![]() |
|
நில்லாமல் வா நிலாவே...! பகுதி-02 - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நில்லாமல் வா நிலாவே...! பகுதி-02 (/showthread.php?tid=8135) |
நில்லாமல் வா நிலாவே...! - sharish - 09-15-2003 <b>நில்லாமல் வா நிலாவே...!</b> பகுதி-02 தூரத்தில் இருந்தபடி அந்த வெண்ணிலவு ஒளியை மட்டும் கொடுப்பது போல... இந்த பெண்ணிலவும் கனவை மட்டும்தான் கொடுப்பாள் என நினைத்தேன்... ஆகால்... நினைத்ததற்கு முற்றிலும் மாறாய்... இதோ.... என் எதிரில்தான் இருக்கிறாள் வெகு தூரமே இல்லை எட்டி... தொட்டுவிடும் தூரம்தான் இருப்பினும்.... நான் என்ன செய்வேன்..? அவளிடம் சென்று எப்படிச் சொல்லுவேன்... நேற்றென்தன் கனவில் வந்தாய் இன்றென்தன் எதிரில் வந்தாய் என்று...? முகமும்... அகமும் ©த்தபடி... அவளை அடிக்கடி பார்த்தபடி... அலைபாயுது என் மனம் தாறுமாறாய்..! என் கற்பனை...?? அதை... சொல்லத்தேவையே இல்லை... காதல் சிறகைக்கட்டி பல வண்ணங்கள் ;©சிக்கொண்டு... அழகாய்ப் பறந்து திரியும் பட்டாம் ©ச்சிபோல் வெகுதூரம் வரைப் பறந்தது எவராலும்... எட்டிப் பிடிக்க முடியாத தூரம் வரை..! இவைகளே.... இப்படி என்றால் இதற்கு... முற்றிலும் சம்மந்தமான என் இதயம்....? ம்......... அதற்கும் ஒரே கொண்டாட்டம்தான்...! இன்பக்களிப்பில்... இரகசியமாய்... அடிக்கடி என்னோடு கதைத்தது வளமையைவிட தாறுமாறாய் துடித்தது... சத்தமிட்டு பெரிதாய்ச் சிரித்தது... சொல்லாமல் வந்த நிலவே... நீ நில்லாமல் வா நிலாவே என்று... பாடல்கூடப் படித்தது.....! ஆனால்... என் காதுகள்தான் பாவம்...! அது... ஆரம்பத்தில் இருந்தே... அவள் குரலைக்கேட்கக் காத்திருந்து காத்திருந்து களைத்துவிட்டது காத்திருப்பின் கடைசி எல்லைவரைச் சென்று... பொறுமையும் இழந்தது.... அந்தநேரம் பார்த்து வகுப்பாசிரியர் சொன்னார்... ஒவ்வொருவரும் தங்களைப்பற்றி அறிமுகம் சொய்யுங்கள் என்று....! அந்த ஆசிரியரின் பேச்சு ஆலயமணிபோல் காத்திருந்த என் காதில்... "கணீர்" என்றது.... அவள்... ஆனந்தக்குரல்கேட்க தயார் ஆனது...! ஆனந்தப்பெருமிதத்தில் என்னிதயமும்... ஒருமுறை துடிக்க மறந்து அலைபோல் எழுந்து அடித்துவிட்டு... ஆசைக் கரையை எட்டித் தொட்டுவிட்டு நீரும் நுரையும் அள்ளித் தெளித்து... நெஞ்சை ஈரமாக்கிவிட்டு மீண்டும் வளமைபோல் துடித்தது...! சரி.... சரி.... அதை விடுங்கள்...! யார் அவள்..? பெயர் என்ன..? எங்கிருந்து வந்தாள்...? அவளின் அறிமுகம் என்னவென்று பொறுமையாய்... அவள்... சொல்லவதைக் கொஞ்சம் கேட்போமா...??? (நிலவு வரும்...) த.சரீஷ் 15.09.2003 (பாரீஸ்) - Paranee - 09-16-2003 காத்திருக்கின்றேன் அவள் பெயர் அறிய.......... அருமை நண்பா வளரட்டும் இந்த நிலா |