![]() |
|
தமிழா...தமிழா...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: தமிழா...தமிழா...! (/showthread.php?tid=7632) |
தமிழா...தமிழா...! - சாமி - 01-02-2004 எஸ்.ஜெயக்குமார், சைதாப்பேட்டை, சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒவ்வொரு ஆண்டும் ஜன., 1ம் தேதி, நம்ம ஊர் மக்கள் அடிக்கும் கூத்து சகிக்கவில்லை. டிச., 31ம் தேதி இரவு முழுவதும் தங்கள் துக்கத்தை மறந்து ஆட்டம், பாட்டு, கொண்டாட்டத்திற்கு முடிவிருக்காது. இதற்கு உறுதுணையாக நமது "டிவி' சேனல்களும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி விடும். நடிகைகள் அரைகுறை ஆடையுடன் "டிவி'யில் தோன்றி, அரைகுறை ஆங்கிலத்தில் புத்தாண்டு வாழ்த்து சொல்வர். நம் கலாசாரத்தை சீரழிக்கும் சினிமா பாடல்களை மூச்சுவிடாமல் ஒளிபரப்புவர். இவர்கள் அட்டகாசம் தாங்க முடியாமல் இரவு 12 மணிக்கு புதிய ஆண்டு பிரசவிக்கும். ஜன., 1ம் தேதி அனைத்து கோயில்களிலும் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் அலை மோதும். விசேஷ வழிபாடு, அர்ச்சனை என்று அமர்க்களப்படுத்துவர். ஜன., 1க்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஜன., 1, என்ன தமிழர்களின் பண்டிகையா? ஆங்கிலப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்லும் இவர்கள், ஏன் தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்வதில்லை? தமிழ் புத்தாண்டுக்கு கோயில்களில் இந்தக் கூட்டத்தில் பத்தில் ஒரு பங்கு கூட வருவதில்லையே... ஏன்? தற்பொழுது பக்தி என்பது பேஷன், பொழுதுபோக்கு என்றாகிவிட்டது. தமிழ் பேசும் தமிழர்களே... நமது பண்பாடு, கலாசாரத்தை சீரழிக்காதீர். தமிழனாக வாழுங்கள்! தமிழ் பேசுங்கள்! தமிழின் ஆயுளை குறைத்து விடாதீர்! நன்றி: தினமலர் தினமலர் - tamilan - 01-15-2004 தினமலர் முதலில் கலப்படமற்ற நல்ல தமிழில் எழுதட்டும். வேதனை.. - phozhil - 01-16-2004 இது போன்ற அறிக்கைகளை எழுதுவதிலாவது தமிழகத்து தமிழன் தமிழை தாலாட்டுகூடாதா?வெட்கம், வேதனை.. |