![]() |
|
டென்மார்க் அலைகள் மூவீஸ் பூக்கள் ! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: டென்மார்க் அலைகள் மூவீஸ் பூக்கள் ! (/showthread.php?tid=7559) |
டென்மார்க் அலைகள் மூவ - yarlmohan - 01-27-2004 டென்மார்க்கில் வாழ்ந்தும் தமிழ் கலைஞர்களால் பூக்கள் என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக டேனிஸ் மக்கள் மத்தியிலும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் வாழ்ந்து கலைப்பணியாற்றும் கலைஞர்களின் படைப்பு இதுவாகும். உலக நாடக விழாக்கள் உள்ளிட சர்வதேச நாடக அரங்குகளில் பங்கேற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர், கணினி கலைஞர்கள் இணைந்து பணியாற்றுகிறார்கள். இதன் கதை திரைக்கதை இயக்கம் ஆகிய பணிகளை கி.செ.துரை ஏற்றுள்ளார். இவர் 100 மேடை நாடகங்களை மேடையேற்றிய அனுபவமுடையவர். அமெரிக்கா முதல் ஜப்பான் வரை உலகின் பல மொழிகள் அடங்கிய நாடகக் கலைஞர்கள் பங்கேற்ற உலக நாடக விழாவில் வெற்றிபெற்ற யாத்திரை என்ற நாடகத்தை தயாரித்தவர். அத்துடன் பல நாவல்கள், இசைப்பேழைகள், இணையப்பக்க உருவாக்கம் என்று பல்வேறு தளங்களில் பணியாற்றி இம்முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த ஆண்டு மொத்தம் 100 கலைஞர்கள் நடித்த உயிரோவியங்கள் நாடகத்தை இங்கிலாந்து, டென்மார்க் ஆகிய இடங்களில் மேடையேற்றியவராவார். கலைமணி, கலைமாமணி, கலைப்பெரு வேந்தன், கலைக்காவலன் போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவராவார். இந்தத் திரைப்படத்திற்கான இசையமைப்பை எஸ். வஸந்த் கவனிக்கிறார். இவர் சமீபத்தில் இளமை இனிமை புதுமை என்ற இசைத்தட்டை வெளியிட்டு பெரும் பாராட்டைப் பெற்றவர். ஐரோப்பிய, கீழைத்தேச இசையை உயர் கல்வியில் கற்கும் மாணவனாவார். படத்தொகுப்பையும் படப்பிடிப்பையும் இணைய வடிவமைப்பாளர் அலைகள் ரவிசங்கர் பொறுப்பேற்றுள்ளார். காட்சி உருவாக்கத்தில் இவருடைய தொழில் நுட்ப தயாரிப்புக்கள் டேனிஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றுள்ளன. இப்போது தமிழ் மக்களுக்கான திரையில் அவர் பணியாற்ற முற்பட்டுள்ளார். சுமார் 200 மேற்பட்ட புலம் பெயர் தமிழ் கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள். டென்மார்க், இங்கிலாந்து, நோர்வே, சுவீடன், சுவிற்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகளில் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை தயாரான பகுதிகளை ஆய்வு செய்த பிரபல ஸ்கன்டிநேவிய திரைப்பட தர நிர்ணய நிறுவனம் இப்படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலியமைப்பு யாவும் சர்வதேச தரத்தில் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றுகிறார்கள். தற்போது காலநிலை பனி மழையாகக் கொட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் படப்பிடிப்புக்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதில் தமிழ், பொஸ்னிய, துருக்கி, டேனிஸ் ஆப்கானிஸ்தான், சோமாலிய நாடுகளின் நடிகர்கள் நடிக்கிறார்கள். இது முழு நீள தமிழ் படமாகும். உலகம் பூராவும் வாழும் தமிழ் மக்களிடையே வெளியிட எத்தனிக்கப்படும் இப்படம் தமிழை மிக இலாவகமாகக் கையாழுகிறது. தமிழை எப்படிக் கையாழுவது என்ற கேள்விக்கான பதிலாகவும் இது வெளிவரவுள்ளது. பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் அழகிய காட்சிகளை எல்லாம் உள்ளடக்கி வெளிவருகிறது. வெறும் அறைகளுக்குள் திரைப்படத்தை அடக்கி வைக்காமல் ஒவ்வொரு காட்சியும் ஒரு அழகான வர்ணப் புகைப்படம்போல உருவாகிவருகிறது. திரைப்படம் கமேராவால் பிடிக்கப்படுவதல்ல அது ஒவ்வொரு செ.மீ. ஆக செய்யப்படுவது என்ற புரிதலில் உருவாக்கப்பட்டு வருகிறது. புத்தம் புதிய அதிசக்தி வாய்ந்த கணினிகளில் தமிழ் கணினி விற்பனர்கள் இதை உருவாக்கி வருகிறார்கள். மொத்தம் 300 அற்புதமான லொக்கேஷன்களில் கதை நடைபெறுகிறது. இதுவரை வந்த தமிழ்ப் படங்களில் பாடல்களுக்குள் மட்டும் வரும் ஐரோப்பா இத்திரைப்பட மூலம் கதைக்குள்ளும் விரவிவரப் போகிறது. இதுவரை தயாரான காட்சிகளைப் பார்த்த தொழில் நுட்பக் கலைஞர்கள் நம்மாலும் முடியும் என்ற காலத்திற்குள் இலங்கைத் தமிழ் திரைப்படமொன்று கால் பதித்திருக்கிறதென்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் பிரபல இயக்குநர் ஒருவர் இப்படத்தை தமிழகத்தில் பிலம் சேம்பரில் பதிவு செய்து வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறார். இப்படியான புதிய முயற்சிகள் தமிழகத்திலும் வெளியாவதே எதிர்கால வெற்றிக்கு சிறப்பாக அமையும். புலம் பெயர் தமிழரும், தமிழக கலைஞரும் இணைந்து திரைப்படங்களை தயாரிக்கும் புதிய காலம் பூப்பதற்கும் இத்தகைய முயற்சிகள் கைகொடுக்கலாம். இளம் கலைஞர்கள் பட்டாளம் நம்பிக்கையுடன் பணியாற்றி வருகிறது. சினிமா வர்த்தகத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் திரைப்படங்களும் உலகளாவிய பயணம் செய்வதற்கான ஏற்பாடு இதுவாகும். http://www.tamilnet.dk/pookkal - Guest - 01-28-2004 தகவலுக்கு நன்றி மோகன். ஆனால் இந்த புலம் சார்ந்த படங்கள் எங்கே கிடைக்கும்? அவர்கள் அனைத்து இடங்களிலும் திரையிடுவதில்லையே .... அதற்கு பொருளாதார மற்றும் ரசிகர் ஆதரவு போதாது என்பது உண்மை. எனக்கு இதுவரை ஒரே ஒரு புலம் சார்ந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைதது .... அது அஜிவனின் எச்சில் போர்வை .... யாழ் இணையத்திலிருந்து பெற்று கொண்டேன். புதிய முயற்சியாக இருந்தது .... அவருக்கு எனது பாராட்டுக்கள். - AJeevan - 01-28-2004 Suren Wrote:தகவலுக்கு நன்றி மோகன். ஆனால் இந்த புலம் சார்ந்த படங்கள் எங்கே கிடைக்கும்? அவர்கள் அனைத்து இடங்களிலும் திரையிடுவதில்லையே .... அதற்கு பொருளாதார மற்றும் ரசிகர் ஆதரவு போதாது என்பது உண்மை. எனக்கு இதுவரை ஒரே ஒரு புலம் சார்ந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைதது .... அது அஜிவனின் எச்சில் போர்வை .... யாழ் இணையத்திலிருந்து பெற்று கொண்டேன். புதிய முயற்சியாக இருந்தது .... அவருக்கு எனது பாராட்டுக்கள். நன்றிகள் சுரேன். எமது படைப்புகள் பெரும்பாலும் படைக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலாக முன்னேறிய சினிமாவை நோக்கி நகர்பவர்கள் ஒரு காலத்துக்கு பின்னர் தமது படைப்புகள் வெளியில் உள்ள பலருக்கு சென்று சேர வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு அவற்றை வெளியிடுவதுண்டு. ஆனால் இதற்கு மாறானவர்கள் தமது படைப்புகளை அவர்களது வீடுகளில் அடைத்து வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை? மேலேயுள்ளது போல் தமது படைப்புகளை ஒரு சில கெசட்களிலாவது வெளியிட வேண்டும் என்ற மனசு கொஞ்சமாவது இல்லாவிடில் எமது படைப்புகளின் வளர்ச்சி தொடர் தாமதமாகவே இருக்கும் அல்லது காணாமல் போய்விடும். இலங்கையில் உருவான தமிழ் சினிமாக்களின் பிரதிகள் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மூலப் பிரதிகளோடு சினிமா கலையகங்களுக்குள் இரையாகியதால் ஒன்று இரண்டைத் தவிர அனைத்து படைப்புகளும் அழிந்து போயின. அவற்றை அவர்கள் குறைந்த பட்சம் ஒளி நாடாக்களிலாவது வெளியிட்டிருந்தால் யாரிடமாவது ஒரு ஆவணத்துக்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம்.(அந்த இருக்கும் ஒன்றிரண்டு படங்களின் ஒளி நாடாக்கள் கூட வெளியே கொடுக்க முடியாதவர்கள் கரங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறது கூட வருத்தம்தான்.) அந்த நிலையை புலம் பெயர் கலைஞர்கள் மாற்றுவது மிக அவசியமானதும் தேவையானதுமாகும். யாழ் மற்றும் சுரதா இணையதள உதவியுடன் மற்றுமொரு குறும் படம் நிழல் யுத்தம் பாருங்கள். http://www.suratha.com/shadow_fight.asf - Guest - 01-28-2004 நீங்கள் சொல்வது உண்மைதான், இனியாவது நமது கலைஞர்கள் அவற்றை ஒளிவட்டுகளில் வெளியிடுவார்கள் என நம்புவோம். மற்றும் நிழல் யுத்தம் குறும்படம் பார்க்க முயற்சி செய்தேன் .....ஆனால் இணைப்பு வேலை செய்யவில்லை. இது தவிர வேறு ஏதாவது குறும்படம் நீங்கள் வெளியிட்டுள்ளீர்களா? - Mathivathanan - 01-28-2004 Suren Wrote:நீங்கள் சொல்வது உண்மைதான், இனியாவது நமது கலைஞர்கள் அவற்றை ஒளிவட்டுகளில் வெளியிடுவார்கள் என நம்புவோம்.தமிழிலை எழுதுங்கப்பா.. யாழ்ப்பாணத்திலையே விசிடி.. டிவிடி.. சிடி.. எம்டி.. ஹன்டி.. யெண்டு விளாசிறாங்கள்.. நீங்கள் ஏதொ ஒளிவட்டு எண்டு புதிசாச்சொன்னால் விளங்குமே.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Guest - 01-28-2004 தாத்தா இது சிங்கை தமிழ் ... எனது சொந்த தமிழாங்கில தமிழ் அல்ல. எனக்கு நீங்கள் சொன்ன விசிடி, டிவிடி? - Mathivathanan - 01-28-2004 [quote=Suren]தாத்தா இது சிங்கை தமிழ் ... எனது சொந்த தமிழாங்கில தமிழ் அல்ல. எனக்கு நீங்கள் சொன்ன விசிடி, டிவிடிகொஞ்சம் பொறுங்கோ.. எனக்கும் தெரியாது.. யாழ்ப்பாணத்தமிழர் யாராவது வந்து சொல்லுவாங்கள்.. அதுவரை நீங்கள் பொறுக்கத்தான்வேணும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|