| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 133 online users. » 0 Member(s) | 130 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,454
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| - உனக்குள் 12 - |
|
Posted by: sandiya - 12-27-2003, 06:00 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
[i]2004ஆம் ஆண்டு
மனிதா நீ கைக் கொள்ள வேண்டியது
உன்னை சுூழ்ந்து கொள்ள வேண்டியது
1) தெய்வ நிழலின் நிழலாடல்
2) ஆன்மாவில் ஆன்மீக வளர்ச்சி
3) நிகழ்கால செயற்பாடு எதிர்காலத்துக்குரியதா
4) சுயமா, பொதுநலமா உனக்குள் மேலோங்கி
5) கனவிலா, நிஜத்திலா நீ
6) தாய்மொழியில் பற்று
7) உறவுகளின் ஒன்று கூடல்
8) விரக்தியின் எல்லையிலா நீ
9) பழமைக்குள் புதுமை காண்பாய்ழூ
10) ஜம்புலன் ஊடாக நல்லதை நுகர்வாய்
11) பஞ்ச புூதங்களை வணங்கு
12) உன் உயிருக்கு சொந்தக்காரியை நேசி
பாரிசிலிருந்து த.சுதர்சன்.
|
|
|
| களத்தின் சகோதர எழுத்தாளருக்கு முதல் பரிசு |
|
Posted by: ampalathar - 12-26-2003, 09:52 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (19)
|
 |
தமிழ் கலைநிகழ்வுகள் எதுவும் நடக்கிறதென்று தெரிஞ்சால் காணும் முண்டியடிச்சுக்கொண்டு போய் ஒரு மூலையிலை உக்காந்திடுவன். போனகிழமை ஜேர்மன் பிராங்பொட் தமிழ்மன்றத்தின்ரை ஆண்டுவிழா என்று கேள்விப்பட்டு வேளைக்கே போய் உக்காந்திட்டன்.
வழமைபோல தாமதமாக ஆரம்பிச்சு வழமையான சொதப்பல் நிகழ்ச்சியளுக்கு இடையிலை கவியரங்கமொன்று இடம்பெற்றது. பங்குபற்றிய கவிஞரில் சிலர் உரத்துப்படிப்பதுவே உன்னத கவியென்று எண்ணித் தொண்டை நரம்பு புடைக்க கவியுரைக்க மற்றும் சில முதுகவிகளோ அழகிய உன் மேனி என்ற கவியரங்கின் தலைப்பைப் பார்த்து கவிபுனைவதற்கு எடுத்துக்கொண்ட சிரத்தையைவிட தம் தலைக்கு சாயம் பூசுதற்கும் தம்மேனியை அழகுபடுத்துவதற்கும் எடுத்துக்கொண்ட சிரத்தையுமே அதிகமோ என எண்ணத்தக்க கவிவடித்தனர். இவர்களுக்கிடையில் ஒருசிலர் அற்புத கவிவடித்தும் சென்றதையும் காணமுடிந்தது. பழசுகளின் பந்தாவுகளுக்கு மத்தியில் சின்னப் பெண்ணொன்றும் அழகிய உன் மேனி என்ற தலைப்புக்கு சில வரிகளிலேயே சின்னதாய் மிளகுபோன்று காரசாரமான கவிடித்தது, யாரது என்று நிமிர்ந்தால் ஆச்சரியம் உச்சிவரை ஊடுருவிய அந்தவரிகளின் சொந்தக்காரியாக மேடையில் நம்ம சாந்தி.
வாழ்த்துக்கள் கூற ஆளைத்தேட முதல் அடுத்த ஆனந்த அதிர்ச்சி தமிழ்மன்றம் தனது 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்திய சிறுகதைப்போட்டியிலும் சாந்திக்கே முதற்பரிசு. ஆனந்தத்தில் அந்தப்பெண்ணுடன் பேசி வழியனுப்பிய கையோடு பக்கத்தில் நின்ற என்ரை செல்லம்மாவிட்டை, என்ன மனுசரோ நீங்கள் அந்தப்பெண்ணு பரிசு பெற்றதுக்கு ஒருசிறு வாழ்த்துக்கூடச் சொல்லாமலுக்கு என்று வாங்கிக்கட்டிக் கொண்டன்.
வயசான இந்தக் கிழவன் தாமதமாய் சொல்லும் இந்த வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுமம்மா சாந்தி. நல் தமிழ் ஈழத்து இலக்கியத்துக்கு அணிகலனாய் இன்னும் அரிய பல படைப்புக்கள் படைத்து பரிசுகள்பல பெற்று நம்மவர் வாழும்வரை உன்பெயர் நிலைத்து நிற்க வாழ்த்துக்கள்
|
|
|
| ஈரானில் பூமி அதிர்ச்சி |
|
Posted by: kuruvikal - 12-26-2003, 10:56 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39676000/gif/_39676079_iran_bam_203.gif' border='0' alt='user posted image'>
from--bbc.com
அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர பூமி அதிர்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன...இருப்பினும் 2000 பேர் இதுவரை இறந்துள்ளதை ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்..பாம் (Bam) எனும் தென்கிழக்கு ஈரானிய நகரை quake's magnitude 6.7 எனும் அளவில் கொண்டு பூமி அதிர்ச்சி தாக்கி உள்ளது..அந்த நகரில் இருந்த சுமார் 60 சதவீத வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளன...!
மனித இனத்தின் இந்தச் சோக வேளையில்,இயற்கையின் கோரத்திற்கு இரையான மக்களுக்காக அவர்களின் இறை நிம்மதிக்காகவும் காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறவும் சர்வதேச உதவிகள் பாகுபாடின்றி கிடைக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போமாக....!
|
|
|
| நன்றி பதிவுகள் .கொம். |
|
Posted by: nalayiny - 12-25-2003, 03:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://www.geotamil.com/pathivukal/aarulsubramaniam.JPG' border='0' alt='user posted image'><img src='http://www.geotamil.com/pathivukal/UNHCRAWARD1.JPG' border='0' alt='user posted image'><img src='http://www.geotamil.com/pathivukal/UNHCRAWARD2.JPG' border='0' alt='user posted image'>
அகதிகளுக்கு அரும்பணி ஆற்றியமைக்காக கிடைத்த கெளரவம்!
செல்வி அருணோதினி அருள்சுப்பிரமணியம்!
திருகோணமலையைச் சேர்ந்த செல்வி. அருணோதினி அருள்சுப்பிரமணியம் அங்குள்ள UNHCR நிறுவனத்தில் அகதிகள் புனர்வாழ்வு அலுவலராக கடமையாற்றி வருகிறார். ¦ஐனிவாவில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஜக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் (UNHCR) திரு. றட் லு¡ப்பேர்ஸ் அவர்களிடமிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக அல்லலுளும் பெண்களின் மறுவாழ்வுக்காகவும் உயர்வுக்காகவும் ஆற்றிய தன்னலமற்ற சேவையின் பொருட்டு 2003ம் ஆண்டிற்கான உயர்ந்த விருதினை இவர் பெற்றிருக்கிறார்.
2003ம் ஆண்டு விருதினுக்காக உலகளாவிய ரீதியில் தெரிவான 20 பெண்மணிகளைக் கெளரவிக்கும் வைபவம் ஜக்கியநாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் தலைமையில் டிசம்பர் 5ந் திகதி வெள்ளிக்கிழமை மாலை ¦ஐனிவாவில் இடம் பெற்றது. விமரிசையாக இடம் பெற்ற இவ்விழாவில் விருது பெற்றவர்களைப் பாராட்டி உரையாற்றிய திரு. றட் லு¡ப்பேர்ஸ் அவர்கள் - இப்பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்ட கெளரவம், மற்றவர்களும் இதே போன்ற சேவையில் தங்களை ஈடுபடுத்துவதற்கான உந்துசக்தியை நிச்சயமாக அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
(உயர் ஸ்தானிகர் திரு. றட் லு¡ப்பேர்ஸ் உடன்
செல்வி. அருணோதினி அருள்சுப்பிரமணியம் ) - 5 Dec 03
நாம் எல்லோரும் இணைந்து இவர்களோடு கைகோர்த்து நின்று அகதிகளாக இருக்கும் பெண்களை பாலுறவு வன்முறைக்கு இலக்காக்கும் களநிலைமைகளை அடியோடு ஒழிப்பதில் பெரும் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2003ம் ஆண்டிற்கான இவ்விருதின் வெற்றியாளர்களான 20 பேரும், ஆபிரிக்க, வடஅமெரிக்க, ஆசிய, ஜரோப்பிய மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் அகதிகள் புனர்வாழ்வு சேவையில் ஈடுபட்டவர்களாவர். மேற்கூறிய நாடுகளில் அமைந்துள்ள ரு§ர்ஊசு நிறுவனங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட எட்டுப் பேர்களில் செல்வி அருணோதினியும் ஒருவர். மற்றைய ஏழு பேரும் ஈரான், லைபேரியா, உகண்டா, சியறியலோன், இந்தோனிசியா, கானா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து தெரியப்பட்டுள்ளார்கள்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி அருணோதினி அருள்சுப்பிரமணியம் திருகோணமலை புனித மரியாள் கல்லு¡ரியில் கல்வி பயின்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பட்டதாரியான இவர் காலஞ்சென்ற பரஞ்சோதிப்பிள்ளை இராசலெட்சுமி தம்பதிகளின் பேத்தியும் அருள்சுப்பிரமணியம், தயாநிதி தம்பதிகளின் புதல்வியுமாவார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள நலன்புரி முகாம்களில் வாழும் பெண்களிடம் அவர்களது உரிமைகள் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்துவது தனது முக்கிய குறிக்கோள் என இவர் கூறுகிறார். அகதிகள், குறிப்பாகப் பெண்கள் தங்கள் குறைகளை அச்சமின்றி வெளிப்படுத்துவதற்கும், தகுந்த தீர்வுகளை மேற்கொள்வதற்கும், செயற்பாடுகளில் தமக்குரிய பங்கினை ஏற்பதற்கும் ஏதுவாக - முகாம்களில் நிர்வாக ஆலோசனைச் சபைகளை தாங்களே தோற்றுவிக்க இவர் அரும்பாடு பட்டிருக்கிறார். இடம் பெயர்ந்தோர் மத்தியில் பாலுறவு வன்முறைக்கு இலகுவான இலக்காக இருக்கும் பெண்களின் நடைமுறைப் பிரச்சனைகளைக் கண்டறிந்து அவைகளைக் கழையும் வழிமுறைகளில் தன் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் இவர், UNHCR நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொள்ளும் முன்னரே SLRCS ல் தன்னார்வத் தொண்டராக பணியாற்றியவர். இவரைப் பற்றிய ஒரு அறிக்கையில் கொழும்பில் உள்ள UNHCR தலைமையகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
(திருகோணமலை அகதி முகாமொன்றில், பெண்களுக்கெதிரான
பாலுறவு வன்முறை பற்றிய கருத்தரங்கில் அருணோதினி அருள்சுப்பிரமணியம்)
இடம் பெயர்ந்த மக்களின் சேவையில் தன்னுடைய மிகக்கூடிய சக்தியை செலவிடும் அருணோதினி இளம் வயதினராக இருந்த போதும் மிகுந்த முதிர்ச்சியையும் ஆர்வத்தையும் காட்டுவது ஆச்சரியத்திற்குரியது. அல்லலுறும் மக்களுக்காகப் பணியாற்றும் மனப்பாங்கு இயல்பாகவே இவரிடம் அமைந்திருக்கின்ற காரணத்தினால் இந்தப் பணியைச் சிறப்பாகச் செய்ய இவரால் முடிகிறது. உடைந்து போன மனநிலையினைக் கொண்டிருக்கும் அகதிகளோடு அன்பாகப் பேசுவதிலும் அவர்களது கருத்துகளை ஆர்வமுடன் கேட்டறிவதிலும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதிலும் தீர்வுகளை நடைமுறைப் படுத்துவதிலும் சளைக்காமல் உழைக்கும் இவர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
¦ஐனிவாவில் இடம் பெற்ற விழாவில் உயர் ஸ்தானிகரிடமிருந்து விருதினைப் பெற்றுக் கொண்ட செல்வி அருணோதினி அங்கு உரையாற்றும் போது, இவ்வுயரிய கெளரவம் இலங்கையில் பணியாற்றும் அத்தனை UNHCR சேவையாளர்களின் ஒருமித்த தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த கெளரவம் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் கடந்த 20 வருட காலமாக இடம் பெற்று வந்த நிகழ்வுகளில் கூடுதலான பாதிப்புகளுக்கு முகம் கொடுத்த பெண்களுக்காக பணியாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்தை என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகிறேன் என்றார். இப்பணியில் முழுமையான உற்சாகத்தோடும் திடசங்கற்பத்தோடும் ஈடுபட என் தாயும் தந்தையும் எனக்குத் தருகிற ஊக்கமும் ஆக்கமுமே அடிப்படையான காரணம் என்றும் இவ்விழாவில் தன் பெற்றோரை நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
உலகமெங்கும் பரந்திருக்கிற அகதிகளுக்காகப் பாடுபடும் UNHCR நிறுவனத்தில் தானும் ஒரு அங்கத்தினராக இருப்பதையிட்டு பெருமிதமடைகிறேன் என்று மேலும் கூறிய அவர் தங்களுடைய ஒருமித்த முயற்சிகளின் காரணமாக தற்போது திருகோணமலையின் பல நலன்புரி முகாம்களில் பெண்கள் மிகுந்த விழிப்புணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
தன் உரையின் இறுதியில் தன்னோடு UNHCR நிறுவனத்தில் கடமையாற்றும் திரு. நீல் றைட், திருமதி பிறிட்டா ஹெலெலாண்ட், திரு. ஐ¢ம் வொறல், திரு. §ஐ¡ன் புறு¡ஸ், திரு. சைமன் அன்று¡வர்த்தா, திருமதி வலயாபுர, திருமதி நியன்க கிரேமர் ஆகியோரின் வழிகாட்டலுக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி சொல்லத் தவறவில்லை.
Arunothini Speech in Geneva
UNHCR Headquarters on 5 Dec 03:
"High Commissioner, Deputy High Commissioner, Directors, Senior Officials, Heads of Desks, Distinguished participants on the rostrum, Guests, Invitees, Ladies and Gentlemen, Brothers and Sisters. I am extremely happy to be in Geneva and to have the privilege of being honoured at this great occasion, through the grace of the Almighty, and I am happy that my long-term dream is coming to reality.
Let me express my sincere thanks to the High Commissioner for having selected me for this prestigious award in recognition of the dedicated teamwork, and the true sprit of collective hard work with my colleagues in Trincomalee, and of all UNHCR’s international and national staff based in Srilanka.
I believe that it is the true collective commitment towards the goals of our mission, and the vision of UNHCR, that has shown me the right direction, and allowed me to win this award for work on behalf of women suffering as a result of the man made disaster that has taken place in Sri Lanka for more than two decades.
It is been my nature since my childhood to be concerned and dedicated to human service. This began in my parent’s home. At all times, I try to take care of street beggars and children who come to my doorstep when they are in need. Whenever and wherever possible, I find satisfaction in spending time with them, seek to understand their plight, and my mind always strives to find remedies for their suffering. I never forget to give them at least a meal, as my parents taught me, based on their kind nature.
I think it is these feelings that I have about human suffering and deprivation, that paved way for me to join UNHCR. I was destined and now feel privileged to be part of an organization committed to human service with special emphasis on gender welfare.
During the last two years of my UNHCR service, I have watched for a change of attitude among the unfortunate displaced women in welfare centers and returnee villages, and I have encouraged their understanding and analysis of gender issues, while trying to reduce gender-based violence in their habitat. I have found myself to be increasingly committed to these kinds of gender intervention initiatives, and the hard work on these tasks becomes satisfying when I visible results through the awakening of new feelings amongst the women, and a new understanding of their rights to gender equity.
As a consequence, women in welfare centers in Trincomalee are becoming equally representative in all walks of their lives, and especially enjoy the increased participation. The importance of this kind of visible impact has been supported and endorsed by all my fellow workers.
Once again, I wish to emphasize that this award is not solely in recognition of my work, but a recognition of all the others in UNHCR Sri Lanka and of those partners I work with.
Last but not least, I wish to express my sincere thanks to Neill Wright, Wallaya Pura, Jim Worrall, Brita Helleland, John Breusch, Simon Andrewartha, Nienke Kramer and other colleagues for their able guidance in my work and my career. I am truly blessed and privileged to be honoured at this historic event in Geneva to recognize gender interventions.. Thank you very much."
- Aruni -
http://www.geotamil.com/pathivukal/unhcraward.html
|
|
|
| பாகிஸ்தான் ஜனாதிபதி மீது தற்கொலைத் தாக்குதல் |
|
Posted by: kuruvikal - 12-25-2003, 02:21 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39636000/jpg/_39636825_musharpress_afp203b.jpg' border='0' alt='user posted image'><img src='http://i.cnn.net/cnn/2003/WORLD/asiapcf/south/12/25/pakistan.blast/story.scene.afp.jpg' border='0' alt='user posted image'>
(photos from bbc.com and cnn.com)
பாகிஸ்தான் ஜனாதிபதியும் அந்நாட்டு முன்னாள் ஆட்சிக்கவிழ்புப் பிரதமரும் இராணுவத் தளபதியுமான Pervez Musharraf இன் வாகனத்தொடர் மீது இன்று நடந்த இரண்டு பாரிய தற்கொலைத் தாக்குதல்களில் இருந்து அவர் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்...இருப்பினும் அவர் பயணம் செய்த கார் சேதமடைந்ததுடன் 15 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்...இது பாகிஸ்தான் தலைநகருக்கு சற்று வெளியே ராவல்பிண்டியில் நடந்துள்ளது...!
அதி நவீன கட்டுப்பாட்டுக் கருவி மூலம் குண்டுகள் வெடிப்பது தாமதம் செய்யப்பட்டதாலேயே அவர் உயிர்தப்ப முடிந்ததாக பாகிஸ்தானிய பாதுகாப்புத்தரப்புக் கூறியுள்ளது...!
இதற்கு முதலும் இவர் மீது குறிவைத்து கடந்த 14ம் திகதி ஒரு தற்கொலைத்தாக்குதல் நடந்துள்ளது...அதிலிருந்தும் இவர் தப்பிவிட்டார்...!
அமெரிக்கக் கூற்றுப்படி இது ஒசாமா பின்லேடனின் அல்குவைதாவுடன் தொடர்புடைய குழுக்களால் நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கும் என்று தெரிகிறது...!
NEWS from BBC and CNN.
|
|
|
| தமிழிற்கு சாகித்திய அகாடமி விருது |
|
Posted by: Paranee - 12-24-2003, 01:46 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (17)
|
 |
கவிஞர் வைரமுத்துவிற்கு 2003 ற்கான சாகித்திய அகாடமி விருது ஆனந்த விகடனில் அவர் எழுதிய "கள்ளிக்காட்டு இதிகாகம்" என்னும் தொடரிற்காக வழங்கப்படுகின்றது
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
வளர்கள தமிழ்
வளர்த்துக்காட்டிவிட்டாய் வைரமுத்து நீ
வளர்த்துக்கொண்டிருக்கின்றோம் நாம்
வளர்ப்போம்
வாடிவிட விடமாட்டோம்
நன்றி தற்ஸ்ரமில்.கொம்
<img src='http://www.thatstamil.com/images17/cinema/vairamuthu-300.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| MGR Megastar |
|
Posted by: yarl - 12-24-2003, 09:39 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
[align=center:2a0ed7d336]<img src='http://www.dinamalar.com/2003dec21varamalar/AvarOru-01.jpg' border='0' alt='user posted image'>[/align:2a0ed7d336]
தமிழீழ மக்கள் கடமைப்பட்ட இன்னொரு மாமனிதன் நினைவுநாள் இன்று
17.01.1917-24.12.87
|
|
|
| ஜோதிடத்தை நம்பி மோசம் போகாதீங்க! |
|
Posted by: சாமி - 12-22-2003, 09:11 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (19)
|
 |
என் நண்பர் ஒருவரின் மகன் ஒருவன், போலீஸ் வேலைக்குத்தான் போவேன் என்ற உறுதியுடன் ஒரு வருடமாக ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் என பல பயிற்சிகள் செய்து உடலை பக்குவப்படுத்தி வந்தான்.
ப்ளஸ் டூ முடித்திருந்த அவனுக்கு வயது 21. சமீபத்தில் அவனை சந்தித்தபோது உடல் மெலிந்து தாடியுடன் காணப்பட்டான்.
விசாரித்ததில், போலீஸ் வேலைக்கு உடல்திறன் தேர்வுக்கு செல்லும் முன் பஸ் ஸ்டாண்டில் உள்ள "எடை போடும் மிஷினில்' ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துள்ளான். எடை குறிப்பிட்ட அந்த அட்டையில், "உன் எந்த புது முயற்சியும் இன்று பலனளிக்காது; நிதானமாக முடிவெடு!' என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பையன், உடல் கூறு தேர்வுக்குச் செல்லாமல் வீட்டில் வந்து முடங்கி விட்டான். ஜோதிட சோகம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களே... சரியான கல்வி, உடல் தகுதி, பயிற்சி இருந்தும் வாய்ப்பை, வெற்று ஜோதிடத்தை நம்பி தொலைத்து விடாதீர். தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்.
—சோ.ராமு, செம்பட்டி
நன்றி: தினமலர்
|
|
|
| சினிமாவைப்பற்றி குருதத் - இளையபாரதி |
|
Posted by: சாமி - 12-22-2003, 08:39 PM - Forum: சினிமா
- No Replies
|
 |
''என்னிடம் அடிக்கடி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது - நல்ல படம் எடுப்பதும் அது வியாபாரம் ஆவதும் சாத்தியமா என்று. 'Classic' என்பதன் முதலெழுத்தும் 'Cash' என்பதன் முதலெழுத்தும் 'C' என்றிருப்பதைத் தவிர வேறு ஒற்றுமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இந்தக் கேள்விக்கு திட்டவட்டமான பதில் சொல்ல முடியாது. கலைக்கும், வர்த்தகத்திற்கும், பரிசோதனைப் படத்திற்கும், வழக்கமான மசாலா படத்திற்கும், கலைப்படத்திற்கும், கமர்ஷியல் படத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய. திரைப்படம் தயாரிப்பது என்பதே ஒரு சிக்கலான விஷயம். சினிமாவுக்கென்று பிரத்யேகமாக சில சாதக பாதகங்கள் உள்ளன. இதற்கிடையில் ஒரு கலைப் படைப்பை உருவாக்குவதென்பது மற்ற கலைகளை உருவாக்குவதில் உள்ள பிரச்சனைகளையும் போலத்தான். ஒரு உன்னதமான ஓவியமோ, கவிதையோ, கலாசிருஷ்டியோ பாராட்டப்படாமல் போனால் அது யாருடைய தவறு? உன்னத சிருஷ்டியை ரசிக்கத் தெரியாத மக்களின் குற்றமே தவிர, கலைஞனின் தவறு அல்ல. உன்னத திரைப்படம் வர்க்கரீதியாக வெற்றி பெறாவிட்டால் நான் அந்த இயக்குநரைக் குறை கூறமாட்டேன். அதை ரசிக்கத் தெரியாத ரசிகர்களைத்தான் குற்றம் சாட்டுவேன். படத்தின் வெற்றி தோல்வி என்பது ரசிகர்களின் ரசனையைப் பொறுத்தது.
காலங்காலமாக உன்னதப் படைப்புகளைப் படைத்த படைப்பாளிகள் அதற்குக் கொடுத்த விலை கொஞ்சமா?
உலகம் புகழும் கவிஞனாகத் திகழ்ந்த ஹோமர் தன் வாழ்நாளில் பிச்சையெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்.
ஹோமர் இறந்ததாக ஏழு நகரங்கள் அறிவித்தன. உயிரோடிருக்கையில் ஹோமர் சோற்றுக்கே கஷ்டப்பட்டார்.
தன் வீட்டு வாடகையைக் கொடுப்பதற்காக ''விகார் ஆப் வேக் ஃபீல்ட்'' கையெழுத்துப் பிரதியை கோல்ட்ஸ்மித் விற்றார். தன் எழுத்தை விற்றுக் கிடைத்த பணத்தில்தான் உறவினர் ஒருவரின் ஈமச் சடங்கை ஜான்சன் நடத்தினார். ஓவியங்கள் வரைய வண்ணங்களை வாங்க வக்கின்றி வான்கா அலைந்தான். இராமாயணம் எழுதிய துளசிதாசர் காசுக்குப் பட்ட கஷ்டம் கொஞ்சமல்ல. கபீர்தாஸ் மட்டும் செல்வத்திலா புரண்டான்? வைஷ்ணவ ஜனதோ எழுதிய நர்சிங் மேத்தா 'கேதார்' ராகத்தை அடகு வைத்தார். பிருதிவிராஜ்கபூர் ஆதரிக்க ஆளின்றி தன்னுடைய 'பிருதிவி' தியேட்டர்ஸை மூடவேண்டி வந்தது. வெளிநாட்டினர் விருது கொடுத்து கௌரவித்தபிறகுதான் நம் கலைஞர்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தாகூருக்குகூட இதுதான் அளவுகோல். நோபல்பரிசு என்ற அளவுகோல். வெளிநாட்டினர் கொண்டாடியபிறகே நாம் சத்யஜித்ரேவை அங்கீகரித்தோம். உன்னதங்களுக்குக் கொடுக்கப்பட்ட விலைக்காகவே இந்த உதாரணங்களைச் சொன்னேன். பணத்திற்கும் படைப்புக்கும் இடையிலான உறவைத் துல்லியமாகச் சொல்ல முடியாது. அதே சமயத்தில் விக்டர் ஹ்யூகோ, தாமஸ் ஹார்டி, பெர்னார்ட்ஷா, சாமர்செட்மாம் போன்றவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள். பிக்காசோவின் ஒரே ஒரு ஓவியம்கூட பல இலட்ச ரூபாய்க்கு விலைபோனது. அதுவும் அவர் உயிரோடிருக்கும்போதே.
சினிமாவில் 'சைன் ஆப் கிராஸ்', 'பென்ஹர்', 'ஹேம்லெட்', 'ஹெளகிரீன் வாஸ் மை வேலி', 'எசா டு ரிமெம்பர்', 'வுதரிங் ஹைட்ஸ்' போன்ற படங்கள் வசூலைக் குவித்தன. அதேசமயம் சிறந்த திரைப்படங்களான 'கிரேப்ஸ் ஆப் ராத்' (ஸ்டீன்பெக்) 'டெவில்ஸ் டிசைபிள்ஸ்' (பெர்னார்ட்ஷா), 'ஆன்ட்ரோகிளிஸ் அண்ட் தி லயன்' (பெர்னார்ட்ஷா) 'ஓல்ட்மேன் அண்ட் தி சீ' (ஹெமிங்வே) போன்றவை படுதோல்வியைத் தழுவின.
இந்தித் திரைப்படங்களில் 'பாரத் மிலாப்', 'ராம்ராஜ்யா', 'புகார்', 'சிக்கந்தர்', 'ராம்சாஸ்திரி' போன்ற படங்கள் வெற்றிகரமான படங்கள். 'கீதா', சித்ரலேகா', 'விக்கிரமாதித்யா', போன்ற நல்ல படங்கள் தோல்வியடைந்தன. ஒரு படத்தின் வெற்றி தோல்வி மக்களின் செயலால்தான் தீர்மானிக்கப்படுகிறது.
வெற்றி தோல்வியைக் கணிக்க முடியாத இந்த விளையாட்டில்கூட தங்களின் சுயத்தன்மையை விட்டுக் கொடுக்காத கலைஞர்களும் இந்தத் துறையில் எதிர்நீச்சலிட்டிருக்கிறார்கள். ரவி வர்மாவைப்போல் ராஜவம்சத்தில் பிறந்த பரூவா மக்களின் பக்கம் நின்றார். அவருடைய காலத்தின் சமூக அநீதிகளைத் தன் திரைப்படங்களில் தீவிரமாகப் பதிவு செய்தார். தன் படங்கள் வசூலைக் குவிக்குமா என்பதைக் குறித்து பரூவா அக்கறை கொள்ளவில்லை. தான் என்ன செய்கிறோம் என்பதைத் துணிந்தே செய்தார். படப்பிடிப்பிற்குப் போவதற்கு முன்பே முழுத் திரைக்கதை வசனமும் தயாராக வைத்திருப்பார். லௌகீக உலகில் பரூவா இலட்சியங்களுக்காக வாழ்ந்தார் என்று சொல்ல மாட்டேன். அவருடைய சில திரைக்காவியங்கள் வெற்றியடைந்தன. அற்புதமான படங்களான 'அதிகாரி', 'மன்சில்' போன்ற திரைப்படங்கள் தோல்வியடைந்தன. இந்தப் படங்களுக்கு உரிய மதிப்பை மக்கள் தரத் தவறினர். இந்தியத் திரை உலகம் பரூவா, தீபக்கி போஸ் போன்றவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. வரலாற்று ஞானமில்லாத இன்றைய இயக்குனர்களோ இந்த சினிமாவுக்கு ஒரு பெருமைக்குரிய நேற்று இல்லை என்பதுபோல் பேசுகின்றனர்.
நியூ தியேட்டர்ஸ், பிரபாத், பாம்பே டாக்கீஸ் போன்ற கம்பெனிகள் நல்ல திரைப்படங்களை எடுத்திருந்தபோதிலும் அவை மூடப்பட்டதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. திரைப்படங்களைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் கூட்டத்தில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. போருக்குப் பின்னால் திரைப்படத்திற்குப் பேராதரவு தந்து வந்த மத்தியதர வர்க்கத்திடம் ஒரு தொய்வு ஏற்பட்டுள்ளது. உழைக்கும் மக்களும் மேல்தட்டு மக்களுமே இன்றைய திரைப்படங்களின் ரசிகர்கள். இவர்களே ஒரு படத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள்.
இதனைத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்த நிலையில் நல்ல படம் எடுப்பது அரிதாகி வருகிறது. படத்தயாரிப்புச் செலவில் குறைந்தது 5 லட்சங்களைக் குறைத்தால்தான் சோதனைபூர்வமான படத்தைத் தயாரிக்க முடியும். பெரிய பட்ஜெட்டில், பிரபல நட்சத்திரங்கள், பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்து உருவாக்கும் 80 சதவீத படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைவதில்லை. வசூலைத் தருவதில்லை. ஒரு படமும் வர்த்தக ரீதியாக, வசூல் ரீதியாக வெற்றி பெற பிரபல நட்சத்திரமும், இசையமைப்பாளரும் மட்டும் போதாது. பிரபலங்களால் படங்கள் வெற்றி பெறும் என்பது பிரமை. குறைந்த வெற்றி பெறும் என்பது பிரமை. பெரிய பிரமை. குறைந்த முதலீட்டில் புதிய முயற்சிகளைச் செய்து பார்க்கலாம். கதைக்கும் திரைக்கதைக்கும் அதிக முக்கியத்துவம் தந்து திரைப்பட உலகில் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தைப் போக்கலாம். பிரபல இசையமைப்பாளர் இசையமைக்க வேண்டுமென்ற மாயையை உடைக்கலாம். இன்றைய திரைப்படப் பாணியை மாற்றலாம். கதையின் உணர்வுபூர்வமான ஓட்டத்தில் பாடல்கள் ஒரு தடைதான். திரைப்பட தயாரிப்பில் பரிசோதனை முயற்சிகளுக்குப் பல இடையூறுகள் வரும். புளித்துப் போன பாணியிலிருந்து மாறுபட்டு ஒரு வித்யாசமான கதையைப் படமாக்க விரும்பினால் அதனை எச்சரிப்பதற்கென்றே இந்தத் திரையுலகில் தீர்க்கதரிசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்களின் கூக்குரல் முன் நரிகெட்டது போங்கள். இதனை மீறி நீங்கள் வெற்றியடைந்தால் நல்லது. தவறிப்போய் உங்கள் படம் தோல்வியடைந்துவிட்டால் சகலரும் அறிவுரை கூற வந்துவிடுவார்கள். திரைப்பட ரசிகர்கள் குறிப்பிட்ட கருவை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத்தான் விரும்பிப்பார்க்கிறார்கள்; வெற்றிப் படமாக்குகிறார்கள். ரசிகர்களுக்கு முதலில் அந்தக் கதை பிடித்திருக்கவேண்டும். சோதனைபூர்வமாக எடுத்த 'பியாசா' வெற்றி பெற்றது. 'காகஸ் கே பூல்' தோல்வி அடைந்தது. 'சாஹிப் பீபி ஒளர் குலாம்' நாவலைப் படமாக்கும் முயற்சியில் நான் இறங்கியபோது திரையுலக தீர்க்கதரிசிகள் என்னைப் பயமுறுத்தினார்கள். 'தன்னுடைய கணவனின் அன்பைப் பெறுவதற்காக மனைவி குடிக்கிறாள்' என்ற காட்சியை ரசிகர்கள் விரும்பவில்லை. நாவலில் இருந்ததை அப்படியே படம் பிடித்திருந்தேன். நானே எதிர்பார்க்காத அளவிற்குப் பத்திரிகைகள் இந்தக் காட்சியைப் பாராட்டி எழுதின. மக்களும் பாராட்டினார்கள். இத்திரைப்படத்தை பம்பாயில் திரையிட்டபோது இரண்டு காட்சிகளை மட்டுமே ரசிகர்கள் விரும்பாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். அன்பு மிகுதியால் பூத்நாத்தின் மடியில் சோட்டி பஹ¨ தலைவைத்துப் படுத்துக்கொள்ளும் காட்சி. இன்னொன்று, 'நான் குடியை முழுதுமாக விட்டுவிடப் போகிறேன். இதுதான் கடைசி முறை; இந்த கடைசிச் சொட்டு மதுவைக் குடிக்க அனுமதியுங்கள்' என்று சோட்டி பஹ¨ தன் கணவனிடம் கெஞ்சும் காட்சி. இந்த இரு காட்சிகளையும் படத்திலிருந்து நீக்கிவிட்டோம்.
'அலிபாபா' கதையை என்னுடைய அடுத்த தயாரிப்பாக எடுத்துக் கொண்டுள்ளேன். 'சமூகக் கதைகளை எடுத்துவந்த நீங்கள் அராபிய இரவுகளைப் படம் பிடிக்கப் போகிறீர்களா? என்ன இப்படி தரம் தாழ்ந்துவிட்டீர்கள்?' என்று என்னைக் கேட்கிறார்கள். அலிபாபா கதையையும் இன்றைய சமூக நோக்கில் படமாக்கலாம் என்று ஒவ்வொருவரிடமும் விளக்க வேண்டியுள்ளது. அதில் வரும் பிரதிபிம்பங்கள் இன்றைய நவீன வாழ்வின் வழி நெடுகிலும் காணக்கிடைக்கின்றனர்.
''வெற்றிடத்தில் சிறகடிக்கும் தேவதை'' - ஷெல்லியைப் பற்றி மாத்யூ அர்னால்ட் சொன்னது. இது வழக்கமான பாணியிலிருந்து விலகி திரைப்படம் எடுப்பவர்களுக்கும் பொருந்தும். நீங்கள் எடுக்கும் சினிமாவிற்கு பூங்கொத்தும் கிடைக்கும், கல்லடியும் கிடைக்கும், வசூலும் குவியலாம், தோல்வியும் அடையலாம். எது நடக்கும், எப்படி முடியும் என்று தீர்மானிக்க முடியாத பரபரப்பும், புதிருமே மீண்டும் மீண்டும் சினிமா எடுக்கத் தூண்டுகிறது.''
- இளையபாரதியின் 'குருதத்' புத்தகத்திலிருந்து
வெளியீடு
புதுமைப்பித்தன் பதிப்பகம்
52 முதல் தளம், நான்காவது தெரு,
அஞ்சகம் நகர்,
அசோக் நகர்,
சென்னை-600 083.
நன்றி: அம்பலம்
|
|
|
|