Yarl Forum
செய்தி ஒன்றின் தாக்கம்...செய்தி வெளியிடுவோர் சிந்திப்பீரா.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: செய்தி ஒன்றின் தாக்கம்...செய்தி வெளியிடுவோர் சிந்திப்பீரா.. (/showthread.php?tid=7586)



செய்தி ஒன்றின் தாக்கம - kuruvikal - 01-17-2004

ஜனவரி 17, 2003

வலிப்பு நோயால் வேதனை: மாடியிலிருந்து குதித்து 12 வயது சிறுமி தற்கொலை

அடிக்கடி வலிப்பு வந்ததால் மன வேதனை அடைந்த 12 வயது மாணவி, தான் தங்கியிருந்து விடுதியின் 6வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை நகரில் அடுக்கு மாடிக் கட்டடங்களிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மாணவிகள் என்பதுதான் கொடுமை.

கடந்த 3 மாதங்களில் 4 பேர் இவ்வாறு கட்டடத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந் நிலையில், நேற்று சேத்துப்பட்டு பகுதியில் உள்ள 6 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்து 12 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்பர்டங் சாலையில் ஆதரவற்றோர் தங்கிப் படிக்கும் விடுதி மற்றும் பள்ளி உள்ளது. இங்கு தங்கியிருந்தவர் சாயிரா பேகம். பெற்றோர்களை இழந்ததால் சாயிரா பேகம் இங்கு தங்கிப் படித்து வந்தார். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது.

இதனால் மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்க முடியாத நிலை.

வலிப்பு நோய் காரணமாக மன வேதனை அடைந்த சாயிரா பேகம், சில வாரங்களுக்கு முன் கோடம்பாக்கம் பகுதியில் ஒரு மாணவி 10வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டதை அறிந்தார்.

அதேபோல நானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று தனது சக மாணவிகளிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து விடுதி வார்டன் சாயிராவை அழைத்து, கண்டித்து, அறிவுரை கூறியுள்ளார்.

இந் நிலையில் நேற்று விடுதியின் 6வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார் அந்தச் சிறுமி சாயிரா பேகம்.

Thanks thatstamil.com
---------------------

செய்தியாக அல்லாமல் உதாரணத்துக்குத் தரப்பட்டுள்ளது....செய்திகளின் தாக்கம் சிறுவர்களையும் ஏன் பெரியவர்களையும் எந்தெந்த வகையில் எல்லாம் பாதிக்கிறது என்பதை கருத்துக்களை, செய்திகளை வெளியிடுவோர் சிந்தித்து செயற்பட இது ஓர் உதாரணம்....!