![]() |
|
டென்மார்க் அலைகள் மூவீஸ் வழங்கும் புூக்கள்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: டென்மார்க் அலைகள் மூவீஸ் வழங்கும் புூக்கள்! (/showthread.php?tid=7558) |
டென்மார்க் அலைகள் மூவ - AJeevan - 01-27-2004 <span style='font-size:25pt;line-height:100%'>டென்மார்க் அலைகள் மூவீஸ் வழங்கும்</span> <span style='font-size:27pt;line-height:100%'>புூக்கள்! </span> <img src='http://artsiberia.org/img/big/bazarov-flowers.jpg' border='0' alt='user posted image'> [size=15]டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் புூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார். சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் புூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது. பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள். மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் புூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும். தகவல்:கீ.பீ.அரவிந்தன் - shanmuhi - 01-27-2004 தகவல்களுக்கு நன்றிகள்.. டென்மார்க் அலைகள் அங்கு... வீசியதால்தான் இவ்வளவுநாளும் அஜீவனைக் காண முடிய வில்லையோ...? - Mathivathanan - 01-27-2004 shanmuhi Wrote:தகவல்களுக்கு நன்றிகள்..இந்தத் தினமலர் ஏஜன்ற் சாமியையும் அலை அடிச்சுக் கொண்டுபோய் இப்பத்தான் திரும்ப வந்திருக்கிறார்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 01-27-2004 நீங்களும் தானே.. சிலசமயம் மாயமாய் மறைந்து மறைந்து போய் வருகிறீர்களே ? ? ? - Mathivathanan - 01-27-2004 shanmuhi Wrote:நீங்களும் தானே.. சிலசமயம் மாயமாய் மறைந்து மறைந்து போய் வருகிறீர்களே ? ? ?மாயமாய் மறைந்து மறைந்து போய் வரவில்லை.. மறைக்கப்பட்டேன்.. அதுதான் உண்மை.. சிலவேளை நாளையும் திரும்ப மறைக்கப்படலாம்.. அது மோகன் கள நிர்வாகத்தின் விருப்பம்.. சம்பளமில்லா உத்தியோகம்தானே.. வோர்ணிங் தந்தாலென்ன.. மறைக்கப்பட்டாலென்ன.. எனக்கொண்டும் பிரச்சனையில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Paranee - 01-28-2004 வாழ்த்துக்கள் புூக்கள் வாசத்துடன் இருக்கட்டும் அலைகள் என்றென்றும் அடித்துக்கொண்டேயிருக்கட்டும் தகவலிற்கு நன்றி அஜீவன் அண்ணா - AJeevan - 01-28-2004 அனைவருக்கும் நன்றிகள். வேலைகள் இருந்தால் கொஞ்சம் அமைதி போல் தெரியும்.ஆனால் மறுபுறத்தில் பழு அதிகமாகியிருக்கும்.மன்னிக்கவும். [size=16]நமது கலைஞர்களது படைப்புகள் வெற்றி பெறவும் இது போன்ற முயற்சிகள் உலகெங்கும் தொடரவும் வாழ்த்துவோம். <img src='http://www.tamilan.dk/alai-pokkal/kannan1-1.jpg' border='0' alt='user posted image'> http://www.tamilnet.dk/pookkal/ வாழ்த்துகளுடன் அஜீவன் - anpagam - 01-28-2004 நய்நா கண்டுகனகாலம்..... விசாரிப்பம் எண்டுபார்த்தன் வந்துட்டையள்... வேற... :wink: :| - Mathan - 01-29-2004 நல்ல முயற்சி. ஆனால் தெகிவளை கொன்கோட் தியேட்டர்ல போடுவிங்களா பொஸ்? |