| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 127 online users. » 0 Member(s) | 124 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| புதிதாய் முளைத்த காளான்கள் (TV) |
|
Posted by: Aalavanthan - 01-20-2004, 09:17 PM - Forum: புலம்
- Replies (14)
|
 |
வானொலி காலம் போய் இன்று தொலைக்காட்சிக்கலாமாய் உள்ளதுஇ. இவை பற்றி சில சந்தேககங்கள் எழுகின்றன. இங்கு வானொலி பற்றி மாறன் எழுதிய ஒரு கருத்து. விளக்கமாய் எழுத வேண்டும் என்று நினைத்தாலும் ம் நேரம். உங்கள் கருத்துக்களையாவது வையுங்கள்.
சிலகாலத்திற்கு முன்வாசித்த பத்திரிகைச்செய்தி
........ இரண்டாம் உலகப்போரின்போது பி.பி.சி ஒரு வானொலிச்சேவையை நடத்தியது. கிட்லரின் மொத்தப்படைகளையும் குறிவைத்து ஜேர்மன் நாட்டுக்கு வெளியில் சென்று சண்டையிட்டுக்கொண்டிருந்த அணிகளுக்கு அவர்களுடைய மொழியில் உண்மை நிலவரங்களை இந்தவானொலி வெளியிட்டு வந்தது. இதை ஒரு நம்பகத்தன்மை கொண்ட செய்தி ஊடகமாக பல ஜேர்மன் படையாட்கள் ஏற்றுக்கொள்கின்ற நிலைவரும் வரை, இந்த வானொலி மிகவும் உண்மையான செய்திகளையே ஒலிபரப்பி வந்தது. தனது செய்திகளுக்கு நம்பகத்தன்மை கிடைத்துவிட்டது என்ற நிலைமை தோன்றியபின்னர், மெதுமெதுவாக உண்மை கலந்த சில பொய்களையும் சில பரப்புரைகளையும் இந்தவானொலி ஒலிபரப்பிற்று. உதாரணமாக உளவாளிகள் மூலம் சில ஜேர்மன் நகரங்களில் உள்ள முக்கியமானவர்கள், இடங்கள், என்பவற்றை அறிந்து அதன் அடிப்படையில் உண்மையெனத்தோன்றக்கூடிய திரிபுபட்ட செய்திகளை வெளியிட்டு ஜேர்மனியால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் இருந்த அதன்படைகளில் பல குழப்பங்களை இந்த வானொலி ஏற்படுத்தியது..........
உடனடியாகக் குழப்பங்களை ஓரிடத்தில், ஒரு சமூகத்தில், ஒரு அமைப்பில் உருவாக்க ஒரு குழுவை, தனி நபர்களை உடனடியாக விலைக்கு வாங்குவது, தயாராக்குவது மிகக்கடினம். இன்று உலகெங்கும் உள்ள ஆதிக்கசக்திகளின் உளவு அமைப்பு, வெளிநாட்டுப்பிரிவு ஏனைய நாடுகளில் (அவை தமக்கு ஆதரவான நாடாக இருப்பினும்) பல்வேறு விதமான குழுக்களை உருவாக்கி வைத்துள்ளது, இக்குழுக்களின் தலைமை இவ்வாறான உளவு அமைப்புக்களுடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவே அல்லது ஒரு மூன்றாம் தரப்பு மூலமாகவே தொடர்புகளை வைத்திருக்கின்றது. இவர்கள் இவ்வாறு இவைகளை உருவாக்கி வைத்திருப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இனங்களிடையே, நாடுகளிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதும் ஒன்றாகும். இவர்களை பார்ப்பதற்கு மற்றவர்களுக்கும் அவர்களுக்கும் எதுவித வித்தியாசமும் தெரியாது. மக்களுடன் மக்களாக, அவர்களுக்கு தொண்டுகள் செய்பவர்களாக ஊடுருவிக்கொண்டு இருப்பார்கள். அத்துடன் ஒரு உளவு அமைப்புக்களின் ஆலோசனைக்கேற்ப சில வேலைத்திட்டங்களை முன்னின்று செய்வார்கள். இன்னும் விரிவாகச் சொல்லப்போனால் மக்களின் தேவைகளை தாம் முன்னின்று செய்வோம், செய்து வைப்போம் என்று கூறிவைப்பார்கள். இவை கட்சிகளாகவே, மன்றங்களாகவோ, சமூக அமைப்புக்களாகவே, சங்கங்களாகவோ, வானொலியாகவே, தொலைக்காட்சியவோ, பத்திரிகையாளர்களாகவே இருக்கலாம்.
தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிறீலங்காவை தன்காலடியில் வைத்திருக்க வேண்டும் என்றதொரு அடிப்படையில் ஆரம்பகாலகட்டங்களில் தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா உதவிகள் பல செய்தது. இந்தியா எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழர்கட்கு தனிநாடு வேண்டும் என்ற ரீதியில் ஆயுதப்பயிற்சியோ ஆயுத உதவியோ அளிக்கவில்லை. அதன் முக்கிய நோக்கம் சிறீலங்காவை தன் கட்டுக்குள் வைத்திருப்பதே. தமிழீழ விடுதலைப்போராட்டம் விடுதலைப்புலிகளால் தீர்க்கதரிசனத்துடன் முன்னெடுக்கப்பட்டபோது, அதாவது விடுதலைப்புலிகள் தமிழீழத்திலேயே தம் முக்கிய தளங்களை அமைத்து தம் சொந்தக்காலில் நின்று போராட்டத்தை நடத்தியபோது ஏனைய தமிழீழ விடுதலை அமைப்புக்களை புலிகளுக்கு எதிராக திசை திருப்பியது. இவைகளும் புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது, சிறீலங்காவுக்கு நேரடியாக உதவி சிறீலங்காவை தன்கட்டுக்குள் வைத்திருக்கும் விதத்தில் வெளிநாட்டுக்கொள்கைகள் வகுக்கப்பட்டன. அதன் அடிப்படை தான் இந்தியாவின் தமிழீழ ஆக்கிரமிப்பு. பின் இந்தியா வெளியேறினாலும் தமிழ்க்குழுத் தலைமைகளை சிறீலங்கா அரசுடன் சேரவைத்து விடுதலைக்கு எதிரான மறைமுகமாக பெரும் போர் ஒன்றை நடாத்துகின்றது. இது தவிர வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில் தேவைப்படும் நேரங்களில் குழப்பங்களை உருவாக்க ஒரு சிலரை இந்திய, சிறீலங்கா, மற்றும் சில அரசுகள் பண உதவிகளை வழங்கி வைத்திருக்கின்றது.
இந்த வகையில் புலத்தில் சில வானொலிகள் ஏகாதிபத்தியத்தின் துணை கொண்டு நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஒரு வானொலி முற்று முழுதாக விடுதலைக்கு எதிரான கருத்துக்களை பரப்புரை செய்து கொண்டு அவர்களை ஒன்றிணைக்கும் வேலையிலும் (தெரிந்தவர்களுக்கு தொலைபேசியில் கட்டாயம் புலிகளுக்கு எதிராக சில வார்த்தைகள் பேசவேண்டும் என அன்பு வேண்டுகோள் விடப்பட்ட விடயங்கள் பதிவில் வைத்துள்ளார்கள்). மாற்றுக்கருத்துக்கள் என்றபோர்வையில் போரட்டத்தையும், போராளிகளையும் கொச்சைப்படுத்தும் செயல்களை ஏவலாளிகளின் ஆலோசனைப்படி செய்து வருவதை இந்த நிகழ்ச்சிகளை (நிகழ்சியா) அவதானித்து வந்தால் நன்கு புரியும். அத்துடன் யாரும் தொலைபேசியில் வராதபோது ஒருவரே மீண்டும் மீண்டும் மூன்று தடவைகள் குரல்மாற்றிப் பேசியதையும் உற்று அவதானித்தால் புரிந்து கொள்ள முடியும். இந்த வானொலி அதற்கான வேலையை ஜனநாயகம் என்ற தொனியில் செய்து வருகின்றது. ஜனநாயகத்தைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. எத்தனை உயிர்களைக் குடித்துவிட்டு, கொள்ளையடித்துவிட்டு இங்கு குடியிருக்கின்றார்கள். சரி திருந்தி விட்டார்களா என்றால் இல்லை. இன்னும் ஏவல்பேய்களிடம் அடிமைவேலை செய்துகொண்டல்லவா இருக்கின்றார்கள்.
மற்றைய வானொலி தாம் முன்பு என்ன செய்தோம் என்பதை மறந்துவிட்டு (மறைத்துவிட்டு என்றால் பொருத்தமாக இருக்குமோ தெரியாது) தேசியத்தலைவரின் ஆளுயர படத்தை தங்கள் அலுவலகத்தில் வைத்து தாம் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்று காட்டவும் முற்படுகின்றார்கள். ஆட்களில் மாற்றங்கள் வரலாம் இல்லை என்று சொல்வதற்கில்லை. ஆனால் இவர்கள் மாறியது நம்பக்கூடியதாக இல்லை. தங்களை பத்திரிகையாளர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த இரண்டாவதாகக் குறிப்பிட்ட வானொலிக்காரர் மக்களிடையே ஊடுருவல் செய்ய முற்படுகின்றார்கள்.
இவையெல்லாம் ஏகாதிபத்தியத்தின் கைவரிசைகளில் ஒன்றென்றே கருதவேண்டியுள்ளது. ஒரு வானொலி ஏதாவது ஒரு காரணத்தினால் தங்கள் கையைவிட்டுபோய்விட்டால் இன்னொன்றை பாவிக்க வேண்டிய தேவையேற்படலாம் என்ற நீண்ட பாரிய நோக்கத்துடன் இப்புதிய வானொலிகள் உருவாக்கப்படுகின்றன. அல்லது வேறு வேறு எகாதிபத்தியத்தின் பின்புலத்தோடு இவைகள் உருவாக்கப்படுகின்றன. இவை எல்லாம் நீண்ட நோக்கில் தமிழ்மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தப்போகின்றன என்பது உண்மை.
இவர்கள் வீரியமற்று இருந்தாலும் ஒரு குடம்பாலுக்கு ஒரு துளி விசம் என்பதுபோல எதிர்காலத்தில் ஏதாவது நடைபெறலாம் என்பதால் நாம் இன்றே அவதானமாக இருத்தல் நல்லதல்லவா?
நன்றி: மாறன்
http://www.yarl.com/kalam/viewtopic.php?p=...ighlight=#14036
|
|
|
| Free SMS - இலவச குறுந்தகவல் சேவை |
|
Posted by: Guest - 01-20-2004, 05:58 PM - Forum: இணையம்
- Replies (13)
|
 |
வலை டு செல் இலவச எஸ்.எம்.எஸ்.
www.sms.ac
எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறீர்களா? என்னிடம் செல்ஃபோன் இல்லையே என்கிறீர்களா? செல்ஃபோன் இல்லாத துரதிர்ஷ்டசாலிகளும் இந்தப் புதுமையான வெப்சைட் மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. அதுவும் இலவசமாக.
எஸ்.எம்.எஸ். என்றால் இன்னா என்று கேட்பவர்களுக்கு : உங்கள் கையில் இருக்கும் மொபைல் ஃபோன் மூலம் உங்கள் சக மொபைல் பயனாளிகளுக்கு நீங்கள் அனுப்பும் சின்னச் சின்ன குறிப்புகள்தான் எஸ்.எம்.எஸ். (SMS). இது `சீக்கிரம் அந்த ஃபைலை அனுப்பு' என்பது முதல் `ஹாய் டியர், இன்னிக்கு ஈவினிங் மறக்காதே’ என்பது வரை என்ன மெசேஜாகவும் இருக்கலாம்.
ளஅள.யஉ மொபைல் ஃபோன் இல்லாதவர்களும் எஸ்.எம்.எஸ். அனுப்ப உதவுகிறது. இது மொபைல் பயனாளிகளுக்கான ஒரு டேட்டிங் சைட் மாதிரியும் இருக்கிறது. நீங்கள் லாக்-இன் செய்திருக்கும் நேரத்தில் எத்தனை பேர் மொபைல் ஃபோனை ஆன் செய்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டும்.
அவர்கள் எந்த ஊர்க்காரர்கள், அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்கிற மாதிரி எக்ஸ்ட்ரா தகவல்களைத் தரும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களை ஃப்ரெண்டு பிடித்துக் கொள்ளலாம்.
நீங்கள் மொபைல் ஃபோன் வைத்திருந்தால் உங்கள் நம்பரைக் கொடுத்து வைக்கலாம். உங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை ஃபோனிலும் பார்க்கலாம், இன்பாக்ஸிலும் பார்க்கலாம்.
நன்றி - Webulagam.Com
|
|
|
| உருக்கொள்ளும் சிங்கள பேரினவாதப் பூதம்... |
|
Posted by: kuruvikal - 01-20-2004, 02:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (20)
|
 |
தூய சிங்கள பேரினவாதக் காட்சியான ஜனதா விமுக்தி பெரமுன...ஜே வி பி யும்....பேரினவாதத்தின் இடது கரமான சிறிலங்கா நிதாஸ் பக்ஷய...சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து சோர்ந்து கிடந்த சிங்கள பேரினவாத பூதத்திற்கு தெம்புகொடுக்க... அண்டை நாடொன்று கொறிலிக்ஸ் கரைத்துக் கொடுத்து உசுப்பி விடப்போகிறது.....
இதற்கிடையில் பூதத்தின் எழுச்சியை ஊரேல்லாம் பறைதட்டி கொண்டாட வெளிக்கிட்டு அது கைக்குண்டு வெடிப்பில முடிந்து.... இரண்டு பேர் இறந்து போய்விட்டார்கள்....அதுவும் புத்தளத்தில...அங்க ஏற்கனவே பிறையும் பச்சையும் நீலமும் என்று சண்டை அதுக்க பத்தாக் குறைக்கு சிவப்பும் சேந்திருக்கு....எங்க போய் முடியுமே...பூதம் முழு இலங்கையையும் அழிக்குமோ..அல்லது...தமிழனைத்தான் விழுங்குமோ.....??????????!
அட பொடியள் எதுக்கும் ரயர் கொழுத்த முதல் வெடி கொழுத்தத் தயார இருக்க வேணும்....வெடி கொழுத்த முதல் சுத்துமுத்தும் பாத்துக் கொழுத்த வேணும்...பிறகு பூதம் கழுகு காகம் என்று எல்லாத்தையும் கூட்டிக் கொண்டு வந்து எங்களை வச்சு விருந்து போட்டு தானும் திண்டு மகிழ்ந்து ஏப்பம் விடும்.....அதுக்குத்தான் இப்ப உருக்கொடுத்து விட்டிருக்கு.....அங்கால சோனியமான அம்மா ஒரு பக்கம்.... நடுவில ஜெயாக் கிழவி.... இங்க சந்திரமான கிழவி பேரினவாதத்திற்கு சிங்குசா போட அது நர்த்தனம் ஆடப் போகுது.....!
--------------------------------
New alliance against Tamil Tigers
Sri Lankan President Chandrika Kumaratunga's party has formed an alliance designed to stop Tamil Tiger rebels forming a separate state.
The alliance is with former leftist revolutionaries, the JVP, who oppose any devolution of power to the Tigers.
--------
On Monday the Tigers warned that Sri Lanka's ceasefire was under threat because of a power struggle between the president and prime minister.
bbc.com
----------
<img src='http://us.news1.yimg.com/us.yimg.com/p/rids/20040120/i/r1439997453.jpg' border='0' alt='user posted image'>
பேரினவாத பூதத்திற்கு உருக்கொடுக்கும் காட்சி.
yahoo.com
----------
|
|
|
| யாழ் இணையம் Vs Windows 98 கணணிகள் |
|
Posted by: Guest - 01-20-2004, 11:39 AM - Forum: அறிமுகம்
- Replies (2)
|
 |
யாழ் இணையத்தை Windows 98கணணிகளில் படிக்கமுடியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள் (எனது கணணி Windows XP). யாராவது உதவி செய்ய முடியுமா? நன்றி
|
|
|
| சூனியக்காரக் கிழவிகள் தந்திரம் பலிக்குமா...?! |
|
Posted by: kuruvikal - 01-19-2004, 12:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
[b]இலங்கை இடைக்கால நிர்வாகம்: ஜெயாவின் வழக்கறிஞருடன் சந்திரிகா ஆலோசனை
விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள இடைக்கால நிர்வாக ஆணையம் குறித்து இலங்கை அதிபர் சந்திரிகா, பிரபல இந்திய வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ராணுவத் துறையை சந்திரிகா தன்வசம் வைத்துக் கொண்டதையைடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தையை அவரே மேற்கொள்ளட்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இந் நிலையில் சந்திரிகா, விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ள இடைக்கால நிர்வாக ஆணையம் அமைக்கும் திட்டம் குறித்து அரசியல் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை செய்துள்ளார். இதில் இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும், டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் ஆஜராகி வெற்றி தேடித் தந்தவருமான கே.கே.வேணுகோபால் கலந்து கொண்டார்.
இலங்கையின் ஒருமைப்பாட்டுக்குப் பாதகம் நேராத வகையில் இத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து இக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இத் திட்டத்தை விடுதலைப் புலிகள் முன்வைத்தபோது, இது தனி நாட்டுக்கான முன்னோடித் திட்டம் என்று சந்திரிகா குறை கூறியது குறிப்பிடத்தக்கது.
-----------
Thatstamil.com
|
|
|
| நமக்கு வேண்டியது சமத்துவமா? சுதந்திரமா? |
|
Posted by: கெளஷிகன் - 01-19-2004, 09:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (10)
|
 |
<b>நமக்கு வேண்டியது சமத்துவமா? சுதந்திரமா?
இன்று நடந்து கொண்டிருப்பதில் எது நியாயம் எது அநியாயம் என்று முடிவெடுக்க முடியாது போனாலும் முன்வைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. என் கண்ணோட்டத்தில் சுதந்திரம் நியாயம் அடிமைத்தனம் அநியாயம்
ஒரு குழுவினரோ அல்லது வர்கத்தினரோ இன்னொரு குழு அல்லது வர்க்கத்தின் மீது அடிமைத்தனத்தைத் திணிப்பது அநீதியான செயல். அவர்கள் பக்கம் சில நல்லவர்களும் இருக்கலாம் ஆனால் எல்லா நல்லவர்களுக்குமே தெளிவும் தீர்க்கதரிசனமும் இருக்குமென்று சொல்லிவிட முடியாது. பல சமயம் அவர்கள் குழம்பிப் போனவர்களாக இருக்கிறார்கள். என்ன செய்கிறோமென்று தெரியாமலேயே அவர்கள் அநியாயத்துக்குத் துணை போகின்றார்கள்.
சுதந்திரம் உச்சபட்சமான, மிக மிக முக்கியமான, கட்டாயமாக முடிவெடுக்கப்படவேண்டிய பிரச்சனையாக இன்று நிற்கிறது. சுதந்திரம் வளர்ந்து பூத்துக் குலுங்கும் ஒரு சமுதாயம், ஒரு தேசம் நமக்கு வேண்டும.; மனித சுதந்திரத்தைப் பறித்து அவனைப் படுகுழியில் பக்குவமாய் தள்ளுகின்ற சமுதாயம் நமக்கு வேண்டாம.; இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள அனைவரும் முயற்சிக்க வேண்டும்.
அடிமைத் தனத்தை மற்றவர்கள் மீது சுமத்;துபவர்கள் ஒருபோதும் ''அடிமைத்தனம்"" என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை. அது நாறும் சொல். அது விலக்கப்பட வேண்டிய, வெறுக்கத்தக்க சொல்.; அடிமைப் படுகின்றவர்கள் உணர்ந்து கொள்ளாமலேயே அடிமைப்படுவதற்கு அவர்கள் ஒரு சொல்லைக் கண்டு பிடிப்பார்கள் ''சமத்துவம்"" என்பது தான் அந்தச்சொல.;;முழக்கம்.
இந்தச்சொல் தந்திரமானது. வஞ்சகமானது. இவர்கள் சுதந்திரப்பாதையிலிருந்து, மெல்லத் தந்திரமாக, நம்மை சமத்துவப் பாதைக்கு விலக்கி அழைத்துச் செல்கிறார்கள். மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை நிலைநாட்டத் தாங்கள் நிற்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
''சமத்துவம் தான் அடிப்படையானது, சமத்துவமில்லாமல் சுதந்திரம் சாத்தியமில்லை"" என்று அவர்கள் சொல்கிறார்கள். பலருக்கு இந்த வாதம் சரியென்று தான் படுகிறது. அதை அவர்கள் நம்பத் தொடங்குகின்றார்கள் . இதன் காரணமாக அவர்கள் சமத்துவத்திற்காக சுதந்திரத்தை இழக்கவும் தயாராகி விடுகிறார்கள்
சமத்துவம் நிலவினாற்தான் சுதந்திரம் கிடைக்கும்,வரப்போகும் சமத்துவத்திற்காக சுதந்திரத்தைத் தியாகம் செய்யலாம் என்ற வாதம் வினோதம் ஆனாது உண்மை நிலை என்னவென்றால் ஒரு முறை சுதந்திரத்தை இழந்துவிட்டால் அதை திரும்பப் பெறுவது முடியாத காரியம்.
யாருக்காவது தலை பெரிதாக இருக்கலாம் காலோ கையோ நீளமாக இருக்கலாம். அதை மற்றவர்கள் அளவுக்கு வெட்டிச் சமப்படுத்த வேண்டும். இந்த வேதனையான அறுவையைச் செய்யவேண்டுமானயல் உன் சுதந்திரத்தைப் பறித்துக் கொள்ள வேண்டி நேர்கின்றது. இது தர்க்க பூர்வமாகத்தான் தெரிகிறது.
ஆனால் எல்லோரையும் சமப்படுத்துகின்றவன் தான் மட்டும வெளியே, இவர்களுக்குச் சமமாக இல்லாமல் தனித்து நின்று விடுகின்றான் அவனுக்கு கைவிலங்கோ கால்விலங்கோ இல்லை இப்போது அவன் கையில் ஆயுதம் வேறு இருக்கிறது.
இப்போது கற்பனை செய்து பாருங்கள் அனேகமானோர் கைவிலங்கும் கால்விலங்கும் பூட்டப்பட்டு அடித்து முடிமாக்கப்பட்டு இருக்க சிலர் மட்டும் சுதந்திரமாக, சகல சக்தியும் பெற்று சொன்னவுடன் பிரயோகம் செய்ய சகல நவீன கருவிகளும் தயார் நிலையில் இருந்தால் அந்த சமுதாயம் எப்படிஇருக்கும் ? அந்த சூழலில் நீங்களும் என்னதான் செய்து விட முடியும்.
இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும் சுதந்திரம் என்பது இயல்பானதொரு சிறப்பம்சம் ஒவ்வொருவருக்கும் அதை அடைய உரிமையுண்டு. ஆனால் சமத்துவம் அப்படி இயல்பானதுமல்ல. சாத்தியமுமல்ல சமத்துவம் என்ற கருத்தே உளவியலுக்கு எதிரானது . எல்லா மனிதர்களும் சமமாக முடியாhது அவர்கள் சமாமகவும் இருக்கவில்லை அடிப்படையில் அவர்கள் சுதந்திரம் மிகத் தேவையான ஒன்று தான் தானாக இருக்கவும் தான் எப்படி ஆக வேண்டுமோ அப்படியே ஆகவும் ஒவ்வொருவருக்கும் சுதந்திரம்வேண்டும். தான் தானாக இருக்கும் வாய்ப்பைப் பெற ஒவ்வொருவருக்கும் பரிபூரண சுகந்திரம் வேண்டும்.
சுதந்திரம் இருந்தால் சமத்துவத்துவமின்மை மறைந்துவிடும் சுதந்திரத்துடன் சமத்துவம் வரும் என்று கூறவில்லை ஆனால் சமத்துவமின்மை குறைந்துவிடும் சமத்துவம் மக்கள் மீது திணிக்கப்பட்டால் சுதந்திரம் மெல்ல மங்கி மறைந்து விட நேரிடும் திணிக்கப்படுகின்ற எதுவும்மே அடிமைத்தனத்திற்கு சமமானது.
அடிப்படையில் இது நாம் மதிப்பிடுகளைத் தேர்ந்தேடுப்பதில் உள்ளது.என பார்வையில் தனி மணிதம் மிக உயர்ந்த மதிப்புடையவன் . ஆகவே தனிமனித சுதந்திரம் சிகரமானது. சுகந்திரமான தனி மனிதர்கள்தான் சமுதாயமாகின்றார்கள் தனி மனித சுதந்திரம் மறுக்கப்படும் பட்சத்தில் அங்கே வெறுப்பும் காய்மமும் உருவாகும் . தனி மனித சுதந்திரம் கிடைக்கும் வரை அது தொடர்ந்த கொண்டே போகும் சுதந்திரம், தனிமனதன், ஆன்மா, சமயம் ஆகியவை தாம் வாழ்வின் மதிப்பீடுகள். இந்த மதிப்பீடுகளை உணர்ந்து கொள்வோமாகில் ஒன்றுபட்;;;ட தேசம் வெகு தொலைவிலில்லை.
ஒஷோவின் சிந்தனைகளில் இருந்து.............கெளஷிகன்</b>
|
|
|
|