Yarl Forum
ஈரானில் பூமி அதிர்ச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: ஈரானில் பூமி அதிர்ச்சி (/showthread.php?tid=7644)



ஈரானில் பூமி அதிர்ச்ச - kuruvikal - 12-26-2003

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39676000/gif/_39676079_iran_bam_203.gif' border='0' alt='user posted image'>
from--bbc.com

அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் ஈரானில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர பூமி அதிர்ச்சியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்திருக்கக் கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன...இருப்பினும் 2000 பேர் இதுவரை இறந்துள்ளதை ஈரானிய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்..பாம் (Bam) எனும் தென்கிழக்கு ஈரானிய நகரை quake's magnitude 6.7 எனும் அளவில் கொண்டு பூமி அதிர்ச்சி தாக்கி உள்ளது..அந்த நகரில் இருந்த சுமார் 60 சதவீத வீடுகளும் இடிந்து வீழ்ந்துள்ளன...!

மனித இனத்தின் இந்தச் சோக வேளையில்,இயற்கையின் கோரத்திற்கு இரையான மக்களுக்காக அவர்களின் இறை நிம்மதிக்காகவும் காயமடைந்தவர்கள் விரைந்து குணம் பெறவும் சர்வதேச உதவிகள் பாகுபாடின்றி கிடைக்கவும் இறைவனைப் பிரார்த்திப்போமாக....!


- Paranee - 12-27-2003

20,000 ற்கும் அதிகமானோர் கொடூரத்திற்கு பலியாகிவிட்டதாக தற்போதைய செய்திகள் கூறுகின்றன. இதையும் தாண்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது


- kuruvikal - 12-27-2003

<img src='http://i.a.cnn.net/cnn/2003/WORLD/meast/12/27/iran.quake/top.bam.aerial.ap.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://wwwi.reuters.com/images/mdf434968.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://wwwi.reuters.com/images/mdf434785.jpg' border='0' alt='user posted image'>

ஈரான் பூகம்பம்: 25,000 பேர் பலி, 10,000 உடல்கள் மீட்பு

தெஹ்ரான்:

தென்கிழக்கு ஈரானில் பாம் நகரில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 25,000 பேராவது இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை 10,000 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

பாம் நகரில் நேற்று காலை 5.28 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என பதிவான இந்த நிலநடுக்கத்தினால் ஏறத்தாழ 5,000 பேர் சம்பவம் நேர்ந்த பொழுதில் இறந்தனர் என்றும், குறைந்தது 20,000 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும் கெர்மன் மருத்துவக் குழுவைச் சேர்ந்த இராஜ் ஷரிபி என்பவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஈரான் தொலைக்காட்சி 20,000 பேர் இறந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 350 பேர் இறந்துள்ளனர் என்றும், பாம் நகரைச் சுற்றியுள்ள, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு எந்த ஒரு மீட்புக் குழுவும் இதுவரை செல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இந் நிலையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கி, உயிருடன் இருப்பவர்களைக் கண்டறிய 12 மோப்ப நாய்கள் பாம் நகருக்கு அனுப்பப்பட்டுள்ளன. கெர்மன் நகரை வந்தடைந்த சுவிஸர்லாந்து நாட்டு மீட்புக் குழுவினரும் பாம் நகருக்கு விரைந்துள்ளனர். அந்தக் குழுவில் மோப்ப நாய்களும் இருக்கின்றன.

இதற்கிடையே மீட்புக் குழு அதிகாரிகளுள் ஒருவரான முகம்மது ஜஹான்ஷகி என்பவர், சடலங்களைக் கட்டி அனுப்புவதற்கு பைகள் தேவைப்படுகின்றன. ஆயிரக்கணக்கில் சடலங்கள் இடிபாடுகளுக்கிடையில் உள்ளதால், அதே எண்ணிக்கையில் பைகளும் உடனடியாகத் தேவை என்று கூறியுள்ளார்.

இந் நிலையில், உலக நாடுகளின் உதவியை ஈரான் அதிபர் கடாமி கோரியுள்ளார். இஸ்ரேல் தவிர, மற்ற நாடுகள் வழங்கும் உதவியை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகள் தங்கள் மீட்புப் படையை அனுப்பி வைத்துள்ளன.

Thatstamil.com;cnn.com;reuters.com.