| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 143 online users. » 0 Member(s) | 140 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,617
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| தமிழா...தமிழா...! |
|
Posted by: சாமி - 01-02-2004, 01:48 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (2)
|
 |
எஸ்.ஜெயக்குமார், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்:
ஒவ்வொரு ஆண்டும் ஜன., 1ம் தேதி, நம்ம ஊர் மக்கள் அடிக்கும் கூத்து சகிக்கவில்லை. டிச., 31ம் தேதி இரவு முழுவதும் தங்கள் துக்கத்தை மறந்து ஆட்டம், பாட்டு, கொண்டாட்டத்திற்கு முடிவிருக்காது.
இதற்கு உறுதுணையாக நமது "டிவி' சேனல்களும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி விடும். நடிகைகள் அரைகுறை ஆடையுடன் "டிவி'யில் தோன்றி, அரைகுறை ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்து சொல்வர். நம் கலாசாரத்தை சீரழிக்கும் சினிமா பாடல்களை மூச்சுவிடாமல் ஒளிபரப்புவர். இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாமல் இரவு 12 மணிக்கு புதிய ஆண்டு பிரசவிக்கும்.
ஜன., 1ம் தேதி அனைத்து கோயில்களிலும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதும். விசேஷ வழிபாடு, அர்ச்சனை என்று அமர்க்களப்படுத்துவர். ஜன., 1க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஜன., 1, என்ன தமிழர்களின் பண்டிகையா? ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லும் இவர்கள், ஏன் தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வதில்லை? தமிழ் புத்தாண்டுக்கு கோயில்களில் இந்தக் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு கூட வருவதில்லையே... ஏன்?
தற்பொழுது பக்தி என்பது பேஷன், பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. தமிழ் பேசும் தமிழர்களே... நமது பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்காதீர். தமிழனாக வாழுங்கள்! தமிழ் பேசுங்கள்! தமிழின் ஆயுளை குறைத்து விடாதீர்!
நன்றி: தினமலர்
|
|
|
| Nephros Syndrom !!! |
|
Posted by: shanmuhi - 01-01-2004, 10:21 PM - Forum: மருத்துவம்
- Replies (12)
|
 |
எனது மருமகனுக்கு ஐந்து வயதிலிருந்து சிறுநீருடன் புரதம் வெளியேறுகிறது. நோய் மாறுவதற்காக அவர் CORTISON என்ற மருந்து பாவிப்பார். நோய் 2 - 3 கிழமைகளில் மாறிவிடும். தடிமன் இருமல் அல்லது காய்ச்சல் வந்துவிட்டால் மீண்டும் புரதம் சிறுநீருடன் வெளியேறும். திரும்ப CORTISON பாவிக்க வேண்டிவரும்.
அவருக்கு தற்போது 10 வயது.
இதுவரை 20 தடவைகளுக்கு மேல் இந்த நோய் வந்துவிட்டது.
இந்த வருத்தத்தை எப்படி மாற்றலாம். தெரிந்தவர்கள் ஆலோசனை கூறினால் மிகவும் உதவியாக இருக்கும்.
நன்றி
|
|
|
| உலகத்தமிழர் மத்தியில் சிறந்த தமிழன் |
|
Posted by: kuruvikal - 01-01-2004, 11:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
உலகத்தமிழர் மத்தியில் சிறந்த தமிழன் முதலிடத்தை வை. கோபாலசாமியும் மூன்றாம் இடத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பிடித்துள்ளனர்....இந்தத் தெரிவில் இந்திய வாக்காளரே அதிகம் பங்கு பற்றியும் உள்ளனர்...!
இத் தெரிவுக்கான சகல ஏற்பாடுகளையும் தற்ஸ்தமிழ் டொட் கொம் செய்திருந்தது....!
-----------------------
இதோ முழுச் செய்தியும் தற்ஸ்தமிழ் டொட் கொம்மிலிருந்து.....
<img src='http://thatstamil.com/images17/pen1-250.jpg' border='0' alt='user posted image'>
சிறந்த தமிழன் போட்டி முடிவுகள்
அன்புள்ள வாசகர்களே,
இந்த ஆண்டு நாம் நடத்திய சிறந்த தமிழனுக்கான போட்டியிலும், சிறந்த திரைப்பட சாதனையாளர் போட்டியிலும் மிக ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கனக்கில் வாக்களித்திருக்கிறீர்கள்.
பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரையும் பட்டியலில் சேர்க்குமாறு வற்புறுத்தியதால் அவர்களது பெயர்களையும் இடம் பெறச் செய்தோம்.
மேலும் பலர் திமுக தலைவர் கருணாநிதி, சந்தனக் கடத்தல் வீரப்பன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் தோழர்கள், அப்பாவித் தமிழன், புள்ளிராஜா, பான்யான் அமைப்பை நிறுவிய வந்தனா, வைஷ்ணவி, இலங்கை கிரிக்கெட் அணியின் தமிழ் வீரர் முத்தையா முரளீதரன், சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால், நீதிபதி கற்பக விநாயகம், கஞ்சா வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ஜனனி ஆகியோரையும் சேர்க்கச் சொல்லி பரிந்துரைத்தனர்.
ஆனால், ஜனாதிபதி கலாமுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்குமே மிக அதிக அளவில் பரிந்துரைகள் வந்ததால் அவர்களைச் சேர்த்தோம்.
நேற்றிரவு முடிவடைந்த இந்த வாக்குப் பதிவில், உங்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டுள்ளவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான். இவர் 52 சதவீத வாசகர்களின் வாக்குகளை வென்றுள்ளார்.
16 சதவீத வாக்குகளைப் பெற்று அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா.
கடைசி நேரத்தில் பெயர் சேர்க்கப்பட்டாலும் 9 சதவீத வாக்குகளைப் பிடித்தவர் புலிகள் தலைவர் பிரபாகரன்.
அவரைப் போலவே கடைசியில் பெயர் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி அப்துல் கலாம் 7 சதவீத வாக்குகளையும், இயக்குனர் பாலா 7 சதவீத வாக்குகளையும், காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியார் 5 சதவீத வாக்குகளையும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் 4 சதவீத வாசகர்களின் வாக்குகளையும் வென்றுள்ளனர்.
வாக்கு விவர வரைபடம்:
<img src='http://thatstamil.com/images17/poy1-350.jpg' border='0' alt='user posted image'>
ஆர்வமாய் வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி !
அன்புடன்
ஆசிரியர்
தட்ஸ்தமிழ்.காம்
http://thatstamil.com/news/2004/01/01/edit.html
நன்றி thatstamil.com
|
|
|
| பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
|
Posted by: Paranee - 01-01-2004, 06:25 AM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (12)
|
 |
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
களத்தின் உயிர்நாடியாகவும் இந்த களத்தை நெறியாள்கை செய்பவருமாகிய அன்பு நண்பர் வலைஞன் அவர்களிற்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று உலகே உங்களிற்காய் விழாவெடுக்கின்றது.
வாழ்க நீவீர்
எம்மையெல்லாம் இணைக்க அயராது உழைக்கும் உம்முயற்சிகள் வெல்க
நட்புடன்.பரணீதரன்
|
|
|
| 2004 |
|
Posted by: sethu - 01-01-2004, 01:47 AM - Forum: புலம்
- Replies (9)
|
 |
2004 ம் ஆண்டு ஊடகச்சதனையாக புலிகளின் குரல் தமிழ் ஈழவானொலி ஜ பீ சீ ஈ ரீ பீ சி வானொலி கனடிய தமிழ் வானொலி (சிரிஆர்), கனடா தமிழ்ச்சோலை, அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் மீடியா வொய்ஸ் ஆகியன ஒன்றினைந்தன. இது ஒரு வரலாற்று சாதனையாகும்.
|
|
|
| புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல் |
|
Posted by: yarl - 12-31-2003, 02:15 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (17)
|
 |
உதயனில் வந்த கட்டுரை ஒன்று.கடடுரையாளார் சொல்ல வந்த கருத்தை விட்டு காது வழிச்செய்தியை பரப்புவதால் புலம்பெயர்ந்தோரை அந்நியப்படுத்துதல் வெகு இயல்பாகவே நடைபெறுகிறது.
இந்தக் கட்டுரை இங்கு....
இது உன் நெஞ்சை தொடுமா? சுடுமா?
முதியோர்கள் - காலச்சக்கரத்தின் கடமைகளை முடித்துவிட்டு காலதேவ னுக்காய் காத்திருக்கும் கட்டைகள்.
சிறுவர்கள் - என்னவென்று தெரியாத உலகில் எதையோ சாதிப்பதற் காய் முகிழ்த்திருக்கின்ற மொட்டுகள்.
இன்று இவர்களின் நாள். அடிக்கடி உலகம் மறந்து போகின்ற மானிடர் களை நினைந்து கொள்வ தற்காகத்தானே இந்த மானுடத் தினங்கள். இவர்கள் விடயத்தில் உலகம் என்ன மறந்தது என்று நீங்கள் கேட்கக ;கூடும். இவர்களும் மனிதர்கள் என்பதை உலகம் மறந்து விட்டதுதான் உண்மையாகும்.
சிறுவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும், அவர்களது உரிமை கள் பாதுகாக்கப்படுவது குறித்தும், இன்று அதிகம் பேர் கதைக்கத் தொ டங்கிவிட்டார்கள்.
எனவே, இந்தக் கட்டுரையில் நான் அவர்களைப் பற்றி அதிகம் தொடா மல் சிந்திக்கப்படாத சில ஜீவன் களைப் பற்றி உங்கள் நெஞ்சோடு பேச விழைகின்றேன்.
முதிய மனிதர்கள், உலக ஆசா பாசங்களுக்கு அப்பாற்பட்ட சடப் பொருள்கள். இப்படித்தான் நாம் எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு கணக்குப்போட்டு வைத்திருக்கிறோம். எந்தத் தேவையும் அற்றவர்களாய், எதற்கும் தேவையற்றவர்களாய் அவர் களுக்கு ஒருகோடு கிழித்து வைத்திருக் கிறோம். நாளெல்லாம் எம்மைத் தோள் மீது சுமந்தவரின் உடைமைகளை ஒரு தோல்பைக்குள் முடக்கி வைத்துள்ளோம். வீட்டுப்படி யேறி விறாந்தை தாண்டி, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என வரும் நாலறைதாண்டி வரும் ஐந்தாவது அறையில் ஒரு மூலையில் ஒரு மூச்சுச் சத்தம் கேட்கும். முனகல் கேட்கும். உற்று நோக்கினால் ஓர் உருவம் தெரியும். உலர்ந்த தோல் ஒட்டிய உடலுடன் கண்களைச் சுருக்கி கனதியாய் நோக்கிவிட்டு சோர்ந்த உடல் சரிந்து அவ்வுருவம் உறக்கம் கொள்ளப் பார்க்கும்.
என்ன வர்ணனையாய் போகிறதே என்று எண்ணுகிறீர்களா? இல்லை. முதியவர்களைக் கொண்ட நம் தமிழ்த் தேசிய குடிகளின் ஒவ் வொரு நு}று வீட்டிலும் எழுபது வீடு களில் இதுதான் நிலைமை. தம் இள மைக்காலத்து இரத்தத்தை வியர் வையாய் சிந்தி தன் சந்ததி சக தியை மிதிக்காது வாழவைத்த பெற் றோருக்கு அவர்கள் வயது முதிர்ந் ததும் அவர்கள் தம் சிறகுகளால் காத்து வளர்த்த பிள்ளைகள் கொடுக் கும் பரிசு இதுதான். உலகின் கண் களுக்குத் தெரியாமல், ஏன் உறவினர் களின் கண்களுக்கு கூடத்தெரியாமல் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்த மனிதர்களைப் பற்றித்தான் நான் உங்களோடு கதைக்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இந்த மனிதர் களின் நிலை என்ன?
பிள்ளை படித்து பெரியவனாகி பட்டம் வாங்கி பரதேசம் போவான். அகதி என்ற பெயரில் அப்பா கொடுத்த பணத்தில் அரச வாழ்க்கை வாழ்வான்.
இங்கே இந்த கிழடுகள் பிள்ளைக் காய் கட்டிய வீட்டை கட்டிக்காத்துக் கொண்டு காவல்காக்கும் நாய்களாய், புதையல் பேணும் பேய்களாய் ஆவி பிரியும் முன்னம் ஆஸ்தியை பிள் ளையிற்ற குடுத்திட வேணும் என்ற கனவுகளோடு.......
பத்திரிகைகளில் செய்தி வரும். ~~தனிமையில் இருந்த மூதாட்டி கொலை, நகைகள் அபகரிப்பு.||
~~வயோதிபர் கிணற்றில் இறந்து கிடந்தார்.|| கொள்ளிவைக்கக்கூட ஒரு பிள்ளை இங்கு இல்லை.
வலிகாமம் பகுதியில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. தகப்பன் இறந்து போனார். ஜேர்மனியிலுள்ள மகனுக்கு அறிவித்தார்கள். அப்பா இறந்துவிட்டார். கொள்ளிவைக்க ஒரு பிள்ளையும் இங்கு இல்லை. நீங் கள் வாருங்கள் என்று. மகன் டெலி போனில் பதில் சொன்னார்.
ஷஷயாழ்ப்பாணம் இன்னும் முன்னேற வி;ல்லையே இன்னும் கொள்ளிவைச் சுக் கொண்டிருக்கிறியள். காசனுப்பி விடுகிறன் பொடியை கொழும்புக்கு கொண்டுவந்து மெசினில குடுத்து எரி யுங்கோ. வடிவா எல்லாத்தையும் வீடியோ எடுத்து எனக்கு அனுப்புங்கோ.|| இது கதையில்லை உண்மை. தன் இரத்தத்தால் உயிர் கொடுத்த தந்தையை, தன் இரத்தத்தை ஊனாக்கி உடல் வளர்த்த அன்னையை, அருகிருந்து பார்த்து, அவர் தம் உயிர் பிரியும்வேளை உடனிருந்து உருகாத மனமுடைய மனிதன் ஒரு நல்ல மகளாக அல் லது மகனாக இருக்கமுடியுமா?
மல்லாகம் பகுதியில் ஒரு சம்ப வம் 18 வருடம் வெளிநாட்டிலிருந்து விட்டு வந்த ஒரு மகனை தாய் கேட் டாள். ஷஷஎன்ர பேரப்பிள்ளைகளை பார்க்க ஆசையாய் கிடக்கு கூட்டிக் கொண்டு போவன் மேனை.||
அவர் சொன்னார். ~~இனி இவவுக்கு இந்த வயதில அங்கென்ன வேலை?||
இந்த மனிதர்களின் சிந்தனை களைப்பாருங்கள். முதியவர்களுக்கு எதுவும் தேவையில்லை. எந்த உணர்வுக்கும் அவசியமில்லை என்று நினைக்கிறார் கள். ஆனால், அவர்களுக் கும் ஆசைகள் உண்டு. உணர்ச்சிகள் உண்டு. தாம் புறக்கணிக்கப்படு வதைக் கண்டு அவர்கள் மனம் வெதும்புகிறார்கள். உள்ளத்தால் அழு கிறார்கள். தமது கருத்துகளை நம் பிள்ளை கேட்க வேண்டும், குடும்ப நடவடிக்கைகளில் தம்மையும் பங் கெடுக்க வாய்ப்பளிக்க வேண்டும், தம்மை தமது அடுத்த தலைமுறை மதிக்க வேண்டும் என்ற எண்ணங் கள் அவர்களிடமுண்டு. இவைகள் ஈடேறாதபோது அவர்கள் மனம் உடைந்து போகிறார்கள். இதனால் பலர் முடங்கிப் போகிறார்கள். சிலர் முரண்படுகிறார்கள். இதற்கு நம் மவர் கொடுக்கும் விளக்கம் ஷஅறளை பெயர்ந்து போச்சுது அதுதான் இப்படி||.
இன்றைய பிள்ளைகள் தம்மைச் சுமந்தவரை நாம் சுமப்பது பாரமென நினைக்கிறார்கள். அவர்களில் பலர் நம் முதிர்ந்த பெற்றோரை விடுதி களிலும் சிலர் வீதிகளிலும் தள்ளி விடுகிறார்கள். பெரும்பாலானோர் மூலையில் இருத்தி மூன்று நேரமும் உணவளிக்கிறார்கள்.
மூன்று வேளை கிடைக்கும் உணவு அவர்கள் மூச்சுவிட போது மானதாக இருக்கலாம். அவர் தம் உணர்வுகளுக்கு வடிகாலாக அமை யாது. முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுவிட்டு மாதா மாதம் பணம் கொடுக்கும் பிள்ளை களுமுண்டு,. ஷஷவடிவா காசு குடுத்து கவனிக்கிறம் தானே|| என்பது அவர் கள் கணக்கு. ஆனால், பிணக்கு இது வல்ல. அவர்களின் உள்ளத்தின் ஓசைகள் கேட்கப்படுகிறதா? தள் ளாத வயதில் எழும் சின்ன சின்ன ஆசைகள் நிறைவேற்றப்படுகிறதா? என்பதுதான். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் வாழ்க்கை அல்ல இவர்கள் வாழ்வு. காலச் சுழற்சியில் கடைசி மணித் துளிக்காய் காத்திருக்கும் கணங்கள் இவர்களுடைய வாழ்வு. இன்றிவர் நோவுக்கு மருந்திடாது மறைந்த பின்பு அழுது புலம்பியென்ன? ஆண்டுத் துவசம் செய்தென்ன?
இலங்கைத் தீவிலே எண்ணிக்கை அடிப்படையில் நோக்காது ஒப்பீட்டு அடிப்படையில் நோக்கினால் படித்த சமூகம் என தம்மை மார்தட்டிக் கொள்ளும் தமிழ்ச் சமூகத்தில் தான் முதியவர்கள் அதிகளவில் அல்லற் படுத்தப்படுகிறார்கள். அடக்குமுறைக் குட்படுத்தப்படுகிறார்கள்.
முதியவர்கள் பற்றி ஆய்வுசெய்யும் விஞ்ஞானிகள், நிபுணர்கள் கூறும் கருத்து என்னவெனில், ஒரு குறிப் பிட்ட வயதைக் கடந்து முதிய கோல மடைந்த மனிதன் மீண்டும் குழந்தை களின் நிலைக்கே திரும்புகிறான். அங்கே அவன் எண்ணங்கள் சிந்தனைகள் ஒரு குழந்தையிடமுள்ள தைப்போல பிடிவாதமுடையதாய் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டு மென்பதற்காக செயல்களைச் செய்வதாகவே இருக்கும்.
இவர்கள் உடலால் முதிர்ந்தவர்களாயினும் உள்ளத்தால் குழந்தைகளைப் போலிருப்பர். எனவே, அவர் களை உங்கள் பிள்ளைகளில் ஒரு வராகவே நோக்குங்கள். கருதுங்கள் என்கிறார்கள்.
ஆனால், நடப்பது என்ன?
பிள்ளைகளைப் போல பேண வேண்டியவர்களைத் தொல்லை களாவே கருதுகிறார்கள். பல்லாண்டுகளாகத் தம்மைப் பேணியவரை சில ஆண்டுகள் பேணுவதற்கு சினக்கிறார்கள். இத்தகைய நடத்தைகள் மனித நேயமற்ற செயல்களாகவே கருதப்படவேண்டும். இதை சட்டமும் ஏற்றுக்கொண ;டுள்ளது.
இலங்கையில் 2000 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 9 ஆம் இலக்க சட்டத்தின்படி முதியோர் பாதுகாப்பு வலியுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத் தின் பிரகாரம் அறுபது வயதைக் கடந்த ஒரு நபர் முதியவராக கருதப் படுவார். அத்தகைய ஒரு முதியவர் தம் பிள்ளைகளால் தமக்கு போதிய பராமரிப்பு கிடைக்கவில்லை என உணர்ந்தால் தமக்குப் பிள்ளைகளி டமிருந்து போதிய பராமரிப்பைப் பெற்றுத் தருமாறு கோரி வழக்குத் தாக் கல் செய்யமுடியும். இத்தகைய வழக்குகளை முதியவர்கள் சார்பில் இலவசமாக நடத்துவதற்கு ~வயது வந்தவர்களுக்கான தேசியச் செயல கம்| எனும் அமைப்பும் ஏற்படுத்தப்பட் டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு முதியவரும் தங்கள் பகுதி கிராம அலுவலரிடம் இதற்கான விண்ணப் பப்படிவத்தைப் பெற்று மேற்படி செய லகத்திற்கு விண்ணப்பத்தினு}டாக வழக்குகளை மேற்கொண்டு தமக்குரிய பராமரிப்புக்கான செலவுகளை பிள்ளைகளிடமிருந்து பெற்றுக் கொள்ளமுடியும். இங்கு பிள்ளைகள் எனும் போது சட்டாPதியான பிள்ளைகள் மட்டுமல்ல ஒவ்வொரு வயதான பெற்றோரும் தமக்கு பிறந்த சட்ட hPதியற்ற பிள்ளைகள் மறுமணம் மூல மாகப் பிறந்த பிள்ளைகள், வளர்ப்பு பிள்ளைகள் போன்றோரிடமிருந்தும் பராரிப்பைக் கோரும் உரிமையை கொண்டுள்ளார்கள். எனவே, மேற் குறித்த எந்தப் பிள்ளையாயினும் தமது வயதான பெற்றோரைப் பரா மரிப்பது கட்டாயமாகிறது.
~~பூத்த கொடி பூக்களின்றி தவிக்கிறது|| ~~பூங்குருவி துணைகளின்றி துடிக்கின்றது|| என்ற கவிவரிகள் எம் மூரின் தெருக்களில் நிதர்சனமாகத் தெரிவது வேதனைக்குரியது.
~நாய் வளர்த்து பாலை வார்த்தால் வாலை ஆட்டிக்கொள்ளும் நன்றிகெட்ட பிள்ளைகளோ நன்றியினைக் கொல்லும்|| எனும் வரிகள் ஒவ்வொரு வயதான பெற்றோரின் மனதிலும் ஆழப்பதியும் நிலைக்கு நம் சமூகம் வந்துவிட்டது. தென்னையை வைத்தால் இளநீர், பிள்ளையைப் பெற்றால் கண்ணீர் என்று அவர்கள் கண்ணீர்விடும் காலம் இன்று.
இந்த நிலை மாறவேண்டும்.
தன் தகப்பனுக்கு ஒருவன் உடைந்த தட்டிலே உணவு கொடுத்தானாம். அதைக் கண்ட அவன் பிள்ளை அத்தட்டை எடுத்து ஒளித்து வைத்தானாம். ஏனடா ஒளித்தாய் என்று கேட்டதற்கு அப்பா நீ உன் அப்பாவுக்கு உடைந்த தட்டிலே உணவு கொடுக்கிறாய். எதிர்காலத்தில் நான் உனக்கு உணவு கொடுக்க ஓர் உடைந்த தட்டு வேண்டுமே அதற்கா கவே எடுத்து வைத்தேன் என்றானாம்.
இந்தக் கதையிலுள்ள தத்துவம் ஒவ்வொரு பிள்ளைக்கும் உறைக்க வேண்டும். உனக்கு உயிர் தந்த வரை உன் உயிர் இருக்கும்வரை கவனி. காலம் உனக்கு பரிசு தரும். உன் கடைசி காலம் கண்ணீர் இன்றி கழியும்.
|
|
|
| வரவேற்பும் வாழ்த்துக்களும் |
|
Posted by: Paranee - 12-31-2003, 01:53 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (13)
|
 |
அனைத்து யாழ் கள உறவுகளிற்கும் எமது புதிய வருடத்திற்கான வரவேற்பும் வாழ்த்துக்களும்.
பழையன களைந்து புதியன அணிவோம். பகைமை விரட்டி நட்பை அணைப்போம்.
என்றென்றும் கரங்கள் பற்றிக்கொள்ள
களிப்புடன் முகமலர்ந்து
காத்திருக்கும் அன்பு நண்பர்கள் யாழ் இணைய உறவுகள்
<img src='http://www.yarl.com/forum/files/new.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| முடி உதிரும் பிரச்னை |
|
Posted by: சாமி - 12-29-2003, 06:13 AM - Forum: மருத்துவம்
- Replies (10)
|
 |
முடி உதிர்வது பெரும் பாலானோருக்கு ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது. எல்லோருக்கும் தங்கள் முடியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதிலும் ஆண்களில் பலர் வழுக்கை விழுந்துவிடுமோ என்று பயந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. அவர்கள் செல்ல வேண்டிய தளம் :
http://www.thebaldtruth.com/
தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. பாரம்பரியம், சுற்றுச்சூழல் சீர்கேடு, சரியான பராமரிப்பின்மை, எண்ணெய், மோசமான ஷாம்பு, பொடுகு என்று அவற்றை பட்டியலிடலாம்.
எனினும் முடி உதிர்வது எதற்காக என்பதை கண்டறிய இன்னும் ஆர்வம் அதிகரித்தே வருகிறது. மேலும் முடி உதிர்வதை தடுக்க ஆய்வுகளை மேற்கொள்ள வருவதற்கு நிதி உதவி செய்யப்படுகிறது.
தலைமுடிகளை பதியன் செய்வது, மோசமான கேச பொருட்களை அடையாளம் கண்டறிவது என்று ஏராளமான தகவல்கள் இங்கு கிடைக்கின்றன.
இதே போல் இன்னொரு தளம் முடி உதிர்தல் மற்றும் கேசப்பராமரிப்பு குறித்து ஆராய்கிறது. இந்ததளத்தில் முடி உதிர்வது எதனால், அதன் வகைகள் என்ன என்பன பற்றி விளக்கப்படுகின்றன. முகவரி:
http://www.hairloss.e-medicinehealth.com/
முடி உதிர்வதன் அறிகுறி, எப்போது மருத்துவரை நாட வேண்டும் உள்ளிட்ட நல்ல தகவல்களும் இத்ததளத்தில் இடம்பெற்றுள்ளன.
தலைமுடியும் அறிவியல் சார்ந்தது என்று கூறும் தளம்:
http://www.hairscientists.org/
தலைமுடி தொடர்பான துறையில் சிறந்து விளங்கும் மருத்துவர்கள், பார்மசி துறையை சேர்ந்தவர்கள் என்று அனைவரும் கூடும் இடமாக இது உள்ளது. மேலும், இத்தளத்துக்கு செல்லும் முடியின் மீது அக்கறை உள்ளவர்களுக்கும் நிறைய தகவல் உள்ளது.
நன்றி: தினமணி
|
|
|
|