| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 93 online users. » 0 Member(s) | 90 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| யாழ் உறவுகளிற்கான வேண்டுகோள் |
|
Posted by: Paranee - 01-11-2004, 05:11 AM - Forum: இணையம்
- Replies (6)
|
 |
வணக்கம்
அன்பின் யாழ் உறவுகளிற்கான வேண்டுகோள்
எனது ஈமெயில் முகவரியான paraneetharan_n@hotmail.com தற்போது என் வசம் இல்லை. நேற்றையதினம் மதியத்தில் இருந்து அதனுள் என்னால் உள்நுழைய முடியவில்லை. மறைவுச்சொல் மாற்றப்பட்டுள்ளதாக அறியத்தருகின்றது. நான் மாற்றம் செய்யவில்லை. எதுவாகினும் இங்கு உள்ள உறவுகளின் முகவரிகள் அதில் நிறைய பதிவாக்கி வைத்திருந்தேன். எனவே தயைகூர்ந்து ஏதாவது செய்திகள் வருமானால் தவறாக எண்ணவேண்டாம்.
முகவரியை மீளப்பெறும் நோக்கில் முயன்று வருகின்றேன். நம்பிக்கையுடன் உங்கள் பரணீதரன்
உங்களிற்கு அதைப்பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் அறியத்தாருங்கள். எப்படி அந்த முகவரியை பெற்றுக்கொள்வது என்பது பற்றிய தகவல்
|
|
|
| திருமலையில் இருந்து பெண் விளிப்பூட்டிய பெண் |
|
Posted by: kuruvikal - 01-10-2004, 10:39 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
<img src='http://www.tamilnet.com/img/publish/2004/01/harsini_2.jpg' border='0' alt='user posted image'>
திருமலையில் இருந்து பெண் விளிப்பூட்டிய Miss Harsini Antonysamy என்னும் தீவிர பெண்விடுதலை செயற்பாட்டாளர் இயற்கை எய்தி உள்ளார்...இவர் யுத்த சூழ்நிலையிலும் அதன் பின்னரும் பெண்கள் புனர்வாழ்வுக்காக அரும்பாடுபட்டவர் என்று தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.....
"Harsini's demise irreparable loss to women liberation"
[TamilNet, January 10, 2004 15:49 GMT]
North East Provincial Ministry of Education, Cultural Affairs, Sports and Youth Affairs Saturday said that the untimely death of Trincomalee leading women rights activist Miss Harsini Antonysamy was "an irreparable loss to women liberation movement in the NorthEast province."
The funeral of Miss Harsini Antonysamy is scheduled to take place Sunday morning at the Trincomalee Catholic cemetery. Miss Harsini died on Friday and her body was brought to Trincomalee on Saturday, sources said.
Mr.K.Sithambaranathan, Director of the Theatre Action Group and the head of the Fine Arts Department of the Jaffna University with several active members of his group from other parts of the northeast province including, Jaffna, Vavuniya, Batticaloa and Colombo arrived in Trincomalee to attend the funeral of Miss Harsini.
Harsini has rendered a valuable service in taking forward the struggle of Tamil women against oppression and suppression during the war situation, human rights sources said.
The Trincomalee District Youth Development House in its condolence message said the Tamil women in the NorthEast province will remember Miss Harsini for her valiant struggle against atrocities committed by the state armed forces.
Theater Action Group said in its condolence message that she has been playing a leading role in support of the oppressed people and against suppression of women rights. She dedicated herself for the struggle of achieving self-determination rights of Tamils in the northeast province, the Group further said.
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அனைவைருடனும் நாமும் துயரங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்....!
|
|
|
| பாடல் |
|
Posted by: yarlmohan - 01-09-2004, 04:47 PM - Forum: குறும்படங்கள்
- Replies (5)
|
 |
பாரீசில் இருந்து நண்பர் நாதன் யோகநாதன் அனுப்பி வைத்த மடல். (தரவிறக்கம் செய்த பார்வையிடுங்கள்)
" நாங்கள் பாரீஸ் இல் இருந்து இதை தொழில்நுட்பரீதியாக வெல்லவேண்டும் என்பதற்காக செய்துள்ளோம்.
100 வீதம் தமிழ். இசை தொழில்நுட்பகலைஞர்கள் உட்பட. இதை உங்கள் கருத்துக்களத்தில் இட்டு விமர்சனங்களைப் பெற்றுத்தருவீர்களா ?
http://www.paristamil.com/pub/cd/realplayer.rm "
|
|
|
| Pongal |
|
Posted by: mukilan - 01-09-2004, 01:56 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
புலம் பெயர்ந்த தமிழர்கள்
பொங்கல் திருநாள்
அடையாள நாள்
- முகிலன்
கடலோடிகளான பாரம்பரிய அறிவைப்பெற்ற மூத்த இனம் தமிழர் என்றால் மிகையில்லை.
‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என எம்மவரிடம் புளங்கும் பழமொழியும் -
எட்டுத்திங்கும் சென்று கலைச் செல்வம் கொணர்ந்திடுவீர் எனக்கனவைச் சொன்ன பாரதியும் -
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனப் பகன்ற கவிஞன்புூங்குன்றனின்வார்த்;தையையும் -இருபதாம் நு}ற்றாண்டுக் கடைக்கூறுகளிலிருந்து புலம் பெயர்ந்த ஈழத்தமிழன் வாழ்வாக்கிக் கொண்டுள்ளான். விரும்பியோ விரும்பாமலோ ஏற்பட்ட இந்தப் புலப்பெயர்வின் மூன்றாவது தசாப்த காலத்தில் கற்பதும் பெறுவதும் பலப்பல…
இன்று,
புூமிப்பந்தின் பல்வேறுபகுதிகளிலும் தடம்பதித்த தமிழனின் அடுத்த தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியுள்ள இருபத்தொராம் நு}ற்றாண்டின் முற்பகுதியில் தன் அடையாளத்தேடலில் - மூலத்தேடலில் மையம் கொண்டதாகவே இக்கட்டுரை வரைவுபெறுகிறது.
மூலமறியும் தேடலில் விருத்தியானதுதான் மனித அறிவு. விஞ்ஞானங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட உலகின் - பிரபஞ்சத்தின் எல்லைகளை அறியும் தேடற்பதிவுகள் மனிதனின் சாதனைகள். ஆனாலும் அறிவும்- அறிவுசார் நம்பிக்கைகளும் ஒருபுறமாகவும்;, வெறுமையான எண்ணக் கருதுகோள்களும்- இதனுடன் கூடிய மூடநம்பிக்கைகளும் மறுபுறமாகவும் மனிதவிலங்கினம் பயணித்துக் கொண்டிருக்கிறது.
காலனியாக்க காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தமிழர்களின் புலப்பெயர்வு நான்காவது, ஐந்தாவது தலைமுறையில் வேறொரு பரிமாணத்தில் நிற்பதைக்கண்ட இந்தப் புதிய புலப்பெயர்வுத் தமிழன் ஆளமாகச் சிந்திக்கத் தொடங்கியதில் வியப்பில்லை. இது தமிழால் ஒன்றுபடுவோம்! என்ற கோசமாகியுள்ளது.
நீண்ட காலனியாதிக்கத்தின் கீழ் தொடர்ந்த அவலத்தில் ‘மறத்தமிழன்’ ‘வீரத்தமிழன்’ என்ற சொற்களுக்கான விபரணங்களை அகராதிகளில் தேடும் நிலையிலேயே இருந்தது. இதனால் வெண்திரையில் கதாநாயகர்களின் சலன விம்பங்களில் தன்னை இழந்து இலயித்துப் போனவர்களாகக் காணப்பட்டனர்.
இதன் அடுத்த கட்டத்தில் வாய்ச்சவடாலர்களும், சினிமாக் கலைக் கதாநாயகர்களும் ஒரு சுற்று வந்துபோனார்கள். இலங்கைத் தீவில், வைட் கொலர் சீமான்களும் கறுத்த கோட்டணிந்த அப்புகாத்துகளும் கலக்கிவிட்டுப்போனார்கள்.
நாம்பெற்ற பட்டறிவால் எமது கால்களில், எமதுபலத்தில் நாம் நிமிர்ந்தெழும் இக்காலகட்டத்தில் தமிழால் ஒன்றுபடும் கருதுகோளைச் சாத்தியமாக்கும் முன்மொழிவாக இக்கட்டுரை வரையப்பெறுகிறது.
புலம் பெயர்வாழ்வில் நான் யார்? –என்ற வினாவிற்கான கேள்வி எம்மால் விட்டுச் செல்லும் புதிய தலைமுறையினரை அரித்தெடுக்கும் பிரதான வினாவாகவிருக்கும். நாம் வாழும் பல் இனக்குழுமங்களுக்குள் நடக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு முகங்கொடுத்தவாறே நடமாடப்போகிறார்கள் எமது சந்ததியினர். இந்த இலத்திரனியல் - இணையத் தொடர்புூடக யுகத்தில் தெளிவான கருத்தாடல்களைக் கொண்டவர்களாலேயே நிமிர்ந்து உறவாடல் சாத்தியமாகும். அதுமட்டுமல்லாது, எம்மை ஏனைய சமூகத்தவர் புரிந்து கொள்ளவும் நாம் முயற்சி செய்யவேண்டியவர்களாகவுள்ளோம்.
கலை- கலாச்சார நிகழ்வுகள் இத்தகைய புரிதல்களுக்கு இசைவானதாகின்றன. இவை,
1. குடும்ப நிகழ்வுகள் (பிறந்தநாள், மணநாள், இன்ன பிற)
2. பொது நிகழ்வுகள் (சங்கள்கள்- அமைப்புகளின் ஆண்டுவிழாக்கள், மதம் சார்ந்த நிகழ்வுகள், கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இன்ன பிற)
இதில் தமிழால் ஒன்றுபடக்கூடியதான குறைந்த பட்ச நிலையிலுள்ள நிகழ்வாகத் தெரியப்படக்கூடியது பொங்கல் நாளாகும். இந்நாள் வெறுமனே பொங்கிப் படைக்கும் நாளாக குறுக்கப்பட்டிருக்கிறது. இந்நாளுக்கும் மதத்திற்கும் சம்மந்தங்களேதுமில்லை. தமிழர்கள் கூடும் இடமெல்லாம் பொங்கிப் பங்கிட்டு உண்பதென்பது சாதாரண நிகழ்வு. அப்படியிருக்கும்போது தை முதலாம் நாளை ஏன் பொங்கல் நாளாகக்குறித்தான் தமிழன்? இந்நாளில் வாழ்வு இயங்கியல் நியதியான ‘பழையன களைந்து புதியன புகல்’ வழமையையும், வாழ்வுக்கு நம்பிக்கையுூட்டும் ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ - வாசகப் பிரயோகமும் ஏன் தொடர்கின்றன ? தமிழுடன் கூடிய வீர விளையாட்டுகளும், மனிதனுடன் இணைந்துள்ள மிருகங்களுடன் அன்பைப் பொழியும் - தன்வாழ்வோடு பிணைந்துள்ள இயற்கையை நேசித்த இந்த விழுமியம் எம்மிடம் காணப்படும் வரலாற்றுப் பொக்கிசம். இந்த உயரிய பண்பாலேயே இந்நிகழ்வு குறுகிய மதச்சடங்கு வலை வீச்சுக்குள் விழாமல் தொடரப்படுகிறது.
இதனால்தான் கூறுபட்டுக்கிடக்கும் தமிழ்ப்பேசும் மக்களது நெஞ்கங்களில் பதிவுற்றிருக்கும் தமிழின் பொதுமறையான திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் நாளாகவும் - தமிழர்களின் புத்தாண்டாகவும் தமிழ் அறிஞர்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக மிகத்தெளிவாக தமிழுக்காக ஒரு நாள் இருக்கிறதென்றால் அது தமிழர் திருநாள் - பொங்கல் நாளாகும். இன்று பிரதேசங்களால் – நாடுகளால் – மதங்களால் - சாதியங்களால் எனப் பிளவுண்டுள்ள தமிழ்ப் பேசும் மக்களை ஒன்றிணைக்கூடிய நாள் இந்தப் பொங்கல் நாள்.
அமெரிக்காவில் பெயர்ந்த கறுப்பர்கள் தங்களது அடையாளத் தேடலில் பத்து நாட்களைக் கொண்ட பெரிய அடையாள மீட்புக் கலாச்சார ஒன்றுகூடலை நடைமுறைப்படுத்துகிறார்கள். உலகமெங்கும் விரவியுள்ள சீனர்கள் தங்களுக்கான தனித்துவமிக்க புதுவருட நிழ்வை எல்லோரும் அறியச் செய்துள்ளார்கள். இவ்வேளையில் இங்குள்ள சிறப்பு பல்பொருளங்காடிகள் சீன வாரத்தைக் கொண்டாடுவதைக்காண்கிறோம். இந்த வகையில் நாமும் தமிழ் வாரத்தை (பொங்கல் தினம் வரும்) வருடம்தோறும் பிரகடனப்படுத்தி தமிழர் திருநாளை ஒட்டி அடையாள வாரமாக கண்காட்சிகள், ஆய்வு -கருத்தரங்கங்கள், நு}ல் வெளியீடுகள், உலகளாவிப்போட்டிப் பரிசுகள்- கௌரவிப்புகள், கடந்த ஆண்டின் சிறந்த தமிழன் - சாதனையாளர்கள் தெரிவுகள், தமிழ் வர்த்தக நிறுவனங்களின் விசேட மலிவு விற்பனைகள், இன்ன பிறவாகக் குவிக்கமுடியும். தமிழ் நாட்டில் மூன்று தினங்களாகக் கொண்டாடப்படும் இந்நிகழ்வு விரிவாக்கப்பட்டு உலகத்துடன் பரிவிசைக்கப்படும். இதற்கு உலகளாவிய தமிழாவலர்களும், தமிழ்த் தாராளர்களும் இவர்களை ஒருங்கிணைக்கும் முன்னெடுப்பாளர்களும் களமிறங்கிடும் தருணமிது.
ழூழூழூழூழூழூழூழூழூழூ
பெற்றோர் இல்லாதவன் அனாதை - சுயஅடையாளத்தை இழக்கும் இனம் முகமற்ற மனிதக் கூட்டம் போன்றது. எமக்குப் பின்னான தலைமுறையினரின் மூலத்தேடலுக்கு நாம் விட்டுச் செல்லவேண்டியவை பலவுண்டு.
பாரிஸில் நடந்த கூட்டமொன்றில் பேசிய தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் ‘மிக மிக நீண்ட பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை முதுசங்களாகக் கொண்டவர்கள் தமிழராகிய நாங்கள்…..’ என நாத்தழுதழுக்கக் கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
|
|
|
|