![]() |
|
நீ தலை நமிர்ந்த பின்........! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீ தலை நமிர்ந்த பின்........! (/showthread.php?tid=6630) |
நீ தலை நமிர்ந்த பின்...... - tamilini - 10-10-2004 <img src='http://www.yarl.com/forum/files/images.jpg' border='0' alt='user posted image'> <b>நீ தலை நமிர்ந்த பின்........!</b> வரலாறு படைத்தி்ட சுமை தாங்கி - நீ வெடி தாங்கி புறப்பட்டு விட்டாய்.. அடுப்புக்கு பாரமாய்- அன்று அடிமையாய் அடக்கப்பட்டு... ஆண்களுக்கு கட்டுண்டு.... இழந்தவைகள் எத்தனை... பெண் என்று சொல்லுகையில். பேதைகளாய் எண்ணியவர்கள்.. எளனமாய் பார்த்தவர்கள்.. இன்று ஏறெடுத்து பார்க்கும் நிலையை நிலை நாட்டி வரலாறு படைத்திட வழிகாட்டியாய் நீ.. உயிருக்கும் உறவுக்குவுக்கும் கட்டுப்பாடாது.. யாவையும் கடந்து கரும் புலியாகி.. பாயும் புலியாகி.. இன்று... பகை முடிக்க புறப்பட்டு விட்டாய்.. பெண் வீரத்திற்கு ஒரு வரலாறு.. குருதியால் எழுதிட... குமிறிடும் எரிமலையாய்... குண்டுடன் ஒன்றாகி.. வெடித்து.. இடித்து விழுத்திவிட்டாய்.. இயலாமை என்னும் பெரும் சுவரை... உனக்கு கீழே தான்.. சூரிய உதயமும் அஸ்த்தமனமும்.. தடைகள் தாண்டி... நீ தலை நமிர்ந்த பின்........! - kavithan - 10-10-2004 நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் - tamilini - 10-10-2004 வாழ்த்துக்களிற்கு நன்றிகள்...! Re: நீ தலை நமிர்ந்த பின்.. - வெண்ணிலா - 10-10-2004 tamilini Wrote:பெண் என்று சொல்லுகையில். <b>இன்று தமிழீழ பெண்கள் எழுச்சி தினம்தானே</b> <b>அக்கா கவிதை நன்று. தொடர்ந்தும் எழுத வாழ்த்துக்கள்</b> - tamilini - 10-10-2004 நன்றிங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-10-2004 சரிங்க |