![]() |
|
மணிவண்ணனின் புதிய படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: மணிவண்ணனின் புதிய படம் (/showthread.php?tid=7577) |
மணிவண்ணனின் புதிய படம - anpagam - 01-20-2004 மணிவண்ணனின் புதிய படம் மண்டை தீவில் படப்பிடிப்பு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மண்டைதீவுப் பகுதியில் இடம்பெறவுள்ளது. இலங்கை வந்துள்ள மணிவண்ணன் கொழும்பில் நேற்று இத்தக வலை வெளியிட்டார். மணிவண்ணனின் அடுத்த திரைப்படம் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு - மண்டைதீவில் எடுக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தில் ஷஅலை பாயுதே| மூலம் அறிமுகமான தென்னிந்திய திரை நட்சத்திரம் மாதவன் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். கதாநாயகி தேர்வு இன்னும் முடியவில்லை. படத்தின் முக்கியபாத்திரமான வயதான தாத்தா வேடத்திற்கு யாழ். கலைஞர் ஒருவரே தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். 80களில் இலங்கையில் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையால் யாழ்ப் பாணத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்லும் ஒன்றரை வயதுள்ள சிறுமி வளர்ந்து பெரியவளான பின்னர் தாயகத்திற்குத் திரும்புகிறாள். அவளது அந்த மீள் பிரவேசத்தில் ஒரு தேடல் இழையோடுவதே முக்கிய கதை. அவளது தாய்மண்ணுக்கும் அவளுக்கும் இடையிலான உறவை மனித வாழ்க்கைக்கே உரிய யதார்த்தமான உணர்ச்சிகளால் வடிப்பதே இப்படத் தின் கதை. இவற்றுக்குத் தேவையான உப நடிகர்கள் குழாம், கதையம்சத்துக்குத் தேவையான காட்சிச் சூழல், படப்பிடிப்புக்கான தொழில் நுட்ப உதவி களின் சாதகத்தன்மை, கதையின் பின்னணியில், தெரிந்திருக்கவேண்டிய மண்ணின் வரலாறு ஆகியவை குறித் துத் தெரிந்து தேர்ந்து கொள்வதற்கே மணிவண்ணன் இப்போது இங்கு வந்திருக்கிறார். இதுகுறித்து மணிவண்ணன் கூறு கையில்:- இந்தப் படத்தில் கதையின் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடிய வாறு யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கே கூடுதல் முக்கியத்துவம் வழங்க நான் எண்ணியுள்ளேன். படத்தில் செயற் கைத்தனத்தை திணிக்க நான் விரும்ப வில்லை. இயல்பான நடிப்பையே நான் விரும்புகிறேன்.- என்று கூறினார். ஈழத்தமிழர்கள் தொடர்பாகவும் அவர்களது போராட்டம் தொடர்பாக வும் தற்போது தமிழகத்தில் அரசி யல் அதிகார நிலையில் நிலவும் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் உங்க ளது இந்த முயற்சி எவ்வளவு து}ரம் வெற்றியளிக்கும்?||- என்று கேட்ட தற்கு- மனிதனின் வாழ்க்கையின் படி நிலைகளில் அவ்வப்போது வந்து போகும் உணர்ச்சிகளுக்கு உருவம் கொடுக்கப்போகிறேனே தவிர, அரசி யல் பேசி எனது படத்தின் மூலம் பிர சாரப்பணியாற்றப் போவதில்லை. ஆகவே, இங்கு பயம் என்பதற்கு இட மில்லை||- என்றார் அவர். நன்றி : உதயன் நல்ல விசயம் ஆனால் எப்படி முடிகிறதோ பாப்பம்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> :? 8) good luck mani anna - anpagam - 01-20-2004 நடிகர் மணிவண்ணன் யாழ்ப்பாணம் வருகிறார் பிரபல தென்னிந்திய சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான மணிவண்ணன் எதிர்வரும் புதன்கிழமை யாழ்ப்பாணம் வருகிறார். யாழ்ப்பாணத்தில் காணப்படும் நிலைமைகளை நேரில் அறிந்து கொள்வதற்காகவும், துறைசார்ந்த கலைஞர்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் அவர் இங்கு வருகை தருகின்றார் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல உல்லாச விடுதி நிறுவனமான ரில்கோ ஹொலிடேய்ஸ் பிறை வேற் லிமிட்டெட் (Tilko Holidays (Pvt) Ltd) நிறுவனத்தின் ஏற்பாட் டில் அவர் இங்கு வருகை தருகின் றார். முன்னதாக நாளை செவ்வாய்க் கிழமை அவர் வன்னிப் பகுதிக்கு செல் கின்றார். அங்குள்ள நிலைமை களைப் பார்வையிட்ட பின்னர் அங் கிருந்து யாழ்ப்பாணம் வருகிறார். யாழ்ப்பாணத்தில் கலைஞர்களை யும். சினிமா கலைத்துறை சார்ந்தவர் களையும் மணிவண்ணன் சந்திப்பார். ஈழத்தமிழர்கள் தொடர்பான சரி யான பார்வையை தென்னிந்திய கலை ஞர்கள் மத்தியில் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே கலைஞர் மணிவண்ணனின் யாழ்ப்பாண விஜ யத்துக்கு ஏற்பாடுசெய்ய தாம் முன்வந்த தாக ரில்கோ ஹொலிடேய்ஸ் நிறு வனத்தின் முகாமைத்துவப் பணிப் பாளர் ரி. திலகராஜா தெரிவித்தார். நன்றி : உதயன் Re: மணிவண்ணனின் புதிய பட - Mathivathanan - 01-20-2004 <!--QuoteBegin-anpagam+-->QUOTE(anpagam)<!--QuoteEBegin-->மணிவண்ணனின் புதிய படம் மண்டை தீவில் படப்பிடிப்பு இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மண்டைதீவுப் பகுதியில் இடம்பெறவுள்ளது. இலங்கை வந்துள்ள மணிவண்ணன் கொழும்பில் நேற்று இத்தக வலை வெளியிட்டார். மணிவண்ணனின் அடுத்த திரைப்படம் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு - மண்டைதீவில் எடுக்கப்படவுள்ளது. <!--QuoteEnd--><!--QuoteEEnd-->அட ஏதோ மோசடி வழக்கிலை பணமில்லையெண்டு அரசாங்க சலுகைபெற போயிருந்தவர் எண்டு நீங்கள்தான் லிங்கு குடுத்தியள்.. இப்ப படம் எடுக்க மண்டைதீவுக்குப்போறார் எண்டால் என்னமாதிரியப்பா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 01-20-2004 நாங்கள் யாழ்களத்தில கன்னத்தில் முத்தமிட்டாள் தொடர்பில் செய்த விமர்சனங்கள் யாரையோ பாதிச்சிருக்குப் போல.... :wink:. வரவேற்கிறோம்... உளமார உற்சாகம் அளிக்கின்றோம் மணிவண்ணனின் முயற்சிகளுக்கு... இருப்பினும் முயற்சிகள் தடம் புரளாமல் இருத்தால் மட்டுமே எமது வரவேற்புகள் தொடரும்....அன்றில்.....????! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 01-20-2004 ம்.... பொருத்திருந்து பார்ப்போம் - tamilini - 02-27-2004 வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா? தெனாலியப்பார்த்து விட்டு நிறைய பேர் தமிழை கிண்டல் அடித்தார்கள். இதுவும் அப்படியா?. மணிவண்ணண் அப்படி பிழைவிடமாட்டார் என்று நம்புகிறேன். பொறுத்திருந்து பார்ப்போம். - Mathan - 02-27-2004 இன்னும் இலங்கை தமிழை சரியா காட்டுற இந்திய படங்கள் வரலை. தென்னாலி படத்துக்கு அப்புறம்தான் சிலபேருக்கு இலங்கை தமிழைய்ம் தமிழரையும் பத்தி தெரிஞ்சதுங்கிறது ரொம்ப வருத்தமான உண்மை. |