Yarl Forum
கேட்ட கதை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: தத்துவம் (மெய்யியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=33)
+--- Thread: கேட்ட கதை (/showthread.php?tid=7625)



கேட்ட கதை - aathipan - 01-05-2004

நானும் நன்பர்களும் கடற்கரையில் நடந்;துகொண்டிருந்தோம். மூவருக்கும் எதோவகையில் கஸ்டங்கள் இருந்தது. என் ஒரு நன்பன் மட்டும் இந்த மாத வாடகைக்கு என்ன செய்வது என்று திரும்ப திரும்ப கவலைப்பட்டுக்கொண்டிருந்தான். எனக்கு அவனை எப்படி ஆறுதல் படுத்துவது என்று தெரியவில்லை. எனது இன்னொரு நன்பன் அவனுக்கு ஆறுதலாக இருக்குமே என்று ஒரு கதைசொன்னான்.

ஒரு தடவை முல்லாவும் மனைவியும் கடல்பிரயாணம் செய்தார்கள். வழியில் பெரும்புயலில் கப்பல் மாட்டிக்கொண்டது. கப்பல் அப்படியும் இப்படியும் ஆடியது. முல்லாவின் மனைவி மிகவும் பயந்துபோய்விட்டார். ஆனால் முல்லா அஞ்சாது இருந்தார். முல்லாவின் மனைவி அவரிடம் இப்படி புயல் அடிக்கிறது எப்போது கப்பல் கவிழும் என்று அச்சமாக இருக்கிறது நீங்கள் எந்த கவலையும் இன்றி இருக்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு முல்லா "எல்லாம் ஆண்டவன் மேல் உள்ள நம்பிக்கைதான்" என்றார். முல்லாவின் மனைவி "இவ்வளவு அபாயகரமான சூழ்நிலையிலும் என்ன கடவுள் நம்பிக்கையோ?" என்று சலித்துக்கொண்டார். முல்லா திடீரென்று தன்இடுப்பில் செருகி இருந்த கத்தியை எடுத்து அவளை நோக்கி அச்சமுறும் வகையில் சுழற்றினார். பின் மனைவியைப்பார்த்து பயந்து விட்டாயா எனக்கேட்டார். மனைவி சிரித்துக்கொண்டு நான் ஏன் பயப்பிடப்போகிறேன் நீங்கள் என்மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளீர்கள் என்றார். நீங்கள் எப்படி என்னை கொல்ல முயல்வீர்கள் என்றாள். அதற்;கு முல்லா "புரிந்ததா இப்போது நான் சொன்னது. கத்தியை வைத்திருந்தது உன்மேல் அன்புகொண்ட கணவன் அதனால் நீ பயப்பிடவில்லை அதுபொலத்தான் புயலை வரவைத்து விளையாடுவது ஆண்டவன் அப்படியிருக்க நான் ஏன் பயப்பிடப்போகிறேன்" என்;றார்.

ஆகவே நாம் ஏன் கஸ்டங்களைக்கண்டு பயப்பிடவேண்டும் என என்நன்பன் ஆறுதல் சொன்னான்.


- Tharavai - 01-05-2004

சரி இப்போ தாங்கள் சொல்ல வருவதுதான் என்னவோ?????????
துன்பம் வரும்போது கடவுள் காப்பார் என்று ஓம் ஐயப்ப சரணம் என்று சப்பாணி கட்டியிருக்கும்படியா கூறுகின்றீர்கள்.


- aathipan - 01-06-2004

இன்று என் நன்பர்களுடன் கோவிலுக்குச் சென்றேன். அங்கே இருந்த ஒரு கிணற்pல் ஒருவர் சில சில்லறைக் காசைத்தூக்கிப்போட்டுவிட்டுசசென்றார். நாம் கிணற்றை எட்டிப்பார்த்தோம். நிறையசில்லறைக்காசுகள். எதற்காக இதில் காசு பொடுகிறார்கள்? என்றுகேட்டேன். ஒருவன் சொன்னான் யாகம் செய்து போடுவது போல இந்திரனுக்கு போய்ச்சேரும் நாம்போடும் காசு என்றநம்பிக்கை என்றான். மற்ற ஒரு நன்பனுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இவை மூட நம்பிக்கை என்று சொன்னான். நான் சொன்னேன் இல்லை எதற்கேன்றே தெரியாமல் செய்யப்படும் தவறாககூட இருக்கலாம். அதை ஆமோதித்த ஒரு நன்பன் ஒரு கதை சொன்னான்.

ஒரு கிராமத்தில் ஒரு குரு இருந்தார் அவரிடம் சில சீடர்கள் கல்வி கற்று வந்தனர். குரு வீட்டில் எப்போதும் ஒரு புூனை சுற்றித்திரியும். அது இவர்;கள் பாடம் கற்கும் போது இடையில் குறுக்கும் நெடுக்;குமாக நடக்;கும். இதனால் அடிக்கடி சீடர்கள் கவனம் சிதறியது. ஒரு நாள் குரு புூனையைப்பிடித்துக் கட்டும் படி சீடர்களில் ஒருவனுக்;கு உத்தரவிட்டார். நாட்கள் சென்றன. குரு இறந்து விட்டார். புதிதாக ஒரு குரு பதவி ஏற்றார். தினமும் சீடர்கள் புூனையை பிடித்து தூணில் கட்டினார்கள். ஒரு நாள் புூனை இறந்து போனது. அன்று பாடம் நடத்தவந்த குரு தூணைப்பார்த்தார். அங்;கு வெறுமை. புூனையைக்காணவில்லை. பாடம் நடத்தவேண்டும் உடனே எங்கிருந்தாவது ஒரு புூனையைப்பிடித்துக்கட்டுதூணில் என்;று கட்டளை இட்டார். அதன்பின் அது வழக்காகிவிட்டது. ஆண்டுகள் பலவாகியும் அங்கு புூனையைப்பிடித்துக்கட்டியபின் பாடம் நடத்துவது தொடர்ந்தது.

அதுபோலத்தான் யாரோ விளையாட்டாக செல்லாத காசை கிணற்றில் போடப்போய் இன்று கோவில் கிணறு முழுதும் சில்லறை மின்னுகிறது என்றான்.

அது உண்மைதான். ஒரு தடவை நாங்கள் சபரிமலைக்கு காட்டுவழியாக சென்றபோது எம்முடன் வந்தவர் எம் குழுவில் உள்ள யாரையோ வருகிறார்களா என பார்க்க ஒரு சுற்று சுற்றினார். அந்த நபர்வருவதைக்கண்ட திருப்தியில்; சாமி சரணம் என்று பகவானை செபித்து நடக்க ஆரம்பித்தார். அவர்; பின் வந்த கன்னிச்சாமிகள் அவர் செய்தது ஏதோ பலகாலமாக பின்பற்;றப்படும் முறை என நினைத்து தாங்களும் ஒரு சுற்று சுற்றி சாமி சரணம் என்று செபித்தனர். அதற்கு பின்பு வந்தவர்கள் எதற்;கு ஒரு சுற்று. எப்போதும் மூன்;று சுற்றுதான் சுற்றவேண்டும் என்று மூன்று தடவை செபித்தனர். பின்;பு வந்தவர்கள் இன்னும் பக்தியுடன் மூன்று சுற்று சுற்றி செபித்தது வேடிக்கையாக இருந்தது.


- aathipan - 01-07-2004

இன்று ஆருத்தரா தரிசனம் சிவன் கோவிலில் நல்ல கூட்டம். எனது நன்பர்கள் எவரையும் காணவில்லை. அங்கே இருந்த தேவாரத்திருமூர்த்திகள் மண்டபத்தில் ஓரு பெரியவர் பிரசங்கம் செய்தபடியிருந்தார். அவர் சொன்ன ஒரு கருத்தை இன்று தருகின்றேன்.

மனிதர்களாகிய நாம் ஆண்டவனை நாடிச்செல்வதற்கான எந்த முயற்சியும் எடுக்காது சிற்றின்பத்தில திளைத்து முதுமை வந்தபோது மட்டும் அவனை நாடிகோவில் கோவிலாக யாத்திரை செய்கின்றோம். இது தவறு. முதலில் தெய்வஅருள்பெற்று பின் குடும்பவாழ்வில் ஈடுபடுவோமானால் மனம் அமைதியுடன் இருக்கும். எந்தகஸ்டத்திலும் மனம் குழப்பமடையாது. உதாரணத்திற்கு புதிதாக ஒரு ஊருக்கு திருவிழாவிற்;காக வருகின்றோம் வந்ததும் எதைப்பற்றியும் சிந்திக்காது கடைத்தெரு மற்றும் கேளிக்கை இடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்கிறோம். இரவு ஆகிவிடுகிறது. அப்போது தான் இரவு எங்கு தங்குவது என்று எண்ணம் வருகிறது. அவசரம் அவசரமாக தங்கும் விடுதிகளை தேடிச்செல்கின்றோம். இரவு ஆகிவிட்டாதால் வழிகூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. குளிர் வேறு வாட்டுகிறது. விடுதிகள் எல்லாம் நிரம்பிவிட்டது என்றசெய்திகேட்டு என்ன செய்வது என்று கலங்குகின்றோம். இதுவே நாம் வந்தவுடனேயே ஒரு விடுதியைப்பார்த்து சிறிது இளைப்பாறி எடுத்துவந்த ஆடைகள்கொண்ட பையைவைத்துவிட்டு எதையும் சுமந்துசங்கடப்படாது ஊரைச்சுற்றிப்பார்த்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும். நிம்மதியாக இருந்திருக்கும் அல்லவா?. ஆகவே தெய்வத்தைத்தேடி கடைசி நேரத்தில் அலைவதைவிடுத்து இளமையிலேயே அவன் அருளைப்பெற்றுவிட முயற்சி செய்யவேண்டும்.


- aathipan - 01-08-2004

ஒரு ஊரில ஒரு குடியானவன் இருந்தான் அவன் பற்று நீங்கி கடவுளை அடையும் வழியில் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டான் அதற்காக நெடுநாளாய் முயன்றான் முடியவில்லை. மீண்டும் மீண்டும் உலகவாழ்வில் மாட்டிக்கொண்டு தவித்தான். ஒரு நாள் ஆற்றங்கரையில் அமர்ந்து தூண்டில் இட்டு மீன்பிடித்துக்கொண்டு இருந்தான். அப்போது அங்கே ஒரு புூனைக்குட்டி வந்தது. தான் பிடித்த ஒரு மீனை அதற்கு உணவாக தூக்கி வீசினான். புூனைக்குட்டியும் ஆசையுடன் கவ்விக்கொண்டது அது உண்பதற்கு உகந்த இடத்திற்கு எடுத்துசெல்ல எத்தணித்தது. அதற்குள் மரத்தில் இதைப்பார்த்துக்கொண்டிருந்த காகங்கள் பறந்து வந்துவிட்டன. அவை அந்த மீனைப்பறிக்க முயற்சித்தன. சுத்திச்சுத்தி பறந்தன. நேரம் ஆக ஆக நிறையக்காகங்கள் சேர்ந்துகொண்டன. புூனைக்குட்டி அங்கும் இங்கும் ஓடி மீனுடன் தப்ப நினைத்தது பாவம் அதனால் முடியவில்லை. காகங்கள்தான் தொந்தரவு செய்தன என்றால் எங்கிருந்தோ புதிதாய் வநதவேறுசில புூனைக்குட்டிகளும் இதில் சேர்நதுகொண்டன. இதையெல்லாம் வெகுநேரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் அந்த குடியானவன். திடீரென அந்தச்சின்னப் புூனைக்குட்டி மீனை போட்டுவிட்டு அமைதியாக அமர்ந்து விட்டது. வேகமாக வநத இன்னொரு புூனைக்குட்டி அதை எடுத்துக்கொண்டது. இப்போது காகங்கள் அந்த புதிய புூனைக்குட்டியைசுற்றி பறக்க ஆரம்பித்தன. மற்றப்புூனைக்குட்டியும் அதைபின்தொடர்ந்து ஓடியது. மீனை கீழே போட்ட புூனைக்குட்டியை எவையும் ஒன்றும் செய்யவில்லை. அது அமைதியாக இருந்தது. குடியானவன் திடீரென எழுந்து ஓடிவந்தான் அந்தப்புூனைக்குட்டியை எடுத்து நீ தான் என் குரு என்று அணைத்துக்கொண்டான். இத்தனைநாள் என்னைச சுற்றி சுற்றி வரும் பிரச்சனைகளில் இருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாது தவித்தேன் எவ்வளவு அழகாக அதைப்புரியவைத்துவிட்டாய் என்றுமகிழ்ந்தான். அன்றே ஆசைகளைத்துறந்து துறவு வாழ்வைமேற்கொண்டான். பின்னாளில் பெரிய ஞானியானான்.


- aathipan - 01-11-2004

ஒரு தடவை ஒரு மாமிசம் விற்பவன் வயதான ஒரு பசுவை வாங்கி வெட்டுவதற்காக இழுத்து வந்;துகொண்டிருந்தான். அது வரமறுக்கவே அதை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்தான். மதியமாகிவிட களைப்படைந்த அவன் பசுவை ஓரிடத்தில் கட்டிவிட்டு அருகே எங்;கும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா என தேடிச்சென்றான். ஓரு வீட்டில் அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கு வந்த இவனையும் அழைத்து திருப்தியாக சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பசி மற்றும் களைப்பு நீங்கியதால் புது பலத்துடன் மீண்டும் பசுவை அடித்து கொடுமைசெய்;து மாமிசம் வெட்டும் இடத்திற்கு இழுத்;துச்சென்றான். அங்கே அதைகொன்று மாமிசத்தை விற்றான். பசுவைக்கொன்ற பாவத்தில் பாதி அவனுக்கும் மீதி அவன் குறிக்கோள் என்ன என்பது எதுவும் அறியாது சாப்பாடு போட்டு அவன் மீண்டும் புதுப்பலத்துடன் பசுவை இழுத்துச்சென்று கொல்ல உதவிய அந்த நல்;லவர்களுக்கு போய்ச்சேர்ந்தது. ஆகவே நாம் நல்லது செய்தாலும் அது சரியானவர்களுக்கு போய்ச்சேர்கிறதா என அறிந்தே செய்;யவேண்டும். இல்லையேல் நமக்கு புண்ணியத்திற்கு பதிலாக பாவமே வந்து சேரும்.


- aathipan - 01-12-2004

செல்லப்பிராணியக வளர்க்கப்பட்ட ஒரு கிளிக்கு அதன் எஜமானார் கடவுள் நாமத்தை சொல்லிக்கொடுத்திருந்தார். கிளி எப்போதும் அதைசொல்லியபடியிருக்கும். எஜமானுக்கு நல்ல சந்தோசம். ஒரு நாள் புூனை அதைப்பிடிக்கவந்தபோது அது கீ கீ என்றே கத்தியது. நம்மில் பலரும் அப்படித்தான். பக்தியின்றி ஆண்டவன் நாமத்தை செபிக்கிறோம். கஸ்டம் என்று வந்ததும் அவன் நாமத்தை செபிப்பதை மறந்துவிடுகிறோம். அவனை சந்தேகத்துடன் பார்க்கிறோம். நம்பிக்கை அகன்று விடுகிறது. இத்தகைய பக்தி பயனற்றது.


- aathipan - 01-12-2004

பிரசங்கத்தில் கேட்டது

உயரத்தில் பறக்கும் கழுகு வல்லமை படைத்ததாக இருக்கிறது. பார்வையில் கூர்மை உள்ளதாக இருக்கிறது. பறவைகளில் ராஜா போன்றது. ஆனால் கிளி சாதாரண சிறியபறவை அதனால் அதிக உயரம் கழுகைப்போல் பறக்கமுடியாது. பார்வையும் பெரிதாக துல்லியம் என்று சொல்லமுடியாது.

கழுகு இத்தனை மேன்மையான நிலையில் இருந்தும் அது இறந்து உடல்களைத்தான் மேலே இருந்து தேடும். ஆனால் சாதாரண உயரத்தில் பறக்கும் கிளி பழங்களை தேடிபிடித்து உண்கிறது. நாம் கழுகைப்போல் உயரப்பறக்கத்தேவையில்லை. கிளியைப்போல இருந்தாலும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்பவர்களாக இருக்கவேண்டும்.


- aathipan - 01-13-2004

மனசே ரிலாக்ஸ் இரண்டாம் பாகத்தில் நன்பன் படித்துச்சொன்னகதை.

ஒரு கிராமம் அங்கே ஒரு பாடசாலையை ஒட்டி இரண்டு ரெயில்ப்பாதைகள். ஒன்று அடிக்கடி ரெயில் செல்லும் பாதை. மற்றயது எப்போதாவது எதிரும் புதிருமாய் ரயில் வந்தால் ஒன்றை மாற்றி அங்கு நிறுத்தி எதிரே வந்த ரெயில் போனபின் விடப்படும் ஒரு மாற்றுப்பாதை.

பாடசாலைச்சிறுவர்கள் ரயில் பாதையையொட்டி விளையாடுவது வழக்கம். இந்த ரெயில் பாதையில் ரெயில்களை மாற்றிவிடும் பணியை வயசானஒரு ஊழியர் ஆற்றி வந்தார். அவர் இந்தச்சிறுவர்களை எப்போதும் இங்கு விளையாடவேண்டாம் என்று கண்டித்து அனுப்புவார். ஆனாலும் யாராவது அங்கு விளையாடிக்கொண்டுதான் இருப்பார்கள். ஆண்டவன் கருணையால் எந்தவித விபத்தும் அங்கே இதுவரை இடம்பெற்றதில்லை.

அன்று வெளியே சென்றிருந்தவர் ரெயில் வரும் நேரத்திற்கு சற்றுமுன்பாகத்தான் வந்தார். கோபுரத்தில் ஏறி ரெயில்ப்பாதையைப்பார்த்தபோது அடிக்கடி ரெயில் செல்லும் பாதையில் நான்கைந்து சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இவருக்கு பரிச்சயமானவர்கள் எத்தனையோதடவை எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அங்கே விளையாடிக்கொண்டு இருந்தார்கள். மாற்றுப்பாதையில் ஒரு பையன் அமர்ந்திருந்தான் அவனை உற்றுப்பார்த்ததும் அடயாளம் கண்டுகொண்டார் நல்ல மரியாதையான பையன்.ரெயில் பாதையில் விளையாடக்கூடாது என்பதைக்கடைப்பிடிப்பவன். அதனால் தான் என்னவோ தனியாக மாற்றுப்பாதையில் அமர்ந்து இருந்தான்.

வயசானவருக்கு என்னசெய்வது என்று தெரியவில்லை. இரண்டொரு நிமிடத்தில் ரயில் வரலாம். கீழேபோய் அவர்களை விரட்ட நேரம்போதாது. அதுமட்டுமன்றி மேலே நின்று பச்சைக்கொடிகாட்டவேண்டும். ரயிலை நிறுத்தவும் முடியாது. நிறுத்தினாலும் அது சிறுவர்கள் விளையாடும் பகுதியைக்கடந்துதான் நிற்கும். மாற்றுப்பாதையில் விட்டால் விதிகளைப்பின்பற்றுகின்ற ஒரு நல்ல சிறுவன் இறக்கநேரிடும். என்னசெய்வது என்று அவர் தடுமாறிக்கொண்டிருக்கும் போதே ரயிலும் வந்துவிட்டது. அவர்என்னசெய்வது என்று ஒரிரு விநாடிகள் தடுமாறிவிட்டார். ஆனாலும் சாரியான முடிவை எடுத்தார் விபத்துகள் எதுவும் நடைபெறவில்லை. ரயிலை நிறுத்தவேண்டிய நிலையும் ஏற்படவில்லை. அவர் என்ன செய்திருப்பார். ஊகித்து எழுதுங்கள். அவர் எடுத்த சமயோசிதமுடிவை உங்களால் எடுக்கமுடிகிறதா பார்க்கலாம்.

இதைப்புத்தகதில் படித்தவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள


- sOliyAn - 01-13-2004

வழமையாக விளையாடுபவர்களுக்கு றெயில் வந்தால் அதன் அறிகுறிகளும் தப்பும் வழிகளும் தெரியும்.. ஆனால் புதிதாக அமர்ந்திருப்பவனுக்குத்தான் அனுபவம் இல்லையே.. எனவே வழமையாக விளையாடும் சிறுவர்கள் நின்ற பாதை வழியே றெயிலைப் போக வழிவிட்டிருப்பார்.. :roll:


- aathipan - 01-14-2004

சரியான பதில் பாராட்டுக்கள்.

என்னால் இப்பதிலை என் நன்பனுக்;கு சொல்ல முடியவில்லை. அதன்பின்தான் சமயோசிதபுத்தி எவ்வளவு அவசியம் என்பதை தெரிந்துகொண்டேன்.


- yarl - 01-14-2004

ஆதிபன் புத்தக கண்காட்சி எப்படிப்போயிற்று?


- aathipan - 01-14-2004

ஒரு மன்னன் தன்நாட்டில் பெரும் பணம் செலவுசெய்து அஸ்வமேத யாகம் செய்தான். அப்போது அங்கே ஒரு கீரிப்பிள்ளை வந்தது. அதன் ஒரு பக்கம் மட்டும் தங்கமாக ஜொலித்தது.

அது அவர்கள் யாகம் செய்த இடத்தில் வந்து புரண்டது பிறகு ஏமாற்றம் அடைந்து வெளியேற எத்தனித்தது. அதற்குள் தங்கநிறத்தில் பாதிஜொலித்த அந்த கீரிப்பிள்ளையைப்பார்க்க காவலாளிகள்,அமைச்சர்கள், யாகம் செய்த தீட்சிதர்கள் என அனைவரும் கூடிவிட்டனர். எல்லோருக்கும் ஆச்சரியம். அதற்குள் கீரிப்பிள்ளை பேச ஆரம்பித்துவிட்டது.

அவர்களைப்பார்த்து "என்ன யாகம் செய்கிறீர்கள் பயனற்ற யாகம் இதே கிராமத்தில் ஒரு குடியானவன் உங்கள் அரசனைவிட மிகப்பெரிய யாகம் செய்துள்ளான்" என்றது.

அதற்கு ஆச்சரியப்பட்ட மக்கள் "இங்கு யாரும் யாகம் செய்யவில்லையே? அப்படியிருந்தால் இந்த தீட்சிதர்களுக்கு தெரிந்து இருக்குமே" என்றனர்.

அதற்கு கீரி "அவர்கள் செய்தது அன்னதானமதான் ஆனால் ஒருவகையில் யாகம். யாகத்தைவிட அதிக புண்ணியத்தை அவர்கள் பெற்றார்கள். அந்தபக்கம் போன என் உடல் புண்ணியம் பட்டு தங்;கநிறமாகிவிட்டது. மீதியையும் தங்க நிறமாக்கத்தான் நான் இங்குவந்து உருண்டு புரண்டேன். ஆனால் பயனேதும் இல்லை. இவ்வளவு பணம் செலவு செய்து என்னபயன்" என்றது.

ஆங்கிருந்த தீட்சிதர்களில் ஒருவர் "அப்படி என்ன பெரிதாக அன்னதானத்தில் புண்ணியம் பெற்றுவிட்டார்கள். எத்தனைபேருக்கு அன்னதானம் செய்தார்கள். இன்று இந்த யாகத்தில் நாட்டு மக்கள் அனைவருக்குமே அன்னதானம் தான்" என்றார் ஏளனமாக.

அதற்கு கீரிப்பிள்ளை அவர்கள் கதையைச்சொல்கிறேன் கேள் அதன்பின் நீயும் அதை மெச்சுவாய் என்று கதையை சொல்ல ஆரம்பித்தது.

அவர்கள் முன்னாளில் பெரிய பணக்காரர்கள் தான் ஆனால் வியாபாரத்தில் நஸ்டமாகிநொடிந்துபோனவர்கள். இயற்கையாகவே தர்மசிந்தனை உடையவர்கள். அன்று குடும்பத்துடன் அருகில் உள்ள ஊருக்குவேலைதேடிச்சென்றார்கள் வேலையேதும் கிடைக்கவில்லை. உண்ண உணவும் கிடைக்கவில்லை. கவலையுடன் வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு மரத்தடியில் கொஞ்சம் நெற்கள் சிந்திக்கிடப்பதைப்பார்த்து அவற்றை குடும்பத்தில் உள்ளவர்கள் அத்தனைபேரும் கஸ்டப்பட்டுப்பொறுக்கி எடுத்;து தந்தையிடம் கொடுத்தார்கள். தந்தை அதை சிரமப்பட்டு உமிநீக்கி மனைவியிடம் கொடுக்க மனைவி அவற்றைக்கொண்டு மரத்தடியிலேயே சோறாக்கினாள். அதற்குள் அனைவரும் மர இலைகளைப்பறித்து உண்பதற்கு வட்டில்கள் தயார்செய்தனர். குடும்பத்தலைவி சுடச்சு அனைவாரது இலைகளிலும் சமமாகப்பங்கிட்டாள். அனைவரும் உண்பதற்கு முன் கண்களைமூடி ஆண்டவனைபிரார்த்தித்தனர். பின் கண்திற்ந்து பார்த்தபோது அந்தவழியால் வயதான ஒரு சிவனடியார் வந்தார். அவர் களைத்துப்போய் காணப்பாட்டார். கண்களில் பசிமயக்கம். குடும்பத்தலைவன் அவரைப்பார்த்ததும் எழுந்து சென்று விருந்தோம்ப அழைத்தான். அவரும் அதற்கு இணங்கினார். குடும்பத்தலைவன் தனது பங்கை எடுத்து அவரை அமரச்செய்து படைத்தான். கொடியபசியில் அவர் இருந்திருக்கவேண்டும். ஒருநொடியிலேயே சாப்பிட்டுவிட்டார். இதைப்பார்த்த குடும்பத்தலைவன் தனமனைவியின் பங்கையும் எடுத்து சிவனடியாருக்கு படைத்தான். இறுதியில் குழந்தைகளின் பங்கையும் அவருக்குப்படைத்து அவர் பசியைப்போக்கினான். ஆண்டவன் அவர்களின் செயலில் மகிழ்ந்து அவர்களுக்கு அனைத்துசெல்வங்களையும் வழங்கி அவர்களுக்கு நிறையப்புண்ணியத்தையும்கொடுத்தார். அந்தப்பக்கமாக சென்ற எனது உடலில் பாதி தங்கமாகியிருப்பதை உணர்ந்தேன். மீதி உடலையும் தங்கமாற்றிக்கொள்ளலாம் என்று புண்ணியம் செய்யப்படும் இடங்களை தேடி அலைந்தேன். இங்கே அஸ்வமேத யாகம் செய்வதால் புண்ணிம்பெற்ற இடம்என நினைத்து இங்கு வநதேன் மாற்றமேதும் இல்லை. உருண்டு பிரண்டேன். ஆனால் எந்தப்பயனும் இல்லை. உங்கள் யாகம் வெறும் புகழுக்குசெய்யப்படுவது என்று இப்போது உணாந்தேன் என்று சொல்லி ஓடிமறைந்தது.