Yarl Forum
ஜோதிடத்தை நம்பி மோசம் போகாதீங்க! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: ஜோதிடத்தை நம்பி மோசம் போகாதீங்க! (/showthread.php?tid=7650)



ஜோதிடத்தை நம்பி மோசம் - சாமி - 12-22-2003

என் நண்பர் ஒருவரின் மகன் ஒருவன், போலீஸ் வேலைக்குத்தான் போவேன் என்ற உறுதியுடன் ஒரு வருடமாக ஓட்டம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் என பல பயிற்சிகள் செய்து உடலை பக்குவப்படுத்தி வந்தான்.

ப்ளஸ் டூ முடித்திருந்த அவனுக்கு வயது 21. சமீபத்தில் அவனை சந்தித்தபோது உடல் மெலிந்து தாடியுடன் காணப்பட்டான்.

விசாரித்ததில், போலீஸ் வேலைக்கு உடல்திறன் தேர்வுக்கு செல்லும் முன் பஸ் ஸ்டாண்டில் உள்ள "எடை போடும் மிஷினில்' ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துள்ளான். எடை குறிப்பிட்ட அந்த அட்டையில், "உன் எந்த புது முயற்சியும் இன்று பலனளிக்காது; நிதானமாக முடிவெடு!' என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பையன், உடல் கூறு தேர்வுக்குச் செல்லாமல் வீட்டில் வந்து முடங்கி விட்டான். ஜோதிட சோகம் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்களே... சரியான கல்வி, உடல் தகுதி, பயிற்சி இருந்தும் வாய்ப்பை, வெற்று ஜோதிடத்தை நம்பி தொலைத்து விடாதீர். தன்னம்பிக்கையுடன் செல்லுங்கள்.

—சோ.ராமு, செம்பட்டி

நன்றி: தினமலர்


- ganesh - 12-23-2003

ஜரோப்பிய மக்களில் 75 வீதத்திற்கு மேலானோருக்கு கடவுள் சோதிடநம்பிக்கையில்லை
இது தான் இவர்களின் வெற்றிக்கு
முக்கிய காரணம்


- Paranee - 12-24-2003

ஆஹா இப்படி பச்சையாக பொய் சொல்கின்றீர்களே

கடவுள் நம்பிக்கை இல்லாமலா ? ஆலயங்கள் தோன்றிக்கொண்டிருக்கின்றன <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->

ஜரோப்பிய மக்களில் 75 வீதத்திற்கு மேலானோருக்கு கடவுள் சோதிடநம்பிக்கையில்லை  
இது தான் இவர்களின் வெற்றிக்கு  
முக்கிய காரணம்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


- nalayiny - 12-24-2003

நல்ல பதில். Idea


- ganesh - 12-24-2003

ஜரோப்பாவில் எங்கே புதிதாக ஆலயம் தோன்றிக்கொண்டிருக்கினறன?
லன்டனைப்பாருங்கள் அங்கு என்ன
நடக்கிறது என்று பல கிறிஸ்தவஆலயங்கள் சைவஆலயங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன எம்இனத்தவர்கள் தற்போது வீட்டுக்கு வீடு ஆலயம் அமைத்துவருகிறார்கள் அவர்கள்
கடவுள் நம்பிக்கைக்காக அல்ல
தங்கள் வருமானத்திற்கே எம்
இனத்தவரை விடுவோம் வெள்ளளைக்காரர்கள் யாராவது புதிதாக ஆலயம் அமைக்கிறார்களா? இல்லை அவர்கள் திருந்திவிட்டார்கள்
எம் மக்கள் எப்போது திருந்துவார்கள்?


- ganesh - 12-24-2003

தற்போது சுபநேரங்களைப்பார்தது
திருமணச்சடங்கை வைப்பார்கள்
ஆனால் நேரம் முடிவடைந்தவுடன்தான் தாலி கட்டுவார்கள்

இதற்கு சோதிடம் தேவைதானா?


- Paranee - 12-24-2003

எம்மைப்பற்றித்தானே கதைக்கின்றோம்


- ganesh - 12-24-2003

உண்மைச்சம்பவம்

எனது நண்பரின் மகளுக்கு ஜேர்மனியில் சகலமுறைப்படி திருமணம் நடந்தது திருமணம் நடந்த அடுத்தவாரம் திருமணத்தைநடாத்திய இரண்டு குருமாரும் அம்ஸ்ரடாம் நகரில்
ஒரு வீட்டில் இறைச்சிக்கறியுடன்
சாப்பிடும்பொழுது கண்ட எனது நணபர் திகைத்துவிட்டார் அவர்கள்
சொன்னார்கள் நாங்கள் கனடாபோக
போகமுயற்சிசெய்தோம் பிடிபட்டுவிட்டோம் அதுதான் இங்கு
தங்கியுள்ளோhம்

இப்படியும் நடக்கிறது


- nalayiny - 12-24-2003

புலால் உண்ணல் பஞ்சமா பாதகங்களுள் ஒன்று. எங்கள் மதம் எதையுமே செய்யாதே என தடை சொல்ல வில்லை.எல்லாம் சொல்லிப்போட்டு விட்டிட்டினம். கடைப்பிடிச்சா என்ன கடைப்பிடிக்காட்டி என்ன என்ற தோரணையில்.ஆனபடியா பாவம் குளிராக்கும் சாப்பிடட்டுமன்.அவனவன் புத்திக்கு தகுந்த மாதிரி நடந்து கொள்ளுவது மனித இயல்பு. நடக்கட்டுமே. யாரும் யாரையும் ஒரு போதும் திருத்திவிட முடியாது.யாழ் எங்கோ தனது அம்மம்மா கதை சொன்னதாக ஞாபகம்.(சிங்கப்புூர் காறர்) மனிதருள் தான் நாமும் அடக்கம்.( தமிழருள்.)


- Paranee - 12-25-2003

கண்ணப்பநாயனார்

இவரைப்பின்பற்றுகின்றார்களோ !
மனம்தான் எல்லாவற்றிற்கும மூலகாரணம். நானே சொல்கின்றேன் ஆலயக்கர்ப்பக்கிரகம்வரை சென்றுவருபவன். நண்பர்களுடன் வெளியில் போகும்போது நன்றாக புலால் சாப்பிடுவேன். அன்று ஏதாவது விசேடம் ஆலயம் போகவேண்டுமென்றால் உடனே தலைமுழுகி சென்றுவருவேன். அங்கு மனம்தான் சுத்தமாக இருக்கவேண்டும்.


- ganesh - 12-25-2003

புலால் உண்ணுவது தடையெல்ல
ஆனால் அவர்கள் அதன்பின்பும்
புனிதமான தொழிலை செய்வது
பாவம் அல்லவா?


- nalayiny - 12-25-2003

அனைவரும் பாவ புண்ணியம் பார்த்தா வாழுகிறோம்.?

கொன்றால் பாவம் தின்றால் போகும் என்ற பழமொழியும் உண்டு.

அன்பு பாசம் இறை நம்பிக்கை பற்றுத்தான் முக்கியம். உண்ணும் உணவல்ல.


- shanthy - 12-25-2003

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->உண்மைச்சம்பவம்

எனது நண்பரின் மகளுக்கு ஜேர்மனியில் சகலமுறைப்படி திருமணம் நடந்தது திருமணம் நடந்த அடுத்தவாரம் திருமணத்தைநடாத்திய இரண்டு குருமாரும் அம்ஸ்ரடாம் நகரில்
ஒரு வீட்டில் இறைச்சிக்கறியுடன்
சாப்பிடும்பொழுது கண்ட எனது நணபர் திகைத்துவிட்டார் அவர்கள்
சொன்னார்கள் நாங்கள் கனடாபோக
போகமுயற்சிசெய்தோம் பிடிபட்டுவிட்டோம் அதுதான் இங்கு
தங்கியுள்ளோhம்  

இப்படியும் நடக்கிறது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாழ் எங்கை போட்டியள் ஒருக்கால் அந்த அம்மம்மா சொன்ன கதையை எழுதி விடுங்கோ.


- kuruvikal - 12-25-2003

செவ்வாய்ப் பயணம் பிழைச்சுப் போச்சுதாம்....கலத்துக்கு செவ்வாய் தோஷமோ என்னவோ..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதுதான் சொல்லுறது நம்ம ஜோதிடமணியளட்ட நேரம் குறிச்சு அனுப்ப வேண்டும் என்று....போறத்துக் கிடையில வெடிச்சிருக்குமோ என்னவோ.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ganesh - 12-25-2003

அமெரிக்காவில் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பஆயத்தம் செய்தார்கள் கடைசி நேரத்தில்
அது இயங்கமறுத்துவிட்டது எந்த முயங்சியும் செய்தும் பயனளிக்கவில்லை இறுதியாக இந்தியாவில் இருந்து சோதிடரை அழைக்கமுடிவுசெய்து விட்டார்கள்
சோதிடர் வந்து பார்த்த சில மணிநேரத்தில் ராக்கட் எந்தவித
பிரச்சனையும் இல்லாமல் பயணமானது எப்படி இது நடக்கும்?


- kuruvikal - 12-25-2003

பார்வையாலையே பிள்ளைப்பாக்கியம் கொடுப்பவர்களாச்சே... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இதென்ன பெரிய விசயமா என்ன...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுசரி இதென்ன புதுக்கதை....நாசா கேள்விப்பட்டுதோ...ஐயா நீங்கள் FBI இண்ட விசாரணையில இருப்பியள்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிறகு அது ஜோதிடக் குற்றமாயிரும் கவனம்...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shanthy - 12-26-2003

<!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->அமெரிக்காவில் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பஆயத்தம் செய்தார்கள் கடைசி நேரத்தில்
அது இயங்கமறுத்துவிட்டது எந்த முயங்சியும் செய்தும் பயனளிக்கவில்லை இறுதியாக இந்தியாவில் இருந்து சோதிடரை அழைக்கமுடிவுசெய்து விட்டார்கள்
சோதிடர் வந்து பார்த்த சில மணிநேரத்தில் ராக்கட் எந்தவித
பிரச்சனையும் இல்லாமல் பயணமானது எப்படி இது நடக்கும்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தியச் சாத்திரியார் ராக்கெட்டை ஒரு குலுக்குக் குலுக்கிப்போட்டுப் போவார் அது மேலையெழும்பும். பிறகு சாத்திரிக்கு மவுசுதான்.


- vasisutha - 12-26-2003

:mrgreen:


- Paranee - 12-27-2003

ஆஹா,

இப்படியான கடியை நான் எங்கேயோ கேள்விப்பட்டுள்ளளேனே !

நம்மட சிங் ஒருதரம் அமெரிக்கா வந்தபோது இதை செய்யததாக எங்கேயோ வாசித்துள்ளேன். வலப்பக்கமும் இடப்பக்கமும் சரித்து விட்டு இப்ப அனுப்புங்கள் என்றாராம் ராக்கட் சரியாக போனதாம். நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டு பார்க்க சிங் சொன்னாராம் ஊரிலை மோட்டாh ; சைக்கிள் ஓடிட்டுப்போகும்போது இடையிலை நின்றால் நான் இப்படித்தான் செய்வேன். அங்காலை இங்காலை இருக்கின்ற பெற்றோல் சரியாயிடும் பிறகு வண்டி ஓடும் என்றாராம். எப்படி இருக்கு இதைத்தான் சோதிடத செய்தாரோ

<!--QuoteBegin-shanthy+-->QUOTE(shanthy)<!--QuoteEBegin--><!--QuoteBegin-ganesh+--><div class='quotetop'>QUOTE(ganesh)<!--QuoteEBegin-->அமெரிக்காவில் சந்திரனுக்கு ராக்கட் அனுப்பஆயத்தம் செய்தார்கள் கடைசி நேரத்தில்
அது இயங்கமறுத்துவிட்டது எந்த முயங்சியும் செய்தும் பயனளிக்கவில்லை இறுதியாக இந்தியாவில் இருந்து சோதிடரை அழைக்கமுடிவுசெய்து விட்டார்கள்
சோதிடர் வந்து பார்த்த சில மணிநேரத்தில் ராக்கட் எந்தவித
பிரச்சனையும் இல்லாமல் பயணமானது எப்படி இது நடக்கும்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இந்தியச் சாத்திரியார் ராக்கெட்டை ஒரு குலுக்குக் குலுக்கிப்போட்டுப் போவார் அது மேலையெழும்பும். பிறகு சாத்திரிக்கு மவுசுதான்.<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


- ganesh - 12-31-2003

படியுங்கள்

http://www.tamilworldnews.com/Astrology311203.htm