| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 142 online users. » 0 Member(s) | 139 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| நெடுமாறன் ஜாமீனில் விடுதலை |
|
Posted by: yarl - 01-06-2004, 11:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
ஜனவரி 06, 2003
நெடுமாறன் ஜாமீனில் விடுதலை: சிறையில் இருந்து வெளியே வருகிறார்
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியாகிறார்.
முதலில் பொடா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தது.
ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் காவியத் தலைவன் கிட்டு என்ற புலிகள் ஆதரவு புத்தகத்தை வெளியிட்டதற்காகப் போடப்பட்ட வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் ஜாமீன் கிடைக்காததால் நெடுமாறன் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.
இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதியை தமிழக அரசு திடீரென மாற்றியது. இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நேற்று ஜாமீன் மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இதை இன்று விசாரித்த நீதிபதி ராஜன், நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நெடுமாறனை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முயன்ற தமிழக அரசின் கடும் முயற்சிகளையும் மீறி அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.
அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17 மாத சிறை வாசத்திற்குப் பின் கடலூர் சிறையிலிருந்து நெடுமாறன் வெளியே வருகிறார்.
thatstamil.com
|
|
|
| கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும் |
|
Posted by: சாமி - 01-05-2004, 09:44 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
கோலிவுட்டும் இயக்குநர் சினிமாவும்
பிதாமகன் இயற்கை மற்றும்
மீடியா முன் வைக்கும் சில விஷயங்கள்
-----------------------------------------------------
க்ருஷ்ணா
இரண்டு படங்களுமே தீபாவளி ரீலிஸ¤க்கு தயாராய் இருந்தது. ப்ரீவியூஷோ, பத்திரிகையாளர் காட்சி எல்லாமே தீபாவளி நாளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டன. ஆனால் ஒரு படம் தீபாவளி அன்று வெளியானது. மற்றொன்று வெளிவர முடியாமல் போனது. அதேசமயம் இரண்டு படத்தின் இயக்குநர்களுமே அந்தந்த அளவில் மீடியாவின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார்கள். படம் வெளியானதும் பாலாவை மீடியா அண்ணாந்து பார்த்து சிலாகித்தது. சற்று தாமதமாக வெளியான மற்றொரு படத்தின் இயக்கம் கவனிக்கத்தக்க ஒன்று என்ற அளவில் பாராட்டப்பட்டது. ஆக இரண்டு படங்களுமே வழக்கமான தமிழ் சினிமா சூழலில் இருந்து ஏதோ ஒன்றில் வித்தியாசப்பட்டிருப்பதை தமிழ் மீடியாக்கள் அடையாளம் கண்டு கொண்டு அதை அடி கோடிட்டு காட்டி உயர்த்திப் பிடிப்பது ஆரோக்யமான விஷயம் தான். அதோடு கூட, மீடியா இரண்டு படங்களிலும் எதையெல்லாம் முக்கியமாக கருதியது, எதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விட்டது - அந்தந்த மீடியாவின் அளவு கோல் சார்ந்தது - என்பது மிக முக்கியமான விஷயம்.
ஆக இதில் நடத்தப்போகிற உரையாடல், இரண்டு சினிமாக்களின் விமர்சனம் மட்டும் அல்ல. இரண்டு இயக்குநர்களின் சினிமா பார்வை எப்படி என்பது மட்டும் அல்ல, இவர்களின் சமூகப்புரிதல் எது என்பது மட்டும் அல்ல, சினிமா ஆளுமையில் எதையெல்லாம் தொட்டு இருக்கிறார்கள் என்பது பற்றியும் மட்டுமல்ல. மாறாக கோலிவுட்டின் இயக்குநர் அந்தஸ்து என்கிற புள்ளியில் இருந்து இந்த உரையாடல் தொடங்குகிறது. எப்படிப்பார்த்தாலும் இந்த புள்ளி தான் மிக முக்கியமானது. இந்த இடத்தின் அந்தஸ்தை இழந்த இயக்குநர்கள் - ஜாம்பவான்கள் எல்லாம் மறுபடியும் இந்த இடத்தை தொடுவதற்கே சிரமப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் இருந்து வெளியேறி இதற்கு மாறாக எதுவும் இன்று வரை சாதித்து விடவுமில்லை.
விதிவிலக்குகள் என்று யாரேனும் யாரையேனும் உணர்ந்தால், எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் - கூடவே நல்ல சினிமா என்பது மனதுக்குள் மட்டும் ஓட்டி பார்த்துக் கொள்வது அல்ல, வியாபாரம் என்பது நவீன யுகத்தின் மற்றும் இயந்திரத்தனமான கண்டுபிடிப்பல்ல என்கிற ஆழ்ந்த புரிதலோடு தெரியப்படுத்தவும்.
பாலாவின் பிதாமகனில் இருந்து உரையாடல் தொடங்குகிறது. உண்மையில் இது பாலாவின் பிதாமகன் தானா? என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுமானால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து விக்ரம், சூர்யாவின் பிதாமகன் என்று தான் பதில் வரும். பிதாமகனுக்கு முந்தைய விக்ரமின் படம் வெள்ளி விழா கொண்டாடியது. சூர்யாவின் முந்தைய படம் நூறு நாட்களைத் தொட்டது. அது தான் பாலாவின் பிதாமகனை சொன்ன தேதியில் வெளியிட முடிந்ததின் முக்கிய முதல் காரணம்.
இதை தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களும் ஏன் பாலாவும் கூட நிச்சயம் மறுக்க மாட்டார்கள். அப்படியானால் அது எப்படி பாலாவின் பிதாமகனானது என்பதில் தான் பாலா இருக்கிறார். விக்ரம், சூர்யா, லைலா, சிம்ரன், கருணாஸ், லொக்கேஸன், மேக்கப், ஒளிப்பதிவு என்று எல்லாவற்றையும் தாண்டி பிதாமகன் பாலாவுக்கு மட்டுமே சாத்தியமானதாய் எதன் அடிப்படையில் மீடியா நம்பியது - சில பார்வையாளர்கள், நல்ல சினிமா விரும்பிகள், சினிமா கனவுகளுடன் இருப்பவர்கள் என்று இந்த பட்டியல் நீளும். இதன் ரகசியம் முற்றிலும் முழுக்க பாலாவுக்கு தெரியும். அது வியாபரம் சார்ந்தது, தனி மனித ஆளுமை மற்றும் ஒரு விஷயத்தின் மாற்று பார்வையின் வெற்றி சூட்சுமம் சார்ந்தது.
நல்ல சினிமா விரும்பிகள் சிம்ரனின் தொப்புள் காட்டாததைத்தான் சிலாகித்துக் கொண்டிருப் பார்கள். பாலாவின் படத்துக்கு சிம்ரன் தேவைப்பட்டதை உணரமாட்டார்கள், அல்லது உணர்ந்தாலும் வியாரத்துக்கு என்ன செய்ய முடியும் என்று அடங்கி விடுவார்கள்.
ஆனால் சிம்ரனின் தொப்புளை நான் காட்டவில்லை என்று பாலா வாயைத்திறந்து பேசாமல் பார்வையாளரை உணர வைத்ததில் தான் பாலாவின் ஆளுமையும் தொழில்நுட்பமும் ஒருங்கிணைகிறது. 'அந்த கதம்ப பாடல் மற்றும் சிம்ரனின் உடை' ஒரு முறை யோசித்துக் கொள்ளுங்கள்.
இங்கு TV கேள்வி மாதிரி ஒரு கேள்வி - சும்மா விளையாட்டுக்குத்தான்.
சிம்ரனின் உடை என்ன?
பேண்ட் சர்ட் - என்பது தான் பதில் என்றால் நாம் தோற்றுப்போவோம். பாலா ஜெயித்து விட்டார். உண்மையில் இந்த சூழலில் பாலா தான் ஜெயித்து விட்டார்.
தொப்புளுக்கு மேல் வரையான வெளிர் நிற சர்ட், தொப்புளை மறைத்து 'இன்' செய்யப்பட்டிருக்கும் கருப்பு நிற பனியன் அப்புறம் பேண்ட். இது தான் சிம்ரனின் உடை வடிவ மைப்பு. நீங்கள் தொப்புள் பிரதேசத்தைப் பார்த்தீர்கள் - தொப்புளை அல்ல.
இதில் மறைந்திருக்கும் சித்து விளையாட்டு தான் சித்தன். ஏன் பிதாமகன் என்கிற மொத்தப்படமும். ஏனென்றால் பாலாவின் 'உருட்டு' அப்படி. இந்த 'உருட்டை' புரிந்து கொண்டால் இயற்கை படத்தில் குறளிவித்தை காட்டும் இடத்தில் 'மருது' ரத்தம் கக்கி விழுந்து அடிக்கும் லூட்டியை புரிந்து கொள்ள முடியும். இல்லையென்றால் பாலாவின் உருட்டில் பணத்தையும் பறி கொடுத்து அதன் மேல் காதலும் கொள்ள வேண்டியது தான்.
கவனிக்க. இங்கு சித்து விளையாட்டு என்பது தரக்குறைவான அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அது வாழ்வியல் சார்ந்த ஒரு கலை. அதை புரிந்து கொண்டு பார்க்கும் போது தான் 'உருட்டின்' நேர்த்தி புரியும். நேர்த்தியான உருட்டு என்பதாலயே உருட்டின் நோக்கமும் பயனும் நேர்மையானது என்றாகிவிடாது. மீடியாவும் நல்ல சினிமா விரும்பிகளும் இந்த உருட்டில் தான் வீழ்ந்தார்கள். ஒரு ஹீரோவை அழுக்காய் காண்பித்தாலே போதும் அது வெகுஜன ரசனையில் இருந்து விலகிய ஒன்றாக மீடியா அர்த்தப்படுத்திக் கொள்ளும். அப் போதைய ட்ரண்டுக்கு அல்லது தனது தேவைக்கு ஏற்றபடி புகழ்ந்தும் அல்லது கேலியாகவும் சித்தரிக்கத் தொடங்கிவிடும். ஏனென்றால் மீடியாவுக்கு எப்பொழுதுமே ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் தேவையாக இருக்கிறது. விநியோகஸ்தர்களைவிட சினிமாவை நம்பி தொழில் நடத்திக் கொண்டிருப்பது நமது மீடியாக்கள் தான்.
ஆனால் அழுக்காய் நடித்த ஹீரோவுக்குத்தான் தெரியும் இந்தப் படத்தின் ஹீரோயிச சாத்தியப்பாடுகள் என்னென்ன என்பதும், சாமி மற்றும் சித்தனுக்கான ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன என்பதும். சாமியில் தர்மத்தின் வாழ்வுதனை கவ்விய பெருமாள் பிச்சையை தன்னந்தனி ஆளாய் யாருமற்ற இடத்தில் விக்ரம் சுட்டுக் கொன்றார். இந்த படத்தில் அது போன்ற ஒருவனின் தொண்டை குழியை கவ்விப்பிடித்து கடித்து துப்பியிருக்கிறார். மற்றபடி விக்ரமின் வார்த்தைகளில் சொல்வதென்றால் இரண்டுக்கு மான உழைப்பு ஒன்றுதான்.
இந்தப் புரிதலில் இருந்து பிதாமகனின் கதைக்குள் சென்றால் கடைசியில் மிஞ்சுவது இதை அது கவ்வியதும் அதை இது கவ்வியதையும் தாண்டி வேறிருக்காது. ஆனால் அப்படி ஒன்றை ஒன்று மாற்றி கவ்விக் கொள்வதற்கான அடிப்படை முரண் தளம் கூட பிதாமகனில் கிடையாது. எல்லாமுமே நடிப்பின் மூலமும் அழுத்தமான காட்சி அமைப்பின் மூலமும் மட்டுமே ஒன்றுக்கொன்று உறவுடையதாக சித்தரிக்க முற்படுகிறது. அடிப்படையில் இந்த படத்தின் திரைக்கதை ஒரு உயிரற்ற சடலம் போல் அப்படியே கிடக்கிறது. அதை தூக்கி நிறுத்துவதற்கு, படத்தின் இறுதிக்காட்சியில் சித்தன் வில்லனோடு போடும் சண்டையை பாலா திரைக்கதையோடு போட்டிருக்கிறார். இது அதிகப்படியான கருத்து என்று யாரேனும் கருதினால் இப் படத்தின் திரைக்கதை நேர்த்தி பற்றி எழுதி அனுப்பவும்
திரைக்கதையில் தோற்ற எந்த படமும் ஒரு சினிமாவாக முழுமையான வெற்றியை அடைந்ததில்லை. இந்த ஒட்டு மொத்தப் படத்தினையும் ஏன் எதற்கு என்று கேள்விக்குட்படுத்தினால் ஒரு சாராசரி தமிழ் சினிமாவின் அத்தனை அலட்சியமும் இந்த படத்தில் அப்படி அப்படியே இருக்கும். சின்னதம்பி பிரபு கேலிக்குள்ளாக்கப்பட்டது போல் சித்தனைப் பார்த்து எந்த மீடியாவாவது கேள்வி எழுப்பியதா என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளியான இரண்டாம் நாள் ஒரு சராசரி பார்வையாளன் இந்தக் கேள்வியை முன் வைத்தான். இந்தக் கேள்வி தவறானதா? அல்லது புத்திசாலித்தனமானதா? இரண்டும் இல்லை. சில இயல்பு மீறிய செயல்களை சினிமா என்கிற அளவில் பார்வையாளன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறான். சில அற்புதமான கணங்களுடன் தற்காலிகமாக உறவு ஏற்படுத்திக் கொள்வதின் வெளிப்பாடு அது. ஆனால் அதே சமயம் அழுக்கான அவலமான கணங்களில் மிகுந்த இயல்புத் தன்மையோடே பார்வையாளன் உறவு கொள்ள விரும்புகிறான். இந்த உணர்வு இந்தப் படத்தில் பொய்த்துப் போனதின் வெளிப்பாடு தான், திரும்பத் திரும்ப ஒரே படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களை இப்படம் இழந்தற்கான காரணமாக இருக்க முடியும். அவர்களது அபிமான நட்சத்திரங்கள் இது மாதிரியான படங்களில் உயிரைக் கொடுத்து நடித்திருந்தாலும் பார்வையாளன் அந்த நட்சத்திரத்தின் அடுத்தப்படத்திற்கு ஆயத்தமாகி விடுவான்.
அடுத்தது இந்த படம் விளிம்புநிலை மனிதர்களை முக்கிய பாத்திரமாக்கி இருப்பதாக ஒரு தோற்றம் கொடுப்பது. இது இன்னும் சோகம். நந்தாவில் கருணாஸ் செய்த பாத்திரத்தின் நீட்சிதான் பிதாமகனின் சக்தி பாத்திரம். சில ஹீரோயிஸ அம்சங்களுடன் உயர்வு பெற்றிருக்கிறது. உண்மையில் இந்தப் படத்தின் மிகப் பெரிய சிறப்பு அம்சம் சக்தி பாத்திரம். பாலா விரும்பியதை சூர்யாவிடம் பெற்றிருகிறார். அதே சமயம் அந்த பாத்திரத்துக்கான காதலை வளர்த்தெடுப்பதில் உள்ள சிரமத்தை லைலாவின் கார்டூனிக் பிகேவியர் வெளிப்பாட்டின் மூலம் பாலா தாண்டி வருகிறார். தனது திரைக்கதையின் பலத்தில் அல்ல. கஞ்சாவிற்கும் பெண். இந்த பாத்திர இயல்பு கெடவே இல்லை. க்ளைமாக்ஸ் அழுத்தத்திற்காக பாலாவுக்கு தேவைப்பட்டபோது, அந்த பாத்திரமும் துடப்பக்கட்டையை தூக்கிக் கொண்டு பத்திரகாளி வேஷம் கொள்கிறது - நாயை அடிப்பது போல் - உண்மையில் இது ஒரு தேவர் ·பிலிம்ஸ் கதை தான் போலும். காட்டில் இருந்து தப்பி ஊருக்குள் வந்த ஒரு நாய். ஒரு வேளை சோறு போட்டவரின் மேல் விசுவாசம் கொள்கிறது. தனது பயிற்சியாளரின் மீது மிகுந்த நட்பு கொள்கிறது. தனது பயிற்சியாளர் கொலை செய்யப்பட்டவுடன் அழக் கூட முடியாமல் நின்றபடி துடப்பக்கட்டையால் அடிவாங்குகிறது. இறுதியாக தனது பயிற்சியாளரின் கொலைக்குப்பழி வாங்கவும், தனது நட்பின் ஆழத்தை நிருபிக்கவும் அந்த வயதான வில்லனை கடித்து குதறிவிட்டு காட்டிற்கே திரும்புகிறது.
இப்பொழுது வெட்டியான் என்கிற விளிம்பு நிலை மனிதனுக்கு வருவோம். சமூகத்தின் மிக முக்கியமான அங்கம். சுடுகாட்டில் பிறந்து வெட்டியானாக மாறியவர்கள் அல்ல. குடும்பம் குழந்தை என்று எல்லாரும் போல மனித வாழ்கை வாழ்பவர்கள் தான். சித்தனை வளர்த்தவருக்கு வேண்டுமானால் குடும்பம் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் தனி நபராக ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு பிரசவம் பார்க்க முடிந்த வாழ்வியல் பக்குவம் கொண்டவர். அப்படி ஒருவர் ஒரு நாயைக் கூட தோழமையோடு தான் வளர்த்திருப் பார். ஒரு மனிதனை நாயாக அல்ல.
தமிழ் சினிமாவில் டாக்டர் கேரக்டர் என்கிற வழக்கமான அளவில் தான் விக்ரமின் வெட்டியான் கேரக்டர். அதனால் தான் அவர் தனது கதாபாத்திர மேனரிஷங்களுக்கு டிஸ்கவரி சேனலை நாட வேண்டி வந்தது. ஒரு நாளேனும் ஒரு சுடுகாட்டில் ஒரு வெட்டியானோடு, அவன் குடும்பக் கதைகளைக் கேட்டுக் கொண்டு, அவன் தொழிலையும் கவனித்திருப்பார் என்றால் பிதாமகனின் தலையெழுத்து மாறியிருக்கும். பாலாவிற்கு இந்த விஷயம் தெரியாது என்றால் அது நகைப்பிற்குரியது. எல்லாவற்றிற்கும் மேலாக கோலிவுட்டின் கூட்டல் கழித்தல் வாய்பாட்டின் அடிப்படையில் படம் இருக்க வேண்டும் ஆனால் அது கோடம்பாக்கம் படமாக அறியப்படக் கூடாது. இந்த புள்ளியில் மையம் கொண்டது தான் பிதாமகன். இதைத்தாண்டி இதில் ஏதேனும் தத்துவ விச்சாரம், உளவியல் கூறு என்று நம்பினார்கள் என்றால் - பாலாவின் உருட்டு அப்படி. எல்லா செயலுக்கும் ஒரு அரசியல் உண்டு. பிதாமகனும் அப்படித்தான். ஆனால் இந்தப் படத்தின் அரசியல் சற்று வித்தியாசமானது. சமூகம், கொள்கை, தத்துவம், ஆண், பெண் என்று எல்லாம் தாண்டி இந்த படத்தில் இருக்கும் அரசியல், வெறும் கோலிவுட்டில் பாலாவின் இருப்பு சார்ந்த அரசியல் மட்டுமே. அது தான் முன் பாதி சித்தன் நான், பின் பாதி சித்தன் நீங்கள் என்று பாலாவை பேட்டி கொடுக்க வைக்கிறது.
இயற்கை படத்தின் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் வேறு மாதிரி சொல்கிறார். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மாதிரி எனக்கு மகன்களோ மகளோ இருந்தால் அது என்னால் விரும்பப்படக்கூடிய ஒன்று. அவர்களோடு என்னால் ஆரோக்கியமான உறவு கொள்ள முடியும். அப்படிபட்டவர்கள் தான் என்றும் என் கதாபாத்திரமாக இருப்பார்கள்.
அதே சமயம் ஜனாவின் படமும் கோலிவுட் கணக்கில் ஹீரோவாக அறியப்பட்ட ஒருவரைத் தான் நம்பி ஆரம்பிக்கப்பட்டது. என்ன செய்வது படம் வெளியிடும் நேரத்தில் ஷாம் கோலிவுட் கணக்கில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அதற்கான பலனை இயற்கை எதிர் கொண்டது.
ஆனால் கோலிவுட் கணக்கு சூத்திரங்களினால் இந்தப் படம் தாமதமாக வெளியான போதும் படம் பார்த்த எந்த ஒரு பார்வையாளனும், சினிமா வட்டாரமும், நல்ல சினிமா விரும்பிகளும் ஒதுக்குகிற படமாக இருக்கவில்லை. அந்தந்த அளவில் ஒரு திருப்தியை இந்தப் படம் கொடுத்தது. ஆனால் முழுமையானதாக என்றால் நிச்சயமாக இல்லை. இயற்கை படத்தின் மிகப்பெரிய குறையே பற்றாகுறை தான். இந்தப் பற்றாக்குறை ஜனா படத்தை உருக்கொண்டதில் இல்லை. சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தொடங்குகிறது. ஒரு இயக்குநருக்கான விடாப்பிடியான ஆளுமை, பொருளாதாரம், நடிகர்கள் ஒத்துழைப்பு என்று இந்தப் பற்றாகுறை பட்டியல் நீளும். இந்த பற்றாக்குறையை உணரும் போது தான் பாலாவின் சினிமா ஆளுமை எதற்கும் அடங்காமல் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டிருப்பது புரியும். அது தான் இயற்கை படம் ஒரு சராசரி பார்வையாளனை திருப்திப் படுத்திய போதும், எல்லா தரப்பினரையும், எங்கேயோ உச்சத்திற்கு போயிருக்க வேண்டிய படம் என்னமோ குறைகிறது என்று முணுமுணுக்க வைப்பது. உண்மையில் அப்படி ஒரு சாத்தியம் இந்த ஸ்கிரிப்டில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. ஆனால் முடிக்கப்பட்ட படத்தில் அந்த முழுமை இல்லை. ஆனால் முடிக்கப்பட்ட படம் தான் நிஜம்.
விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையைத் தான் இந்த படமும் பேசுகிறது. ஆனால் ஒரு முக்கோண காதல் கதையின் ஊடாக. பல நாட்டு மனிதர்கள் வந்து போனாலும் யாரும் இதில் செல்வந்தர்களும் இல்லை. பொறுக்கிகளும் இல்லை. அப்படி அப்படியே வாழ்ந்து கரை தாண்டி போகிறவர்கள். கோலிவுட் கணக்கில் ஹீரோவை நம்பி எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும் இந்த படத்தில் ஹீரோக்கள் விரவிக்கிடக்கிறார்கள். பாரில் பீர் பாட்டில் பொறுக்கும் முதியவர், ஒரு பெண் பாலியல் தொழிலாளி என்று பட்டியலிட முடியும். ஹீரோயிஸம் என்பது ஒரு காட்சியில் அல்லது படத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு விஷயமன்றி வேறொன்றுமில்லை.
இந்த படம் முழுக்க காதலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வழக்கமான காதல் காட்சிகளற்ற சூழ்நிலையில் தான் எல்லாம் நடக்கிறது. கடலும் கப்பலும் துறைமுகமும், அதைச்சார்ந்த கடலோர வாழ்விடமும் வேறு கோணத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு காதல் கதைப்பின்னணியில் கோலிவுட்டின் எல்லா சூத்திரங்களுக்கும் கட்டுப்பட்டு பார்வையாளனுக்கு வேறு ஒரு அனுபவத்தை கொடுக்க முற்படுவதற்கு அடிப்படையில் சமூகப்புரிதலும், வியாபார புரிதலும், சினிமா புரிதலும் மிகுந்த ஆழமாக ஒரு இயக்குநருகுத் தேவைப்படுகிறது. அந்த புரிதல் இந்தப் படத்தில் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. ஆனால் இந்த ஒட்டு மொத்தப் படத்தில் ஏற்படும் பார்வையாளர் கவனச்சிதறல் எந்த அடிப்படையில் நிகழ்கிறது என்பதை ஜனா கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும். இந்த கவனச்சிதறலுக்கான காரணம் முக்கிய கதாபாத்திரங்களைத் தாண்டி நிறைய இந்த படம் பேசுகிறது, ஹீரோவை எல்லா இடத்திலும் ஹீரோவாக நடத்தவில்லை என்று யாரேனும் சொல்வார்கள் என்றால் அது கோலிவுட் சினிமா தியரி. இந்த ஸ்கிரிப்ட்டின் முழு வீச்சை கோலிவுட் சினிமா தியரிக்குள் அடக்கி விடமுடியாது. இது அடங்காது. அப்படி அடக்க முற்பட்டபோதெல்லாம் அல்லது இது போதும் என்று எடுத்த முடிவின் போதெல்லாம் இந்த பார்வையாளர் கவனச்சிதறல் தவிர்க்க முடியாததாகிறது. ஒட்டு மொத்தப் படத்தின் பற்றாக்குறையில் இது மிக முக்கியமான அங்கம். ஆனால் பார்க்கிற பார்வையாளனுக்கு இந்த படம் முழுக்க மெல்லிய இலையாக ஒடும் இயல்பான மனிதத்துவம் இந்த குறைகளை இட்டு நிரப்பி விடுகிறதோ என்று தோன்றுகிறது.
இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமென்றால் தேவைக்கேற்ற நடிப்பு முதல் பாதியில் சுத்தமாக இல்லை. முக்கிய பாத்திரங்கள் தனது நடிப்பு பாணி எது என்றே உணராமலேயே வந்து போவதை இயல்பான நடிப்பாக அர்த்தபடுத்திக் கொள்ள முடியாது. ஒரு சினிமாவில் ஒருவர் இயல்பாக நடித்து தான் ஆக வேண்டும். இயல்பான ஷாம் ஒருக்காலமும் இயல்பான மருதுவாக முடியாது. தேவைப்படுகிற க்ளோஷப், ரியாக்ஷன், பார்வையாளனுக்கான இடைவெளி என்று ஒரு முழுமையான சினிமா என்பதற்கான தூரம் அதிகம். ஆனாலும் இதுவும் ஓடிக் கொண்டிருக்கிற படம் தான். வெறும் அபிமான நட்சத்திரத்தின் படம் என்கிற அளவு கோல் அற்று படம் உருவாக்கப்பட்ட விதத்திற்காக ஓடிக் கொண்டிருக்கிற படம். இதுவும் கோலிவுட்டின் இயக்குநர் சினிமாவாக அறியப்பட்ட படம் தான்.
இது ஜனாவின் முதல் படம். பிதாமகன் பாலாவின் மூன்றாவது படம் இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொண்டதின் காரணம், உள்ளடக்கம், சினிமாவாக உருக்கொள்வது, வியாபாரச் சூழலில் படமும் இயக்குநரும் தன்னை நிறுத்திக் கொள்வது, அப்படி நிறுத்திக் கொள்வதற்கான பிரயத்தனங்களில் ஒரு படத்தின் பலத்தையும், பலவீனத்தையும் பற்றிய ஒரு சிறிய உரையாடல் தான் இது. இதில் முரண்பட்ட கருத்து இருந்தால் எழுதவும். அது தான் நல்ல சினிமா விரும்பிகளின் ஆக்க பூர்வமான செயலாக இருக்க முடியும்.
இரண்டு இயக்குநர்களுமே தங்களது அடுத்தப் படத்திற்காக ஆயத்தமாகி இருப்பார்கள். கோலிவுட்டின் இயக்குநர் சினிமாவிற்கான தூரம் தொடக்கூடிய தூரம் தான் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் தியேட்டருக்குள் வரும் முதல் வார கூட்டத்தில் சிக்கிக் கொண்டு அந்த கூட்டத்தோடு கூடவே இயக்குநர் சினிமாவை நெருங்குவதற்கான பிரயத்தனங்களில் இந்த படங்கள் ஒரு படிக்கட்டு தான் என்பதும், முழுமையானதல்ல என்பதும் கூட அவர்களுக்குத் தெரியும். ஆனால் மீடியாவிற்கு, சினிமாவைப் பொறுத்தவரை இந்த வளர்சிதை மாற்றம் எதுவும் கிடையாது. அவை சினிமாவிற்கான விளம்பர நிறுவனங்களைப் போல் செயல்படத் தொடங்கி விட்டன என்பது தான் தற்போதைய உண்மை.
நன்றி: ஆறாம்திணை
|
|
|
| கேட்ட கதை |
|
Posted by: aathipan - 01-05-2004, 04:40 PM - Forum: தத்துவம் (மெய்யியல்)
- Replies (12)
|
 |
நானும் நன்பர்களும் கடற்கரையில் நடந்;துகொண்டிருந்தோம். மூவருக்கும் எதோவகையில் கஸ்டங்கள் இருந்தது. என் ஒரு நன்பன் மட்டும் இந்த மாத வாடகைக்கு என்ன செய்வது என்று திரும்ப திரும்ப கவலைப்பட்டுக்கொண்டிருந்தான். எனக்கு அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. எனது இன்னொரு நன்பன் அவனுக்கு ஆறுதலாக இருக்குமே என்று ஒரு கதைசொன்னான்.
ஒரு தடவை முல்லாவும் மனைவியும் கடல்பிரயாணம் செய்தார்கள். வழியில் பெரும்புயலில் கப்பல் மாட்டிக்கொண்டது. கப்பல் அப்படியும் இப்படியும் ஆடியது. முல்லாவின் மனைவி மிகவும் பயந்துபோய்விட்டார். ஆனால் முல்லா அஞ்சாது இருந்தார். முல்லாவின் மனைவி அவரிடம் இப்படி புயல் அடிக்கிறது எப்போது கப்பல் கவிழும் என்று அச்சமாக இருக்கிறது நீங்கள் எந்த கவலையும் இன்றி இருக்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு முல்லா "எல்லாம் ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கைதான்" என்றார். முல்லாவின் மனைவி "இவ்வளவு அபாயகரமான சூழ்நிலையிலும் என்ன கடவுள் நம்பிக்கையோ?" என்று சலித்துக்கொண்டார். முல்லா திடீரென்று தன்இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து அவளை நோக்கி அச்சமுறும் வகையில் சுழற்றினார். பின் மனைவியைப்பார்த்து பயந்து விட்டாயா எனக்கேட்டார். மனைவி சிரித்துக்கொண்டு நான் ஏன் பயப்பிடப்போகிறேன் நீங்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்றார். நீங்கள் எப்படி என்னை கொல்ல முயல்வீர்கள் என்றாள். அதற்;கு முல்லா "புரிந்ததா இப்போது நான் சொன்னது. கத்தியை வைத்திருந்தது உன்மேல் அன்புகொண்ட கணவன் அதனால் நீ பயப்பிடவில்லை அதுபொலத்தான் புயலை வரவைத்து விளையாடுவது ஆண்டவன் அப்படியிருக்க நான் ஏன் பயப்பிடப்போகிறேன்" என்;றார்.
ஆகவே நாம் ஏன் கஸ்டங்களைக்கண்டு பயப்பிடவேண்டும் என என்நன்பன் ஆறுதல் சொன்னான்.
|
|
|
| திமுக இ.காங்கிரஸ் கூட்டு எம்மவர் சமாதானத்திற்கு வேட்டு???? |
|
Posted by: yarl - 01-05-2004, 08:49 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
தமிழக அரசியல் சதுரங்கத்தில் காய்கள் பலவாறு நகர்த்தப்படுகின்றது.நேற்றைய பகையாளிகள் நண்பர்களாகவும் நண்பர்கள் பகையாளிகளாகவும் உருவமெடுத்திருக்கிறார்கள்.
இதுவரை தமிழகத்தில் ஆட்சியிலில்லாத கட்சிதான் மத்தியில் அதிக பலத்தோடு நாடாளுமன்றம் செல்வது...அப்படிப்பார்த்தால் திமுகதான் வரவேண்டும்.திமுக பெரும்பலத்தோடு எழுந்தால் சோனியாகாந்தியும் பலப்படுவார்.
சோனியா காந்தி அயல்நாட்டு கொள்கையில் எப்படி செயல்படுவார்?..சாதகமாயினும் பாதகமாயினும் சர்வதேச அரசியல் மயமாக்கல் எமது பக்க பலமாக தற்சமயம் இருப்பதால் இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் பெரிதாக ஒன்றையும்
திணித்துவிடமுடியாது.
|
|
|
| குமார் பொன்னம்பலம் அழியா நினைவாய்....! |
|
Posted by: shanthy - 01-05-2004, 12:27 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>குமார் பொன்னம்பலம் அழியா நினைவாய்....!(குமார் பொன்னம்பலம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவையொட்டிய நினைவுக்கவி)
சிங்கத்தின் குகைநடுவே
சீறியெழுந்த மாமனிதர்.
சாவின் நாள் எதுவென்று அறியவில்லை.
என்றோ ஒருநாள் சிங்களத் துப்பாக்கி
முனையில் அது இருப்பதை
உணர்ந்த மனிதன்.
குமார் பொன்னம்பலம் !
குரல் தந்து தமிழினத்தின்
குரல்வளை நசுங்கிய பொழுது
உலகெங்கும் தன் குரலை
உயர்த்திக் கூவிய மானத்தான்.
நசுங்கிய நம் நாளின் சில பொழுதில்
நானிலத் தெருவிறங்கி நமக்காய்
நட்புக்கரம் தந்து
ஐரோப்பா முதல் அகிலத்தின்
பலதேச வாசலெங்கும்
தமிழ் அவலம் எடுத்துரைத்த
தமிழ்மறவன்.
சிறையறையில் தவித்தவர்க்கு
சில்லறை வாங்காமல்
தொண்டாற்றிய தமிழ்த் தொண்டன்.
சாவெடுத்து நல்லவனை நாலாண்டு
சென்றுவிட்டதின்று.
நாவிலெங்கள் நினைவுகளில்
குமார் பொன்னம்பலம்
அழியா நினைவாய்....
என்றென்றும் எம் நினைவில்.....
05.01.04.</span>
|
|
|
| உதவி தேவை |
|
Posted by: thambythasan - 01-03-2004, 03:11 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம்
- Replies (11)
|
 |
உதவி தேவை
நான் ஒரு குறும்படமும், கருந்துரையாடலும் செய்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு
வக்கிரவின்டில் போடவதற்கு விடியோக் சினரிஸ் தேவைப்படுகின்றது. எங்கே இறக்கிக்கொள்ளலாம்? அல்லது உங்கள் யாரிடத்திலாவது உண்டா?? இருந்தால் தந்து உதவுங்களேன்????
நன்றி
எனது விலாசம்: rajkumar1974@hotmail.com நான் மெசன்சரில் உள்ளேன். நன்றி
|
|
|
| புகலிட நம்மவர் கீதங்கள்! |
|
Posted by: sOliyAn - 01-03-2004, 02:54 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
புகலிடத்தில் நம் இசைக் கலைஞர்களால் பல இசைப்பேழைகள் காலத்துக்குக் காலம் வெளியிடப்படுகின்றன. அவற்றுக்கு ஊடகங்கள் தகுந்தமுறையில் உற்சாகமளிக்கின்றனவா அல்லது அவைகள் ஊடகங்களைச் சென்றடைகின்றனவா என்பது கேள்விக்குறியே! யாழ் இணையத்தில் சில பாடல்களை பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன். அந்த வகையில்..
பிறேமன் கலைநிலா இசைக்குழுவின் வெளியீடான 'ஆனந்தராகங்கள்' இசைப்பேழையில் இருந்து...
பாடல்:மன்னவனே.. பாடியவர்:ஜே.மதனி,பாடல்வரிகள்:செ.பத்மநாதன்,இசை:சுதன் நடராஜா
(பாடலின் இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது.)
|
|
|
| paaddu |
|
Posted by: vasisutha - 01-02-2004, 07:10 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (6)
|
 |
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
----
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயம் எல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலிதாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினம் முயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ
நீ மோதி விடு
-----
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம்
வானம் அளவு யோசிப்போம்
முயற்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சுப் போல சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாரும் இல்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதைக் கீறி
விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி
எல்லாமே உறவாகும்
தோல்வி இன்றி வரலாறா
துக்கம் என்ன என்தோழா
ஒரு முடிவிருந்தால்
அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதிவிடு
|
|
|
| விடியலைத்தேடும் கனவுகள்...! |
|
Posted by: sharish - 01-02-2004, 05:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
[size=18][b]விடியலைத்தேடும்
கனவுகள்...!
நாளாந்த விருந்தினர்போல்
கதிரோன்...
சிலநேரம் மட்டும் வந்தும்
பலநேரம் மறைந்தும்
கார்முகில்கள் அப்படியே...
கரையாமல் மண்ணோக்கி விழ
மழைநாளிலும்
குளிர்பனியிலும் நாட்கள்
நகர்ந்துகொண்டே செல்கிறது...!
"""என்னதம்பி....
சமாதானம் குழப்பிப்போச்சாம்...?
சண்டை வரப்போகுதாம்...???"""
இது...
எங்கள் தினசரிகள்
தேவாரம் பாடுவதுபோல்
தினம்தோறும் வீதியிலும்
தொலைபேசியிலும் பேசிக்கொண்டிருப்பது
வளமையாகிப்போய்விட்டது...!
விடியலைத்தேடிய
காயம்பட்ட கண்களுக்கு
விடியலென்பது கண்ணுக்கெட்டாத
கனவாகிப்போய்விடுமோ...?
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வழமைபோல
தை பிறந்தாச்சு
ஒரு வழியும் பிறக்காமலே...!
சமாதானம் என்றார்கள்
சாக்கடைதான் ஓடிக்கொண்டிருக்கிறது
அலரி மாளிகைப் பக்கமாக..!
அம்மையாருக்கு அது
©க்கடை என்ற நினைப்பாகிப்போய்விட்டது...!
அமைதி தருகிறேன்
சுதந்திரமாய் வாழவைப்பேன் என்று
வாய்கிழியக் கத்திக்கொண்டு
சிம்மாசனம் ஏறிய அமச்சரய்யா
அமெரிக்காவுக்கும்
இந்தியாவுக்கும்
மாறி மாறி பறந்து பறந்து திரிகின்றார்...!
எந்தயர்மீது இப்போது...
உள்நாட்டு அரசுகள் காட்டும்
அக்கறையை விட
வெளிநாட்டு அரசுகளின்
அக்கறைதான் அதிகம்
புதிதாகப் பிறந்திருக்கிறது
இந்த புரியாத நேசம்..!
நல்லகாலம் பிறக்குது...
நல்லகாலம் பிறக்குதென்று
எங்கிருந்து வந்திருக்கிறது
எல்லைகடந்த இந்த ஞானம்...?
நல்லவேளை
எங்கள் நிலத்தில்
எண்ணைவளம் இல்லை
அதுவும் இருக்குமெனில்
இன்னும் பாசம் பொங்கிவழிந்திருக்கும்..!!
புரிந்துணர்வு ஒப்பந்தம்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்...???
முன்பு...
முற்றுப்புள்ளியாய் இருந்தது
இப்போது
மிகப்பெரிய கேள்விக்குறியாய்
எழுந்து நிற்கிறது..!
அவசரமாய் ஒத்திவைத்தும்
அவ்வப்போது கூடும்
பாராளுமன்றம்
;இப்போது
அம்மையாரின் விளையாட்டு மைதானாம்
அமைச்சர்களை ஆட்சியில் இருந்து
தூக்கி விளையாடி
அடிக்கடி தடல்புடலாய்
ஏதேதோ செய்வார்
ஏன் என்று கேள்விகேட்க யார்உண்டு...?
ஏனெனில்
இது அம்மையார் அரசாட்சியாம்..!
அன்னையின்
அறுந்துபோன கனவுகளையும்
தாய்மாமனின்
எண்ணத்தில் தவழும் ஆசைகளையும்
தட்டாமல் அப்படியே
நினைவாக்க வேண்டுமாம்
ஒற்றைக்காலில் நிற்கின்றார் அம்மையார்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்கள் அரசாங்கம்
யார்வேண்டுமானாலும் ஆளலாம்
என்னவேண்டுமானாலும் செய்யலாம்
எமெக்கென்ன....?
ஆனால்...
இதுதான் அரசு
இதுதான் ஆட்சி என்கிறார்களே
இப்படிச்சொல்பவரை என்னசெய்யலாம்...???
இது அம்மையின் ஆட்சியில் மட்டுமல்ல
அன்றிலிலுந்து இன்றுவரை இப்படித்தான்
ஆட்கள்தான் மாறி மாறி வந்துபோவர்
ஆனால்....
அடையாளம்
அன்றைக்கும் ஒன்றுதான்
இன்றைக்கும் ஒன்றுதான்..!
அது
அவர்கள் ஆட்சி
அவர்களின் அரசாங்கம்
அரசுமாறினால் நமக்கென்ன...?
அமச்சு மாறினால் நமக்கென்ன...?
எதுவரினும் வரட்டும்
எதுவாயினும் நடக்கட்டும்
நமக்கென்ன கவலை...
பகலோன்போல் எங்கள்
முதலோன் இருக்கும்வரை...???
எத்தடைவரினும்....
தாயாய் எமைத்தாங்க
தலைவன் இருக்கிறான் என்ற
தைரியம் எமக்கு....!
இடர்வென்று
பகைவற்கு இடியாய் இருப்பான்
என்ற இறுமாப்பு எமக்கு...!!!
அதனால்தான்....
புலத்தில் இருந்து
தாய் நிலம்நோக்கிப் பாய்கிறது
நாள்தோறும் நவரச நதி..!
இது பாசம் மட்டும்
சுமந்து பாயும் பாசநதி...!
ஊர்சென்று திரும்பிய உறவுகள்
பாடும் சந்தோஷப்பாட்டு...
வேர்களை தரிசித்துத்திரும்பிய
விழுதுகள்போல்...!
கொள்ளுப்பேரனின்
மழலைப் பிரஞ்சு மொழிகேட்டு
புல்லரித்துப்போனானம் தாத்தன்
செல்லப்பேத்தியின் குறும்புத்தனம்பார்த்து
கண்ணுhறுபட்டுப்போகுமென்று சொல்லிக்கொண்டே
சுற்றிப்போட்டாளாம் பாட்டி
ஒரு வாரம் மட்டும்தான் கண்முன்னே
உறவாடித்திரியுமாம் இந்த உள் ஊர்வேர்களின்
விழுதெறிந்த வெளிநாட்டு உறவுகள்..!
முற்றத்தில் மண்ணள்ளி விளையாடித்திரியும்
இந்தப் பிஞ்சுப் பாதங்கள்
பின்னேரம் புறப்பட்டு
கண்டிவீதி வழியே கொழும்புக்குச் சென்று
மறுநாளே...
தொலைதூரம் பறந்திடுமாம்...
மீண்டும் இனி
ஊர்திரும்பும் செய்திவேண்டி
உயிர்த் துளிர்களின்
பிஞ்சுப்பாதம் படவேண்டி...
கண்ணீருடன் காத்திருக்கின்றதாம்
பிறந்த மண்...!
தங்கைக்கு கைவளையல்
மருமகளுக்கு ஒட்டியாணம்
சித்திக்குச் சேலை
தாத்தாக்கு கரைவேட்டி
மாமாக்கு மோதிரம்
அத்தைக்குக் கால்சதங்கை
பாட்டிக்குக்கூட பட்டுப்புடவை
இவையெல்லாம்
அன்போடு வாங்கிவந்த என்சொந்தம்
இனியெப்போ ஊர்திரும்பும்...?
அழுகிறதாம் அயலட்டை...!
முற்றம் ஏங்கித்தவிக்கிறதாம்
விளையாடித்திரிந்த
செல்லக் குழந்தைகளின்
சின்னப்பாதம் தேடி....!
வீட்டுப் படிக்கட்டு விம்மியழுறதாம்
வெளிநாட்டுச் சிரிப்பொலியை
இனியெப்போ கேட்பதென்று...!
ஊர்சென்று...
ஒரே கோப்பைக்குள் உண்டு
ஒரே போர்வைக்குள் உறங்கி
தாத்தாவின் கையைப் பிடித்து
வீதிவழி நடந்து...
சந்தியில் இருக்கும்
மாவீரரின் தூபிகளைப்பார்து..
இது என்ன தாத்தாவென்று
வியப்பாகக்கேட்க
பேரனுக்கு நடந்தவற்றை
நடந்தபடியே...
விளக்கிக்கொண்டே
வீதியில் நடந்த நினைவுகளுடன்
தொலைபேசியில்...
மீண்டும் தாத்தனின் குரல்கேட்டு...
என் மடியில் அழுதுகொண்டே
பிஞ்சுக்கைகளால் என் முகத்தில்
அடித்து அடித்து
அடம்பிடித்து அழுகின்றான் என்தம்பி...!
எனக்கு தாத்தா வேணும் அண்ணாவென்று...!
நான் என்ன செய்வேன்...?
அவன் அழுகையை
நிறுத்தத்தான் என்னால் முடியும்...!
ஆசையை என்ன செய்ய...?
பொம்மைகளைக்காட்டி...
அவன் அழுகையை நிறுத்திவிட்டேன்
இப்போது
நான் மட்டும்
மனசுக்குள் அழுதுகொண்டிருக்கிறேன்...!
தைபிறந்தால்...
கட்டாயம் வழி பிறக்கும் என்கிறார்கள்
இம்முறையும் வளமைபோல
தை பிறந்தாச்சு...!
எமெக்கென்று...
ஒரு வழியும் பிறக்காமலே...!!!
த.சரீஷ்
02.12.2003 (பாரீஸ்)
|
|
|
|