![]() |
|
பகுத்தறிவு! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பகுத்தறிவு! (/showthread.php?tid=8134) |
பகுத்தறிவு! - thambythasan - 09-15-2003 பகுத்தறிவு! பதினைந்து வயது இளைஞர்கள் நீலப் படம் பார்க்கிறபோது வருகிற பயம் போல் எமக்கும் உண்டு! லெனின் பெரியாரின் படங்களை கட்டிலுக்கடியில் இருந்து அடிக்கடி நாம் எடுத்து து}சு தட்டுகிறோம் நாங்கள் இவர்களை மாற்ற நினைத்தோம் இவர்களோ எம்மை மாற்றி விடுவதில் வெற்றி காண்கிறார்கள்.. எங்களைப் பிடிக்காத பெண்களுக்கு எங்களில் பிடித்தது ஒன்று மட்டுமே சீதன ஒழிப்பு! மற்றவையாவும் எங்களின் வேண்டா எச்சங்கள்! பெற்றோர்களுக்கு தலை வணங்கினோம் சொந்தங்களுக்காய் செவிகொடுத்தோம் பந்தங்களுக்காய் கொள்கைகளை விட்டுக்கொடுத்தோம்.. இத்தனைக்குப் பின்னும் நாம் எங்கள் கொள்கைகளோடு வாழ விடாது முரண்படுகிறது இந்த சமூகம்... அப்பனுக்கு ஆகாது என்று மொட்டை போடாததில் தொடங்கி திருமணத்தில் அய்யரின் கும்மாளத்தோடு எங்கள் பயணம்.. எல்லாமே அவர்களுக்காகத்தான்!! இத்தோடு முடிந்ததாய் பெருமூச்சு விடுமுன்னால் மனைவியின் பெற்றோர்கள்!! மாமாவின் வேண்டுகோளுக்காய் கோயில் வாசல்களில் தவம் கிடக்க.. இது தான் சந்தர்ப்பமாய் வீட்டுக்குள்ளே நுழையும் அய்யரின் அகங்காரம்.. வார இறுதியில் குப்பை லொறி எடுப்தற்காய் வைத்த குப்பைகள் யாவும் திரும்பவும் உள்ளே வருகிறது... இப்படியே எங்கள் வாழ்க்கை தட்டித் தடுமாறி போகிறது.. என் கொள்கைப் படியே நடப்போம் என்கிறபோது மனைவியின் குரல் இறுமாப்போடு வருகிறது.. எங்கோ எதற்கோ நான் சொன்னதை இப்போது அவள் தனக்காய் "இது தான் உங்களின் ஆணாதிக்கமோ?" எம் தத்துவங்களாலேயே எம்மை மடக்கி விடுவது சுயநலவாதிகளின் பெரு வெற்றியே!! உறவுச் சனம் எட்டி உதைத்திடும் போதினில் ஊர்ச் சனமோ வெட்டிப் புதைத்திடும் எம்மை!! இந்(து)த சமூகம் தடக்கி விழுகிற போது எல்லாம் இந்த(து) சமூகம் பெரு மகிழ்வு கொள்கிறது.. "நாத்திகருக்கு கடவுள் கொடுக்கும் தண்டனைகள் இதுவே" இப்படியே வாழ்க்கை தடுமாறிடும் போதிலும் சிறிதாய் ஆலமரத்தடியில் பகுத்தறிவாளர்கள் ஒன்று கூடினால்.. பத்திரிகைகள் கதவடைக்கின்றன வானொலிகள் எம் பெயர் கேட்க பயம் கொள்கின்றன.. தொலைக்காட்சிகளோ வெளியே "போடா நாயே" என்று கதவைப் புூட்டுகின்றன!! முடியாது என்கிற போதுதான் ஆகாயத்தில் பறந்தான் மனிதன் இனியும் இயலாது என்கிற போது தான் துவக்குத் து}க்கினான் தமிழன் எம் சந்ததிகள் மாறும் தடக்கி விழுகிற இடத்திலும் கோயில்கள் உள்ள இந்நிலை மாறும் பகுத்தறிவு பெறும் எச்சங்களாய் இருக்கும் மதவெறியர்களின் ஆணவம் அடங்கும் கோயில்களாய் இருந்தவை மக்களின் வதிவிடமாகும் வங்கி கணக்குகள் மக்களின் பசியைப் போக்கும்.. கோயில கட்டி இலட்சம் உழைத்தவன் கல் உடைத்து தன் குடும்பம் காப்பான்! மறைந்திருந்த பெரியாரின் படங்கள் வெளியே வரும்.. கூனியிருந்த மனிதர்கள் கம்பீர நடைபோடுவார்கள் என்ன!! காலம் தேவை அது வரையும் அங்கே இங்கே பகுத்தறிவுவாதிகள் து}சுதட்டுவதில் மட்டுமே கவனமாய் இருந்தால் போதும்... கனடா-தம்பிதாசன் - sOliyAn - 09-16-2003 வருக தம்பிதாசன் அவர்களே! முதல் கருத்திலேயே நிதர்சனம் நெருப்பாய் சுடுகிறதே?! - thambythasan - 09-16-2003 நான் இங்கே எழுதுகிறவன். - sOliyAn - 09-16-2003 ஓ.. புதிய களத்துக்கு இப்போதுதான் வந்திருக்கிறீர்களா? - thambythasan - 09-16-2003 ஓம் - ampalathar - 10-03-2003 ஐயா தம்பிதாசன் உங்கள் ஏக்கங்கள் புரியுது. ஆனால் கனவுகாண்பதுவும் தூசு தட்டுவதும் மட்டும் போதாது தேவை தீர்க்கமான செயல்கள் - இளைஞன் - 10-03-2003 வணக்கம் அம்பலத்தார் அய்யா... அப்படியென்றால் எல்லோரும் கனவு காண்பதிலும், தூசு தட்டுவதிலும் தான் இருக்கிறார்கள் என்கிறீர்கள். (என்னையுந்தானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ) இந்திய விஞ்ஞானி, இன்றைய இந்திய சனாதிபதி மதிப்பிற்குரிய அப்துல் கலாம் இந்திய இளைஞர்களைக் கனவு காணுங்கள் என்கிறார். அதற்கு பதிலளிக்கும் வண்ணம், திரையிசைக் கவிஞர், தமிழ் கவிஞர் வைரமுத்து அவர்கள் "கனவு காணுங்கள், ஆனால் கண்களைத் திறந்து கனவு காணுங்கள்" என்று கூறியுள்ளார். நானும் என்னுடைய ஒரு கவிதையில்: ... விழி திறந்து கனவு காண் விரல் அசைத்து கவிதை சொல் மொழி மறந்து காதல் செய் முத்தம் நிறைத்து மோகம் கொள் ... என்று எழுதியுமுள்ளேன். விழி மூடிக் காணும் கனவுகள் எல்லாம் பலிக்காத கனவுகள். விழி திறந்து கண்ட கனவுகளே முயற்சி செய்து வெற்றியடைந்துள்ளன என்பதை வரலாறு சான்று பகர்கிறது. நிச்சயமாக, நீங்கள் கருதுவது போன்று தீர்க்கமான செயல்கள் தேவை. விழிதிறந்து காணும் கனவுகளை மெய்ப்பிக்க மனிதன் நிச்சயம் முயலுவான். தம்பிதாசன் அவர்கள் யாழின் முன்னைய கருத்துக்களத்தில் அற்புதமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவருடைய இந்தக் கவிதையும் அவரது சிந்தனையை வெளிப்படுத்துகிறது. உண்மை நிலை பலதையும் உணர்த்துகிறது. எனவே தொடர்ந்தும் கவிதைகளில் உங்கள் கருத்தை இங்கே பகிருங்கள். - ampalathar - 10-03-2003 அன்பின் இளைஞனே கனவு காணவேண்டாம் என்று நான் சொல்லவில்லையே .கனவு காண்பதுடன் மட்டுமே நின்றுவிடாதீர்கள் என்றுதானே சொன்னேன். எனது கருத்து உங்கள் மனதிற்கு வேதனையைத் தந்திருந்தால் மன்னிக்கவும் தவிர தம்பிதாசன் எப்பவுமே நிதானமாகத் தெளிவான கருத்துக்களை முன்வைப்பவர். அவரைக் கொச்சைப்படுத்துவதற்காக நான் அப்படிச்சொல்லவில்லை - இளைஞன் - 10-03-2003 மீளவும் வணக்கங்கள் அம்பலத்தார் அய்யா... உங்கள் கருத்துக்கு வலுச் சேர்க்கவே எனது கருத்தும் எழுதியிருந்தேன். "சிந்தனையோடு மட்டும் நின்றுவிடாதீர்கள், அதைச் செயல்படுத்துவதிலும் தீவிரம் காட்டுங்கள்" என்று நீங்கள் எழுதிய கருத்தை வரவேற்கிறேன். அதனை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறேன். செயற்படுத்த முடியாத, முயலாத சிந்தனைகள் எதுவும் நிலைத்ததில்லை. வார்த்தை விளையாட்டு வாழ்க்கையாகாது. வரலாறு படைக்க செயலாற்ற வேண்டும். சிந்தனை செய்வோம் செயல் படுவோம் வெல்வோம் சரியா? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- ampalathar - 10-04-2003 விழி திறந்து கனவு காண் விரல் அசைத்து கவிதை சொல் மொழி மறந்து காதல் செய் முத்தம் நிறைத்து மோகம் கொள் சிக்கனமான வரிகள் ஆனால் சீரிய வரிகள் முதல் பதில் தந்தபோது மறந்ததை இப்போ கூறுகிறேன். மேத்தா, இன்குலாப், அறிவுமதி, வைரமுத்து ரேஞ்சுக்கு இளைஞன், கரவை பரணி,தம்பிதாசன், நளாயினி தாமரைச்செல்வனென ஒரு அணியே தளத்தில் சமீபகாலமாக அற்புதமான புதுக்கவிதைகள் வடித்து நிற்பது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. செல்லரித்த மானிடத்தைச் சீர்திருத்தப் பாடினேன் சீர்திருத்தப் பாடியதால் பேரெதிர்ப்பைத் தேடினேன் என மேத்தா எழுதியதாக ஞாபகம் என்னைப்போன்ற அரைக் குடங்களின் சலசலப்புக கண்டு சஞ்சலப்படாமல் தொடரட்டும் உம் பணி. - Paranee - 10-04-2003 வணக்கம் தம்பிதாசன் அவர்களின் கவிதை அருமை வாழ்த்துக்கள் அதிலும் குறிப்பாக நாங்கள் இவர்களை மாற்ற நினைத்தோம் இவர்களோ எங்களை மாற்றிவிடுவதில் வெற்றிகாண்கின்றார்கள் பாராட்டுங்கள் வழிதிறந்து கனவு காண் வெற்றி உன் பக்கம் மௌனம்ட கலைத்து மொழி பகர் காதல் உன் பக்கம் - Paranee - 10-04-2003 மன்னிக்கவும் விழி திறந்து கனவுகாண் என வரவேண்டும் - shanmuhi - 10-05-2003 கனவுகள் மெய்பட வேண்டும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> shanmuhi - nalayiny - 10-08-2003 நாம் குறிப்பிட்ட ஒரு கொள்கையின் அழ அகலத்தை சரியாக புரிந்துகொள்ள வில்லையானால். மாற்றம் அது நிகழும். நாம் குறிப்பிட்ட ஒரு கொள்ளையின் அடி முடி ஆழ அகலம் தெரிந்திருந்தால் யாராலும் ஒரு போதும் எம் கொள்கைகளில் இருந்து மாற்றவே முடியாது. இது எனக்கான தனிப்பட்ட கருத்து. அன்பை வேண்டுமானால் தாராளமாக பகிர்ந்து கொள்ளலாம். அதே அன்புக்காக உணர்வால் ஒன்றித்து நேசிக்கும் சில கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாதே. அதெப்படி சாத்தியமாகும்..?!!! (நாங்கள் இவர்களை மாற்ற நினைத்தோம் இவர்களோ எங்களை மாற்றிவிடுவதில் வெற்றிகாண்கின்றார்கள் ..) - þ.þº¡ì - 10-09-2003 ¾õÀ¢¾¡ºý «Å÷¸¨Ç À¡Ã¡ð¼¡Áø þÕì¸ ÓÊ¡Рþì¸Å¢¨¾ì¸¡¸ Å¡úòÐì¸Ùõ À¡Ã¡ðÎõ |