![]() |
|
பாடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: பாடல் (/showthread.php?tid=7608) |
பாடல் - yarlmohan - 01-09-2004 பாரீசில் இருந்து நண்பர் நாதன் யோகநாதன் அனுப்பி வைத்த மடல். (தரவிறக்கம் செய்த பார்வையிடுங்கள்) " நாங்கள் பாரீஸ் இல் இருந்து இதை தொழில்நுட்பரீதியாக வெல்லவேண்டும் என்பதற்காக செய்துள்ளோம். 100 வீதம் தமிழ். இசை தொழில்நுட்பகலைஞர்கள் உட்பட. இதை உங்கள் கருத்துக்களத்தில் இட்டு விமர்சனங்களைப் பெற்றுத்தருவீர்களா ? http://www.paristamil.com/pub/cd/realplayer.rm " - shanmuhi - 01-09-2004 பாடல், காட்சியமைப்பு மிகவும் அருமையாக இருந்தது. இளையவர்கள் மனதைக் கவரும் வகையில்.... காலத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. எம்மவர்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. மேலும் இது போன்ற படைப்புக்களைத்தர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். - shanmuhi - 01-09-2004 ஒரே ஒரு குறைதான் பாடல் இடை இடையே நின்று ஒலிபரப்பாகின்றது. முழுமையாக பாடலைக் கேட்கக்கூடியதாக இருந்தால் இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கும். - AJeevan - 01-10-2004 எனக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொகுப்பு அது தரமாக பாடல்கள் நிற்காமல் பார்க்கக் கூடியதாக இருந்தது. எனவே சண்முகிக்கு பிரச்சனை ஏன் வந்தது என தெரியவில்லை.அப்படியானால் எனக்கு வந்த பகுதியை இங்கு தருகிறேன். பதிவிறக்கம் செய்து பார்கவும்... realplayer ல்வேலை செய்யும். http://www.paristamil.com/pub/cd/realplayer.rm இது எமது இளம் கலைஞர்களின் ஒரு முன்னேற்ற படிக்கல். இப் படைப்பில் பங்கு கொண்ட அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். உங்களைப் போன்றவர்கள் முன்னேற வேண்டும்.உங்களைப் போன்றோரின் முன்னேற்றத்தில் நாம் பெருமைப்பட வேண்டும். தயவுடன் இப்படியான எமது இளம் கலைஞர்களை மனதார வாழ்த்துங்கள்.அது ஒன்றுதான் இன்னுமின்னும் கலைஞர்கள் உருவாக விதையாக இருக்கும். உங்கள் படைப்பைக் கண்டு உண்மையிலேயே வியந்து நிற்கிறேன்.உங்களுக்கு என் வாழ்த்துகள் ................ உங்கள் பயணம் தொடரட்டும்................. பணிவன்புடன் ____________________________________________________________அஜீவன் - shanmuhi - 01-10-2004 நன்றி அஜீவன், http://www.paristamil.com/pub/cd/realplayer.rm அதிலும் பதிவிரக்கம் செய்து பார்த்தேன். ஏனோ தெரியாது. அதே நிலைதான். பாடலை திரும்ப download செய்து போட்டு கேட்க நிற்க வில்லை. பாடல் அருமையாக இருந்தது. <b>இதுபோன்ற இன்னும் பல இளம் கலைஞர்கள் இலை மறை காய்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை வரவேற்று எம் ஆதரவுக் கரங்களை வழங்குவோம்.</b> - sOliyAn - 01-11-2004 கலைஞர்களுக்கு பாராட்டுக்கள். |