| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 290 online users. » 0 Member(s) | 288 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,311
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,231
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,063
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,486
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| சண்மிக்ஸ் இணையத்தளத்தின் பிறந்த தினம் |
|
Posted by: மட்டி - 10-10-2004, 03:26 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (8)
|
 |
சண்மிக்ஸ் இணையத்தளம் (www.sunmix.com) ஆரம்பித்து முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய இருக்கிறது.
எதிர்வரும் 24ம் திகதி ஒக்டோபர் மாதம் அன்றே தனது முதலாவது இனிமையாக பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. சண்மிக்ஸ் மீடியா நெற்வேர்க் என்ற பெயரில் ஆரம்பிக்கபட்ட இந்த இணையத்தள நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக முதலாம் ஆண்டில் காலடி வைக்கிறது. இந்த இணையத்தளத்திற்கு எனது இனிமையான பிறந்தநாள் நல்வாழத்துக்கள்.
அத்துடன் இவ்இணையத்தளம் இலங்கை கொழும்பிலிருந்து இயங்கி வருவது தெரிந்ததே, அதுவும் ஒரு சிறு இளைஞன் தான் அதை நடத்தி வருகிறார். எவருடைய உதவியுமின்றி நடத்தி வரும் அவர் தன்னுடைய பாடசாலை கல்வியையும் தொடர்ந்து வரகிரார். இணையத்தளத்தினுாடாக தமிழ் திரையுலகில் வெளியாகும் புத்தம் புதிய பாடல்கள், படங்களை இலகுவாகவும் இலவசமாகவும் பெற்று கொள்ளக்கூடியவாறே இணையத்தளம் அமைந்துள்ளது. ஒவ்வொரு தனிப்பட்ட சேவைகளுக்குமென்று தனிப்பட்ட இணையப் பெயரிலையே இயங்கிறது. அந்த இளைஞனின் சந்தோசத்துக்காகவும் ஒரு வாழத்துச்செய்தி பரிமாறிக்கொள்ளுங்கள்.
<b>பிறந்தின வாழ்த்துக்கள்</b>
நன்றி
|
|
|
| நீ தலை நமிர்ந்த பின்........! |
|
Posted by: tamilini - 10-10-2004, 02:43 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (5)
|
 |
<img src='http://www.yarl.com/forum/files/images.jpg' border='0' alt='user posted image'>
<b>நீ தலை நமிர்ந்த பின்........!</b>
வரலாறு படைத்தி்ட
சுமை தாங்கி - நீ
வெடி தாங்கி புறப்பட்டு விட்டாய்..
அடுப்புக்கு பாரமாய்- அன்று
அடிமையாய் அடக்கப்பட்டு...
ஆண்களுக்கு கட்டுண்டு....
இழந்தவைகள் எத்தனை...
பெண் என்று சொல்லுகையில்.
பேதைகளாய் எண்ணியவர்கள்..
எளனமாய் பார்த்தவர்கள்..
இன்று ஏறெடுத்து பார்க்கும்
நிலையை நிலை நாட்டி
வரலாறு படைத்திட
வழிகாட்டியாய் நீ..
உயிருக்கும்
உறவுக்குவுக்கும் கட்டுப்பாடாது..
யாவையும் கடந்து
கரும் புலியாகி..
பாயும் புலியாகி.. இன்று...
பகை முடிக்க புறப்பட்டு விட்டாய்..
பெண் வீரத்திற்கு ஒரு வரலாறு..
குருதியால் எழுதிட...
குமிறிடும் எரிமலையாய்...
குண்டுடன் ஒன்றாகி..
வெடித்து..
இடித்து விழுத்திவிட்டாய்..
இயலாமை என்னும் பெரும் சுவரை...
உனக்கு கீழே தான்..
சூரிய உதயமும்
அஸ்த்தமனமும்..
தடைகள் தாண்டி... நீ
தலை நமிர்ந்த பின்........!
|
|
|
| தூது பத்திரிகை |
|
Posted by: Nitharsan - 10-09-2004, 08:04 AM - Forum: புலம்
- Replies (4)
|
 |
தூது எனும் பத்திரிகை புதிதாய் வந்திருக்கு இருக்கிற பத்திரிகைகள் எல்லாம் எழுதாத எதை எழுதப்போயினமென்டுதான் தெரியேல்ல. இப்பவே எல்லாம் இணையத்தின்ர கொப்பி (copy) தானே இவையள் என்ன மாதிரி என்று தெரியேல்ல? ஏதோ நடுநிலையேன்று தமிழ்த்தேசியத்தை மறவாமலிருந்தால் போதும்...
தூது தமிழர்களுக்காய் தமிழர்களிடம் தூது விட்டால் நிச்சயம் தமிழர்கள் துர்துவுக்கு தூது விடுவார்கள்...........
-நேசமுடன் நிதர்சன்-
|
|
|
| கொம்பறை நூல் வெளியீட்டு விழாவும் வன்னி விழாவும் |
|
Posted by: Nitharsan - 10-08-2004, 11:53 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
கனடா வாழ் வன்னத்தமிழ் மக்கிளினது ஓரே அமைப்பான வன்னித்தமிழ் கலாச்சார அமையத்தின் வருடாந்த நூலான கொம்பறை நூல் வெளியீட்டு விழாவும் வன்னி விழாவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30மணிக்கு ரொரன்ரோ பாதேஸ் அன் செப்பேட்டில்அமைந்துள்ள பாதேஸ் கொம்யுூனிற்றி சென்ரரில் நடைபெறவுள்ளது. அன்புடன் அனைவரையும் அழைத்து நிற்க்கின்றோம்
குறிப்பு: இந்நிகழ்வு வன்னி மக்களுக்கு மட்டுமானதல்ல ஒவ்வொரு தமிழ் உணர்வுள்ள தமிழனும் பங்கு பற்றலாம்
நன்றி
சிறப்பு நிகழ்ச்சிகளாக:
>> பனிப் பிராந்துகள்
>> ருத்ர தாண்டவம்
>> மனிதம்
>> பிரளயம்
மறறும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கிறது
address: Bathurst Community Centre
4588 Bthurst street
(North of sheeppard)
மேலதிக விபரங்களுக்கு: (416) 520.1214 மற்றும் (416) 319-9022
இதுபற்றிய உடனடி தகவல்களுக்கு:www.vannithendral.tk
-நேசமுடன் நிதர்சன்-
|
|
|
| what do you think about this site... |
|
Posted by: bharathy - 10-08-2004, 07:07 PM - Forum: அறிமுகம்
- Replies (8)
|
 |
வணக்கம்,
மன்னிக்கவும் for not writing my first post in Tamil.But the reason (for my urgency)is I came across this web site(www.tamilresearchandnews.com) and its articles(political) have been regularly seen in TamilNaatham.com.My concern is when I was reading the historical contents in the form of research papers I get reaaly get confused.The entire research done by the author clearly states that all of our gods are came from Buddha.Even the Lord Muruga whom we address as Tamil God.All the people who have served tamil and our religon are as buddhists,including Thirumular and Thiruvalluvar.
According to author our religion is (before thousand years ) Buddhism and we are classified as Tamil Buddhists.
This website is being run from Jaffna....
I need all the views about the contents of that site...(I'm really confused now)
Bharathy
|
|
|
| தமிழ் பாடை |
|
Posted by: paadai - 10-08-2004, 07:03 PM - Forum: அறிமுகம்
- Replies (43)
|
 |
நானும் இந்த களத்திற்கு புதியவன் அனைவருக்கும் வணக்கம்! நல்லது கெட்டத நீங்கள் தான் சொல்லிதரோனும்.
|
|
|
| நான் நிலை தளர்ந்த போது ........... |
|
Posted by: AJeevan - 10-08-2004, 05:22 PM - Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல்
- Replies (30)
|
 |
[size=15]நான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.
அதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.
நான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.
முன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.
உடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.
என் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.
போலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.
இன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.
இவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.
நன்றிகள்
AJeevan
|
|
|
| தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல |
|
Posted by: tamilini - 10-07-2004, 11:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (23)
|
 |
<b>தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல்</b>!
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் நேற்றுப் பகல் அதிரடிப் பாய்ச்சல் நடத்தியிருக்கின்றனர்.
தலைநகர் பிராங்க்பேர்ட்டில் உள்ள அவரது வீடு ஜேர்மன் காவல்துறையினரால் திடீரென முற்றுகையிடப்பட்டது. வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களையும் சோதனை செய்யவேண்டும் என்ற பெயரில் அவர்கள் அள்ளிச்சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண் ஊடகவியலாளரையும், அவரது கணவரையும் நீதிமன்றில் ஆஜராகும்படி தெரிவிக்கும் நீதிமன்ற உத்தரவையும் காவல்துறையினர் அவர்களிடம் கையளித்தனர்.
ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது.
31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் ரமேஷ் வவுனியன் (வயது 36) இலங்கை, வவுனியாவில் பிறந்தவர்.
நீண்டகாலம் ஜேர்மனியில் வசித்துவரும் இவர்கள் ஜேர்மன் பிரஜைகளாவர். அவர்களின் சிறுபிள்ளைகளான பார்த்தீபன் (திலீபன்) என்ற மகனும், வவுனிதா என்ற மகளும் கூட ஜேர்மன் பிரஜைகளே. இவர்களது வீடே நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல்களோடு இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே ஜேர்மன் காவல்துறையினர் இவர்களது வீட்டைச் சுற்றிவளைத்தனர் என்று கூறப்படுகின்றது. சுமார் இருபத்தைந்து காவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் சகிதம் அதிரடிப் பாய்ச்சல் நடத்தினர்.
அச்சமயம் கணவர் ரமேஷ் வவுனியன், தனது வேலைத்தளமான டிராக்டர் கம்பனியில் பணியிலிருந்தார். காவல்துறையினர் அங்கு சென்று அவரை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீடு அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது. இணையத்தள வானொலிக்கான கருவிகள் மற்றும் ஊடகவியலாளரின் இலத்திரனியல் கருவிகள் உட்பட வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் - நிலத்தில் விரித்திருந்த தரைவிரிப்பு உட்பட சகலவையும் - பொலீஸாரால் அள்ளிச்செல்லப்பட்டன.
பரிசோதனைக்காக அவற்றைத் தாங்கள் கொண்டு செல்கின்றார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கும் நீதிமன்ற உத்தரவையும் அவர்களுக்குப் பொலீஸார் கையளித்தனர்.
இலங்கையில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருபவர் சாந்தி ரமேஷ். அவர் அண்மையில் கொழும்பு வந்திருந்தார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய அதன் வருடாந்தப் பொதுக்கூட்ட நிகழ்வில் அவர் பங்கு கொண்டார்.
படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் நடேசனின் துணைவியாருக்கு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஒருதொகை பணத்தை, நடேசனின் துணைவியாரிடம் அந்த நிகழ்ச்சியில் வைத்துக் கையளித்தார்.
ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக அதுவும் பெண் ஊடகவியலாளருக்கு எதிராக - பயங்கரவாதத் தடுப்புப் போர்வையில் மேற்குலக பொலீஸார் பாய்ச்சல் நடத்தியிருப்பது தமிழ் ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
நன்றி புதினம்.கொம்..
|
|
|
|