![]() |
|
Free SMS - இலவச குறுந்தகவல் சேவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: Free SMS - இலவச குறுந்தகவல் சேவை (/showthread.php?tid=7575) |
Free SMS - இலவச குறுந்தகவல் - Guest - 01-20-2004 வலை டு செல் இலவச எஸ்.எம்.எஸ். www.sms.ac எஸ்.எம்.எஸ். அனுப்பியிருக்கிறீர்களா? என்னிடம் செல்ஃபோன் இல்லையே என்கிறீர்களா? செல்ஃபோன் இல்லாத துரதிர்ஷ்டசாலிகளும் இந்தப் புதுமையான வெப்சைட் மூலம் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம், அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி. அதுவும் இலவசமாக. எஸ்.எம்.எஸ். என்றால் இன்னா என்று கேட்பவர்களுக்கு : உங்கள் கையில் இருக்கும் மொபைல் ஃபோன் மூலம் உங்கள் சக மொபைல் பயனாளிகளுக்கு நீங்கள் அனுப்பும் சின்னச் சின்ன குறிப்புகள்தான் எஸ்.எம்.எஸ். (SMS). இது `சீக்கிரம் அந்த ஃபைலை அனுப்பு' என்பது முதல் `ஹாய் டியர், இன்னிக்கு ஈவினிங் மறக்காதே’ என்பது வரை என்ன மெசேஜாகவும் இருக்கலாம். ளஅள.யஉ மொபைல் ஃபோன் இல்லாதவர்களும் எஸ்.எம்.எஸ். அனுப்ப உதவுகிறது. இது மொபைல் பயனாளிகளுக்கான ஒரு டேட்டிங் சைட் மாதிரியும் இருக்கிறது. நீங்கள் லாக்-இன் செய்திருக்கும் நேரத்தில் எத்தனை பேர் மொபைல் ஃபோனை ஆன் செய்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டும். அவர்கள் எந்த ஊர்க்காரர்கள், அவர்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்கிற மாதிரி எக்ஸ்ட்ரா தகவல்களைத் தரும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவர்களை ஃப்ரெண்டு பிடித்துக் கொள்ளலாம். நீங்கள் மொபைல் ஃபோன் வைத்திருந்தால் உங்கள் நம்பரைக் கொடுத்து வைக்கலாம். உங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை ஃபோனிலும் பார்க்கலாம், இன்பாக்ஸிலும் பார்க்கலாம். நன்றி - Webulagam.Com - anpagam - 01-21-2004 நல்ல செய்திதான் ஆனால் நாம் நம்பரை குடுக்க தேவை இல்லாத வில்லங்களும் வருகிதோ தெரியல்ல ... :roll: - Paranee - 01-21-2004 ம் அருமையான தகவல் ஆனாலும் நண்பா இதில் ஓரு நாளைக்கு 3 குறுந்தகவல்தான் அனுப்பலாம். அதற்கும மேலாக அனுப்பவேண்டுமாயின் பணப்பட்டுவாடா செய்யவேண்டுமே ! இதைவிட இலவசமான இன்னொன்று இருக்கின்றது. www.1rstwap.com பார்த்து பயன்பெறுங்கள் - shanmuhi - 01-21-2004 ஜேர்மனியில் இருப்போருக்கும் மட்டும் ஒருநாளைக்கு ஒன்று என்ற அடிப்படையில் ஒரு இலவச sms அனுப்பலாம். பதிவு செய்யதேவை இல்லை. http://www.5vor12.de/ - Guest - 01-22-2004 தகவலுக்கு நன்றிகள். இது (www.1rstwap.com) இலவசம்தானே? - shanmuhi - 01-22-2004 ஓம் இலவசம். கிழமைக்கு 10 sms இலவசமாக அனுப்பலாம். உலகின் எந்தபாகத்துக்கும் அனுப்பலாம். - Guest - 01-22-2004 நன்றி - தமிழன் - 08-16-2004 சொல்லாமல் கொள்ளாமல் காசை வெட்டுகிறார்கள்,கவனம். எனக்கு பெரும் நட்டம்தான் ஏற்பட்டது. - hari - 10-07-2004 இலங்கையில் இருக்கும் ஒருவருக்கு இலவசமாக sms அனுப்பwow.lk இலவச கையடக்க தொலைபேசி குறுந்தகவல்கள் - hari - 06-01-2005 http://sms.wow.lk/user/login.php இந்த இணையத்தின் ஊடாக இலங்கை கையடக்க தொலைபேசிகளுக்கு (dialog,celltel,mobitel) இலவசமாக குறுந்தகவல்களை அனுப்பலாம் . நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்! - ã÷ò¾¢ - 06-02-2005 http://www.indiasec.com/sms/ மேற்கண்ட தளத்தின் வழியாக இந்தியா உள்ளிட்ட இன்ன பல நாடுகளுக்கு சில குறிப்பிட்ட நிறுவங்களின் கைத்தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பலாம். இணையத்தில் இருந்து இலவசமாக தொலைபேச முன்னர் கிடைத்த babble.net போல வேறெதுவும் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே! கவிதன் தம்பி கவனிக்கவும்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kavithan - 06-02-2005 நன்றி - hari - 06-02-2005 நன்றி - samsan - 06-02-2005 திருமூர்த்தி நான் ஒரு URL போட்டிருக்கிறேன் போய் முயற்சிசெய்து பார்க்கவும். :wink: |