| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 443 online users. » 0 Member(s) | 440 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,160
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,169
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,569
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,270
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,562
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,989
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,389
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,056
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,965
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,230
|
|
|
| ஈரநிலம் |
|
Posted by: Paranee - 09-22-2003, 08:02 AM - Forum: சினிமா
- Replies (7)
|
 |
வணக்கம்
நேற்று பாரதிராஐhவின் தயாரிப்பில் உருவான ஈரநிலம் திரைப்படம் பார்க்கமுடிந்தது. திரைக்கதை காட்சியமைப்பு எல்லாம் மண்வாசனையை அப்படியே நுகரவைக்கின்றன. அருமையானதொரு திரைப்படம். சில இடங்களில் முரண் இருந்தாலும். ஒரு நல்ல திரைப்படம் பார்த்த நிறைவு இருந்தது.
வாழ்த்துக்கள் பாரதிராஐh
பாடல்கள் அப்படியே கண்களை கண்ணீரால் நிறைக்கின்றது. மண்நேசத்தால்.........
|
|
|
| வரதட்சணை |
|
Posted by: Mathivathanan - 09-22-2003, 06:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
வரதட்சணை கொடுமை: பெண் போலீசாரால் அலைகழிக்கப்பட்ட பெண் தற்கொலை
மதுரை:
வரதட்சøக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வழக்கைப் பதிவு செய்யாமல் மகளிர் காவல் நிலையப் போலீசாரும், இன்னொரு காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததால் நொந்து போன அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து கடமையைச் செய்யத் தவறிய சப்இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இன்னொரு பெண் சப்இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண்ணை அவரது கணவர் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதை அவர் பொறுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், அடி உதை அதிகமானதால் வேறு வழியின்றி 'ஹெல்ப் லைன்' பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்றார்.
(ஆபத்தில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு அவசர உதவி செய்ய உருவாக்கப்பட்ட போலீஸ் பிரிவு தான் ஹெல்ப் லைன். பெரும்பாலும் பெண் போலீசார் தான் இதில் உள்ளனர்.)
ஆனால், முருகேஸ்வரியிடம் லஞ்சம் எதிர்பார்த்த ஹெல்ப் லைன் பிரிவு பெண் போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இவரால் பணம் தர முடியாது என்பதால் வழக்கை வாங்காமல் மகளிர் காவல் நிலையத்துக்குப் போகுமாறு கூறினர்.
இதையடுத்து முருகேஸ்வரி மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். அங்கும் லஞ்சம் எதிர்பார்த்த பெண் போலீசார், இவர் பணம் தரும் நிலையில் இல்லை என்பதால் தரக் குறைவாக நடத்தினர். இங்கே எதுக்குடி வந்தே, ஹெல்ப் லைன் போலீஸ்கிட்ட போ என விரட்டியடித்தனர்.
மீண்டும் ஹெல்ப் லைன் போலீசுக்குப் போன முருகேஸ்வரியை பார்த்து எரிச்சலான பெண் போலீசார், நாங்க தான் மகளிர் காவல் நிலையம் போகச் சொன்னோம் இல்ல, ஏன் இங்கே வந்தே என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதைத் தொடர்து மகளிர் காவல் நிலையத்துக்கு முருகேஸ்வரி மீண்டும் செல்ல, அங்கும் திட்டும் அவமரியாதையும் தான் கிடைத்தது.
இதனால் துவண்டு போய் தனது பெற்றோரிடம் சென்ற முருகேஸ்வரி தனக்கு கணவராலும், காவல் நிலையங்களிலும் ஏற்பட்ட கொடுமையைச் சொல்லி அழுதுள்ளார்.
அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். ஆனால், இந் நிலையில் முருகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டர்.
இதனால் துடிதுடித்துப் போன பெற்றோர் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் மதுரை போலீஸ் கமிஷ்னரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
மேலும் இந்தத் தற்கொலை குறித்து மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் விசாரணையும் நடந்தது. அதில் முருகேஸ்வரியை ஹெல்ப் லைன் பெண் போலீசாரும், மகளிர் காவல் நிலைய போலீசாரும் அலைகழித்ததும், அவமானப்படுத்தியதும் உண்மையே என்று தெரியவந்தது.
இதையடுத்து மகளிர் காவல் நிலைய சப்இன்ஸபெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஹெல்ப் லைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இரு பெண் சப்இன்ஸ்பெக்டர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முருகேஸ்வரியின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.thatstamil.com/news/2003/09/22/woman.html
|
|
|
| கள உறவுகளுக்கு... |
|
Posted by: kuruvikal - 09-21-2003, 06:35 PM - Forum: அறிமுகம்
- Replies (15)
|
 |
குருவிகளாகிய நாம் களத்துக்கு கருத்தெழுத வராத சந்தர்ப்பத்தில் யாரும் புதிய பெயர்களில் பதிவு செய்து குருவிகள் போன்று பாவனை செய்ய முற்பட்டால் அது தொடர்பில் களப்பொறுப்பாளர் உடனடிக் கடும் நடவடிக்கை எடுக்க குருவிகளால் தாழ்மையுடன் கேட்கப்பட்டுள்ளார்....! குருவிகள் எனப்படும் நாம் ஒரு போதும் மாற்றுப்பெயர்களிலோ அல்லது நேர்மையற்ற வழிகளிலோ இக்களத்தில் கருத்தெழுத வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கவில்லை...எமது முடிவால் களப்பொறுப்பாளருக்கும் மற்றும் கள உறவுகளுக்கும் ஏற்பட்டுள்ள அசெளகரியங்களுக்காக எமது ஆழ்ந்த வருத்தங்கள்...நாம் எப்படி எமது சுய கெளரவம் கருதி கருத்தாடலில் இருந்துவிலகினோமோ...அதே அளவு இக்களத்தின் கெளரவத்தை பாதுகாக்கவும் வேண்டியவர்களாக உள்ளோம் என்பதையும் நன்கறிந்தே இச்செய்தியை இங்கு தருகின்றோம்...!
:!: :!: :!: :!:
நன்றி...நட்புடன் குருவிகள்
|
|
|
| Thai soldier confesses to supplying arms to Tamil Tigers |
|
Posted by: Mathivathanan - 09-21-2003, 05:41 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
BANGKOK, Sept 21 (AFP) - A Thai soldier confessed Sunday to supplying small arms to contacts of Sri Lankan Tamil Tiger rebels arrested in southern Thailand earlier this year, police said.
A special investigative team searched the home of chief warrant officer Surachai Sompong in the eastern province of Chonburi early Sunday and arrested him after finding a pistol and two grenades, Police Major General Panupong Singhara told reporters.
Panupong said the suspect confessed to supplying 13 pistols to contacts of Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been engaged in a shaky peace bid with the Sri Lankan government over the past year.
"He confessed that he had supplied 13 pistols to the contact group arrested in Ranong," he told reporters.
The three contacts were nabbed in May in Ranong city, some 570 kilometres (353 miles) south of Bangkok, where police seized 10 nine-millimetre pistols, three 11-millimetre pistols and 45,000 rounds of ammunition.
Intelligence sources said at the time the weapons came from Bangkok and were to be smuggled out of the country.
The Thai soldier said he had received three cheques each worth 10 million baht (246,305 dollars) from the Sri Lankans, Panupong said.
Local reports, meanwhile, said police have started questioning the owners of eight gun shops in the historic quarter of Bangkok after nine Thai police officers were investigated over helping to supply arms to the contacts.
Thai Prime Minister Thaksin Shinawatra vowed during a visit to Colombo in August that he would crack down on terror groups amid reports that the LTTE were using Thailand as a transit point for gun running.
The kingdom hosted peace talks between the Colombo government and the LTTE in September last year.
http://www.ptd.net/webnews/wed/dt/Qthailan...l.RsNT_DSL.html
|
|
|
| கடும் கண்டனம்...! |
|
Posted by: kuruvikal - 09-21-2003, 10:07 AM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (148)
|
 |
nalayiny Wrote:அரை குறை நிர்வாணமாக எடுத்த வந்து களத்தை நிரப்பேக்கையே நினைச்சனான் சரியாத்தான் போச்சு.இவையளும் இவர்கள் தம் கலாச்சார விழுமியமும். கட்டிக்காக்க இவையட்டத்தைத்தான் கோடுக்க வேணும். அடி செரு.....லை.
nalayiny Wrote:அட அப்படியா...! சாமி கும்பிடுறவை பிரார்த்திப்பவை எல்லாம் ஏதோ எண்டு நினைச்சன் இவ்வளவு காலமும்.
[quote=kuruvikal]பாதிக்கப்பட்ட அப்பாவி அமெரிக்கச் சகோதரர்கள் விரைந்து மீட்சி பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக...!
Alai Wrote:[quote=[b]sharish
[b]அப்போ....
இளைஞர்கள் கூட்டம்...?
அவர்களுக்கு...
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்...!
இதைவிட
வேறு என்ன சந்தோஷம்
இந்த வாலிபருக்கு...?
இவர்களின் அரோகரா எல்லாம்
ஆண்டவனுக்கு இல்லை
அழகான பெண்களுக்கு மட்டும்தான்...!
Quote:இணையம் தேடி....
கண்ணுக்கு இன்பம் சேற்கும் ...
[size=18]*****....
எடுத்துவந்து..
கவிதை வேறா..?
[quote=kuruvikal]<img src='http://www.thatstamil.com/images13/cinema/sridevi1-450.jpg' border='0' alt='user posted image'>
மலரிடை மலராய்
மங்கையே - நீ
மலர்ந்திட்டால்
மலராகுமோ....????!
மேலே உள்ள படம் தொடர்பாக எழுதத்தொடங்கி பெண்ணியம் வந்திருக்கு....மேலே போட்ட படத்தில் உள்ள உடை தமிழர் கலாசாரத்துக்கு உட்பட்டதா.....? பெரியவர்களாலும் பாடசாலைகளிலும் காண்பிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்ட கந்தன்கருணை..திருவிளையாடல்...சரஸ்வதி சபதம்....இப்படியான புகழ் பெற்ற திரைப்படங்களில் எல்லாம் பெண்கள் இப்படித்தான் ஆடை உடுத்தி வந்துள்ளனர்.....அது மட்டுமன்றி...பாடசாலையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் நாம் நளவெண்பா படிக்கும் போது தமயந்தியின் உடையமைப்பை இப்படித்தான் விபரித்தனர்......இதற்கு மேலாக கோவில்களில் சாதாரண சிற்பங்களே இப்படியான உடையிற்தான் இருக்கின்றன....சிறுவர் கதைப்புத்தகங்களில் கூட பண்டைக்கால,சரித்திரப் பெண்களை இப்படியான ஆடைகளில் தான் காண்பிக்கப்படுகின்றனர்....!இதன் ஒரு மாற்று வடிவம் தான் தற்போதும் இளவயதுப் பெண்கள் உடுக்கும் 'காவ் சாறி' ....அப்படி இருக்க குருவிகள் மீது வேண்டாத பழிசுமத்தல் கொண்டு வந்ததும் இல்லாமல்.....'பொறுக்கி' என ஓர் இடத்தில் கவிதை மூலம் இரட்டை அர்த்தம் பட நளாயினி தாமரைச்செல்வன் எழுதியுள்ளார்...இதற்கு குருவிகள் தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு...பகிரங்கக் களமொன்றில் இப்படியான வார்த்தைப்பிரயோகத்தை குருவிகள் மீது செய்ததற்காக குறிப்பிட்ட அங்கத்தவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்...அது வரை குருவிகள் யாழ் களம் வருவதை இடை நிறுத்த உள்ளன....!
இச் செய்தியானது இவ்வறிவிப்புத்தொடர்பாக களப் பொறுப்பாளருக்கும் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் சொல்லும் அறிவித்தலாகவும் அமைகிறது....!
பகிரங்க மன்னிப்பின் பின் அல்லது 'பொறுக்கி' வார்த்தைப்பிரயோகத்தின் விளக்கத்தின் பின் மீண்டும் சந்திப்போம்...அன்றில் களத்தில் இருந்து எமது சுய கெளரவத்தை காத்துக் கொள்ளும் பொருட்டு வெளியேறிக் கொள்ளும் நிலைக்கே தள்ளப்படுவோம்...அப்படி ஒருநிலை வந்தால்...எம்மோடு கருத்தாடிய அனைத்து கள உறவுகளுக்கும் எமக்கு உரிய மதிப்பளித்து களமாட அனுமதித்த மோகன் அண்ணாவிற்கும் நன்றிகள் பல...!
:evil: :!: :evil:
நன்றி குருவிகள்...!
**** - சொல் நீக்கப்பட்டுள்ளது
|
|
|
| தத்துவம் |
|
Posted by: தணிக்கை - 09-20-2003, 10:09 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (20)
|
 |
'கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்சனை பற்றிச் சிந்திக்க நான் ஒரு வினாடியைக் கூட செலவிட்டதேயில்லை. ஏனென்றால், அது மனிதன் செய்யக் கூடாத ஒன்று. கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போரிடவோ, நாம் இந்த உலகத்தில் தோன்றவில்லை. நாம் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, கடவுள் வாழ வேண்டும் என்பதற்காக அன்று! எனது பரிணாமத் தத்துவத்திற்கும் கடவுள் பிரச்சனைக்கும் சிறிதுகூடச் சம்பந்தம் இல்லை! -
|
|
|
| விடலைப் பருவத்துப் பிரச்சனைகள் |
|
Posted by: AJeevan - 09-20-2003, 01:03 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
<img src='http://www.kumudam.com/Health/sep03/3t.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.kumudam.com/Health/sep03/3p1.jpg' border='0' alt='user posted image'>
கடந்த இரண்டு மாதங்களில் நான் சந்தித்த மூன்று டீன்ஏஜ் கேஸ்களை முதலில் பார்ப்போம்.
<img src='http://www.kumudam.com/Health/sep03/3.jpg' border='0' alt='user posted image'>
பதினாறு வயதாகும் கீதாவுக்கு கவலைகள் அதிகம். தான் உயரமாக இல்லை, மிகவும் குள்ளம் என்பது எப்போதும் அவள் மனதில் உறுத்திக்கொண்டேயிருக்கும் விஷயம். அடுத்தது முகப்பருக்கள். நாளடைவில் கவலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்து அவளைப்பற்றிய ஒரு தாழ்ந்த சுயமதிப்பீட்டுக்கு அவள் ஆளானாள். இது மனச்சோர்வை ஏற்படுத்தியது. விளைவு, படிப்பில் நாட்டம் குறைந்தது. தனிமையை விரும்பி மற்றவர்களிடமிருந்து விலகியிருக்கத் தொடங்கினாள். இந்நிலையில் கீதாவின் பெற்றோர் அவளை என்னிடம் அழைத்து வந்தார்கள்.
அம்பிகாவுக்கும் டீன்ஏஜ்தான். திடீரென்று ஒருநாள் பள்ளிக்கூடத்தில் பிரேயரின்போது மயங்கிவிழுந்தாள் அம்பிகா. முதலில் இது சாதாரணமானதுதான் என்று விட்டுவிட்டார்கள். ஆனால், இது அடிக்கடி தொடர்ந்தது. சில மாதங்கள் மாதவிடாய் கோளாறுகளும் ஏற்பட்டது. அவள் மிகவும் மெலிந்து போயிருந்தாள்.
ஒரு மாலை நேரத்தில் கிளினிக்குக்கு வந்த மதன் விவகாரம் _ கீதா, அம்பிகா ஆகியோரிடமிருந்து மாறுபட்டது. மதனுக்கு 15 வயது. பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். ஆள் பார்ப்பதுக்கு குண்டு கல்யாணம் சாயலில் இருந்தான். ‘கத்தரிக்கா, கத்தரிக்கா குண்டு குண்டு கத்தரிக்கா’ பாடல்தான் அவனைப் பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது. மதனுக்கு அவனுடைய வயிறே அவனுக்கு அருவருப்பாகத் தெரிந்தது. மதனின் இளைய சகோதரன் சச்சினின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். இத்தனைக்கும் மதனின் அப்பாவோ, அம்மாவோ குண்டானவர்கள் இல்லை.
சரி இனி விஷயத்துக்கு வருவோம்.
இந்த முன்று கேஸ்களும் உதாரணங்கள் மட்டும்தான். இதுபோல் விடலைப் பருவத்திலிருப்பவர்கள், பிரச்னைகளுடன் கிளினிக்குகளுக்கு வருவது இப்போது அதிகரித்திருக்கிறது.
ஏன், இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
பத்திலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்டவர்களை வளரும் இளமைப் பருவத்தினர் என்று உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. இவர்கள் குழந்தைகளும் இல்லை; வயது வந்தவர்களும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்ட வளரும் பருவம்.
வளரும் பருவம், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பரவசமும் ஏற்படும் காலம். அத்துடன் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இதனால் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றிலுமே ஒரு மாற்றம் காணப்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களைக் கண்டு பெரும்பாலும் கூச்சப்படுகிறார்கள். சிறிது தயக்கமும் அடைகிறார்கள். முகப்பரு, மாதவிடாய் பிரசினைகள், களைப்பு, பூப்படைதல், உடல்பருமன், நடத்தை, உடலியல் ரீதியான மாற்றங்கள் போன்ற விஷயங்களில் ஏராளமான சந்தேகங்கள் குவிந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கமில்லாமல் பேசுவதற்கு ஒரு விசேஷ வழிகாட்டியின் உதவி தேவைப்படும் பருவம் இது. அந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது குழப்பங்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிக்கல்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. குறுக்கு வழியில் பணம் பறிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்கள் தரும் தவறான விளம்பரங்கள் பிரச்னையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.
விடலைப் பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு, தங்களுடைய உடல்நலப் பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும் வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொள்ளும்போது பிரசினைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியும்.
அம்பிகாவுக்கு ஏற்பட்ட பிரசினைதான் இப்போது அதிகமாக டீன்ஏஜ் பெண்களிடம் காணப்படுகிறது. இதற்கு மருத்துவ உலகில், ‘ஐஸ்வர்யா ராய் சிண்ட்ரோம்’ என்று பெயர் வைத்துள்ளோம். அதாவது ஐஸ்வர்யா ராய் போல் ஒல்லியாக இருக்கவேண்டும் என்று டீன்ஏஜ் பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள், ஒல்லியாக இருக்கும் பெண்களைத்தான் விரும்புகிறார்கள்; ஒல்லிதான் கவர்ச்சி; எல்லா நடிகைகளும் மாடல் அழகிகளும் ஒல்லியாகத்தான் இருக்கிறார்கள்; ஒல்லியாக இருப்பதுதான் ஆரோக்கியம் என்ற எண்ணங்கள்தான் இதற்கு காரணம்.
ஆனால் அம்பிகா குண்டு. அவளது நண்பர்கள், அவளை எப்போதும் குண்டூஸ் என்று கிண்டலடித்திருக்கிறார்கள். எனவே மெலிய வேண்டும் என்பதற்காக மதியம் பள்ளிக்கூடத்தில் ஒரு ஆப்பிள் மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறாள். காலையிலும் இரவிலும் பெற்றோருக்கு முன்னால் சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் வாந்தி எடுத்திருக்கிறாள்.
அம்பிகா மாதிரி மெலிய வேண்டும் என்று விரும்பும் டீன்ஏஜ் வயதிலிருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் இந்த வழிமுறைகளைத்தான் பின்பற்றுகிறார்கள். ஏன் ஆண்களும் கூடத்தான். ஆண்களுக்கு ஏற்பட்டிருப்பது ‘ஹிரித்திக்ரோஷன் சிண்ட்ரோம்.’
இப்படி குறைவாக சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் ரத்தசோகை, தாழ்வு மனப்பான்மை, படிப்பில் பின்னடைவு, அதிகப்படியான சோர்வு, மன அழுத்தம், தனிமையை விரும்புதல், சாப்பாட்டில் சமச்சீரின்மை ஆகியவற்றுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். அவர்களுக்கு, உடல் மட்டும் ஒரு மனிதனுக்கு முக்கியமில்லை; அறிவு, கடும் உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என புரியவைக்க வேண்டும். மல்லேஸ்வரியை கூட உதாரணமாகக் கூறலாம். மல்லேஸ்வரி குண்டு. ஆனால் பளுதூக்கும் வீராங்கனையாக இன்று அவள் எவ்வளவு பிரபலமடைந்திருக்கிறாள். அழகாக இருக்கிறாள். அழகு என்பது நம்மிடம் இல்லை. பார்ப்பவர்களின் கண்ணில்தான் இருக்கிறது. ஒருவருக்கு அழகற்றதாகத் தெரியும் ஒருவர், இன்னொருவருக்கு அழகாய்த் தெரிவதற்கான காரணத்தை விளக்கவேண்டும்.
கீதாவுக்குத் தான் உயரமாக இல்லை; குள்ளமாக இருக்கிறோம் என்ற கவலை. ஆனால், இது அவளே வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு மரபுரீதியாக, உணவுபற்றாக்குறையால், ஹார்மோன் கோளாறுகளால்... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இதில் எதுவும் கீதாவுக்கு இல்லை. அவருடையது ‘தள்ளிப்போகும் வளர்ச்சி’தான். சில குழந்தைகளுக்கு இதுபோல் ஆகும். சில வருடங்களுக்குப் பிறகு வேகமாக வளர்ந்து சராசரி உயரத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள். ஆனால் இது தெரியாததால், கீதா மனக் குழப்பங்களுக்கு ஆளானாள். இதனால் மனச்சோர்வு காரணமாக அவளுக்கு பூப்படைவதும் தள்ளிப்போனது. விவரம் புரிந்த பிறகு தாழ்வு மனப்பான்மை அகன்று நம்பிக்கையுடன் வளையவரத் தொடங்கினாள் கீதா. அடுத்த வருடமே பூப்படைந்தாள்.
பூப்படைவது, சராசரியாக எட்டிலிலிருந்து 13 வயதுக்குள் நடக்கிறது. இந்த வயதில் பெரும்பாலும் அதுபற்றி அறிவு இல்லாமல்தான் நம்மூர் குழந்தைகள் வளர்க்கிறார்கள். தொடர்ந்து மாதவிடாய், மார்பகம் வளர்வது, மர்ம இடங்களில் முடி வளர்வது முகப்பரு போன்ற உடலில் ஏற்படும் பிரசினைகள் காரணமாக மனக்குழப்பங்கள் கூடிக்கொண்டே போகின்றன. இதுபோல் ஆண்களுக்குப் பிறப்புறுப்பும் விதையும் பெரிதாவது, மீசை எட்டிப்பார்ப்பது, குரல் உடைவது என்று பல்வேறு விஷயங்களைப் பற்றி ஏக மனக் குழப்பங்கள். இதைப் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு குறைவாக உள்ளதால் பயமடைகிறார்கள் அல்லது அம்பிகா மாதிரி தவறான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். இதனால் ஏற்படும் மனநல பாதிப்பு காரணமாக பசியின்மை, எடை குறைவது, சோர்வடைதல், முடிகொட்டுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். மனஅழுத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
பருவ வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம் பெற்றோர்கள் பேசவேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள், இதுதொடர்பான புத்தகங்களை அவர்களுக்கு படிக்கத் தரலாம். சுற்றுச்சூழல் பழக்கவழக்கங்கள், சமூக, கலாசார மாறுதல்கள், உடல் மாற்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுடன் சுதந்திரமாக பேச வேண்டும். இதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் கூச்சம் அடைகிறார்கள் அல்லது தயங்குகிறார்கள். நாமும் நம் பருவத்தில் பாதி நேரம் கண்ணாடிக்குமுன் நின்று, நம்மை நாமே ரசிப்பதிலேயே செலவிட்டவர்கள்தானே என்ற உண்மையே நினைத்துக்கொண்டாலே போதும் தயக்கம் விலகிவிடும்.
சந்திப்பு: தளவாய் சுந்தரம்.
படம்: சண்முகம்
நன்றி: குமுதம்
Copyright © Kumudam
|
|
|
| அரோகரா...! |
|
Posted by: sharish - 09-20-2003, 08:08 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (24)
|
 |
[size=18]<b>அரோகரா...!</b>
லாச்சப்பல் வீதியில்
நகர்ந்து கொண்டு வருகிறது
தேர்...!
முன்னாலே..
அண்ணன் கணேசன் செல்ல
பின்னாலே...
அவன் தம்பி கந்தவடிவேலன்
தேரிலே பவனி...!
வீதியெங்கும்...
ஒரே ஆரவாரமும்
அரோகராச் சத்தமும்
அம்மன் கோவில் தாண்டி
நகர்கிறது...
வேலனுக்கு அரோகரா
கணேசனுக்கு அரோகரா
எப்போர்...
அருகில் உள்ள
அம்பாளுக்கு
ஒன்றுமே சொல்லவில்லை...!
அவள்தான் பாவம்...!
அவளுக்கும் திருவிழா
வருகிறது போகிறது
ஒரு வருடம் கூட
வீதிவழி தேரில் ஏற்றி
கூட்டிச் சென்றதில்லை..!
இந்த எண்ணம்
இதுவரைக்கும் எவருக்கும்
தோன்றவில்லைப் போலும்...!
அம்பாள் வீதிவழி...
ஆனைமுகனுக்கும் தம்பி
ஆறுமுகனுக்கும்
அரோகரா என்று சொல்லிக்கொண்டே
ஆயிரக்கணக்கில்...
தேங்காய்களை சிதறுதேங்காயாக
உடைத்துக்கொண்டு
பக்த்தி பரவசத்துடன்
செல்கிறார்கள் பக்தர்கூட்டம்..!
அப்போ....
இளைஞர்கள் கூட்டம்...?
அவர்களுக்கு...
ஆட்டம்
பாட்டம்
கொண்டாட்டம்...!
இதைவிட
வேறு என்ன சந்தோஷம்
இந்த வாலிபருக்கு...?
இவர்களின் அரோகரா எல்லாம்
ஆண்டவனுக்கு இல்லை
அழகான பெண்களுக்கு மட்டும்தான்...!
அலையலையாய்த் திரண்டுவந்த
கதிர்வீசும் கண்களைக்கொண்ட
பெண்களுக்கும்
பட்டுப்பாவாடைகட்டி
மெல்ல நடந்துவரும் சின்ன இடை
வண்ணச்சிட்டுக்களுக்கும் தான்
இவர்களின்
பாமாலைகளும் அரோகராச் சத்தமும்
இப்போது...
லாச்சப்பல் வீதி எல்லாம்
அடைக்கப்பட்டு விட்டது..!
அந்த வழியால் வாகனம்
எதுவுமே...
உள்ளே செல்லவோ
அல்லது...
வெளியே செல்லவோ அனுமதியில்லை....!
ஏதோ... அவசரத்தில்
அடைக்கப்பட்ட வீதியால்
போக நினைத்த ஒரு பிரஞ்சுக்காரன்
போகமுடியாததால்...
அங்கு கடமையில் நின்ற
காவலரை திட்டிக்கொண்டே செல்கிறான்
அந்தப் பிரஞ்சுக்காரன்
ஒரு துணிச்சல்க்காரன்
அவன் காவலருக்குச் சொன்னான்....
வேலையில்லாமல் அவங்கள்
வீதியில் நின்று ஆட
நீங்கள் ஏன் பாதுகாப்பு
கொடுத்து....
உங்கள் நேரத்தை
வீணாக்குகிறீர்கள் என்று...!
அவன் பேசிய வார்த்தைகள்
காதுவழிவந்து என் நெஞ்சில் குத்தி
மனதிலே காயத்தோடு
தேரடி வீதிக்கு ஓடிவர....
பட்டுவேட்டிகட்டி
பக்த்திப்பரவசத்துடன்
பாதணி கூட இல்லாமல்
திருவிழா காணவந்த ஒரு வாலிபன்
தன் நண்பனுக்குச் சொல்லுகின்றான்...
மச்சான் அங்கபார்....
அந்தச் சரக்கு மணிச்சரக்கு
விடாத ஓடிப்போய்ப் பிடி...!!!
இப்போது நான்
யாருக்கு அரோகரா சொல்லுவேன்...?
அந்தப் பிரஞ்சுக்காரனுக்கா...?
இந்த வாலிபனுக்கா...?
அந்த வினாயகனுக்கா...?
மனசு குழம்பிய நிலையில்
நெஞ்சம் வெந்துபோயிலுக்க
அதோ....
அந்த வீதியில்....
வெந்த மனசுக்காரரை
குழிர்விக்க
குழிர்ந்த மோர் கொடுக்கிறார்கள்...!
ஆகா....
அமிர்தம்
அருமையான தொண்டு
தலைவணங்கலாம்
அவன் செய்யும் செயலுக்கு...!!
வெந்த மனதை
மோர் விட்டு ஆத்திக்கொண்டு நிற்க
வினாயகரும் அவன் சகோதரனும்
சுற்றுலா முடிந்து
ஆலயத்தினுள்ளே நுழைகிறார்கள்
நுழைவாயிலில்...
வைக்கப்பட்டிருந்த பல
நூற்றுக்கணக்கான தேங்காய்களை
சிதறுதேங்காய்களாக அடித்து
நொருக்கிவிட்டு
நூல் வேட்டிக் கரையை
சரிசெய்தபடி ஒரு பக்த்தன்
இன்னும் ஒருவனுக்குச் சொல்லுகிறான்
இந்தமுறை....
தேர்த்திருவிழா அந்தமாதிரி...!
அவன் சொல்லுவதைக் கேட்ட
எனது மனசு சொல்லியது...
அடைத்தகுரலில்....அரோகரா......!!!
த.சரீஷ்
17.09.2003 (பாரீஸ்)
|
|
|
| புயலுக்கும் பெயர் |
|
Posted by: Chandravathanaa - 09-19-2003, 08:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
<b><span style='color:#910000'>புயலுக்கும் பெயர்
[b]தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் உலாவ விட்டவர் [size=18]மதி</span>
கடந்த வாரம் தென் கொரியாவில் வீசிய [b]புயல் 'மேமி'யைப்பற்றி </b>
டாக்டர்.கண்ணன் அவர்களின் வலைப்பதிவில் http://emadal.blogspot.com/ படித்திருப்பீர்கள்.
இங்கு வடஅமெரிக்காவிலும், குறிப்பாக அமெரிக்காவின் கிழக்குப்பகுதியில் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து வீசிக்கொண்டிருக்கும் <b>புயலின் பெயர் 'இசபெல்'. </b>ரம்பத்தில் பயங்கர வேகத்தில் 4,5 என்றெல்லாம் எண் கொடுக்கப்பட்ட 'இசபெலுக்கு' இப்போது இரண்டாம் எண் கொடுக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கரோலினா மாகாணத்தில் இப்போது எண்பது மைல் வேகத்தில் வீசிக்கொண்டிருக்கிறது.
வடக்கு கரோலினா, வர்ஜீனியா, மே.வர்ஜீனியா,
மேரிலாண்ட், பென்சில்வேனியா மற்றும் டெலவார் மாகாணங்கள் இப்புயலினால்
சேதம் அடைந்தாலும் அடையக்கூடும் என்று அவசரச்சட்டம் பிறப்பித்திருக்கிறார்கள்.
<b>சரி அது என்ன 'மேமி', 'இசபெல்' என்று புயல்களுக்கெல்லாம் பெயர்
வைத்துக்கொண்டு? நம் ஊரிலுந்தான் வருடாவருடம் புயல் அடிக்குது. எத்தனையோ
சேதம் ஏற்படுது. நம்ம பக்கத்துப்புயல்களுக்கெல்லாம் யாரும் பேரு வைக்கிறமாதிரி இல்லியே.</b> இது என்ன வினோதமா இருக்குன்னு நீங்க நினைக்கலாம்.
இங்கே வட அமெரிக்காவிலும் கடந்த ஐம்பது ண்டுகளாகத்தான் புயல்களுக்கு பெயர்சூட்டும் வழக்கம் இருக்கிறது. புயல் ஏற்பட்டிருக்கும் சமயத்தில், வானிலையாளர்கள் மக்களுடன் ஊ
டகங்கள்மூலமாக மக்களுடன் தொடர்பு கொண்டு நிலவரங்களையும் லோசனை அறி
வுரைகளையும் அள்ளி வழங்குவதற்கு வசதியாக புயல்களுக்குப்பெயர் வைத்தார்கள். அதற்கு முன்னர் புயல் வீசிய ஆண்டோடு ஆங்கில எழுத்துகளில்
ஒன்றையும் பயன்படுத்தி வந்தனர். உதாரணமாக - 1942A.
ஆரம்பத்தில் பெண் பெயர்களே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், 1978இல் இருந்து ஆண்களின் பெயரும் பெண்களின் பெயரும் மாற்றி மாற்றி வழங்கப்படலாயிற்று.
ஒவ்வொரு வருடமும் ஆங்கில எழுத்துகள் - Q, U, X, Y, Z தவிர்த்து ஏனைய எழுத்துகளில் தொடங்கும் பெயர்கள் அவ்வருடம் உபயோகித்துக்கொள்வதற்காக சேகரிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட ஐந்து எழுத்துகளிலும் அதிகமான பெயர்கள்
இல்லாததால் அவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு ஆறு வருடம் முடிந்ததும்
ஏழாவது வருடம், கடந்து சென்ற முதல் வருடப்பட்டியல் பயன்படுத்தப்பட்டது. அது
மட்டுமல்ல, இந்தப்பெயர்களுக்கும் பணியிலிருந்து ஓய்வு இருக்கிறது. அப்படி ஓய்வழி
க்கப்பட்ட பெயர்களுக்குப்பதிலாக புதுப்பெயர்கள் சேர்க்கப்படுமாம்.
<b>சரி, இந்த வருடப்பெயர் பட்டியலைப்பார்ப்போமா?
ஆனா, பில், குளோடெத், டானி, எரிகா, ·பாபியன், கிரேஸ், ஹென்ரி, *இசபெல்*,
ஜூவான், கேட், லாரி, மிண்டி, நிக்கொலாஸ், ஓடெத், பீட்டர், ரோஸ், ஸாம்,
டெரெஸா, விக்டர், வாண்டா</b>.
நன்றி: கனடியன் ஹரிகேன் செண்டர்.
[b]தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் உலாவ விட்டவர் <span style='font-size:25pt;line-height:100%'>மதி</span>
|
|
|
|