![]() |
|
உலகத்தமிழர் மத்தியில் சிறந்த தமிழன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: உலகத்தமிழர் மத்தியில் சிறந்த தமிழன் (/showthread.php?tid=7635) |
உலகத்தமிழர் மத்தியில - kuruvikal - 01-01-2004 உலகத்தமிழர் மத்தியில் சிறந்த தமிழன் முதலிடத்தை வை. கோபாலசாமியும் மூன்றாம் இடத்தை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் பிடித்துள்ளனர்....இந்தத் தெரிவில் இந்திய வாக்காளரே அதிகம் பங்கு பற்றியும் உள்ளனர்...! இத் தெரிவுக்கான சகல ஏற்பாடுகளையும் தற்ஸ்தமிழ் டொட் கொம் செய்திருந்தது....! ----------------------- இதோ முழுச் செய்தியும் தற்ஸ்தமிழ் டொட் கொம்மிலிருந்து..... <img src='http://thatstamil.com/images17/pen1-250.jpg' border='0' alt='user posted image'> சிறந்த தமிழன் போட்டி முடிவுகள் அன்புள்ள வாசகர்களே, இந்த ஆண்டு நாம் நடத்திய சிறந்த தமிழனுக்கான போட்டியிலும், சிறந்த திரைப்பட சாதனையாளர் போட்டியிலும் மிக ஆர்வமுடன் பங்கெடுத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கனக்கில் வாக்களித்திருக்கிறீர்கள். பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஜனாதிபதி அப்துல் கலாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோரையும் பட்டியலில் சேர்க்குமாறு வற்புறுத்தியதால் அவர்களது பெயர்களையும் இடம் பெறச் செய்தோம். மேலும் பலர் திமுக தலைவர் கருணாநிதி, சந்தனக் கடத்தல் வீரப்பன், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, துக்ளக் ஆசிரியர் சோ. ராமசாமி, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் தோழர்கள், அப்பாவித் தமிழன், புள்ளிராஜா, பான்யான் அமைப்பை நிறுவிய வந்தனா, வைஷ்ணவி, இலங்கை கிரிக்கெட் அணியின் தமிழ் வீரர் முத்தையா முரளீதரன், சரவண பவன் அண்ணாச்சி ராஜகோபால், நீதிபதி கற்பக விநாயகம், கஞ்சா வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ஜனனி ஆகியோரையும் சேர்க்கச் சொல்லி பரிந்துரைத்தனர். ஆனால், ஜனாதிபதி கலாமுக்கும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்குமே மிக அதிக அளவில் பரிந்துரைகள் வந்ததால் அவர்களைச் சேர்த்தோம். நேற்றிரவு முடிவடைந்த இந்த வாக்குப் பதிவில், உங்களின் பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி கண்டுள்ளவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான். இவர் 52 சதவீத வாசகர்களின் வாக்குகளை வென்றுள்ளார். 16 சதவீத வாக்குகளைப் பெற்று அடுத்த இடத்தைப் பிடித்திருப்பவர் முதல்வர் ஜெயலலிதா. கடைசி நேரத்தில் பெயர் சேர்க்கப்பட்டாலும் 9 சதவீத வாக்குகளைப் பிடித்தவர் புலிகள் தலைவர் பிரபாகரன். அவரைப் போலவே கடைசியில் பெயர் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி அப்துல் கலாம் 7 சதவீத வாக்குகளையும், இயக்குனர் பாலா 7 சதவீத வாக்குகளையும், காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியார் 5 சதவீத வாக்குகளையும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்க பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் 4 சதவீத வாசகர்களின் வாக்குகளையும் வென்றுள்ளனர். வாக்கு விவர வரைபடம்: <img src='http://thatstamil.com/images17/poy1-350.jpg' border='0' alt='user posted image'> ஆர்வமாய் வாக்கெடுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி ! அன்புடன் ஆசிரியர் தட்ஸ்தமிழ்.காம் http://thatstamil.com/news/2004/01/01/edit.html நன்றி thatstamil.com - sOliyAn - 01-01-2004 என்னமோ.. லிஸ்ற்ல தமிழரல்லாத பெயர்களையும் இணைத்து சிறந்த தமிழர் தெரிவு நடாத்தியதே ஏதோமாதிரியாக இல்லையா? என்னைப் பொறுத்தவரையில் முதல் இருவருமே தமிழர் இல்லையே.. :wink: - sethu - 01-01-2004 இது அந்த இனையத்தின் புதுரக விளம்பரம் மாதிரிகிடக்கு. - தமிழன் - 08-07-2004 எனக்கும் ஒரு மின்னஞ்சல் வந்தது திரு வை.கோபால்சாமி தமிழர் இல்லை அவரது பெயரை புகழ்பெற்ற தமிழர் என்ற எனது இணையத்தளத்தில் இருந்து நீக்கும் படி. இது எந்த அளவுக்கு உண்மை? http://www32.brinkster.com/famoustamils/ தமிழன் - sOliyAn - 08-09-2004 வைகோ பிறப்பால் ஆந்திராக்காரர் எனக் கூறுகின்றனர். எனினும் அவர் தமிழனாக வாழ்வதால் விட்டுவைக்கலாம்!! :wink: - tamilini - 08-09-2004 இந்த கருத்து கணிப்பை எப'படி நாம் நம்புவது...! வைக்கோ நல்ல மனிதராச்சே.. அவர் ஆந்திராக்காரா.........? |