Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 386 online users.
» 0 Member(s) | 383 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,281
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,226
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,603
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,465
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237

 
  மைக்ரோஸாப்ட் - விடலை விளையாட்டு
Posted by: Guest - 01-28-2004, 03:38 PM - Forum: இணையம் - No Replies

[b]மைக்ரோஸாப்ட் - விடலை விளையாட்டு
கேட்பதற்குச் சிரிப்பை வரவழைக்கக் கூடும். ஆனால் இது பகடி இல்லை; நடந்திருக்கிறது. வான்கூவர், கனடாவில் வசிக்கும் மைக் ரோ (Mike Rowe) என்னும் பதினேழு வயதுச் சிறுவனை உலகின் மாபெரும் நிறுவனமான மைக்ரோஸாப்ட் நீதிமன்றத்திற்கு அழைத்திருக்கிறது.

காரணம். அவனுடைய பெயரில் அவனாகவே வடிவமைத்துக் கொண்ட (MikeRoweSoft.com) என்னும் இணைய தளம்.

microsoft.com என்னும் தங்களுடைய முதன்மை இணைய தளத்தின் உச்சரிப்பையட்டி இது அமைந்திருப்பதாகவும் இதனால் தங்களுடைய வாடிக்கையாளர்கள் குழம்பிப் போகக்கூடும் என்றும் மைக்ரோஸாப்டின் கனேடிய வழக்கறிஞர்கள் சிறுவனுக்கு அனுப்பிய நீதிமன்ற அழைப்பில் சுட்டியிருக்கிறார்கள். நடந்தது இதுதான்;

கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த மைக் ரோ-வுக்கு ஒரு எண்ணம் உதித்தது. உலகின் மாபெரும் கணினி நிறுவனத்தை ஒத்த பெயர் தனக்கு இருப்பதால் அந்தப் பெயரை ஒட்டிய (தன்னுடைய பெயரில்) ஒரு இணையதளம் அமைத்துக் கொள்வது தன்னுடைய பள்ளி நண்பர்களிடையேயும், அடுத்தவருடம் சேரப்போகும் பல்கலைக்கழகத்திலும் தன்னைப் பிரபலப்படுத்தும் என்று அவனுக்குத் தோன்றியது. அப்படியே செய்தான். பிறகு ஒரு நாள் அவனுக்கு கனேடிய வழக்கறிஞர்களிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவனுடைய இணையதளம் மைக்ரோஸாப்ட்டின் நலனுக்குப் பாதகம் விளைவிப்பதாகவும், அதனால் அவன் அதைக் கைவிட வேண்டுமென்றும் சுட்டியிருந்தார்கள். மைக்கிற்கு அதில் நம்பிக்கை இல்லை. எனவே, முடியாது என்று சொல்லிவிட்டான். அவர்களிடமிருந்து சில நாட்களில் இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதில் அந்த இணைய தளத்தை அமைக்க அவனுக்கு ஆன செலவெல்லாம் திருப்பியளிப்பதாகவும், அந்தத் தளத்தை மைக்ரோஸாப்டிடம் கையளிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தார்கள்.

மைக்கிறகுச் சிரிப்பு வந்தது. அதற்கு அவன் ஒத்துக் கொண்டால் அவனுக்குப் பத்து டாலர்கள் மைக்ரோஸாப்டிடமிருந்து கிடைக்கும். தான் அந்த தளத்தில் தகவல்களைச் சேர்க்க நிறைய நேரம் செலவிட்டிருப்பதாகவும், பத்து டாலர்கள் அதற்குப் போதாது, பத்தாயிரம் டாலர்கள் கொடுத்தால் தரமுடியும் என்றும் சொல்லிவிட்டான். தவறு இங்கேதான்.

நீண்ட நாட்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. ஜனவரி பதினான்காம் தினத்தன்று அவனுக்கு ஒரு மாபெரும் வழக்கு அறிவிப்பு வந்தது. அதில் மைக்ரோ(வ்)சாப்ட் என்று வேண்டுமென்றே உச்சரிப்பு ஒப்புமை உள்ள தளத்தைப் பதிவு செய்து, அதன் மூலம் தங்களது கட்சிகாரருக்குத் (மைக்ரோஸாப்ட் நிறுவனத்துக்கு) தொல்லை கொடுக்க முயன்றதாகவும், பின்னர் அதை இலாபத்திற்கு விற்க முயன்றதாகவும் அவன்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. தன்னையறியாமலேயே மைக் என்னும் சிறுவன், வழக்கறிஞர்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டான்.

அமெரிக்க வர்த்தச் சின்னங்கள் மற்றும் நிறுவனக் காப்புரிமைகள் சட்டப்படி, ஒரு இணையதளத்தை வேண்டுமென்றே இலாப நோக்கம் கருதிப் பிடித்து வைத்துக்கொண்டு விற்பனை செய்வது குற்றம். (புள்ளிவணி குமிழ் உடையாமல் பருத்துக் கொண்டிருந்த நாட்களில் பிரபலங்களின் பெயரிலும், அவர்கள் பெயரையட்டியும் இணைய தளங்களின் உரிமையைத் தங்கள் பெயரில் பதிவு செய்து வைத்துக்கொண்டு பின்னர் அவற்றை அதிக விலைக்கு விற்று பணக்காரர்கள் ஆனவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். இவர்களுக்கு வலைக்குந்துவோர் (cybersquatters) என்று பெயர்). பிரபலங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க சில விதிகள் ஏற்படுத்தப்பட்டன). பத்தாயிரம் டாலர்கள் கொடுத்தால் தன்னுடைய தளத்தின் உரிமையை விட்டுக் கொடுப்பதாக மைக் சொன்னது இந்தச் சட்டத்தின்படி குற்றம் என்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உதாரணமாக ஒரு தளத்தை நீங்கள் முப்பது டாலர்கள் கொடுத்து உங்கள் பெயரில் பதிவு செய்திருக்கிறீர்கள். அதில் கிட்டத்தட்ட நூறு மணி நேர சுயஉழைப்பைச் செலவிட்டு தகவல்களை ஏற்றியிருக்கிறீர்கள். ஒருவர் வலிய வந்து அவராகவே உங்களுக்கு முப்பது டாலர்கள் கொடுத்துப் பெற முயற்சித்தாலும், நீங்கள் ஐம்பது டாலர்கள் கொடுங்கள் (உங்கள் நூறு மணிநேர உழைப்பும் அதில் அடக்கம்), அதைப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அது சட்டப்படி குற்றம்.

இப்பொழுது மைக் நினைத்தால்கூட ஒன்றும் செய்யமுடியாது. இது வலைத்தளப் பெயர்களைப் பதிவு செய்யும் உலக அறிவுச்சொத்துரிமை கழகத்தின் (WITO, World Intellectual Propery Organization) தீர்ப்பில் விடப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் வெற்றி பெறும் சாத்தியங்கள் மைக்ரோஸாப்ட்டுக்கு மிகவும் குறைவு. முக்கிய காரணம் ஒலியப்புமை வாதம் எடுபடாது. அந்தச் சிறுவனின் பெயர் மைக் ரோ-வாக இல்லாமல் வேறாக இருந்து அவன் இந்தப் பெயரில் பதிவு செய்திருந்தால் அது ஒருக்கால் ஒத்துக் கொள்ளப்படலாம். அது அவனுடைய உண்மையான பெயர். எனவே, இது நிற்கும் சாத்தியங்கள் குறைவு.

O
கனேடிய விதிகளின்படி பதினேழு வயதுச் சிறுவனுக்குப் பணத்தாசை காட்ட முயன்றதாக வழக்கறிஞர்கள் மீதும் மைக்ரோஸாப்ட்டின் மீதும் எதிர்வழக்கு தொடுக்கச் சாத்தியங்கள் இருக்கின்றன. அவனுக்கு அனுதாபம் காட்டியிருக்கும் பலர், அவனுக்கு உளவியல் ரீதியான இழப்புகளைச் சுட்டி மறுவழக்கு தொடுக்கச் சொல்லுகிறார்கள். சிலர் அவனுக்குப் பண உதவியும் செய்திருக்கிறார்கள்.

இது போன்ற வலைத்தளப் பெயர் வழக்குகள் நிறைய இருக்கின்றன. பிரபலங்களின் பெயர்களைக் கொண்டவர்கள் தங்கள் பெயரில் தளங்களை அமைத்துக் கொள்வது சிக்கலாகி இருக்கிறது. உதாரணமாக Michelle Jackson என்ற பெயரைக் கொண்ட பெண் ஒருத்தியால் அவளுடைய பெயரில் தளம் அமைத்துக் கொள்வது சுலபமில்லை. அது மைக்கேல் ஜாக்ஸன் பெயரை ஒட்டியிருப்பதாகத் தடை செய்யச் சொல்லி வழக்கு தொடுப்பார்கள்.

இத்தகைய வழக்குகளை மிகவும் கீழ்த்தரமான ஒரு புதிய தளத்திற்கு மைக்ரோஸாப்ட் என்னும் மாபெரும் நிறுவனம் எடுத்துச் சென்றிருக்கிறது. பல சிறு நிறுவனங்களைத் தன்னுடைய பணபலத்தால் சிதைத்த மைக்ரோஸாப்ட், தனி நபர் தன்னுடைய பெயரின்மீது கொண்டாடும் உரிமைகளையும் சிதைக்க முயற்சி செய்கிறது.

நன்றி - Venkat Pvt Website

Print this item

  விஜய்யை நேரடியாக தாக்கிய அஜீத்!
Posted by: Guest - 01-28-2004, 10:56 AM - Forum: சினிமா - Replies (1)

ஒருபக்கம் தனுஷ¨ம், சிம்புவும் மறைமுகமாக மோதிக் கொள்கிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் அஜீத்தும் விஜய்யும் நேரடியாகவே மோதி வருகிறார்கள்.

என்றைக்கு காதல் கோட்டையும், காதலுக்கு மரியாதையும் ஹிட்டாகி அஜீத்தையும், விஜய்யையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதோ அன்றே இருவருக்குமிடையே பகைமை வளர்ந்துவிட்டது.


இன்று அடுத்த தலைமுறை வளர்ந்துவிட்ட நிலையிலும் அஜீத்-விஜய் இருவரும் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முட்டி மோதிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.


புதியகீதை படத்தில் "யார்டா உன் தல" என விஜய் பேசிய வசனம் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாய் இருந்திருக்கலாம். ஆனால் அஜீத் அதை இன்னமும் மறப்பதாக இல்லை.


"படத்திற்கு சம்பந்தமில்லாமல் "யார்டா உன் தல" என்கிறார் ஒரு நடிகர். பதிலுக்கு நானும் பேசினால் இரு ரசிகர்களிடையே வெட்டுகுத்து தான் நடக்கும். அதை நான் விரும்பவில்லை" என இப்பொழுதும் விஜய் மீது வருத்தமாக இருக்கிறார் அஜீத்.


இனிமேலும் இது மாதிரியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் நானும் என் படத்தின் காட்சிகள் மூலமாக பதிலடி கொடுக்கத் தயார் என்றும் உஷ்ணமாகியிருக்கிறார் அஜீத்.


கோபத்தை ஆறப்போடு தல!

Thanx: Cine South

Print this item

  சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தான
Posted by: Chandravathanaa - 01-28-2004, 09:30 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (40)

[url=http://vippenn.blogspot.com/2004_01_28_vippenn_archive.html][b]சேவல்கள் குரல் கொடுக்கலாம்... ஆனால் முட்டையிடுவது கோழிகள்தானே!
-மார்க்கிரெட் தாட்சர்

Print this item

  தமிழர்களின் குரலா உதயன்?
Posted by: கெளஷிகன் - 01-28-2004, 09:13 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (23)

Print this item

  வணக்கம்
Posted by: Eelavan - 01-28-2004, 09:10 AM - Forum: அறிமுகம் - Replies (15)

யாழ் இணைய அன்பர்களுக்கு இனிய வணக்கங்கள்.இத்தளத்தின் நீண்ட நாள் வாசகனாக இருந்த எனக்கு கருத்துக்களத்தில் எனது கருத்துகளையும் தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது நன்றி.

!வாழ்க தமிழ் வளர்க எம் தாய்த்திருநாடு!

Print this item

  செவ்வாயில்.....
Posted by: சாமி - 01-27-2004, 09:47 PM - Forum: பொழுதுபோக்கு - No Replies

செவ்வாயில்.....

Print this item

  டென்மார்க் அலைகள் மூவீஸ் வழங்கும் புூக்கள்!
Posted by: AJeevan - 01-27-2004, 09:06 PM - Forum: குறும்படங்கள் - Replies (8)

<span style='font-size:25pt;line-height:100%'>டென்மார்க் அலைகள் மூவீஸ் வழங்கும்</span>
<span style='font-size:27pt;line-height:100%'>புூக்கள்! </span>
<img src='http://artsiberia.org/img/big/bazarov-flowers.jpg' border='0' alt='user posted image'>

[size=15]டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் புூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார்.

சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் புூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது.

பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள்.

மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் புூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும்.

தகவல்:கீ.பீ.அரவிந்தன்

Print this item

  டென்மார்க் அலைகள் மூவீஸ் பூக்கள் !
Posted by: yarlmohan - 01-27-2004, 08:19 PM - Forum: சினிமா - Replies (6)

டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் பூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார்.

சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது.

பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள்.

மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் பூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும்.


http://www.tamilnet.dk/pookkal

Print this item

  புதிர் படம்
Posted by: vasisutha - 01-27-2004, 01:09 AM - Forum: பொழுதுபோக்கு - Replies (8)

இங்கே இருக்கும் படத்தில் எத்தனை முகங்கள் உங்களுக்கு தெரிகின்றன?

Print this item

  சிந்தியுங்கள் சகோதரர்களே!
Posted by: vasisutha - 01-27-2004, 12:51 AM - Forum: புலம் - Replies (1)

சிந்தியுங்கள் சகோதரர்களே!

இங்கு தரமான குளிர்பானங்கள்
பல இருக்கின்றன, ஆனால் எங்கள் மக்கள்
ஏன் நெக்டோ, ஒரேஞ் பார்லி போன்ற
சோடாக்களை விரும்புகின்றனர்? :?: Idea

Print this item