Yarl Forum
குமார் பொன்னம்பலம் அழியா நினைவாய்....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: குமார் பொன்னம்பலம் அழியா நினைவாய்....! (/showthread.php?tid=7627)



குமார் பொன்னம்பலம் அழ - shanthy - 01-05-2004

<span style='font-size:25pt;line-height:100%'>குமார் பொன்னம்பலம் அழியா நினைவாய்....!(குமார் பொன்னம்பலம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவையொட்டிய நினைவுக்கவி)

சிங்கத்தின் குகைநடுவே
சீறியெழுந்த மாமனிதர்.
சாவின் நாள் எதுவென்று அறியவில்லை.
என்றோ ஒருநாள் சிங்களத் துப்பாக்கி
முனையில் அது இருப்பதை
உணர்ந்த மனிதன்.

குமார் பொன்னம்பலம் !
குரல் தந்து தமிழினத்தின்
குரல்வளை நசுங்கிய பொழுது
உலகெங்கும் தன் குரலை
உயர்த்திக் கூவிய மானத்தான்.

நசுங்கிய நம் நாளின் சில பொழுதில்
நானிலத் தெருவிறங்கி நமக்காய்
நட்புக்கரம் தந்து
ஐரோப்பா முதல் அகிலத்தின்
பலதேச வாசலெங்கும்
தமிழ் அவலம் எடுத்துரைத்த
தமிழ்மறவன்.

சிறையறையில் தவித்தவர்க்கு
சில்லறை வாங்காமல்
தொண்டாற்றிய தமிழ்த் தொண்டன்.
சாவெடுத்து நல்லவனை நாலாண்டு
சென்றுவிட்டதின்று.
நாவிலெங்கள் நினைவுகளில்
குமார் பொன்னம்பலம்
அழியா நினைவாய்....
என்றென்றும் எம் நினைவில்.....

05.01.04.</span>


- sOliyAn - 01-05-2004

மாமனிதர் குமார் பொன்னம்பலம் இறப்பதற்கு சொற்பகாலம் முதல் ஐபிசி வானொலிக்களித்த ஓயாத அலைகள்பற்றிய பேட்டியில் இருந்து சிறுதுளி!


- yarl - 01-05-2004

சிங்கத்தின் குகைநடுவே
சீறியெழுந்த மாமனிதர்.

ஆமாம் இன்றும் பலர் கூவுகிறார்கள் ..இது சமாதான காலம் என்றபடியால் யுத்தகாலத்தில் கர்சித்த மாமனிதர் அவர் .
மாமனிதர்களை எந்தக்காலத்திலும் மறவாமலிருப்போம்.

சோழியன் உங்கள் தகவல் பெட்டகம் இன்னும் பல ஒலி ஆவணங்களைத் தரட்டும்.