Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 1839 online users.
» 0 Member(s) | 1835 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,132
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,114
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,561
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,266
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,558
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,967
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,352
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,015
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,961
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,223

 
  நன்றி கணையாழி
Posted by: nalayiny - 09-19-2003, 06:57 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (45)

உங்களுடன் சற்று நேரம்


குடிமகளை வரவேற்போம்

தமிழில் பெண்களுக்குத் தனிச்சொல் இல்லை
ஆனாலும் தமிழை அன்னை என்கிறோம்
தாய்மொழி என்று சொல்கிற தமிழில்
பெண்களுக்கென்று தனிச்சொல் இல்லையா?
சொத்துரிமையும் இட ஒதுக்கீடும்
கொடுக்கப்பட்ட பின்னரும் கூட
மொழியில் அவர்களுக்குத் தனிச்சொல்லை
அவர்களே உருவாக்க வேண்டியிருக்கிறது.

பெண்களும் கூட
குடிமகன் என்றே
உறுதிமொழி எடுத்துக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒதுக்கீடு கொடுத்தவர்கள்
உறுதிமொழிக்குச் சொல் தரவில்லை.

ஒதுக்கீட்டையும் கடந்து அரசியலில் பெண்கள்
வென்ற உரிமையின் விளைவுதான்
குடிமகள் என்ற சொல்லாட்சி.

ஆதியில் இருந்ததா? அல்லது
என்றைக்கும் பெண்களுக்குத்
தனிச்சொல் என்பது தமிழில் இல்லையா?
பின்வந்தோர் முன்பு இருந்த
சமத்துவ உரிமையைச் சாகடித்தார்களா?

அடூஉ அறிசொல் மகடூ அறிசொல்
பல்லோர் அறியும் சொல் -
ஆண்பாலுக்கு ஒரு சொல்
பெண்பாலுக்கு ஒரு சொல்
பலர்பாலுக்கு ஒரு சொல்
உயர்திணைக்கு மூன்று சொற்களைத்
தொல்காப்பியம் காட்டுகிறது.
மேலும்
'ன்' இல் முடியும் ஆண்பாற் சொல்
'ள்' இல் முடியும் பெண்பாற்சொல்
ர், ப, மார் என்று முடியும் பலர்பால்சொல் என்று
விளக்கிக் காட்டியது வியப்பைத் தருகிறது.

சமுதாயத்தில் ஆணாதிக்க ஆக்கிரமிப்பு
சொற்களிலும் தலைகாட்டத் தொடங்கின.
அவன் என்பது மட்டுமின்றி
அவர் என்பதும் ஆண்பாலுக்கானது
அப்பா வந்தான் என்று எழுதுவதில்லை
அம்மா வந்தாள் என்று
தி. ஜானகிராமனும் நாவல் எழுதினார்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும்கூட
அப்பாவின் மக்களாகவே அழைக்கப்பட்டனர்.
மதுரைக் கணக்காயர் மகனார்
நக்கீரனார் என்று சங்க காலப் புலவர்களும்
அழைத்துக் கொண்டனர்.
சிலப்பதிகாரக் கோவலன் கூட
மாசாத்து வாணிகன் மகனாகவே
காப்பியத்தில் காட்டப்படுகிறான்.
பெண்கள் என்றால் திருமணத்திற்குமுன் அப்பாவின் மகள்
திருமணத்திற்குப் பின் கணவனின் மனைவி.
கண்ணகி கூட "வாழ்தல் வேண்டி ஊழ்வினை துறப்ப
சூழ்கழல் மன்ன! நின்னகர்ப் புகுந்து
கொலைக்களப்பட்ட கோவலன் மனைவி" என்றே
கூறிக் கொண்டதாகச் சிலம்பும் புலம்பும்
ஆனாலும்
இன்னொரு மரபும் இருந்திருக்கிறது.
சீதாராமன் என்றால்
சீதையைக் குறிக்காமல் ராமனைக் குறிக்கும்.
ராதாகிருஷ்ணன் என்றால்
ராதையைக் குறிக்காமல் கிருஷ்ணனைக் குறிக்கும்.

அப்பாவின் பெயர் முன் எழுத்தானபோதும்
பள்ளியில் சேரும்போது அப்பா
திருமணம் ஆனதும் கணவன் என்று
பெண்களின் தலையெழுத்து
இரண்டுமுறை மாறும் இடர்ப்பாட்டிற்காளானது.
அதுமட்டுமின்றி
திருமணத்திற்குப்பின் திருமதி ஆவதும்
பெயருக்குப்பின் பின்னே கணவனைச் சும்ப்பதும்
பெண்களின் பொறுமைக்கு அணிகலன் ஆனது.

மானுடப் பண்பை விளக்குகிறபோது
பிuனீணீஸீவீsனீ என்றே ஆண்வழி கூறல்
ஆங்கில மொழியிலும் மரபாகியிருக்கிறது
ஆண் ஆதிக்க ஆக்கிரப்பு என்பதில்
மொழிகளுக்கு இடையே பேதமுண்டோ!
கேட்டால் சொன்னார்கள்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ
பிமீ வீஸீநீறீuபீமீs sலீமீ
ஆனால் உண்மை அப்படியில்லை.
கீளிவிகிழி என்பதில்தான் விகிழி இருக்கிறது
ஷிபிணி என்பதில்தான் பிணி இருக்கிறது.
ஆனாலும் சட்டங்களில் நடைமுறையில்
விணீஸீ வீஸீநீறீuபீமீs ஷ்ஷீனீணீஸீ என்றே
எல்லோரும் இங்கே எடுத்துரைத்தார்கள்
இந்திய விடுதலைப்போரில் கூட
ஆண் பெண் வேறுபாடின்றி
சுதந்திர வேள்விக்குப் பலியானோர் பலர்.
ஆனாலும், வரலாறு என்பது பிவீs ஷிtஷீrஹ் ஆனது
பிமீr ஷிtஷீrஹ் மறைந்து போனது
ஆட்சி உரிமையைப் போராடிப் பெற்றுப்
பதவிக்குப் பெண்கள் வந்தபிறகு
ஆணில் பெண்ணும் அடக்கம் என்பது
கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளது.

சிலீணீவீrனீணீஸீ பெண்ணாகும் போது சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ ஆனது.
சிலீணீவீrஷ்ஷீனீணீஸீ என்பதை ஏற்க முடியாமல்
சிலீணீவீrஜீமீrsஷீஸீ என்ற பொதுச்சொல் வந்தது.
விணீஹ்ஷீr ஆணாக இருக்கும்போது
மாநகரத் தந்தை என்றார்கள்
பெண் மேயர் வரும்போது
மேயரே இருக்கட்டும் என்றார்கள்.

பெண்களுக்கென்று தனிச் சொல் வந்ததும்
பொதுச் சொல்லைக் கண்டுபிடித்துப்
பெண்ணுக்கான தனிச் சொல்லை அழிக்கும்
தந்திர வேலைகள் இயல்பாய் நடந்தன.
அப்படி சிவீtழீzமீஸீ என்பதற்கு சிவீtவீzமீஸீமீss என்பது
பெண்பாற் சொல்லாக இருந்திருக்கிறது.
பெண்களுக்கென்று தனிச்சொல்லா என்று
சிவீtவீzமீஸீமீss சொல்லை மறைத்துவிட்டு
சிவீtவீzமீஸீ என்பதே பொதுச்சொல் என்றார்கள்.

குடிமகன் என்பதைப் பெண்ணுக்கும் சேர்த்துத்
தனிச்சொல் உருவாவதைத் தடுக்கப் பார்த்தார்கள்.
கைம்பெண், விதவை- சொற்களுக்கும்
ஆண்பாற் சொற்கள் இல்லைதான்
குடிமகனுக்குக் குடிமகள் இல்லை என்பதும்
கைம்பெண்ணுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
ஒன்றல்ல என்பதை உலகம் அறியும்.

எந்தெந்தச் சொற்களுக்கு ஆண்பாற் சொல் இல்லை என்பதும்
எந்தெந்தச் சொற்களுக்குப் பெண்பாற்சொல் இல்லை என்பதும்
உள்நோக்கிப் பார்த்தால்தான் உள்நோக்கம் வெளிப்படும்.

மைத்துனிக்கும் மகனுக்கும் மகளுக்கும்
தம்பிக்கும் தங்கைக்கும் அன்னைக்குமாகத்
தமிழக இலக்கிய அரசியல்வாதிகள்
கடிதங்கள் வாயிலாகக் கருத்தைத் தந்தார்கள்
எல்லோர்க்கும் பொதுவாக எடுத்தோத விரும்பிதை
ஒருபால் சொல்லால் அழைக்கலாமோ?
அந்நிலைமாறி
உடன்பிறப்பு, இரத்ததின் ரத்தம், தோழர்கள் என்று
பொதுவாய் இருவரையும் குறிப்பிடும் சொற்களால்
இன்றைய நிலையில் கடிதங்கள் வருகின்றன.

அரசியல் வானில் பெண்கள் பலரும்
ஊராட்சி - தொடங்கி முதலமைச்சர் வரை
பதவிகள் ஏற்றிருக்கும் காலமிது.
இப்போதும் பெண்கள் உறுதிமொழி எடுக்க
ஆண்பாற் சொல்லையே ஏற்க வேண்டும் என்பதையும்

தமிழில் சொற்கள் தனியாக இல்லை என்பதையும்
அண்மையில் முதல்வர் மாற்றியிருக்கிறார்.
இனி குடிமகள் என்றும் உறுதிமொழி எடுக்கலாம்
ஆண் ஆதிக்க ஆக்கிரமிப்பிலிருந்து
மொழியையும் கூட விடுவிக்கலாம்
இருபாலருக்குமான சொற்களை
இனிமேலாவது தமிழில் படைக்கலாம்
தமிழுக்குப் புதிய வரவுகள் வரிசையில்
தற்போது குடிமகள் வரவேற்போம்.

http://www.min-kanaiyazhi.com/ungaludun.htm

Print this item

  நில்லாமல் வா நிலாவே...! பகுதி-03
Posted by: sharish - 09-19-2003, 06:46 PM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

[size=18]<b>நில்லாமல் வா
நிலாவே...!</b>


பகுதி-03


உலகில் உள்ள எல்லா...
உயிரினங்களும்
அறிமுகமாகும்போதே
பிரிவு என்ற
எல்லைக்கோட்டை வைத்தே...
அறிமுகம் ஆகின்றன...!

ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்
எல்லாமே பிரிந்துபோய்விடும்
அப்போதுதான்
மனது....
தாங்கமுடியாத கொடிய
மரண வேதனையைக் கொடுக்கும்
இதயத்தை...
இந்தப் பிரிவு என்ற
கொடிய தீ எரிக்கும்...!
நெஞ்சம் அழும்...!

வாழ்க்கையில் எத்தனையோ
அறிமுகங்கள்...!
எத்தைனையோ பிரிவுகள்....!
வீட்டைப்பிரிந்து
நாட்டைப்பிரிந்து
நண்பர்களைப் பிரிந்து
நண்பிகளைப் பிரிந்து
காதலைப் பிரிந்து
பள்ளியைப் பரிந்து
ஆசிரியரைப் பிரிந்து
இப்படியாக...
எத்தனையோ
பிரிவுகளுக்கூடாக
எத்தனையோ தடவை
என் மனம் மரணித்து
இன்று...
இவள் முன்னாலே நிற்கிறது...!
ஒரு நாள் இவளிடம் இருந்தும்
பிரியவேண்டிவரும் என்ற
இலக்கணத்தோடு...!!!

இந்த இளய நிலவைப்பற்றி
எனக்குள்ளே ஏற்கனவே
ஒரு அறிமுகம்....!
அது...
என் நெஞ்சுக்குள்
ஓவியமாக வரையப்பட்டு
பிரிக்கமுடியாத பசையால்
ஒட்டப்பட்டபின்...
கிழிக்கமுடியாதபடி
ஆணிகளால் அறையப்பட்டு
அதன் பின்
அவிழ்க்கமுடியாதபடி...
கயிற்றினால் கட்டப்பட்டுள்ளது...!

அவள்...
ஒரு யுகத்திற்கு
ஒரு முறை அவதரித்து
எனக்காகவென்றே...
பிரமதேவனால் சின்னப் பிறையாக
அனுப்பிவைக்கப்பட்டு
மண்ணில் வந்த
கறுப்பு நிலவாக...
வளர்ந்துவருகிறாள்....
"பகல்நிலா" என்ற பெயரோடு...!
இது
எனக்குள் இருக்கும்
அறிமுகம்...!

அவள்...
தன்னைப் பற்றி எனக்காகக்
கூறும் அறிமுகம் என்ன..?

தாயகத்தில் பிறந்து
தாய்மடியில்த் தவழ்ந்து
தங்கத்துக்குரிய
தன்மையைக்கொண்ட
தமிழ்மொழியைப் படித்து
மணம்வீசும் மலர்போன்ற
விழிகொண்ட மங்கை
'''மதனா'' என்ற பெயரோடு
இந்தப் புலம்பெயர் மண்ணில்
நடமாடுகிறாள்...!

ஆகா..................
அவள் பெயரைக்கேட்டாலே
அதிலிருந்து ஆயிரம்
கவிதைகள் பிறக்கிறதே.....!
இப்போது...
என் நஞ்சில் வரையப்பட்ட
அந்த...
காதல் ஓவியத்தின் பெயர்
கொஞ்சம் மாறுகிறது....
பகல்நிலா அல்லா...!
மதனநிலா....!!!


(நிலவு வரும்...)

த.சரீஷ்
17.09.2003 (பாரீஸ்)

Print this item

  வணக்கம்
Posted by: Thileepan - 09-19-2003, 12:37 PM - Forum: அறிமுகம் - Replies (29)

வணக்கம்

Print this item

  கருத்துக்களக் குழுக்கள்
Posted by: வலைஞன் - 09-18-2003, 01:27 PM - Forum: களம் பற்றி - Replies (3)

கருத்துக்கள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் யாழ் இணையக் கருத்துக்களத்தில் 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுக்களுக்கும் வெவ்வேறுவிதமான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விருந்தினர்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்து அங்கத்துவர்கள் அல்லாதோர். இவர்களால் கருத்துக்களத்தில் உள்ள கருத்துக்களைப் பார்வையிடவும், வாசிக்கவுமே முடியும்.


அங்கத்துவர்கள்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்தில் அங்கத்துவர்களாக இணைந்தவர்கள் ஆவர். ஆனாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யாமல் அல்லது மிகக் குறைந்த(1,2) கருத்துக்களையே பதிவு செய்தவர்களா இருக்கிறார்கள். எனவே இப்படியான அங்கத்துவர்கள் எல்லாப் பிரிவுகளையும் பார்வையிடவும் வாசிக்கவும் முடியும், அதேநேரம் களவாயிலுக்குள் உள்ள "வரவேற்பு : களம்பற்றி : உங்கள் கருத்து" ஆகியவற்றுள் மட்டும் கருத்துக்களை எழுத முடியும்.


ஆரம்ப நிலை:
ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும் முடியும்.

தேர்வுமுறை:
சாதாரண அங்கத்துவர்களாக இருப்பவர்கள் (புதிதாய் அங்கத்துவர்களாக இணைந்துகொண்டவர்கள்), களவாயில் பகுதிக்குள் தம்மை அறிமுகம் செய்து கொள்வது, அல்லது கருத்துக்களம் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பது என்று மூன்றிற்கு மேலான கருத்துக்கள் பதித்த பின், அவர்களுக்கு ஆரம்ப நிலை அங்கத்துவம் வழங்கப்படும்.


இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.

தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.

நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.


உயர் நிலை:
இந்த நிலையில் அங்கத்துவர்கள் எவரும் இல்லை. எதிர்காலத்தில் யாழ் கருத்துக்களத்தின் விரிவாக்கத்தின்போது இந்த நிலை பயன்படுத்தப்படும்.


நிர்வாகக் குழு:
யாழ் இணையக் கருத்துக்களத்தின் பொறுப்பாளர்களும், கண்காணிப்பாளர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

குறிப்பு:- "களவாயில்" பகுதிக்குள் இருக்கும் "களம்பற்றி" என்னும் பிரிவுக்குள் நிர்வாகக் குழுவினரால் மட்டுமே புதிய கருத்தினைத் தொடங்க முடியும். மற்றவர்களால் அதற்கு பதில் மட்டுமே எழுதமுடியும்.


:::::::
இங்கே இடை நிலை அங்கத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 கருத்துக்களுக்கு மேலாகப் பதிவு செய்தவர்களாகவும், சிலவேளை கருத்துக்கள் குறைவாக இருந்தாலும், முன்னைய கருத்துக்களத்தில் பண்பாகவும், பயனுள்ளதாகவும் நிறைய கருத்துக்களை வைத்தவர்களாவர்.
:::::::

குறைகளை நிர்வாகத்திடம் அறியத் தாருங்கள்!!!
பி.கு.: தேவையேற்படின் மாற்றங்கள் நிகழும்.

நன்றி

Print this item

  மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல் வெளியீட்டு விழா!
Posted by: Chandravathanaa - 09-18-2003, 10:14 AM - Forum: நூற்றோட்டம் - No Replies

<b>மகப்பேறும் மகளிர் மருத்துவமும்- நூல் வெளியீட்டு விழா!

ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குப் போவதென்றால் என் மனம் திக்குத் திக்கு என்று அடிக்கும்..........இப்படித் தொடர்கிறார் நூல் வெளியீட்டு விழா பற்றி [b]நக்கீரன்</b> அவர்கள்

சென்ற சனிக்கிழமை ஸ்காபரோவில் நடைபெற்ற 'மகப்பேறும் மகளிர் மருத்துவமும்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் <b>நக்கீரன்</b> அவர்கள் கூறியவற்றில் சில..............

தமிழர்களுடைய வீடுகளில் கண்டிப்பாக சாமி அறை இருக்கும். சாமி அறை இல்லாத வீட்டையே பார்க்க முடியாது! ஆனால் யார் வீட்டிலும் புத்தக அறை இருக்காது! புத்தகம் வாங்கினால் அல்லவா புத்தக அறை வேண்டும்?

ஆங்கிலேயர்கள் அப்படி இல்லை. நிறைய வாசிக்கிறார்கள். நிறைய நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள். உணவுக்கு உடைக்குச் செலவழிப்பதுபோல உழைப்பில் ஒரு பகுதியை புத்தகம் வாங்குவதில் செலவிடுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒரு நல்ல நூல் எழுதினால் போதும். அடுத்த நாளே அதை எழுதிய நூலாசிரியர் கோடீசுவராக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது.

<b>முன்னாள் அமெரிக்க சனாதிபதி கிளின்டனின் மனைவி கிலாறி கிளின்டன் 'வாழும் வரலாறு" ("Living History") என்ற பெயரில் 562 பக்கங்கள் கொண்ட ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.</b>

நூலுக்கு பிள்ளையார் சுழி போடுமுன்னரே முற்பணமாக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவர் வாங்கி விட்டார். நூல் வெளிவந்தபின் 3 மில்லியன். ஆக மொத்தம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்து விட்டார்.

இவரை தூக்கி அப்படியே சாப்பிட்டு விட்டார் <b>இன்னொரு பெண் எழுத்தாளர். பெயர் Ms. J.K. Rowling. இவர் Harry Potter என்ற தலைப்பில் புத்தகங்களை எழுதி வருகிறார். </b>இது சிறுவர்களுக்கான மாயாஜால மந்திர தந்திரப் புத்தகம். முதல் நான்கு புத்தகங்கள் ஏற்கனவே வெளியாகி விட்டன. இந்தப் புத்தகங்கள் நான்கும் 200 நாடுகளில் 200 மில்லியன் படிகள் (20 கோடி) விற்பனை ஆகின. அதன் பதிப்பாளர் Bloomsburyக்கு கிடைத்த இலாபம் 15 மில்லியன் ஸ்டேலிங் பவுண்கள்.

<b>ஐந்தாவது "Harry Potter and the Order of the Phoenix'' என்ற புத்தகம். சரியாக சனிக்கிழமை இரவு 12.01 மணிக்கு உலகம் பூராவும் உள்ள புத்தகக் கடைகள் கதவுகளைத் திறந்து விற்பனைக்கு விட்டன. </b>எக்கச்சக்கமான விளம்பரம்.

முதல் நாள் அமெரிக்க அமேசன் வலையத்தில் மட்டும் 760,000 படிகள் விற்பனையாகின. விலை 29.99 அ.டொலர்கள். மற்ற நாடுகளில் உள்ள கிளைகள் மூலம் 10 இலட்சம் படிகள் விற்பனையாகின.

இன்று இந்த நூலாசிரியர் உலகத்தில் உள்ள முதல் நூறு பணக்காரர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். அவரது சொத்தின் பெறுமதி பிரித்தானிய மகாராணி எலிசபெத்தைவிட அதிகமாம்!

தமிழில் ஒரு புத்தகம் வெளியிட்டால் ஆயிரம் படிகள் விற்பனையாவது அதிகம். இதற்கு இந்திய சனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எழுதிய ''அக்னிச் சிறகுகள்"" (தன்வரலாறு) விதிவிலக்கு. ஒரு இலட்சம் படிகள் விற்பனையாகி தமிழ்ப் புத்தக வெளியீட்டில் 'சாதனை" படைத்துள்ளது. கலைஞர் மு.கருணாநிதி எழுதிய 'தொல்காப்பியப் பூங்கா" 10,000 படிகள் விற்பனையாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த இருவரும் 'பிரபலங்கள்" என்பதுதான். ஒருவர் இன்னாள் சனாதிபதி. மற்றவர் முன்னாள் முதல்வர்.

<b>திரு.சு. இராசரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். </b>தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவருவது மிக அருமை. வெளிநாட்டில் 31 ஆண்டுகள் செலவழித்த ஒருவர் மருத்துவ சம்பந்தமான நூலை தமிழில் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது போற்றத்தக்கது என்றார்.

<b>வரவேற்புரையை அடுத்து வைத்திய கலாநிதி இராஜேஸ்வரி நூல் ஆய்வுரை நிகழ்த்தினார்</b>. இவர் மகப்பேற்றியல் மகளிர் மருத்துவ சிறப்பு சிகிச்சை மருத்துவர்.

<b>நூலாசிரியர் வைத்திய கலாநிதி செ.ஆனைமுகன் எழுதியுள்ள ''மகப்பேறும் மகளிர் மருத்துவம்"" என்ற நூல் ஆங்கிலத்தில் புலமை இல்லாதவர்களுக்கு மகப்பேறு தொடர்பான பல அரிய தகவல்களை தருகிறது. அதனைப் படித்து தாய்மார்கள் பயன் அடையலாம் என்றார்.</b> பேச்சை எழுதி வாசித்தாலும் அதனை தங்குதடையின்றி செய்து குறித்த நேரத்துக்குள் முடித்துக் கொண்டார்.

<b>அடுத்து வைத்திய கலாநிதி விக்டர் பிஃகுராடோ, குடும்ப வைத்தியர் ஆய்வுரை நிகழ்தினார். தமிழில் மிகச் சரளமாகப் பேசக் கூடிய வைத்திய கலாநிதிகளில் இவரும் ஒருவர்.</b> ஆய்வுரை என்றால் மேற்போக்காக நூலைப் படித்துவிட்டு ஒப்புக்குப் பேசிவிட்டு அமருபவர் அல்ல. மாறாக கொடுத்த பணியை பொறுப்புணர்வோடு செய்து முடிக்கக் கூடியவர்.


நூலின் அட்டைப் படத்தின் வடிவமைப்பை வைத்திய கலாநிதி பிஃகுராடோ மிகவும் சிலாகித்துப் பேசினார். உண்மையும் அதுதான். ஒரு பெண்ணின் எலும்புருவம் (skeletoh) கருப்பப்பை, கருப்பை வாய் பூரணமாக விரிவடைந்த நிலையில் குழந்தையின் தலையின் நிலைப் படம், பிறந்த குழந்தையை கையில் ஆசையோடு வைத்திருக்கும் ஒரு இளந்தாயின் படம். இவை அனைத்தும் நூல் ஒரு மகப்பேறு மருத்துவ நூல் என்பதை பளிச்சென எடுத்துக்காட்டுவதாக இருந்தன!

நூலின் தடித்த மட்டை அந்த நூல் பல தலைமுறைக்கும் பயன்படும் வண்ணம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் பல முட்டுக்கட்டுக்களை எதிர்நோக்குகிறார்கள். முதலாவது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு போதியளவு இல்லாதது மருத்துவர்களுக்கு தங்கள் வருத்தங்களைச் சொல்லி மருத்துவம் செய்யத் தடையாக இருக்கிறது. இரண்டாவது மருத்துவரிடம் போகும்போது தங்கள் கணவர்மாரோடு சேர்ந்து போவதில்லை. இதற்கு கணவர்மார்களுக்கு இருக்கும் வேலைப்பளு அதனால் ஏற்படும் நேர நெருக்கடி காரணமாகும்.

'தமிழ்நாட்டில் வழங்கும் கலைச் சொற்கள் சிலவற்றுக்குப் பதில் இலங்கையில் வழங்கும் கலைச் சொற்களை நூலாசிரியர் பயன்படுத்தி இருந்திருக்கலாம்."

சொற்களினால் வரும் குழப்பத்துக்கு ஒரு பாடலை எடுத்துக்காட்டாகச் சொன்னார்.

'தமிழில் சிறந்த காவியம் படைப்போன் தமிழ்மொழிக்கு உயிர் கொடுக்கிறான்" 'பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்"" என்ற பாரதியாரின் ஆசையை நூலாசிரியர் நிறைவேற்றி இருக்கிறார்" என கலாநிதி பிஃகுராடோ நூலாசிரியருக்குப் புகழாரம் சூட்டினார்.

நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் ஒரு பேராசிரியர் மருத்துவ மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுப்பாரோ அப்படி திரையில் கணனி மூலம் புத்தகத்தின் உள்ளடக்கத்தை விளக்கி நீண்ட நேரம் பேசினார்.

<b>முதல் பகுதி (28 அத்தியாயங்கள்) மகப்பேறு பற்றியது. இரண்டாவது பகுதி (32 அத்தியாயங்கள்) மகளிர் மருத்துவம் பற்றியது. இதைவிட 108 வரைபடங்கள் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது பக்கங்களின் எண்ணிக்கை 672.</b>

'இந்த நூலின் விற்பனையால் வரும் வருவாய் தமிழர் வாழ்க்கை, கலாசாரம், தமிழ்மொழி முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புள்ள அமைப்புகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்" என நூலாசிரியர் பலத்த கை தட்டலுக்கு மத்தியில் அறிவித்தார்.

<b>புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவிற்கு இவ்வளவு பேர் திரளாக வந்திருப்பது தனக்கு வியப்பாக இருக்கிறதாக சொன்னார். தமிழ் நாட்டில் புத்தக வெளியீட்டுக்கு 50-60 பேர் இருக்கக்கூடிய மண்டபமே தெரிவு செய்யப்படுகிறது என்றார். விழாவில் பேசுகிறவர்களும் அநேகமாக ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். </b>ஆனால் இங்கு உரையாற்றிய அத்தனை வைத்தியக் கலாநிதிகளும் அழகான தமிழில் பேசினார்கள். <b>'அறிவியல்பற்றிய நூல்களுக்கு தமிழில் பஞ்சம் இருக்கிறது. மருத்தவம்பற்றி தமிழில் எழுதப்பட்ட மூன்றாவது நூல் இது" என்றார்.</b>

நூல் ஆய்வுக்கு வைத்திய கலாநிதிகளை மட்டும் தேர்ந்தெடுக்காமல் அந்தத் துறைக்கு வெளியேயுள்ள ஒருவரை வேறு கண்ணோட்டதில் ஆய்வு செய்ய விட்டிருக்கலாம்.

உரையாற்றிய வைத்திய கலாநிதிகள் புத்தகத்தைப் படித்துவிட்டு தங்களுக்குத் தாங்களே வாசகர்கள் வைத்தியம் செய்ய எத்தனிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்கள்.

தன் பங்குக்கு நூலாசிரியர் வைத்திய கலாநிதி ஆனைமுகன் அறிவியல் தமிழுக்கு ஒரு கொடியேற்றம் செய்து வைத்திருக்கிறார்!

இந்நூலினை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள்:
S.Ahnaimugan
P.O.Box 5291
Palmerston North
New Zealand
E-mail:ahnaimugan@inspire.net.nz

[b]- நக்கீரன் -

Print this item

  Thai police face probe over Tamil Tiger arms deal
Posted by: Mathivathanan - 09-18-2003, 09:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[size=18]Thai police face probe over Tamil Tiger arms deal

BANGKOK, Sept 18 (AFP) - Nine Thai police officers face investigations over allegedly supplying arms to Sri Lankan Tamil Tiger rebel contacts arrested in the kingdom in May, Thai Prime Minister Thaksin Shinawatra said Thursday.

A special team will investigate claims that the officers helped supply guns and ammunition to members of the Liberation Tigers of Tamil Eelam (LTTE), which has been engaged in a shaky peace bid with the Sri Lankan government over the past year.

"We will investigate to find out who is behind this action," the premier told reporters. "If we find enough evidence, they will face criminal charges."

Three Sri Lankan men were nabbed in May at a hotel car park in Ranong city, some 570 kilometres (353 miles) south of Bangkok, with police seizing 10 nine-millimetre pistols, three 11-millimetre pistols and 45,000 rounds of ammunition.

Intelligence sources said at the time the weapons came from Bangkok and were due to be smuggled out of the country in an operation similar to several previous gun-running deals.

Deputy chief of the Central Investigation Bureau, police Major General Panupong Singhara, said he had ordered the probe into the policemen, who are from Bangkok's Records Division.

"There is no disciplinary order against them yet, but they will face an investigation to see whether or not they were involved with the rebels," Panupong said.

The guns seized in the May arrests were reportedly registered to the officers, police Colonel Prawat Semdi, deputy chief of the Registration Department, was cited as saying in the Nation newspaper.

Thaksin vowed during a visit to Colombo in August that he would crack down on terror groups amid reports then that the LTTE were using Thailand as a transit point for gun running.

The kingdom hosted peace talks between the Colombo government and the LTTE in September last year.

http://www.ptd.net/webnews/wed/dv/Qthailan...l.Ry56_DSI.html

Print this item

  World's first DNA store..!
Posted by: Chandravathanaa - 09-18-2003, 07:23 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

[b][size=18]World's first DNA store..!

ஜெர்மனியின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான Bremen நகரில் புதிதாக கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இக்கடையின் பெயர் 'க்ரொமொசொமா' (chromosoma). இந்தக் கடையில் விற்கப்படும் பொருள் அல்லது சேவை என்ன தெரியுமா..?

இந்தக் கடைக்கு வருபவர்கள் ஆறு வகையான பொருட்கள் அல்லது சேவைகளைப் ப்ற்றி அறிந்து கொள்ள முடியும். உதாரணமாக 'குழந்தையை தேர்ந்தெடுத்தல்' என்ற சேவையைச் சொல்லலாம். எந்த சமயத்தில் பெண்கள் தங்களைக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள தயார்படுத்திக் கொள்வது போன்ற அலோசனைகளை வழங்கும் ஒரு பகுதி இங்கு உண்டு. அதோடு தங்கள் குழந்தைக்குத் தேவையான மரபு அணுக்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இங்கு ஏற்பாடு செய்து தரப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் தங்கள் மரபு அணுக்களை இங்கு விற்பனைக்குக் கொடுக்கலாம்; இந்த வசதிகளையும் இந்த நிறுவனம் வழங்குகின்றது.

இந்த நிறுவனம் 'gen-ex' என்ற ஒரு பிரத்தியேக சேவையையும் வழங்குகின்றது. இதன் வழி ஒரு மனிதரின் தனிப்பட்ட மரபு அணுக்களின் சில பகுதிகளை அழித்து விடும் சேவையும் வழங்கப்படுகின்றது. இதனைக் கொண்டு ஒருவரின் தோல் மரபு அணுக்கள், முடி போன்றவற்றை மாற்றி அமைக்க முடியும். ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா..?

[b]http://subaonline.log.ag/ இலிருந்து

Print this item

  களத்தில் மாற்றங்கள் - புதியன
Posted by: வலைஞன் - 09-17-2003, 11:04 PM - Forum: களம் பற்றி - Replies (31)

அனைவருக்கும் வணக்கம்!

கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம்.

இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம்.

அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வழங்க எண்ணியுள்ளோம்.

எனவே இதுவரை செய்யப்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு மனம் வருந்துகிறோம்.

Print this item

  கருத்து
Posted by: Mullai - 09-17-2003, 07:34 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (17)

கள

தமிழ்க்

சிந்தனைக்

இளைப்பாறு

அறிவியற்

வீடியோ

தகவற்

எல்லாவற்றிறகும் களம் தந்த மோகன், வீடியோவிற்கு தர மறந்ததேனோ?

முன்னரெல்லாம் களத்திற்கு வந்தால் ஆரம்பமே குழாயடிச் சண்டையாகத்தான் இருந்தது.
இப்பொழுது வாசலிற்கு வந்ததும் வரவேற்பு இருப்பது அருமை

Print this item

  வாழ்த்துக்கள்
Posted by: இனியவன் - 09-17-2003, 12:53 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (10)

<b>இது நாங்கள் வெல்லும் காலம்! </b>
வெற்றியடைந்தே தீருவோம் என்று ஈழத்தமிழர்கள் முடிவு செய்தால் அதைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது என்பதற்கு உதாரணம் தேடுவோர் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவைக் கவனியுங்கள். இங்கு நடந்தேறிய உள்ராட்சித் தேர்தலில், ஒஸ்லோ மாநகரசபை பிரதிநிதியாக யோகராஜா பாலசிங்கம் (பாஸ்கரன்) என்கின்ற ஒரு தமிழர் ஒருவர் முதற்தடவையாகத் தெரிவாகியுள்ளார். நோர்வீஜியர்களைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு வழமையான சமாச்சாரம்.

http://www.yarl.com/news/index.php?mode=single&n=129

Print this item