Yarl Forum
தனிப்பட்ட செய்தி அறிவித்தால் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: களம் பற்றி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=30)
+--- Thread: தனிப்பட்ட செய்தி அறிவித்தால் (/showthread.php?tid=8130)



தனிப்பட்ட செய்தி அறிவ - yarlmohan - 09-16-2003

தற்போது புதிதாக இணைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்களத்தில் பல புதிய அம்சங்களை இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஒருவிடயம் கருத்தெழுதுபவர்களின் தனிப்பட்ட விடயத்துடன் சம்பந்தப்படுவதால் இதனை இங்கு தெரிவிக்கின்றேன்.


இங்கு இந்த புதிய Forumல், Admin பொறுப்பில் உள்ள ஒருவரால் ஒருவருடைய தனிப்பட்ட செய்தியை பார்க்கக்கூடிய வசதியையும் செய்துள்ளார்கள். (பல கருத்துக்களத்தில் ஒரு சிறு Script இணைப்பதன் மூலம் admin இன்னொருவருடைய தனிப்பட்ட செய்தியினைப் பார்வையிட முடியும்). இதுவரை காலமும் அவ்வாறு ஒரு Script இனை இங்கு இணைத்திருக்கவில்லை. தற்போது இதைச் செய்தவர்கள் இதை இணைத்துள்ள படியால் இதை நீக்குவது மிக இலகுவான விடயமாகவும் இருக்காது என்பதால் மாற்றங்கள் எதுவும் செய்யப்படமாட்டாது.

இங்கு Admin பொறுப்பில் உள்ளவர்கள் (Moderators அல்ல) எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒருவருடைய தனிப்பட்ட செய்தியினைப் பார்வையிடமாட்டார்கள் (பார்வையிடக்கூடாது) என இங்கு உறுதியளிக்கப்படுகின்றது.

நன்றி
மோகன்


- Chandravathanaa - 09-16-2003

தகவலுக்கு நன்றி மோகன்


- Paranee - 09-17-2003

தகவலிற்கு நன்றி மோகன் அண்ணா
நீங்கள் தகவல் தராவிட்டாலும் அவர்கள் பார்க்கமாட்டார்கள் என்பது எப்போதோ வெளிச்சம். அதற்கு இங்கு பல நிகழ்வுகள் உதாரணம்.