத்தள செய்திகளை வாசிப்போம் என சென்று பார்க்க உள்ள செய்திகள் அத்தனையும் ஐபிஸி தமிழை மேற்கோள்காட்டி எழுதப்பட்டிருந்தது. ஐபிஸித்தமிழோ ஆங்கிலப் பத்திரிகையை மேற்கோள்காட்டி ஆங்கிலப்பத்திரிகையில் வெளியாகிய செய்தியென கூறியது. ஆங்கிலப் பத்திரிகைகளை நாடினால் அங்குகூட ஒரு பத்திரிகையை மறுபத்திரிகை மறுத்து செய்தி வெளியிட்டு காணப்படுகின்றது. சார்பான செய்திகள் ஒருபுறம்.. எதிரான செய்திகள் மறுபுறம். எதை நம்புவது என்று பெரிய குழப்பம். நேற்று மதியம் ஓரிடம் சென்றபோது மற்றுமொரு வானொலிச் செய்தி கேட்கக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அதில் பலவிதமான செய்திகள் போயின. அவற்றின் உண்மைத் தன்மை அறிய இணையங்கள் தேடியபோது அவையும் வேறு வேறு இணையத்தளங்களில் வந்துள்ளன.

எனது கேள்வி..
செய்திகள் என்ற பெயரில் இப்படியான பக்கசார்பு அவசியம்தானா.. தேவைதானா..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Print this item

  அழுதுகொண்டே விடைபெற்ற அகதிகள
Posted by: Mullai - 09-15-2003, 06:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

<img src='http://www.kumudam.com/reporter/180903/4t.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'>ஆர். விவேக்ஆனந்தன்</span>


இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமான உள்நாட்டுப் போர், தற்போது ஒரு முடிவுக்கு வந்து சமாதான பேச்சு வார்த்தைகள் தொடரும் இவ்வேளையில், கடந்த பதின்மூன்று வருடங்களாக தமிழக மக்களுடன் சகோதர, சகோதரிகளாகப் பழகிவந்த இலங்கைத் தமிழ் அகதிகள், கனத்த இதயத்துடன் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றனர். அங்கேயிருந்து அகதிகளாக வரும்போது இருந்த சோகத்தைவிட, தற்போது பல மடங்கு சோகத்துடன் அவர்கள் சென்ற காட்சி, தமிழர்களுடைய பாசப்பிணைப்பின் உதாரணமாகத்தான் இருந்தது.
<img src='http://www.kumudam.com/reporter/180903/4.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/reporter/180903/4p.jpg' border='0' alt='user posted image'>

1990_ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடைபெற்றபோது, வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த ஈழத்தமிழர்களில் மீனவர்களும் கணிசமான எண்ணிக்கையில் வந்தனர். சுமார் 61 படகுகளில் இப்படி நாகப்பட்டினம் வந்திறங்கிய தமிழ் அகதிகளின் படகுகள், சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, கடல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் உயிர்பிழைக்க நம் தமிழகத்தை நோக்கி வந்த நேரம், துரதிர்ஷ்டவசமாக ராஜீவ்காந்தியின் மரணம் நிகழ, மீண்டும் அலைக்கழிக்கப்பட்ட அவர்கள், திருச்சி, கோவை, தருமபுரி, வேலூர் என பல்வேறு அகதிகள் முகாம்களுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர். அவர்கள் வந்த படகுகள், எவ்வித பராமரிப்புமின்றிக் கிடக்க, சென்னையைச் சேர்ந்த ஈழ இதிலியர் மறுவாழ்வு கழகத்தினர் அகதிகள் சம்பந்தமான பேச்சுவார்த்தையைத் தொடங்கியதோடு, அவர்களின் படகுகளையும் பாதுகாக்க ஏற்பாடு செய்தனர்.

அத்துடன் மத்திய_மாநில அரசுகள் தமிழ் அகதிகளின் சார்பில் இலங்கை அரசுக்கு தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பயனாக அகதிகள் இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கத் தொடங்கின. முதற்கட்டமாக, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த படகுகளைச் செப்பனிட்டுத் தருமாறு இலங்கை அரசு கோரியதையடுத்து, அந்தப் பணிகளும் தொடங்கின.

இந்தப் பணிகளைப் பார்வையிட்டு, இந்திய அரசிடமிருந்து மொத்த படகுகளையும் மீட்டுத் தருவதற்காக இந்தியாவுக்கான இலங்கை துணைத்தூதர் சுமித் நாகந்தலா கடந்த 4_ம் தேதி நாகப்பட்டினம் வந்திருந்தார். அதற்கு முன்னதாகவே, சென்ற மாதம் 10_ம் தேதி அகதிகளை அழைத்துச் செல்வதற்காக திரிகோணமலையிலிருந்து மீனவர் குழு ஒன்றும் வந்து சேர்ந்தது. இக்குழுவினர் நாகை மீனவர்கள் இல்லங்களில் தங்கியிருந்தனர்.

ஒருவழியாக எல்லா ஃபார்மாலிட்டிகளும் முடிய, கடந்த எட்டாம் தேதி அகதிகள் இலங்கைக்கு மீண்டும் செல்லத் தயாராயினர்.

அவர்கள் புறப்பட்ட அந்த அதிகாலை வேளை, துறைமுக வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. சொந்த நாட்டிற்குத் திரும்பும் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அதையும் மீறிய மெல்லிய சோகம் ஒன்று அவர்கள் முகத்தில் படர்ந்திருந்ததையும் காண முடிந்தது.

முதல்கட்டமாக அகதி மீனவர்களின் குடும்பத் தலைவர்கள் மட்டும் படகுகளில் புறப்பட்டு இலங்கைக்குச் செல்வதாகவும், அவர்களின் குடும்பங்கள் விமானங்கள் மூலம் புறப்பட்டுச் செல்ல இரண்டு நாட்டு அரசுகளும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் படகுகளில் செல்வது ஆபத்தானது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்!

இலங்கைத் தமிழ் அகதிகளின் விசைப்படகுகளை இழுத்துச் செல்ல, நாகை ஆரிய நாட்டுத் தெரு, கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் மீனவர்கள் பன்னிரண்டு விசைப்படகுகளில் சென்றனர். அவர்களுக்குத் தலா நானூறு லிட்டர் டீசலும், இருபதாயிரம் ரூபாயும் கொடுக்கப்பட்டதாம். கடலில் செல்லும் மீனவர்களுக்குப் பாதுகாப்பாக, இந்திய கடற்படையைச் சேர்ந்த ப்ரியதர்ஷினி கப்பலும் சென்றது.

அகதிகளை அழைத்துச் செல்ல இலங்கை திரிகோணமலையிலிருந்து வந்திருந்த படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சித்திரசேகரன் என்பவர் நம்மிடம் ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும் கொட்டியபடி பேசினார்:

"எங்களுடைய முதல் நன்றியை தமிழக அரசுக்கும், எங்கள் நாட்டு எம்.பி. சம்பந்தத்திற்கும்தான் சொல்ல வேண்டும். இலங்கையில் இப்போதுதான் சமாதானத்தின் அவசியத்தை இரு தரப்பினரும் உணர்ந்துள்ளார்கள். பொருளாதார இழப்பு, உயிரிழப்பு என... அப்பப்பா...! எத்தனையோ இழப்புகள்! விடுதலைப் புலியான எனது மகன் இறந்ததுகூட பல வருடங்கள் கழித்துதான் எனக்குத் தெரிந்தது" என்று சோகப் பெருமூச்சுவிட்டவர், "எம்.ஜி.ஆர். மட்டும் தற்போது உயிரோடிருந்திருந்தால், நாங்கள் இந்தளவுக்குக் கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்" என்றும் கூறி சிலிர்த்தார்!

கடைசியாக இலங்கை ராணுவத்தினால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் தொடர் சம்பவத்திற்கும் அதிர்ச்சித் தகவல் ஒன்றைக் கூறினார் சித்திரசேகரன்.

"தமிழக எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்கு மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்களின் வலைகளைத் திருடிக் கொண்டும், சிலர் அவர்களின் வலைகளை வெட்டி நாசம் செய்துவிட்டும் திரும்பி விடுகின்றனர். இப்போது இங்கேயுள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் இலங்கை மீனவர்களிடம் திருடப்பட்ட அந்த வலைகளைப் பார்த்தேன்! பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் அங்கே போராட்டம், அறிக்கைகள் என அரசுக்குத் தொல்லை கொடுக்க, அதனால்தான் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்!"" என்றார் சித்திரசேகரன்.

அதிகாலை மூன்று மணியிலிருந்து படகுகளில் அவரவர்கள் பொருள்களை ஏற்றிவைக்க, சரியாக ஏழரை மணியளவில் மாவட்ட கலெக்டர் வீரசண்முகமணி மற்றும் சுங்கத்துறை உதவி ஆணையர் பெருமாள், கடற்படை அதிகாரி புளோரா ஆகியோரிடம் விடைபெற்ற தமிழ் அகதிகள், கண்களில் பெருக்கெடுத்த நீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு கைகளை ஆட்டியபடி புறப்பட்டுச் சென்றனர்!

நன்றி குமுதம் ரிப்போட்டர்

Print this item

  பகுத்தறிவு!
Posted by: thambythasan - 09-15-2003, 05:34 PM - Forum: கவிதை/பாடல் - Replies (14)

பகுத்தறிவு!

பதினைந்து
வயது இளைஞர்கள்
நீலப் படம்
பார்க்கிறபோது
வருகிற
பயம் போல்
எமக்கும் உண்டு!
லெனின்
பெரியாரின்
படங்களை
கட்டிலுக்கடியில்
இருந்து
அடிக்கடி
நாம் எடுத்து
து}சு
தட்டுகிறோம்

நாங்கள்
இவர்களை
மாற்ற நினைத்தோம்
இவர்களோ
எம்மை மாற்றி
விடுவதில்
வெற்றி
காண்கிறார்கள்..

எங்களைப்
பிடிக்காத
பெண்களுக்கு
எங்களில் பிடித்தது
ஒன்று மட்டுமே
சீதன ஒழிப்பு!
மற்றவையாவும்
எங்களின் வேண்டா
எச்சங்கள்!

பெற்றோர்களுக்கு
தலை வணங்கினோம்
சொந்தங்களுக்காய்
செவிகொடுத்தோம்
பந்தங்களுக்காய்
கொள்கைகளை
விட்டுக்கொடுத்தோம்..
இத்தனைக்குப்
பின்னும்
நாம் எங்கள்
கொள்கைகளோடு
வாழ விடாது
முரண்படுகிறது இந்த
சமூகம்...

அப்பனுக்கு
ஆகாது என்று
மொட்டை போடாததில்
தொடங்கி
திருமணத்தில்
அய்யரின் கும்மாளத்தோடு
எங்கள் பயணம்..
எல்லாமே அவர்களுக்காகத்தான்!!
இத்தோடு
முடிந்ததாய் பெருமூச்சு
விடுமுன்னால்
மனைவியின்
பெற்றோர்கள்!!
மாமாவின்
வேண்டுகோளுக்காய்
கோயில் வாசல்களில்
தவம் கிடக்க..
இது தான்
சந்தர்ப்பமாய்
வீட்டுக்குள்ளே
நுழையும்
அய்யரின்
அகங்காரம்..

வார இறுதியில்
குப்பை லொறி
எடுப்தற்காய்
வைத்த
குப்பைகள் யாவும்
திரும்பவும் உள்ளே
வருகிறது...

இப்படியே எங்கள்
வாழ்க்கை
தட்டித் தடுமாறி
போகிறது..

என் கொள்கைப்
படியே
நடப்போம்
என்கிறபோது
மனைவியின்
குரல்
இறுமாப்போடு வருகிறது..
எங்கோ எதற்கோ
நான் சொன்னதை
இப்போது
அவள் தனக்காய்
"இது தான்
உங்களின்
ஆணாதிக்கமோ?"


எம்
தத்துவங்களாலேயே
எம்மை
மடக்கி விடுவது
சுயநலவாதிகளின்
பெரு வெற்றியே!!

உறவுச் சனம்
எட்டி உதைத்திடும்

போதினில்
ஊர்ச் சனமோ
வெட்டிப் புதைத்திடும்
எம்மை!!

இந்(து)த சமூகம்
தடக்கி விழுகிற
போது எல்லாம்
இந்த(து) சமூகம்
பெரு மகிழ்வு
கொள்கிறது..
"நாத்திகருக்கு
கடவுள் கொடுக்கும்
தண்டனைகள் இதுவே"

இப்படியே
வாழ்க்கை தடுமாறிடும்
போதிலும்
சிறிதாய்
ஆலமரத்தடியில்
பகுத்தறிவாளர்கள்
ஒன்று கூடினால்..

பத்திரிகைகள்
கதவடைக்கின்றன
வானொலிகள்
எம் பெயர்
கேட்க பயம்
கொள்கின்றன..
தொலைக்காட்சிகளோ
வெளியே "போடா
நாயே" என்று
கதவைப்
புூட்டுகின்றன!!

முடியாது என்கிற
போதுதான்
ஆகாயத்தில்
பறந்தான் மனிதன்
இனியும் இயலாது
என்கிற போது தான்
துவக்குத் து}க்கினான் தமிழன்

எம் சந்ததிகள்
மாறும்
தடக்கி விழுகிற
இடத்திலும்
கோயில்கள் உள்ள
இந்நிலை மாறும்
பகுத்தறிவு பெறும்
எச்சங்களாய்
இருக்கும்
மதவெறியர்களின்
ஆணவம் அடங்கும்

கோயில்களாய் இருந்தவை
மக்களின் வதிவிடமாகும்
வங்கி கணக்குகள்
மக்களின் பசியைப்
போக்கும்..
கோயில கட்டி
இலட்சம் உழைத்தவன்
கல் உடைத்து
தன் குடும்பம்
காப்பான்!

மறைந்திருந்த
பெரியாரின்
படங்கள் வெளியே
வரும்..
கூனியிருந்த
மனிதர்கள்
கம்பீர
நடைபோடுவார்கள்

என்ன!!

காலம் தேவை
அது வரையும்
அங்கே இங்கே
பகுத்தறிவுவாதிகள்
து}சுதட்டுவதில்
மட்டுமே
கவனமாய்
இருந்தால்
போதும்...

கனடா-தம்பிதாசன்

Print this item

  நில்லாமல் வா நிலாவே...! பகுதி-02
Posted by: sharish - 09-15-2003, 03:49 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<b>நில்லாமல் வா
நிலாவே...!</b>


பகுதி-02


தூரத்தில் இருந்தபடி
அந்த வெண்ணிலவு
ஒளியை மட்டும்
கொடுப்பது போல...
இந்த பெண்ணிலவும்
கனவை மட்டும்தான்
கொடுப்பாள் என நினைத்தேன்...
ஆகால்...
நினைத்ததற்கு
முற்றிலும் மாறாய்...
இதோ....
என் எதிரில்தான் இருக்கிறாள்
வெகு தூரமே இல்லை
எட்டி...
தொட்டுவிடும் தூரம்தான்

இருப்பினும்....
நான் என்ன செய்வேன்..?
அவளிடம் சென்று
எப்படிச் சொல்லுவேன்...
நேற்றென்தன் கனவில் வந்தாய்
இன்றென்தன்
எதிரில் வந்தாய் என்று...?

முகமும்... அகமும்
©த்தபடி...
அவளை அடிக்கடி
பார்த்தபடி...
அலைபாயுது என் மனம்
தாறுமாறாய்..!

என் கற்பனை...??
அதை...
சொல்லத்தேவையே இல்லை...
காதல் சிறகைக்கட்டி
பல வண்ணங்கள்
;©சிக்கொண்டு...
அழகாய்ப் பறந்து திரியும்
பட்டாம் ©ச்சிபோல்
வெகுதூரம் வரைப் பறந்தது
எவராலும்...
எட்டிப் பிடிக்க
முடியாத தூரம் வரை..!

இவைகளே....
இப்படி என்றால்
இதற்கு...
முற்றிலும் சம்மந்தமான
என் இதயம்....?
ம்.........
அதற்கும்
ஒரே கொண்டாட்டம்தான்...!
இன்பக்களிப்பில்...
இரகசியமாய்...
அடிக்கடி என்னோடு
கதைத்தது
வளமையைவிட தாறுமாறாய்
துடித்தது...
சத்தமிட்டு பெரிதாய்ச்
சிரித்தது...
சொல்லாமல் வந்த
நிலவே...
நீ நில்லாமல்
வா நிலாவே என்று...
பாடல்கூடப் படித்தது.....!

ஆனால்...
என் காதுகள்தான்
பாவம்...!
அது...
ஆரம்பத்தில் இருந்தே...
அவள் குரலைக்கேட்கக்
காத்திருந்து காத்திருந்து
களைத்துவிட்டது
காத்திருப்பின் கடைசி
எல்லைவரைச் சென்று...
பொறுமையும் இழந்தது....

அந்தநேரம் பார்த்து
வகுப்பாசிரியர் சொன்னார்...
ஒவ்வொருவரும்
தங்களைப்பற்றி
அறிமுகம் சொய்யுங்கள்
என்று....!

அந்த ஆசிரியரின் பேச்சு
ஆலயமணிபோல்
காத்திருந்த என் காதில்...
"கணீர்" என்றது....
அவள்...
ஆனந்தக்குரல்கேட்க
தயார் ஆனது...!

ஆனந்தப்பெருமிதத்தில்
என்னிதயமும்...
ஒருமுறை துடிக்க மறந்து
அலைபோல் எழுந்து
அடித்துவிட்டு...
ஆசைக் கரையை
எட்டித் தொட்டுவிட்டு
நீரும் நுரையும்
அள்ளித் தெளித்து...
நெஞ்சை ஈரமாக்கிவிட்டு
மீண்டும் வளமைபோல்
துடித்தது...!

சரி.... சரி....
அதை விடுங்கள்...!
யார் அவள்..?
பெயர் என்ன..?
எங்கிருந்து வந்தாள்...?
அவளின்
அறிமுகம் என்னவென்று
பொறுமையாய்...
அவள்...
சொல்லவதைக் கொஞ்சம்
கேட்போமா...???


(நிலவு வரும்...)

த.சரீஷ்
15.09.2003 (பாரீஸ்)

Print this item

  தடை
Posted by: yarlmohan - 09-15-2003, 03:13 PM - Forum: களம் பற்றி - Replies (8)

அநாகரிகமான கருத்துக்களை தொடரந்து எழுதியமையால் Oslo என்று கருத்துக்களைத் தந்தவர் தடுக்கப்பட்டுள்ளார்.

மோகன்

Print this item

  தியாக தீபம் திலீபனின் நினைவாக...
Posted by: Chandravathanaa - 09-15-2003, 07:57 AM - Forum: தமிழீழம் - Replies (18)

[url=http://www.yarl.com/articles.php?articleId=24]
<b>திலீபன் சிறப்புக் கவிதாஞ்சலி</b>

Print this item

  தமிழீழம் அங்கீகரிப்போம்
Posted by: Guest - 09-14-2003, 01:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (47)

அண்மையில் பலரும் நாட்டுக்கு சென்றுவருபவர்கள். அதில் சிலர் பரப்பும் பரப்புரை கேட்கமுடியதாளவிற்கு கதை சொல்வார்கள் அல்லது கதை பரப்புவார்கள்

அதில் முக்கியமானது இந்த வரி அறவிடப்படுபவை சம்பந்தமானது.

நான் கேள்விப்பட்ட அளவில் வெளிநாட்டிலிருந்து தாயகம் செல்வோர் ஒன்றுக்கு மேற்பட்ட ஒரே இன பொருட்களை கொண்டு செல்கையில்
சுங்கத்தீர்வை தமிழீழ நிர்வாகத்தினரால் அறவிடப்படுகின்றன..

இதனை ஏனோ நம்மவர்கள் வரியென குழம்புவது ஒருபுறம்..அதை விட மறைபொருளான விவாதங்கள் வேறு...இது தெளிவுபடுத்தப்படவேண்டிய விடயம்

அகாசி சொல்கைம் என்று வரிசை கட்டாமல் ..

நாம் தமிழர் முதலில் தமிழீழத்தை அங்கீகரிப்போம்.

வரிக்கும் சுங்கத்தீர்வைக்கும் வேறுபாடு காண்போம்.

பின்னர் மற்றவர்கள் எங்களை அங்கீகரிப்பது பற்றி யோசிக்கலாம்.

வானொலிகள்,தொலைக்காட்சி ஊடகங்கள் இதுபற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்!!!!

Print this item

  நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன?
Posted by: J.Premkumar - 09-14-2003, 06:03 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (62)

இன்றைய நிலமையில்
நாட்டில் பல பிரச்சனைகள் தலைதூக்கி ஆடத்துவங்கி உள்ளன .
இதனால் எங்கே யுத்தம் மீண்டும் ஆரம்பித்துவிடுமோ ? என்ற பயத்தினால் பல தாயக வாழ் தமிழ் மக்கள் மன உழைச்சலுக்கு உட்பட்டிருக்கிறார்கள்.
இன்னிலையில் பல இடம்பெயர் வாழ் தமிழ் மக்கள் சந்தோசப்படுகிறார்கள்



நண்பர்களே இதற்கு உங்கள் கருத்துத்தான் என்ன?

Print this item