Yarl Forum
கரைதேடும் அலைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கரைதேடும் அலைகள் (/showthread.php?tid=7590)



கரைதேடும் அலைகள் - Paranee - 01-16-2004

கிட்டுமாமா[Image: imageview.php?imageId=8]
ஆண்டுகள் பல அலையினுள் அழிந்தபோதும் அழியாது உன் முகம் எம் விழியெங்கும். . .


கிட்டடியில் கண்டதில்லை
நான் இதழ்விரிக்கும் முன்னே
நீ இமைமூடிக்கொண்டாயே
பத்திரிகைகளில் புகைப்படம்
கண்டதுண்டு புன்னகைத்த
உன் முகம் கண்டு
நான் புல்லரித்துப்போனதுண்டு

இருக்கும் போது உன்னை
நானறியேன் இந்தியன்
கருக்கியபின்னரே
உன் பெயர் நானறிந்தேன்
அறியா வயதினிலேயே
எனக்குள் ஆயிரம் விளக்கம்
தந்தவன் நீ
உன் நினைவை வெளிக்காட்ட
வீட்டின்முன் கொட்டகைபோட்டு
உன் புகைப்படம் வைத்து
தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுண்டு

ஏன் எதற்கு என்று
விளக்கம் புரியாமல்



விடுதலை கீதங்களை
என் செவிவழி படரவிட்டு
சந்தோசித்ததும் உண்டு
கண்ணாடி போட்ட
உன் புகைப்படம் பார்க்கும்போது
எனக்கு எந்தவித கவலையும்
தோன்றியதில்லை

இறப்பென்றாலே அறியாத வயது
ஏதோ எல்லோரும் வீட்டின்முன்
கொண்டாடுகின்றார்கள் என்று
நானும் கொண்டாடியதுண்டு

அவற்றை நினைக்க
இன்று நெஞ்சு விம்முதைய்யா

தேசம்விட்டு பிரியும்வரை
தேகம் அழவில்லை
இன்று கதறியழுகின்றேன்.

வீட்டின் அருமை வெளியில்
தெரியுமென்பார்கள்
என் மண்ணின்
மகிமை இன்று புரிகின்றது

எமக்காய் வாழ்ந்திட்ட
உறவுகள் எத்தனை
போராடி வீழ்ந்தாலும்
தாங்கிக்கொள்ளலாம்

எதிரியின்
சூழ்ச்சிக்குள் வீழ்ந்தால் அதை
தாங்கமுடியவில்லைய்யா

வஞ்சகன் விரித்த வலையில்
வஞ்சமில்லா நீ வீழ்ந்தாயே

கனவுகள் இலட்சியங்கள்
எல்லாமே ஈழத்தைநோக்கியே
இருந்த நீங்களெல்லாம்
இன்று இல்லை

ஊர்சுற்றி உதவாது வாழும்
நாம் இங்கே தமிழீழம்
காணப்போகின்றோம்

பொறுக்குதில்லையே
நெஞ்சம் வெடித்துச்சிதறப்போகின்றது

நன்றி.பரணீதரன் 14-01-2003


- kuruvikal - 01-16-2004

முந்தி ஆமி கோட்டையால வாறான் என்றால் ஒரே வெடிச்சத்தம் கேக்கும் சனம் பதறி அடிக்கும்...பிறகு <img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/kittu_s_6-p.jpg' border='0' alt='user posted image'> கிட்டுமாமா நிக்கிறாராம் என்றால் சனம் நிம்மதிப் பெருமூச்சோட இருக்கும்...அவரும்...200 மோபைக்கில சுற்றிச் சுற்றி வருவார்...குரங்குக் குட்டி ஒன்று அப்படியே தோளில நிக்கும்.....நாங்கள் அதை பாக்க விழுந்தட்டிச்சு ஓடுவம்...

கொஞ்ச நேரத்தில ஆமி பின்வாங்கிட்டானாம் என்று செய்திவரும்... பொடியள் ஒரு நாலு ரவையும் சுட்டு ஒரு சக்கையும் அடிச்சிருப்பாங்கள்...அவ்வளவும் தான் என்றில்ல... வோக்கியில கிட்டுமாமா கதைகிறத கேட்டவுடனேயே அவங்கள் போயிருப்பாங்கள்....அப்படியான எங்கட மாமா....இந்திய சதி வலையில சிக்கி சின்னாபின்னமானது....சின்ன விசயமில்ல...அது காலத்தோட எங்களோட இருக்கும் நினைவுகள்....!

:evil: :twisted:


- vasisutha - 01-16-2004

[b][size=24] கண்ணீர் அஞ்சலிகள்!

<img src='http://www.eelamweb.com/poem/gallery2/pic/kiddu.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.intamm.com/back/neyam/oct72000/deepam.gif' border='0' alt='user posted image'>


- vasisutha - 01-16-2004

நடுக்கடலில் படுகொலை

'கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் - லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும். இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அஃது எந்த நாட்டிற்கு உரியது என்பது; தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ''இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை"" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பி;ன்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.

7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா - சந்தியிலுள்ள பியுூபர் - கலா தீவி;ல் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தப கப்பலில் ஏறி;னார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.

13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு இப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்;டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது. 'திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா" என்று கேட்டபொழுது 'ஆம்" என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. இடுத்த கேள்வியாக 'நீங்கள் இலங்கைத் தமிழர்களா"? என்று கேட்கப்பட்டது. அதற்கும் 'ஆம்" என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் 'யகர்தா" கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தி;யக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ''கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?"" என்று வினாவினார். தாங்கள் 'சர்வதேசக் காவல் பணிபுரிவதாக" இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். 'யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா"? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.

சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.

ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்களவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சுூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.

அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.

இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது 'தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்" பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்" என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக்; கப்பலின் காப்டன் 'அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்" என்று எச்சரித்தார்.

தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.

சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான் திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத் தினார். சென்னை அழைத்துவரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.

இந்தப் பேச்சுக்களிடையே பயணட் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணு}ரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.

16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானு}ர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.

சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. 'தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை" என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.

16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிற பொழுது ''தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்"" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.

நன்றி
பழ. நெடுமாறன்
''காவியநாயகன் கிட்டு""

thanks to tamilcanadian.com