| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 286 online users. » 0 Member(s) | 283 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| வசியக்காரி..பகுதி-8 |
|
Posted by: sharish - 01-19-2004, 08:49 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
<b>[size=18]வசியக்காரி..பகுதி-8
காதல்விதை விசித்திரமானது
ஒரே ஒரு விதையே
இரண்டு இடங்களில்
முளைகொண்டுவிடுகிறது
பெண்மனதிலும்...
ஆண்மனதிலும்...!
ஒரு இரவில்
ஒரு நூற்றாண்டே கழிகிறது
ஒவ்வொரு காதலனுக்கும்..!
அறுவைசிகிச்சை பிரசவவேதனையுடனேயே
ஒவ்வொரு
காதல் கவிதையையும்
எழுதிமுடிக்கின்றான் கவிஞன்...!
நீ
எப்போது பிறந்தாய்...?
எங்கே பிறந்தாய்...?
நீ பிறந்த இடத்தில் இருந்தே
ஒரு கவிஞனும்
அவன் கவிதைகளும்
பிறந்து வந்திருக்கிறது..!
கவிதையும் காதலும்
சொல்லிக்கொண்டு வருவதில்லை
திடீரென்று...
சொல்லாமலே வருகிறது...!
ஒரு சிறிய கிராமத்துக்கு
நேற்று வரவேண்டிய புகைவண்டி
இன்று வருவதைப்போல்
தாமதமாகவே காதலை சொல்கிறாள்
ஒவ்வொரு பெண்ணும்...!
உணர்வுகள் மயங்கிப்போக
உயிர் போகும் மரண வேதனையிலேயே
ஒவ்வொரு
காதல் கடிதமும்
எழுதிமுடிக்கின்றார்கள்
காதலர்கள்..!
இன்னும்
ஒரு நாள்கூட
முழுமையாக உன்னோடு
வாழ்ந்து பார்கவில்லை
ஆனால்...
ஒருகோடி ஆண்டுகாலம்
வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்
கற்பனையில்...!
ஆடிப்பாடி வேலைசெய்தால்
அலுப்பிருக்காது என்கிறார்கள்
நான்
ஆடிப்பாடாமல் அலுப்பின்றி
வேலைசெய்கின்றேன்
உன் நினைவுகளைச் சுமந்துகொண்டே...!
என்
இதையத்தைக் கடத்திச்சென்ற
காதல் தீவீரவாதியே....
உன்னைத் தேடினேன்
தேடுகின்றேன்
தேடிக்கொண்டே இருப்பேன்
வீரப்பனைத்தேடும்
இந்திய இராணுவம்போல்...!
இன்னும்
சில யுகங்கள்தேவை
இதயத்தில் உண்டான
றணம் ஆற
இன்னும்
சில நூற்றாண்டுகள் தேவை
நெஞ்சில் உண்டாக
காதல் வலி மாற...!
அந்தச் சாலைமரங்களுக்கு
நினைவிருக்கும்
நீ என்னோடு
நடந்த நாட்களை...!
நீ விரும்பிய அனைத்தையும்
நானும் விரும்புகிறேன்
உன்னை நினைவுபடுத்தும்
அத்தனை பொருட்களிலும்
பத்திரமாக அல்ல...
பைத்தியமாக இருக்கிறேன்...!
உன்னைக் குழிப்பாட்ட
மேகம்
மழைநீரை அனுப்புகிறது
ஆனால்
நீ எனது
கண்ணீரைக் கேட்கிறாய்...!
உன்னைத் தாலாட்ட
தென்றல்
தாலாட்டுப் பாடுகிறது
ஆனால்
நீ எனது
அழுகுரலைக் கேட்கிறாய்...!
பச்சைக்குழந்தை
தாயைத்தேடி அழுவதுபோல்
பிஞ்சுக்காதலனாய்
நானும்
உன்னைத்தேடி அழுகின்றேன்
நீ
ஆசையாய் மார்போடணைக்கும்
சுகத்திற்காகவும்
அன்புமொழிபேசி
கலங்காதே என்று
கண்ணீரைத்துடைக்கும்
ஸ்பரிசத்திற்காகவும்...!
(இன்னும் வரும்..)
[b]த.சரீஷ்
19.01.2004 (பாரீஸ்)</b>
|
|
|
| மீண்டும் ஸ்ரீதேவி..... |
|
Posted by: kuruvikal - 01-17-2004, 11:54 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/01/17_sridevi.jpg' border='0' alt='user posted image'>
80 பதுகளில் இளைஞர்களின் கனவுக் கன்னியான ஸ்ரீதேவி தமிழில் கலக்கி பின் மும்பையில் கலக்கி.... திருமணத்தின் பின் சற்றே ஓய்ந்து மீண்டும் சீரியல் மூலம் நடிக்க ஆரம்பிக்கிறார்....
அன்றைய இளைஞர்கள் பலர் ஸ்ரீதேவி என்று இப்போ தமது தேவிகளோடு 8) வாழ்ந்தாலும்...மீண்டும் அந்தச் ஸ்ரீதேவியை உங்கள் முன் கொண்டு வருகின்றோம்....! :wink:
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு காலத்தில் பாலிவுட்டையே கலக்கிய நடிகை ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்துள்ளார். மாலினி ஐயர் எனும் தொலைக்காட்சித் தொடரில் (ஹிந்தி) நகைச்சுவை பாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.
webulagam.com
---------------
:twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| செய்தி ஒன்றின் தாக்கம்...செய்தி வெளியிடுவோர் சிந்திப்பீரா.. |
|
Posted by: kuruvikal - 01-17-2004, 11:12 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஜனவரி 17, 2003
வலிப்பு நோயால் வேதனை: மாடியிலிருந்து குதித்து 12 வயது சிறுமி தற்கொலை
அடிக்கடி வலிப்பு வந்ததால் மன வேதனை அடைந்த 12 வயது மாணவி, தான் தங்கியிருந்து விடுதியின் 6வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை நகரில் அடுக்கு மாடிக் கட்டடங்களிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மாணவிகள் என்பதுதான் கொடுமை.
கடந்த 3 மாதங்களில் 4 பேர் இவ்வாறு கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந் நிலையில், நேற்று சேத்துப்பட்டு பகுதியில் உள்ள 6 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து 12 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பர்டங் சாலையில் ஆதரவற்றோர் தங்கிப் படிக்கும் விடுதி மற்றும் பள்ளி உள்ளது. இங்கு தங்கியிருந்தவர் சாயிரா பேகம். பெற்றோர்களை இழந்ததால் சாயிரா பேகம் இங்கு தங்கிப் படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.
இதனால் மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்க முடியாத நிலை.
வலிப்பு நோய் காரணமாக மன வேதனை அடைந்த சாயிரா பேகம், சில வாரங்களுக்கு முன் கோடம்பாக்கம் பகுதியில் ஒரு மாணவி 10வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார்.
அதேபோல நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனது சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து விடுதி வார்டன் சாயிராவை அழைத்து, கண்டித்து, அறிவுரை கூறியுள்ளார்.
இந் நிலையில் நேற்று விடுதியின் 6வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் அந்தச் சிறுமி சாயிரா பேகம்.
Thanks thatstamil.com
---------------------
செய்தியாக அல்லாமல் உதாரணத்துக்குத் தரப்பட்டுள்ளது....செய்திகளின் தாக்கம் சிறுவர்களையும் ஏன் பெரியவர்களையும் எந்தெந்த வகையில் எல்லாம் பாதிக்கிறது என்பதை கருத்துக்களை, செய்திகளை வெளியிடுவோர் சிந்தித்து செயற்பட இது ஓர் உதாரணம்....!
|
|
|
| சிறிலங்கா இராணுவம் கொலை வெறியாட்டம்....2004 |
|
Posted by: kuruvikal - 01-17-2004, 10:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
2004 ம் ஆண்டில்.... கடந்த மூன்று நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம், தென்மராட்சி, கனகம்புளியடிச் சந்திக்கருகில் சிறிலங்கா இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்து வந்த இளம் குடும்பம் ஒன்று கூண்டோடு படுகொலை செய்யப்பட்டுள்ளது...கணவன்(Ilankanathan Suthakaran, 38 ), மனைவி (Suthakaran Swarnawathy, 21) அவர்களின் பிறந்து 8 மாதமே நிறைந்த ஆண் குழந்தை (Vaishnan) என அனைவரும் கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சமாதானம் ஏற்பட்டு சந்திரிக்கா அம்மையாரிடம் பாதுகாப்பு அமைச்சு கைவந்த பின் சிறிலங்கா இராணுவ கொலை வெறியாட்டம் மீண்டும் தலை தூக்கியுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது...இப்படி துப்பாக்கி முனைக் கத்திகளால் கழுத்து வெட்டி படுகொலைகள் செய்வதில் சிறிலங்காப் படையினர் கைதேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.....!
தகவல்....
Couple, infant murdered in Jaffna high security area
[TamilNet, January 16, 2004 16:29 GMT]
A couple and their eight month old infant were found murdered near the Kanakampuliyadi Junction in Jaffna Friday, Police in Chavakachcheri said. The couple's home is in an isolated spot surrounded by a large number of Sri Lankan military positions and camps. Police said that the family may have been murdered three days ago. Their throats were slit.
A relative had gone in search of them Friday as they had failed to turn up for the Pongal Festival at his home on Thursday. He found the three lying dead in their house, Police said.
The home of the murdered couple in situated by the Puttur-Madduvil Road near the Kanakampuliyadi Junction. The SLA relocated several of its camps in the Thenmaradchi division of Jaffna around Kanakampuliyadi Junction area after the ceasefire in 2002.
Chavakachcheri magistrate visited the scene of the crime and instructed the Police to hand over the bodies of the couple and the infant to the Jaffna Teaching Hospital pending further investigations.
Chavakachcheri Police identified the dead as Ilankanathan Suthakaran, 38, Suthakaran Swarnawathy, 21, and Vaishnan, their infant son.
---------------
கொழும்பில் அம்மா கொச்சைத் தமிழில் வாழ்த்துச் சொல்ல இங்கோ அவரது கூலிகள் நரபலியிட்டு பொங்கல் கொண்டாடியுள்ளனர்.....!
:evil: :roll: :evil: 8)
|
|
|
| கருத்துக்களம் வன்செயலை வளர்க்கிறதா? |
|
Posted by: ganesh - 01-16-2004, 01:16 PM - Forum: புலம்
- Replies (17)
|
 |
கருத்துக்களத்தின் மூலம் வஞ்செயல் வளர்வதாக இதனைப்படிததுவரும்
பெரும்பாலேர் சொல்வதைக்கேட்கமுடிகிறது
இது உண்மையா? பல தரமான தலைப்புக்கள் உதாரணமான கணனி வீடியோ மருத்துவம் போன்ற எத்தனையோ
பயன்தரக்கூடியதகவல்கள் இருந்தபோதும்
ஒரு சில பகுதிகள் மூலம் இந்தக்கருத்துக்களத்தின் தரம் குறைந்துள்ளது என்பது ஒரு சிலரின் கருத்து
சிலர் தமது பிள்ளைகளை கருத்துக்களத்திற்கு செல்ல தடைவிதித்துள்ளதை அறியமுடிகிறது
ஆகவே தயவுசெய்து உண்மையாக மனச்சாட்சியின்படி உங்கள் கருத்தை எழுதுங்கள் இக்கருத்தினைக்கொண்டு பொறுப்பாளர்கள் மேல் நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருக்கும் இவர்கள்
தற்போது மேல் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் அப்படிசெய்யாவிட்டால்
எமதுசகோதரசமூகங்களுக்கும் எமக்கும் இடையில் ஒற்றுமையின்மையை உண்டாக்கும்
[size=18]
அழுகியபழங்களுடன் நல்ல பழங்களை வைக்காதீர்கள் இதனால் நல்ல பழங்களும்
அழுகிவிடும்
சிறுவர்களும் இணைந்து கருத்துஎழுதுவதற்கு
உதவிசெய்யுங்கள்
|
|
|
| மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை,புதுக்கவிதைப் போட்டி |
|
Posted by: yarl - 01-16-2004, 01:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மரத்தடி இணையக் குழுமம் நடத்தும்
சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்!
மரத்தடி இணையக் குழுமம் நடத்தும்
சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்!
மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹ¥ குழுமமும் வாழ்வின்\பாலும், வாழ்கின்ற சமூகத்தின் பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படுவன. மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விடயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம். வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, மரத்தடியில் "குளிர்கால சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளை" அறிவித்திருக்கிறோம். முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் தலா இரண்டு பரிசுகள் வழங்க இருக்கிறோம். முதல் பரிசாக இந்திய ரூபாய் 5000-ம், இரண்டாம் பரிசாக இந்திய ரூபாய் 2500-ம் வழங்க உள்ளோம். திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள் பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும், எழுத்தாளர் திருமதி. காஞ்சனா தாமோதரன் அவர்கள் பரிசுக்குரிய புதுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும் இருந்து உதவ அன்புடன் இசைந்துள்ளார்கள். இலக்கியத்தின் மீது ஆர்வம் உடைய புதுமுக மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். போட்டிக்கான விதிகளை மரத்தடி யாகூ குழுமச் செய்திகளில் காணலாம். உங்களுக்காக அவற்றை மீண்டும் கீழே தந்திருக்கிறோம்.
1. மரத்தடி யாகூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களூம்கூட, போட்டியின் இறுதி நாளுக்குள் (பிப்ரவரி 15, 2004 EST) உறுப்பினராகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம். மரத்தடி யாகூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்களே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியும்.
2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தரத் தயாராக இருக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளத் தயக்கமென்றால் அவற்றை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருடனோ பகிர்ந்து கொள்ளலாம்.
3. பிரபல பத்திரிகைகளுக்கு இணையான பரிசுகளை மரத்தடி வழங்குவதால், போட்டியில் வெல்கின்ற படைப்புகளை வேறெங்கும் அவற்றின் ஆசிரியர்கள் பின்னர் பிரசுரத்திற்கு அனுப்பக்கூடாது. போட்டியில் வெல்கின்ற படைப்புகள் மரத்தடி இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். பிற இடங்களில் பிரசுரிப்பது குறித்து மட்டுறுத்துனர் சந்திரமதி கந்தசாமி அனுமதி வழங்கவோ மறுக்கவோ செய்வார். போட்டிக்கு அனுப்பப்படும் எல்லாப் படைப்புகளைப் போட்டியின் முடிவுகள் தெரியும் வரையும் அவற்றின் ஆசிரியர்கள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது.
4. பி.கே.சிவகுமார் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளரோ அவர் குடும்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது.
5. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
6. போட்டியில் பங்குபெறும் படைப்புகளை "மரத்தடி குளிர்கால சிறுகதைப் போட்டி - கதையின் தலைப்பு", "மரத்தடி குளிர்கால புதுக்கவிதைப் போட்டி - புதுக்கவிதையின் தலைப்பு (தலைப்பு இருக்குமானால்) என்கிற "Subject" உடன் மரத்தடி குழுமத்தில் பொதுவில் மடலிடுங்கள்.
7. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதாவது, வேறெங்கும் (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) முன்னமே பிரசுரமாகியிருக்கக் கூடாது.
8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்.
9. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே முடிவானது; உறுதியானது. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் களையும் விதத்துடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ ஒருங்கிணைப்பாளருக்கு உரிமை உண்டு.
10. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.
11. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15, 2004 11:59 PM EST.
12. போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 29, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.
13. ஒருவர் அதிகப்பட்சமாய் ஒரு சிறுகதையும், ஒரு புதுக்கவிதையும் மட்டுமே போட்டிக்கு அனுப்ப இயலும்.
14. மேலும் விவரங்களுக்கு mathygrps@yahoo.com அல்லது pksivakumar@att.net ஆகிய மின்னஞ்சல்களுக்கு மடலிடுங்கள்.
வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
- சந்திரமதி கந்தசாமி
mathygrps@yahoo.com
(மரத்தடி யாஹ¥ குழும மட்டுறுத்துனர்கள் சார்பாக)
http://groups.yahoo.com/group/maraththadi
|
|
|
| தேசத்தின் புயல்கள் |
|
Posted by: கெளஷிகன் - 01-15-2004, 12:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (14)
|
 |
தனித்தழிழ் ஈழம் தேடிய தமிழர் நம் வரலாற்றுப்பாதையிலே நாம் கடந்து வந்த காலத்தின் பதிவுகள் கனதியானவை. கண்ணீரும் சோகமும் கலந்து நிற்பவை. வீரமும் தீரமும் தியாகமும் நிறைந்து வழியும் இந்தப் பாதையின் வழி நெடுங்கே காணப்படும் கல்லறைகள் கால ஒட்டத்தின் மைல்க்கற்கள். தி;டமும் திண்மையும் கொண்ட இந்த விடுதலை வேள்விக்கு இன்று விடிவு கிட்டும் போன்ற தொரு தோற்றம். ஆம் சமாதானப்புறா சிறகடிக்க முயல்கிறது. சமாதானத்திற்கான பாதைகள் திறக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகிறது. வேட்டொலிகளை மட்டுமே கேட்ட நாம் இன்று வெடி கொளுத்தி விளையாட முடிகிறது. காரணம் சமாதானம். ஆயினும் கடந்த இரு தசாப்த காலமாக புரையோடிப்போன இந்த யுத்தத்தில் புண்ணாகிப் போன நம் தேசம் தன் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றது என்பது நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இனவெறி பிடித்த சில சிங்களப் பேரினவாதிகளின் சிற்றத்தினால் சின்னாபின்னமாக்கப்பட்ட உண்மையின் பதிவுகள் பிஞ்சு மனங்களால் என்றுமே மறக்க முடியாதவை. வாழ்வா?சாவா?என்ற கோட்டில் நின்று கொண்டு நாளை என்ன நடக்குமோ என்ற கேள்விக் குறியோடு வாழ்ந்த அந்த நாட்களை இன்று நினைக்கும் போது நெஞ்சம் குமுறுகின்றது. அன்று நாம் பயணிகள் விமானம் பார்த்ததில்லை. ஆயினும் குண்டு வீச்சு விமானங்களே எமக்கு காலைச் சூரியன். ஆட்லறி நம் அன்றாட வாழ்வின் அங்கமாய்ப் போனது வேட்டோசை கேட்கா விடின் நித்திரையே கொள்ள முடியாது போனது . பதுங்கு குழிகளேநாம் அனைவரும் ஒன்று கூடும் பொது இடம் ஆனது. கல்வி கற்க வேண்டிய வயதில் கையிலே துப்பாக்கி ஏந்திய சிறுவர்களுமஇ; கோரப் போரின் தாக்கத்தால் ஏற்பட்ட வடுக்களைத் தாங்கியபடி தாயின்றித் தந்தையின்றித். தனயனின்றி விரக்தியுடன் வாழும் விடலைகளையும்; இன்று வந்து போவோர் அறிவார்களா?.
இத்தனை இம்சைகளுக்கு மத்தியிலும் அன்று நாம் நாமாகவே வாழ்ந்தோம். நம்மை நாமே கட்டியெழுப்பினோம். ஜெயிக்க வேண்டுமென்ற வெறியோடு தொடர்ச்சியாக முன்னேறினோம் மேசை விளக்கிலிருந்தே படித்து நல்ல பெறுபேறுகளைப் பெற்றோம.; எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்மை நாமே இழக்கத் துணியவில்லை.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை சமாதானம். சகல விதமான ஆடம்பரப் பொருட்களும் சந்தைக்கு வநததுவிட்டது. வெளிநாட்டிலிருந்தெல்லாம் நம்மவர்கள் வந்துபோகிறார்கள். கூடவே பல அம்சங் களையும் கூட்;டி வருகிறார்கள் அன்றாட வாழ்வில் அடங்கிப் போயிருந்த நம் வாழ்க்கை இன்று ஆட்டம் காண்கிறது.அநியாய ஆசைகள் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. கொலைகளும் கற்பழிப்புகளும் கூடிக் கொண்டே போகிறது.
கட்டுப்படுத்தக் கூடிய இந்தச் சீரழிவுகளை விட கட்டவிழ்த்து விடப்பட்ட கலாச்சாரச் சீரழிவுகள் தான் எத்தனை எத்தனை. அடக்க ஒடுக்கமாய் ஆடை அணிந்தது போய் அரை குறையாய் தெரிய அணிவது இன்று அத்தியாவசியமாகி விட்டது போற்தோன்றுகின்றது. அன்று மூடிக் கட்டிக் கொண்டு களை பிடிங்கிய நம்மவர்கள் அகதிகளாய் வெளிநாடு சென்று இப் போது அரை குறையோடு இங்கு வந்து ஆசை காட்;டினால் இங்குள்ளோர் நிலை என்னாhவது ? போதைப் பொருட்களும் நீலப் படங்களும் இன்று பொழுது போக்கு அம் சங்களாக மாறிப் போய் விட்;டது. மேசை விளக்கு மறைந்து மின்சாரம் வந்த போதும் கல்வித்தரம் மட்டமாகிப் போய் விட்டது.
இத்தனை காலமும் நாம் பட்ட கஸ்ரங்களின் மூலம் அடைய நினைத்து இதைத் தானா ? இந்தரச் சீரழிந்து போகும் கலாச்சாரத்துக்காகவா நாம் எம் சொத்துகளையும் சொந்தங்களையும்; பறி கொடுத்தோம் ? எந்த நோக்கத்துக்காக போராடத் தொடங்கினோமோ அந்த நோக்கத்தை மறந்து எம்மையே நாம் இழந்து எம் பண்பாடு கலாச்சாhரத்தை சீரழித்து இன்று கூனிக் குறுகிப்போய் நிற்கின்றோம். காலத்தின் கோலத்திற்கேற்ப நாம் மாறுவது வழவல ஆயினும் நாம் காத்து வந்த, ஏற்று வந்ந, நாகரீக உலகங்கள் யாவும் உயர்ந்த போற்றிய நம் விழிமியங்களை விட்டு நாம் ஒரு போதும் விலகிவிடக் கூடாது. வீரம் மட்டும் என்றுமே விலை போகாது, விவேகமுகம் கூட வராhவிட்டால்... எனவே சிந்தித்து செயற்படுவோம். மூன்றாம் ஈழப்போரை அறிவினாற்; தொடுப்போம். புதியதொருதேசம் படைப்போம், ஒன்று பட்ட இலங்கைக்குள்....
இப்படிக்கு...............கெளஷிகன்[/b]
|
|
|
|