Yarl Forum
வணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம் (/showthread.php?tid=8122)

Pages: 1 2

வணக்கம் - Thileepan - 09-19-2003

வணக்கம்

- kuruvikal - 09-19-2003

வாருங்கள் நண்பரே தாருங்கள் உங்கள் கருத்தை நயமுடனே....!

- இளைஞன் - 09-19-2003

வருக. வளர்க்க. வளர்க.

வந்தாரை வரவேற்கும்
செந்தமிழர் பண்போடு
நற்றமிழால் நற்கருத்தை
நமக்களிக்க வரவேற்றோம்!

இக்களத்தில் உமதறிவால்
வளம்சேர்த்து வலம்வரவே
நட்போடு நமதருமை
நண்பரோடு வரவேற்றோம்!

வாரீர் அண்ணா...

- Manithaasan - 09-20-2003

தியாகி திலீபனின் நினைவு
சென்ற வாரம்--அதை
நினைவுறுத்த வந்தனையோ
இவ்வாரம்.
காரமாய் கனமாய் கருத்துப் பகிர்வாய்...
கருத்தால் ; இசையலாம
மோதலாம்
தமிழ் இதயத்தால் என்றும் நட்புடன் இணைவோம்
வருவாய் திலீபா
வளம்மிகு கருத்துகள் தருவாய்
யாழில்.....

- தணிக்கை - 09-20-2003

<span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம்</span>

- தணிக்கை - 09-20-2003

நான் கருத்து தர முயன்றேன் ஆனால் இப்படி வருகிறது ஏன்

<span style='font-size:25pt;line-height:100%'>Sorry, but only users granted special access can reply to posts in this forum.</span>

- Mathivathanan - 09-20-2003

[quote]தணிக்கை[/color]நான் கருத்து தர முயன்றேன் ஆனால் இப்படி வருகிறது ஏன்

<span style='font-size:25pt;line-height:100%'>Sorry, but only users granted special access can reply to posts in this forum.</span>
ஒரு முன்னேற்பாடுதான். சேதுவை முன்கூட்டியே அடையாளம் காண ஒரு முயற்சியாயிருக்கலாம்.. எதற்கும் எனக்குப் பதில் எழுதினால் பார்த்து ஒருவேளை உங்களை உள்ளே விடலாம். முயற்சிசெய்யுங்கள்.
நன்றி.

- தணிக்கை - 09-20-2003

"சேது"
:roll: :roll: :roll: :roll:

- Mathivathanan - 09-20-2003

தணிக்கை Wrote:"சேது"
:roll: :roll: :roll: :roll:
தணிக்கை பெயரில் உள்ளிட முடியாமல் தணிக்கை கேள்விக்குறியுடன் நுளைய முயற்சிக்கின்றீர்களா..? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- தணிக்கை - 09-20-2003

திரு மதிவதனன் தங்களின் ஆவலுக்கு நன்றி ஆனால் தவறான் ஆதங்கத்திற்கு கவலை.

- Thileepan - 09-21-2003

kuruvikal Wrote:வாருங்கள் நண்பரே தாருங்கள் உங்கள் கருத்தை நயமுடனே....!

இளைஞன் Wrote:வருக. வளர்க்க. வளர்க.

வந்தாரை வரவேற்கும்
செந்தமிழர் பண்போடு
நற்றமிழால் நற்கருத்தை
நமக்களிக்க வரவேற்றோம்!

இக்களத்தில் உமதறிவால்
வளம்சேர்த்து வலம்வரவே
நட்போடு நமதருமை
நண்பரோடு வரவேற்றோம்!

வாரீர் அண்ணா...

Manithaasan Wrote:தியாகி திலீபனின் நினைவு
சென்ற வாரம்--அதை
நினைவுறுத்த வந்தனையோ
இவ்வாரம்.
காரமாய் கனமாய் கருத்துப் பகிர்வாய்...
கருத்தால் ; இசையலாம
மோதலாம்
தமிழ் இதயத்தால் என்றும் நட்புடன் இணைவோம்
வருவாய் திலீபா
வளம்மிகு கருத்துகள் தருவாய்
யாழில்.....

வந்தாரை வரவேற்கும் பண்புக்கு இலக்கணமாய் அழகாக வரவேற்றிருக்கிறீர்கள்.

நன்றி

- S.Malaravan - 09-21-2003

வணக்கம்! திலீபன் இந்த பெயர் தமிழீழத்தின் அழிக்கமுடியாத ஓர் சுவடு. அந்த நினைவு நாளில் வந்திருக்கும் உங்களை வரவேற்ருக் கொள்கிறேன். வழமான கருத்துக்களை பெயரின் ஆழத்தோடு தருவீர்கள் என மனப்புூர்வமாக வாழ்த்தி மீண்டும் வரவேற்கிறேன்
நன்றி :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:

- PATCHI - 09-21-2003

வணக்கம் யாழிற்கும் யாழின் நண்பர்களுக்கும்..

ஷ்...........பட்சி வந்திடுச்சு,பட்சி வந்திடுச்சு..ஷ்...............

- Mullai - 09-21-2003

[quote]PATCHI[/color]வணக்கம் யாழிற்கும் யாழின் நண்பர்களுக்கும்..

ஷ்...........பட்சி வந்திடுச்சு,பட்சி வந்திடுச்சு..ஷ்..............[/color]
புதிய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
பழைய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே....

அப்பவே பட்சி சொல்லிச்சு... புதுசா ஒரு பறவை வருமென்று.
வாருங்கள்...

<span style='font-size:16pt;line-height:100%'> (மதிவதனன் திருத்த வேண்டாம் புதியதும் பழையதும் இடம் மாறிவிட்டன)</span>

- PATCHI - 09-21-2003

முல்லைப்பாட்டி..முல்லைப்பாட்டி ஏன் என்னுடைய சிக்னேச்சர் வரவில்லை...?

யாராவது பட்சிக்கு உதவி செய்யலாமே..?

- PATCHI - 09-21-2003

ஹையா........வந்திடுச்சு வந்திடுச்சு சிக்னேச்சர் வந்திடுச்சு...

நன்றிகள்.

- Mathivathanan - 09-21-2003

PATCHI Wrote:ஹையா........வந்திடுச்சு வந்திடுச்சு சிக்னேச்சர் வந்திடுச்சு...

நன்றிகள்.
நீக்கப்பட்டுள்ளது - மோகன்
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- PATCHI - 09-21-2003

முதிய பட்ம் கொண்ட முதியவரே..தாங்கள் என்ன எழுதியிருந்தீர் எனப் பார்க்க முடியவில்லை..இருந்தாலும்..ஏன் என்ற தலைப்பிட்டு என் வருத்தத்தினை செதுக்கிக்கொண்டிருந்தேன்.அதைப்பிரசுரிக்க முன்னமாக மீண்டும் களம் வந்தேன்..இப்போது அனுமதி கிடைத்துள்ளதாய் உணர்கின்றேன்.

இருந்தாலும் நீக்குமளவு கருத்தெழுதிய உங்களுக்காகவும்,தவறாக என்னை சித்தரித்த குருவியாருக்குமாக நான் எழுதியதைப் பிரசுரிக்கிறேன்.

இருந்தாலும் இதைப் பிரசுரிக்க என்னைத் து}ண்டிய வேதனையைப் பிரதிபலிக்க மாத்திரமே இதைத்தருகிறேன்..

தருவதற்காய் வருத்தங்களையும் தெரிவிக்கிறேன்.இருந்தாலும் அந்த நிமிடங்களில் நான் பட்ட வேதனைகள் அவை. :

- PATCHI - 09-21-2003

யாழ் களம்..

வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.

பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?

நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.

எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.

ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.

இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...

களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..

உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.

எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.

எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->தற்போது நீக்கியுள்ளேன்.)

இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து

இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன். யாழ் களம்..

வரும் கருத்தாளர்களை முதலில் தடைசெய்து பின்னர் அனுமதிப்பதுதான் உங்கள் வழமையென்றால் அதனையும் நிபந்தனைகளாய் முதற்பக்கத்தில் இட்டுவிடுங்கள்.

பட்சி என்று பெயர்வைத்தது என் குற்றமா?

நான் கருத்தெழுத வந்தேன்
யாரோ கழுத்தறுக்க வந்ததாய் நினைத்துள்ளனர்.
சரி நினைப்பது அவர் உரிமை
நீதியைக் கண்டறிவது பொறுப்பாளர்கள் கடமையல்லவா..

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போராடிப் போராடி வாழும் அனுபவங்களினால் விரக்தியடைந்த மனிதர்களை என்றுமெ கடவுள் விட்டுவைப்பதில்லை.இது தகுந்த உதாரணம்.

எனக்கு வந்தது சோதனை என்பதை விட எனது விதி என்று நொந்துகொள்கிறேன்.

ஒவ்வொரு விநாடியிலும் நான் வேதனைப் படுகிறேன் என்பதைப் பல வடிவங்களில் இதுவரை கண்டிருந்தேன் ஆனால் இன்று இதையே அவமானமாகக் கண்டுணர்ந்த போது வேதனைப்பட்டுத் திரும்பிச் செல்கிறேன்.

இந்தக்களத்தில் போராடித்தான் எழுதும் உரிமை பெற வேண்டும் என்பதை நான் அறிந்திருக்கவில்லை..அறிந்திருந்தால் இங்கு வந்திருக்கப்போவதுமில்லை...

சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக உலா வந்து பல விடயங்களை நானாக அறிந்துகொண்டேன்...

களத்தில் கருத்துவைக்க முதலே என்னை வகைப்படுத்தும் திறமை உங்களுக்கு இருந்ததாக நினைக்கும் களப்பொறுப்பாளர்களுக்கு என் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறேன்..

உங்கள் நடுநிலையைக் காப்பாற்றுங்கள்..
புதிதாக வரும் கருத்தாளர்களை திடீரென அவமானப்படுத்திய செயலாகவே இதனை நான் கருதுகிறேன்.

எனது இணையத்தளத்தை அடிக்கடி பார்வையிடுங்கள்..மனிதNநுயம் தொடர்பான பல கவிதைகள் விரைவில் ஏற்றப்படும்.

எனது தற்போதைய ஐ.பி. இலக்கம் :81.136.128.163

இதைவிட எந்த வழியில் இந்த முதுகெலும்பில்லாத குற்றச்சாட்டினை நிராகரிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

இருந்தாலும் சந்தேகம் என்ற பெயரில் களத்தில் நீதி தவறி நடந்த இந்தச் செயலினை வன்மையாகக் கண்டித்து

இல்லை இது சரிதான் என்று ஜால்ராவிற்காக யாரும் எழுத வந்தால் ஐயோ வேண்டாம் கேட்பதற்கு நான் தயாரில்லை என்று கூறி விடைபெறுகிறேன்.

----------------------
இதுதான் முதியவரின் கருத்தினை பார்வையிடாமல் நான் செதுக்கிக்கொண்டிருந்த வேதனையின் வடிவங்கள்...

- தணிக்கை - 09-21-2003

81.136.128.163 : GB