Yarl Forum
நெடுமாறன் ஜாமீனில் விடுதலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: நெடுமாறன் ஜாமீனில் விடுதலை (/showthread.php?tid=7622)



நெடுமாறன் ஜாமீனில் வி - yarl - 01-06-2004

ஜனவரி 06, 2003

நெடுமாறன் ஜாமீனில் விடுதலை: சிறையில் இருந்து வெளியே வருகிறார்

சென்னை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியாகிறார்.


முதலில் பொடா வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தது.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் காவியத் தலைவன் கிட்டு என்ற புலிகள் ஆதரவு புத்தகத்தை வெளியிட்டதற்காகப் போடப்பட்ட வழக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில் ஜாமீன் கிடைக்காததால் நெடுமாறன் சிறையில் இருந்து வெளியே வர முடியவில்லை.

இந்த வழக்கை விசாரித்த ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதியை தமிழக அரசு திடீரென மாற்றியது. இதையடுத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். அங்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் நேற்று ஜாமீன் மறுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நெடுமாறன் மனு தாக்கல் செய்தார். இதை இன்று விசாரித்த நீதிபதி ராஜன், நெடுமாறனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

நெடுமாறனை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க முயன்ற தமிழக அரசின் கடும் முயற்சிகளையும் மீறி அவர் ஜாமீன் பெற்றுள்ளார்.

அவர் மீதுள்ள அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து விட்டதால் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17 மாத சிறை வாசத்திற்குப் பின் கடலூர் சிறையிலிருந்து நெடுமாறன் வெளியே வருகிறார்.
thatstamil.com


- சாமி - 01-06-2004

சென்னை, ஜன.7- தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறையில் உள்ள நெடுமாறனை பொடா வழக்கில் சென்னை ஐகோர்ட்டு ஜhமீனில் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

ஆனால் நெடுமாறன் மீது ஆலந்தூர் கோர்ட்டில் ஒரு வழக்கு இருந்ததால் அவர் விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. காவிய நாயகன் கிட்டு என்ற புத்தகத்தை நெடுமாறன் கடந்த 93-ம் ஆண்டு வெளியிட்டு இருந்தார். இதற் காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜhமீன் கேட்டு நெடுமாறன் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி திடீரென விடுமுறையில் சென்றதால் இந்த வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டுக்குப் போனது.

ஜhமீன் அப்பீல்

இந்த ஜhமீன் மனுவை செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டு விசாhpத்து தள்ளு படி செய்தது. இதனால் நெடு மாறன் சார்பாக வக்கீல் என்.சந்திரசேகரன் சென்னை ஐகோர்ட்டில் ஜhமீன் அப்பீல் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.கே.ராஜன் முன் நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நெடுமாறன் சார்பாக மூத்த வக்கீல் சந்துரு ஆஜ ரானார். நெடுமாறன் கடந்த 17 மாதமாக சிறையில் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் ஜhமீனில் விட மறுக்கிறhர்கள். இது தவறhனது . ஆகவே இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜhமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் அபுடுகுமார் எதிர்ப்பு தொpவித்தார். நெடுமாறனை ஜhமீனில் விடுதலை செய்யக் கூடாது அவர் மீதான வழக் கில் விரைவில் விசாரணை முடிய உள்ளது. எனவே ஜhமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜhமீனில் விடுதலை

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜன், நெடுமாறனை நிபந்தனை ஜhமீனில் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். நீதிபதி தனது உத்தரவில் கூறி இருப்பதாவது„-

கடந்த 17 மாதமாக நெடுமாறன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆகவே இந்த வழக்கில் அவரை ஜhமீனில் விடுதலை செய்கிறேன். அவர் சென்னையில் தங்கி இருந்து போலீசார் தாக்கல் செய்த வழக்கு விசாரணையின்போது ஆஜராகி விசாரணைக்கு ஒதுத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஐகோர்ட்டு வழங்கிய ஜhமீன் உத்தரவை பெற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அங்கிருந்து விடுதலை உத்தரவைப் பெற்று கடலு}ர் சிறையில் கொடுக்க வேண்டும். அதன்பிறகு தான் நெடுமாறன் விடுதலை செய்யப்படுவார். எனவே சிறை அதிகாhpகள் இன்று விடுதலை செய்ய மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனவே நாளை தான் நெடுமாறன் விடுதலையாக வாய்ப்பு உள்ளது.

நன்றி: தினகரன்்.com


- Aalavanthan - 04-05-2004

உலகளாவிய அளவில் சட்டமும், நீதியும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து நீண்ட நெடிய விவாதம் நடந்தேறிய வண்ணமாய் −ருந்தவந்தாலும், தீவிரவாதமும், கட்டுபாடற்ற சனநாயகமும் வளர்ந்து கொண்டே −ருக்கின்றது. மனித பரிணாம வளர்ச்சியில் மேம்பாடு அடைந்த வருவதாக மானுடவியல் அறிஞர்களும், நிபுணர்களும் தெளிவுபடுத்திக்கொண்டு, தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தாலும், மனித மனம் சகமனிதனை அடிமைப்படுத்த வேண்டும் என்ற நிலையை உயர்த்திக்கொண்டே செல்கிறது.

பண்டைய காலங்களில் அரசர்கள் அடிமைதனத்தை ஊக்குவித்து வந்தாலும் ஒரு நிலையில் அடிமைதனம் முறிந்துவிட்டதாக கூறலாம். −ன்றைய காலங்களில் சனநாயகமுறைமையில் அனைவரும் உரிமையை பெற்றிடவும், காத்திடவும் போதிய சட்டங்கள் −ருந்தும் அடிமைதனம் −துவரையில் களையபடவில்லை.

சமூகத்தில் காணப்பட்ட பரிணாம வளர்ச்சியில் ஒருநாடு மற்றொரு நாட்டை அடிமைப்படுத்த முயற்சி செய்வதும், அதற்குண்டான செயல்களில் ஈடுபடவும் தயங்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

கடந்து சென்ற 2002 ஆம் ஆண்டில் நிகழ்ந்த உலகளாவிய மனித உரிமை மீறல்களை பட்டியல் −ட்டால் −ந்த சமுதாயம் எந்த அளவிற்கு சீரழிந்து உள்ளது என்பதனை நோக்கிடலாம்.

கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமுறைமைகளுக்கு சாத்தியபடாத கைது, சிறைவாசம், காவல்துறையினரின் துப்பாக்கிசூடு, காவல்நிலைய கொலை, வன்முறை, காவல்துறையினரால் ஏவி விடப்பட்ட சமூகவிரோதிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைவெறி சம்பவங்கள் என ஏராளமாக கணகிடப்படுகின்றன.

முக்கிய செய்தியாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ மற்றும் அவரது சகாக்கள் கைது மற்றும் தமிழர் தேசிய கட்சியின் நிறுவனர் திரு. பழ. நெடுமாறன் மற்றும் அவரது சகாக்கள் கைது. −வர்கள் கைது மற்றும் அவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் என்று எடுத்துக்கொண்டால் ஓர் மாபெரும் ஆராய்சியல் −றங்கலாம்.

கடந்த ஆண்டில் கொண்டுவரப்பட்ட ''பொடா'' எனப்படும் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் திரு. வைகோ மற்றும் திரு. பழ.நெடுமாறன் உட்பட அவர்களது சகாக்களில் பலர் கைது செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 நாட்களுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள் சட்டத்தின்படி நிகழ்த்தப்பட்டுள்ளதா? சனநயாகநெறிமுறைகளில் படி செயல்படுத்தப்பட்டுள்ளதா என்றால் −ல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

அவர்கள் கைது செய்யப்பட்டதிற்கு பிறகு அவர்கள் மீது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகள், நீதிமன்ற விசாரணையில் −ருந்த வழக்குகள் உயிரூட்ட, விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றன. −வை குறித்து ஓர் விவாதம் நடத்தினால், சட்டமும் நீதியும் ஆட்சியாளர்களால் எந்த அளவிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பது விளங்கும். −து குறித்த வணக்கங்கள் அடுத்த −தழில் தொகுப்புக்கு உட்படுத்தலாம் என்று நினைகிறோம்.

கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதஉரிமை மீறல்களுக்கு எந்தவித நீதியும், சரியான பதிலும் கிடைக்காத சூழ்நிலையில் உரிமைமீறல்கள் மாபெரும் அளவில் நிகழ்த்த உலகம் தயாராகி கொண்டு உள்ளது.

உலகளாவிய தீவிரவாதம், வளர்ந்துக்கொண்டே −ருக்கிறது. உலகில் தீர்க்கப்பட எத்தனையோ பிரச்சனைகள் நிலுவையில் −ருக்கின்றன. மதச்சண்டைகள் கொடூர சாவுகள் என தொடர்கதைகள் தொடரும் தருவாயில், ஒரு நாடு மற்றொரு நாட்டினை அடிமைப்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவின் செயல்பாடுகள் அமைந்திருந்தன.

''அமெரிக்க அதிபர் புஷ் உலகில் பல பகுதிகளில் −ருக்கும் அமெரிக்க ராணுவ தளபதிகளுக்கு கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்து கூறினார்''.

'ஈராக் பிரச்சனை −ந்த தலைமுறையுடன் முடிக்கப்படவேண்டியது அடுத்த தலைமுறைவரை நீட்டிக்கபடக்கூடாது''

- 2003 - ஆண்டு தொடங்கப்பட சூழ்நிலையில் வெளிவந்த செய்திகள். அமெரிக்காவின் ராணுவதளபதிகள் ஏன் உலகின் பல பாகங்களில் −ருக்க வேண்டும். ஈராக் பிரச்சனை என்பது என்ன? சாதாரண மக்களால் கேட்கப்படும் கேள்விகள் −வை-

அமெரிக்காவின் ஏகாதிபத்ய செயல், உலகின் எல்லா நாட்டினையும் நேரிடையாகவோ, மறைமுகமகவோ ஆட்சி செய்யவேண்டும் என்ற எண்ணம், −வையின் காரணமாக மற்றொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்த துணியும் செயல் அதனால் போர், பாதிப்பு, ஆயுத தளவாட சாமான்கள் விற்பனை என மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர் செயலாகின்றன.

2003 ஆண்டில் தொடக்கத்திலே போர் மேங்கள் ஆழத்தொடங்கிவிட்டன. மாபெரும் யுத்ததிற்கு தயாராக −ருக்கும்படி அமெரிக்காவினால் அறைகூவல்விடப்பட்டு, வழக்கம் போல அதனை ஆமோதிக்க சில நாடுகள் தயாராகி வருகின்றன.

மீண்டும் ஓர் மாபெரும் மனிதஉரிமை மீறலுக்கு சில நாடுகள் தயாராகி வருகின்றது தெரிந்தோ, தெரியாமலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ பல நாடுகள் அதற்கு ஆதரவு அளித்து வருகின்றன. மனிதகுலத்தின் பரிணாம வளர்ச்சிக்கு −தைவிட வேறு எடுத்துக்காட்டு ஏதும் உண்டோ?

நன்றி http://www.aaraamthinai.com/