![]() |
|
தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல (/showthread.php?tid=6637) Pages:
1
2
|
தமிழ் ஊடகவியலாளருக்க - tamilini - 10-07-2004 <b>தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் பாய்ச்சல்</b>! இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜேர்மன் பிரஜையான தமிழ்ப்பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக ஜேர்மன் காவல்துறையினர் நேற்றுப் பகல் அதிரடிப் பாய்ச்சல் நடத்தியிருக்கின்றனர். தலைநகர் பிராங்க்பேர்ட்டில் உள்ள அவரது வீடு ஜேர்மன் காவல்துறையினரால் திடீரென முற்றுகையிடப்பட்டது. வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களையும் சோதனை செய்யவேண்டும் என்ற பெயரில் அவர்கள் அள்ளிச்சென்றனர். சம்பந்தப்பட்ட பெண் ஊடகவியலாளரையும், அவரது கணவரையும் நீதிமன்றில் ஆஜராகும்படி தெரிவிக்கும் நீதிமன்ற உத்தரவையும் காவல்துறையினர் அவர்களிடம் கையளித்தனர். ஆஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம், ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (சங்கமம்), தமிழ் இணையத்தள வானொலி மற்றும் பல்வேறு இணையத்தள ஊடகங்கள் ஆகியவற்றுக்காகப் பணியாற்றி வருபவர் சாந்தி ரமேஷ் இவற்றுள் தமிழ் இணையத்தள வானொலி நேரடியாக அவரால் நடத்தப்படுவது. 31 வயதுடைய சாந்தி ரமேஷ் யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கணவர் ரமேஷ் வவுனியன் (வயது 36) இலங்கை, வவுனியாவில் பிறந்தவர். நீண்டகாலம் ஜேர்மனியில் வசித்துவரும் இவர்கள் ஜேர்மன் பிரஜைகளாவர். அவர்களின் சிறுபிள்ளைகளான பார்த்தீபன் (திலீபன்) என்ற மகனும், வவுனிதா என்ற மகளும் கூட ஜேர்மன் பிரஜைகளே. இவர்களது வீடே நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. பயங்கரவாதச் செயல்களோடு இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்திலேயே ஜேர்மன் காவல்துறையினர் இவர்களது வீட்டைச் சுற்றிவளைத்தனர் என்று கூறப்படுகின்றது. சுமார் இருபத்தைந்து காவலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் சகிதம் அதிரடிப் பாய்ச்சல் நடத்தினர். அச்சமயம் கணவர் ரமேஷ் வவுனியன், தனது வேலைத்தளமான டிராக்டர் கம்பனியில் பணியிலிருந்தார். காவல்துறையினர் அங்கு சென்று அவரை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தனர். வீடு அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது. இணையத்தள வானொலிக்கான கருவிகள் மற்றும் ஊடகவியலாளரின் இலத்திரனியல் கருவிகள் உட்பட வீட்டிலிருந்த அனைத்துப் பொருள்களும் - நிலத்தில் விரித்திருந்த தரைவிரிப்பு உட்பட சகலவையும் - பொலீஸாரால் அள்ளிச்செல்லப்பட்டன. பரிசோதனைக்காக அவற்றைத் தாங்கள் கொண்டு செல்கின்றார்கள் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர் என அறியவந்தது. சம்பந்தப்பட்ட கணவன் - மனைவியை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பணிக்கும் நீதிமன்ற உத்தரவையும் அவர்களுக்குப் பொலீஸார் கையளித்தனர். இலங்கையில் நடக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருபவர் சாந்தி ரமேஷ். அவர் அண்மையில் கொழும்பு வந்திருந்தார். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் நடத்திய அதன் வருடாந்தப் பொதுக்கூட்ட நிகழ்வில் அவர் பங்கு கொண்டார். படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அக்கூட்டத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அவர் நடேசனின் துணைவியாருக்கு சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ஒருதொகை பணத்தை, நடேசனின் துணைவியாரிடம் அந்த நிகழ்ச்சியில் வைத்துக் கையளித்தார். ஈழத்தமிழருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் தமிழ் ஊடகவியலாளருக்கு எதிராக அதுவும் பெண் ஊடகவியலாளருக்கு எதிராக - பயங்கரவாதத் தடுப்புப் போர்வையில் மேற்குலக பொலீஸார் பாய்ச்சல் நடத்தியிருப்பது தமிழ் ஊடக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. நன்றி புதினம்.கொம்.. - kavithan - 10-07-2004 நன்றி அக்கா... - sOliyAn - 10-08-2004 சாந்தி வவுனியனுக்கு இப்படி ஒரு நெருக்கடி யாரால் வந்ததென அறிய முடியவில்லை. ஜேர்மனியில் சட்டங்களும் அதற்குரிய நடவடிக்கைகளும் சற்று வேறுபட்டவைதான். இதை ஜேர்மனியிலுள்ள தமிழர்கள் கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மூலம் அறிவார்கள். எனினும் சாந்தி வவுனியன் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியும் நட்டமும் சீராக எவளவு காலம் எடுக்கும் என்பதுதான் கேள்விக்குறி. எனினும் மனந்தளராமல் அவர்கள் இருக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு எதைக் கூறுவது என்று புரியவில்லை. - hari - 10-08-2004 தேசதுரோகிகளின் வேலையாகதான் இருக்கும்...??? - shanmuhi - 10-08-2004 Quote:தேசதுரோகிகளின் வேலையாகதான் இருக்கும்...??? - tamilini - 10-08-2004 சகல இடர்களிலும் இருந்து சாந்தியக்காவும் அவரை சாந்தவர்களும் விடுபட.. இறைவன் அருள்புரிவாராக...! - வெண்ணிலா - 10-08-2004 <b>பாவம் சாந்தி அக்காவும் அவரது குடும்பத்தினரும். அவர்களுக்கு இறைவன் துணைபுரிவாராக</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops:
- சுடலை - 10-08-2004 பாவம் சாந்தி அக்கா தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறவர் அவருக்கும் அவர்குடும்பத்தாருக்கும் ஆண்டவன் துணைபுரியவேண்டும் - shanmuhi - 10-08-2004 º¡ó¾¢Â¢ý ÌÎõÀõ þ¼÷¸Ç¢Ä¢ÕóРŢÎÀ¼ þ¨ÈŨÉô À¢Ã¡ò¾¢ôÀ§¾¡Î... Áɨ¾ ¾ÇÃÅ¢¼¡Áø ¨¾Ã¢Âòмý ¦ºÂüÀ¼ н¢¨ÅÔõ ¾ÕõÀÊ §ÅñÊ즸¡û¸¢§Èý. - paadai - 10-09-2004 விசாரணைக்கு தானே கூப்பிட்டது ஏதோ தூக்கில போட போறமாதிரி எழுதிறியள்! ஊடகவியளாளர்களுக்கு இது சாதாரணம் வேணுமெண்டால் சேது மாமாவை கேட்டுபாருங்கோ.மலையை பிளந்து மாமரத்தில சாத்தி வைகிற விசயம் எண்டுதான் சொல்லுவார் Quote:shanmuhi - shanmuhi - 10-09-2004 ¯ñ¨ÁÂ¡É ¾Á¢ÆÉ¡¸ þÕ󾡸 Áɺ¡ðº¢Â¢ý ÀÊ ±ØÐõ. - sOliyAn - 10-10-2004 அது சரி! இவ்ளோாாாாாாாாாா பெரிய்ய்ய்ய படம் எப்பிடி இணைக்க முடிஞ்சது?! - sethu - 10-10-2004 உண்மையில் அது ஒரு மலையை பிளந்து மாமரத்தில சாத்தி வைகிற விசயம் எண்டுதான் - sethu - 10-10-2004 நானும் சொல்லுறன். - paadai - 10-10-2004 shanmuhi Wrote:¯ñ¨ÁÂ¡É ¾Á¢ÆÉ¡¸ þÕ󾡸 Áɺ¡ðº¢Â¢ý ÀÊ ±ØÐõ.1.மனச்சாட்சிகும் நான் சொன்ன விசயத்திற்கும் இங்கு சம்பந்தமே இல்லை 2.ஊடகத்துறையில் தங்களை அனுபவசலிகள் என்று அடயாளப்படுத்தியவர்கள் ஜேர்மனியர்களை குறைவாக எடை போட்டிருக்கமாட்டார்கள்,ஆகவே இது எதிர்பார்கபட்ட விடயமாகவே இருக்க வேண்டும். 3.ஈழத்து அரசியல் தோடர் பான இனுமொரு இணயதளம் கடந்த 2நாட்களாக வலையில் இல்லை 4.2€ மாதகட்டணத்திற்கு ஒரு இணய தள உரிமம் பெறமுடியும் ஆனால் அதற்கு பின்னால் உள்ளசட்டதிட்டங்கள் 364பக்கங்களை கொண்ட ஒரு புத்தகமாகும்(ஜேர்மனியில்).ஆனால் எத்தனை இணையத்தள வெளியீடாளர்களுக்கு இது தேரியும்,தெரிந்தாலும் அதன்படி நடக்க முடியாது ஏனென்றால் நம்நாட்டு அரசியல் அப்படி. அகவே இது எதிபார்கபட்ட ஒரு விடயம் என்கிறேன். வேதனை தான் அனால் தவிர்க்கமுடியாதது. - paadai - 10-10-2004 பிரபல ஊடகவியளார் சேது அங்கிளே இதை ஒப்புகொள்கிறார் sethu Wrote:உண்மையில் அது ஒரு மலையை பிளந்து மாமரத்தில சாத்தி வைகிற விசயம் எண்டுதான் sethu Wrote:நானும் சொல்லுறன். இது தொடர்பாக அவருக்கு தெரிந்ததை களத்தில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.அண்மையில் இவர் சாந்தியக்கா விட்டிற்கு வந்து செண்றவர் மிக நெருங்கிய குடும்ப நண்பரும் கூட தெரிந்ததை சொல்லுங்கோ அங்கிள் - ஆவி - 10-10-2004 ஓரு பெண் ஊடகவியளாளருக்கு ஏற்பட்ட இவ்விடயம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் ஜேர்மனிக்கு வெளியில் இருக்கும் ஊடகவியளாளரும் ஊடகங்களும் அக்கறை எடுத்து கண்டிக்குமளவிற்கு ஜேர்மனியில் இருக்கும் அமைப்புக்கள் எழுத்தாளர்கள் அவர்கள் ஊடகவியளாளர்கள் பெண்ணிலைவாதிகள் மண்ணியவாதிகள் என்று கூறுபவர்களின் அமைதிக்கு என்ன காரணம் என்று புரியவில்லை இதுதான் மிக வேதனையான விடயம் - kavithan - 10-10-2004 ஆவி Wrote:ஓரு பெண் ஊடகவியளாளருக்கு ஏற்பட்ட இவ்விடயம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் ஜேர்மனிக்கு வெளியில் இருக்கும் ஊடகவியளாளரும் ஊடகங்களும் அக்கறை எடுத்து கண்டிக்குமளவிற்கு ஜேர்மனியில் இருக்கும் அமைப்புக்கள் எழுத்தாளர்கள் அவர்கள் ஊடகவியளாளர்கள் பெண்ணிலைவாதிகள் மண்ணியவாதிகள் என்று கூறுபவர்களின் அமைதிக்கு என்ன காரணம் என்று புரியவில்லை இதுதான் மிக வேதனையான விடயம்இது கவலைக்கு உரிய விடையம் தான் ஆவி... என்ன தான் செய்யினம் அப்ப அவை .. கேஸ் வென்ற பின் வாழ்த்து சொல்ல தான் வருவினமோ? - paadai - 10-10-2004 ஆவி Wrote:ஓரு பெண் ஊடகவியளாளருக்கு ஏற்பட்ட இவ்விடயம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம் ஆனால் ஜேர்மனிக்கு வெளியில் இருக்கும் ஊடகவியளாளரும் ஊடகங்களும் அக்கறை எடுத்து கண்டிக்குமளவிற்கு ஜேர்மனியில் இருக்கும் அமைப்புக்கள் எழுத்தாளர்கள் அவர்கள் ஊடகவியளாளர்கள் பெண்ணிலைவாதிகள் மண்ணியவாதிகள் என்று கூறுபவர்களின் அமைதிக்கு என்ன காரணம் என்று புரியவில்லை இதுதான் மிக வேதனையான விடயம் என்னையா ஆளாளுக்கு நொய் நொய் எண்டுகொண்டு என்ன காரணத்துக்காக இந்த திடீர் நடவடிக்கை ஏற்பட்டது எண்டு யாருக்காவது தெரியுமா? தெரியாமல் வன்மையாக கண்டிக்கபடவேண்டுமென்றால் நீங்கள் என்ன அரசியல் பேச்சு மேடையில சூடுவaங்கி செத்த ஆவியா? - shanmuhi - 10-10-2004 Á¡Š¼÷ «Å÷¸§Ç... ¿£í¸Ùõ ´Õ ¾Á¢úÁ¸ý ¾¡§É....? ? ? |