01-28-2004, 10:56 AM
ஒருபக்கம் தனுஷ¨ம், சிம்புவும் மறைமுகமாக மோதிக் கொள்கிறார்கள் என்றால் இன்னொரு பக்கம் அஜீத்தும் விஜய்யும் நேரடியாகவே மோதி வருகிறார்கள்.
என்றைக்கு காதல் கோட்டையும், காதலுக்கு மரியாதையும் ஹிட்டாகி அஜீத்தையும், விஜய்யையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதோ அன்றே இருவருக்குமிடையே பகைமை வளர்ந்துவிட்டது.
இன்று அடுத்த தலைமுறை வளர்ந்துவிட்ட நிலையிலும் அஜீத்-விஜய் இருவரும் சமயம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முட்டி மோதிக் கொள்வது வழக்கமாகிவிட்டது.
புதியகீதை படத்தில் "யார்டா உன் தல" என விஜய் பேசிய வசனம் தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் கொண்டாட்டமாய் இருந்திருக்கலாம். ஆனால் அஜீத் அதை இன்னமும் மறப்பதாக இல்லை.
"படத்திற்கு சம்பந்தமில்லாமல் "யார்டா உன் தல" என்கிறார் ஒரு நடிகர். பதிலுக்கு நானும் பேசினால் இரு ரசிகர்களிடையே வெட்டுகுத்து தான் நடக்கும். அதை நான் விரும்பவில்லை" என இப்பொழுதும் விஜய் மீது வருத்தமாக இருக்கிறார் அஜீத்.
இனிமேலும் இது மாதிரியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் நானும் என் படத்தின் காட்சிகள் மூலமாக பதிலடி கொடுக்கத் தயார் என்றும் உஷ்ணமாகியிருக்கிறார் அஜீத்.
கோபத்தை ஆறப்போடு தல!
Thanx: Cine South