Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருத்துக்களக் குழுக்கள்
#1
கருத்துக்கள நண்பர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் யாழ் இணையக் கருத்துக்களத்தில் 4 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுக்களுக்கும் வெவ்வேறுவிதமான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

விருந்தினர்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்து அங்கத்துவர்கள் அல்லாதோர். இவர்களால் கருத்துக்களத்தில் உள்ள கருத்துக்களைப் பார்வையிடவும், வாசிக்கவுமே முடியும்.


அங்கத்துவர்கள்:
இவர்கள் யாழ் இணையக் கருத்துக்களத்தில் அங்கத்துவர்களாக இணைந்தவர்கள் ஆவர். ஆனாலும் பலர் இன்னமும் கருத்துக்களத்தில் தமது கருத்துக்களைப் பதிவு செய்யாமல் அல்லது மிகக் குறைந்த(1,2) கருத்துக்களையே பதிவு செய்தவர்களா இருக்கிறார்கள். எனவே இப்படியான அங்கத்துவர்கள் எல்லாப் பிரிவுகளையும் பார்வையிடவும் வாசிக்கவும் முடியும், அதேநேரம் களவாயிலுக்குள் உள்ள "வரவேற்பு : களம்பற்றி : உங்கள் கருத்து" ஆகியவற்றுள் மட்டும் கருத்துக்களை எழுத முடியும்.


ஆரம்ப நிலை:
ஆரம்ப நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும் முடியும்.

தேர்வுமுறை:
சாதாரண அங்கத்துவர்களாக இருப்பவர்கள் (புதிதாய் அங்கத்துவர்களாக இணைந்துகொண்டவர்கள்), களவாயில் பகுதிக்குள் தம்மை அறிமுகம் செய்து கொள்வது, அல்லது கருத்துக்களம் பற்றிய தமது கருத்துக்களை முன்வைப்பது என்று மூன்றிற்கு மேலான கருத்துக்கள் பதித்த பின், அவர்களுக்கு ஆரம்ப நிலை அங்கத்துவம் வழங்கப்படும்.


இடை நிலை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்களால் அனைத்துப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய கருத்துக்களை எழுதவும், பதில் எழுதவும், தமது கருத்துக்களில் பிழை திருத்தம் செய்யவும் முடியும். மற்றும் இங்கு அங்கத்துவர்களாக இருப்பவர்களால் மட்டுமே கோப்புகளை (படங்கள்) தரவேற்றம் செய்ய முடியும்.

தேர்வு முறை:
ஆரம்பநிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் கருத்துக்களத்தில் 50 கருத்துக்களைப் பதித்தபின் இடை நிலை அங்கத்துவத்துக்காக நிர்வாகத்தினரிடம் விண்ணப்பிக்கலாம். அதன் பின் உங்கள் கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு முடிவு எட்டப்படும்.

நிபந்தனை:
இடை நிலை அங்கத்துவர்களாக இருப்பவர்கள் தாம் எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் மட்டுமே செய்ய முடியும். கருத்தின் பொருளில் எந்தவித மாற்றங்களோ, எழுதிய கருத்தை இல்லாமலாக்கி, வெறுமையாக்குவதையோ செய்யக்கூடாது. அப்படி நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டு, இரண்டாம் தடவை, ஆரம்ப நிலை அங்கத்துவராகக் கீழிறக்கப்படுவீர்கள்.


உயர் நிலை:
இந்த நிலையில் அங்கத்துவர்கள் எவரும் இல்லை. எதிர்காலத்தில் யாழ் கருத்துக்களத்தின் விரிவாக்கத்தின்போது இந்த நிலை பயன்படுத்தப்படும்.


நிர்வாகக் குழு:
யாழ் இணையக் கருத்துக்களத்தின் பொறுப்பாளர்களும், கண்காணிப்பாளர்களும் இந்தக் குழுவில் உள்ளனர்.

குறிப்பு:- "களவாயில்" பகுதிக்குள் இருக்கும் "களம்பற்றி" என்னும் பிரிவுக்குள் நிர்வாகக் குழுவினரால் மட்டுமே புதிய கருத்தினைத் தொடங்க முடியும். மற்றவர்களால் அதற்கு பதில் மட்டுமே எழுதமுடியும்.


:::::::
இங்கே இடை நிலை அங்கத்துவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 கருத்துக்களுக்கு மேலாகப் பதிவு செய்தவர்களாகவும், சிலவேளை கருத்துக்கள் குறைவாக இருந்தாலும், முன்னைய கருத்துக்களத்தில் பண்பாகவும், பயனுள்ளதாகவும் நிறைய கருத்துக்களை வைத்தவர்களாவர்.
:::::::

குறைகளை நிர்வாகத்திடம் அறியத் தாருங்கள்!!!
பி.கு.: தேவையேற்படின் மாற்றங்கள் நிகழும்.

நன்றி

[b]


#2
ஆகா...

குழுக்களின் மூலம் கருத்துக்களத்தில் கருத்துக்களின் தரம் உயரட்டும்.
கருத்தாட வருபவர்கள் திடீரென்று வந்து திடீரென்று மறைபவர்களாக
அல்லாமல், நல்ல கருத்துக்களை வழங்கவும், மற்றைய கருத்துக்களின்
தன்மையைப் பாதுகாக்கவும் இந்தக் குழுக்கள் பயன்பட்டால் நன்மை.


#3
அனைத்து அங்கத்துவர்க்கும் வணக்கங்கள்,

கருத்துக்களக் குழுக்கள் பற்றிய விபரங்களை மேலே வாசித்திருப்பீர்கள். எனவே அதன் அடிப்படையில் "இடைநிலை அங்கத்துவர்" குழுவில் இன்று சிலர் இணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய இதுவரையிலான கருத்துக்களின் எண்ணிக்கை, கருத்து முன்வைக்கின்ற பண்பு என்பவற்றை அடிப்படையாக வைத்து அவர்கள் இக்குழுவில் இணைக்குப்பட்டிருக்கிறார்கள். அதுதவிர இப்புதிய களத்தில் குறைந்த கருத்துக்கள் எழுதியபோதும், நமது பழைய கருத்துக்களத்தில் பல கருத்துக்களை எழுதிய அங்கத்துவரையும் நாம் இங்கு இணைத்துள்ளோம்.

எனவே இடைநிலை அங்கத்துவர் குழுவிற்கான நிபந்தனைகளைப் பின்பற்றுமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

அதேநேரம் இதுவரை காலம் நீங்கள் கருத்துக்களத்தில் முன்வைத்த, பகிர்ந்த கருத்துக்களையிட்டு அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம். தொடர்ந்தும் எழுதுக.

முக்கிய குறிப்பு: இடைநிலைக் குழுவில் அங்கத்துவராக இருந்தபொழுதும் பலருக்கு அதன் சலுகைகள் பற்றிய விளக்கம் இல்லையோ என்று தோன்றுகிறது. அதாவது இக்குழுவில் அங்கத்துவராக இருப்பவர்கள் தங்கள் கருத்துக்களில் இருக்கின்ற எழுத்துப் பிழைகளைத் திருத்துவதற்கான அனுமதியுள்ளது. எனவே தயவுசெய்து உங்கள் கருத்துக்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதைப் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் கவனிக்கும் பொழுது திருத்தி விடுங்கள்.

இடைநிலைக் குழு அங்கத்துவர் பட்டியல்:
http://www.yarl.com/forum/groupcp.php?g=141

நன்றி

[b]


#4
கள உறவுகளுக்கு வணக்கம்,

இதுவரை 50க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதியுள்ள புதிய உறுப்பினர்கள் அவர்களுக்கு இடைநிலை அங்கத்துவம் தேவைப்பட்டால் பொறுப்பாளரையோ அல்லது மட்டுறுத்தினரையோ தனிமடல் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். அதன் பின்பு அவர்கள் எழுதிய கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு இடைநிலை அங்கத்துவம் வழங்கப்படும். இடைநிலை அங்கத்தவர்களால் கருத்துக்களில் திருத்தம் செய்யவும் படங்களை தரவேற்றம் செய்யவும் முடியும்.

நன்றி

நட்புடன்
மதன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)