Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 458 online users.
» 0 Member(s) | 456 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  மும்பை எக்ஸ்பிரஸ்-கமல்
Posted by: yarl - 11-07-2004, 05:23 PM - Forum: சினிமா - Replies (5)

புதிய படத்திற்கு "மும்பை எக்ஸ்பிரஸ்' என பெயர்

ராமதாசுடன் மோத
தயாராகும் கமல்

ரஜினியின் "சந்திரமுகி'க்கு போட்டியாக ரிலீஸ்

சென்னை, நவ.7:

திரைப்படங்களுக்கு தமிழ்ப்பெயர்தான் வைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தி வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார். இந்த பெயருக்கான காரணம் என்ன என்பது படம் வெளியானபிறகு தெரியும் என்று கூறியுள்ள கமல், இதற்கு அவர் கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு நடிகர்கள் நெப்போலியன், கரண், வையாபுரி, மதன்பாப், இயக்குனர்கள் சரண், சந்தானபாரதி, முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் உள்ளிட்ட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தனது பிறந்தநாளையொட்டி நடை பெற்ற தமிழ் இனி என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவமாணவிகளுக்கு கமல் பரிசுகளை வழங்கினார். அம்பத்தூரில் செயல்பட்டு வரும் தாய்த் தமிழ் கல்விப்பணிக்கு நிதி உதவியை கவிஞர் தாமரை, அவரது கணவர் தியாகு ஆகியோரிடம் கமல் வழங்கினார். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த தனது ரசிகர்களின் குடும்பத்திற்கும் அவர் நிதி உதவி வழங்கினார். பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நற்பணி இயக்கத்தின் மூலமாக எனது ரசிகர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கு அரசியல் கருத்துக்களை சொல்ல நான் அருகதையற்றவன். இந்த நற்பணி இயக்கம் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம். ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தமிழ் மற்றும் இந்தியில் அடுத்த படம் நடிக்கி றேன். இந்த படம் பிரம்மாண்டமான முறையில் பெரும் பொருட்செலவில் தயாராகிறது. "மும்பை எக்ஸ்பிரஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

தமிழில் நாசர், பசுபதி, வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியில் இயக்குனர் மகேஷ் மஞ்சரேக்கர், ஓம்புரி, சவுரவ் சுக்லா ஆகியோர் நடிக்கின்றனர். தாய்த்தமிழ் பள்ளிக்கு நான் அளித்து உள்ளது ஆரம்ப உதவி. வடநாட்டைச் சேர்ந்த மாஜி அரசியல்வாதி ஒருவர் குடிசையில் இயங்கும் பள்ளிகளுக்கு டெண்ட்களை எங்கள் நற்பணி இயக்கத்தின் மூலமாக அளிக்கிறார். பெயர் சொல்ல விரும்பாத அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நற்பணி மன்றம் நட்சத்திர இயக்கமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கே: படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று ராமதாசும், திருமாவளவனும் கூறி வரும் நிலையில், மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருக்கிறீர்களே? அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்களா?
ப: தமிழ்ப்படிக்கிற சில நடிகர்களில் நானும் ஒருவன். திருமாவளவன் எழுதிய கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். இந்த படத்திற்கு மும்பை எக்ஸ்பிரஸ் என்று பெயர் வைத்திருப்பதற்கான காரணம் படம் வெளியான பிறகு தெரிய வரும். அவர்கள் வீண் சர்ச்சைகளை கிளப்பமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

கே: "சந்திரமுகி' படத்தில் ரஜினியுடன் நடிக்கிறீர்களா?
ப: அது சிவாஜி பிலிம்ஸ் தயாரிக்கும் படம். சிவாஜி வீடு என் தந்தை வீடு. அவர்கள் அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

கே: ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தீர்களே? அது இந்த படம்தானா?
ப:ரஜினியுடன் இணைந்து நடிக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் இந்த படத்துடன் அதை முடிச்சு போடாதீர்கள்.

கே: திரைப்பட உலகுக்கு முதல்வர் அறிவித்துள்ள சலுகைகள் பற்றி...
ப: திரையுலகம் சார்பில் அனைவரும் சேர்ந்து நாளை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா நடை பெறுகிறது. அதற்கு முன்பாக நான் அதுபற்றி சொல்லி விவாதத்தைக் கிளப்ப விரும்பவில்லை. அற்புதமான ஒரு செயலை சரியான நேரத்தில் முதல்வர் செய்துள்ளார். அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கே:நாளை நடைபெறும் விழாவில் நீங்கள் கலந்துகொள்கிறீர்களா?
ப: நிச்சயம் கலந்துகொள்வேன்.
கே: மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்கள் கேரக்டர் என்ன?
ப: அந்த படத்தில் அவினாசி என்ற பெயரில் வித்யாசமான கேரக்டரில் நடிக்கிறேன்.

கே: தமிழனாக பிறந்ததால்தான் ஹாலிவுட் படங்களில் நடிக்க முடியாமல் போனதா?
ப: நான் ஹாலிவுட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று பலர் கூறுகிறார்கள். இதை வஞ்சகப் புகழ்ச்சியாக கருதுகிறேன். இங்கிருந்துகொண்டு பெயர் வாங்குவதைத்தான் நான் பெருமையாகக் கருதுகிறேன். உலக அளவில் இந்தியா பல துறைகளில் முன்னோடியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் துறையில் இந்தியா முன்னோடியாக இருக்கிறது. இதேபோல் விளையாட்டு மற்றும் சினிமாத் துறையிலும் இந்தியா முன்னோடியாக திகழும். இதை நாம் வாழும் காலத்தில் நாம் பார்க்கப்போகிறோம்.

கே: மருதநாயகம் படத்தை எப்போது தொடங்கப்போகிறீர்கள்?
ப:மருதநாயகத்தை மறுபடியும் நினைவு கூற வைத்ததில் எனக்கு பெருமை. அந்த படம் நிச்சயம் வரும்.
கே: வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டதாக ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தீர்களே?
ப: நான் தோல்விகளை ஒப்புக்கொள்ள தயங்கியதில்லை. என் தோல்விகளை நான் பகிரங்கமாக ஒப்புக்கொள்வேன்.

கே: உங்கள் கவிதை தொகுப்பு எப்போது வெளிவருகிறது.
ப:விரைவில் வெளிவரும்.
கே: அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?
ப: எனக்கு அரசியல் தெரியாது. அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா என்று நீங்கள் என்னைக் கேட்பது விக்ரம் தர்மா மாதிரி உங்களால் பல்டி அடிக்க முடியுமா என்று நான் கேட்பதுபோல் இருக்கும்.

கே: மும்பை எக்ஸ்பிரஸ் படம் எப்போது தொடங்குகிறது? எப்போது ரிலீசாகும்?
ப: இன்னும் 10 நாட்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஏப்ரல் மாதம் படத்தை ரிலீஸ் செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஜினி நடிக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்து வரும் சந்திரமுகி படமும் ஏப்ரல் மாதம்தான் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Print this item

  பிறந்தநாள்கவியரங்கு
Posted by: Suji - 11-07-2004, 11:57 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - No Replies

நண்பர்களே களத்தில் இவங்களுடைய இணயங்கள் பற்றி கருத்துக்கூறி ஓய்ந்துவிட்ட நாங்கள் வித்தியாசமாக பொன்விழா கொண்டாடும் எம் தலைவரை கவியால் வாழ்த்துவோம் குருவியார் கவிதைகள் எழுதி கலக்குகின்றார் .மற்றவர்களும் தங்கள் திறமையை காட்டலாம் தானே

பிறந்தநாள்கவியரங்கு

Print this item

  "கோணல் கறுணாவை" வாழ்த்துங்கள்!!!
Posted by: கறுணா - 11-07-2004, 12:55 AM - Forum: நகைச்சுவை - Replies (68)

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

உங்கள் ஆதரவுடன் களத்தில் ஐம்பதாவது அதிரடிக் கருத்தை விதைக்கப்போகும் "கோணல் கறுணாவை" உலகமே வாழ்த்தத் தயாராகும் இவ்வேளை, கள உறவுகளுக்கு வாழ்த்த சந்தர்ப்பம் வழங்கவுள்ளேன் என்பதை மகிழ்சியுடன் அறியத்தருகிறேன். எனைப் புழுக, புகழ விரும்புவோர் கீழ் உங்களது பதிவுகளைப் பதியலாம்.

இருக்க, எனது முன்னனி ஆலூசகர்களான "டக்லூசு", "பரந்தன் ராசு", "ராமராசு", "குஎருமைதுரை", ... போன்றோரிடம் கைலெவல் மந்திராலோசனை நடாத்தியதன் விளைவாக, எனது குட்சியின் சுலோகமாக இருந்த "எடுப்பார் கைப்பிள்ளையை" மாற்றி "நான் ஒரு வெங்காயம்" என மாற்றியமைத்திருக்கிறேன். இதை எனது குட்சியின் தாரக மந்திரமாக உலகுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கிறேன். இதன்மூலம் நாட்டு, உலக அரசியலில் செல்வாக்கை செலுத்த முடியுமென நம்புகிறேன்.

உங்கல் அன்பை கீழே ............ செருகுங்கள் ...........

இதோ அதோ இதோ கறுணா.....

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Print this item

  சதியழிப்பு...!
Posted by: kuruvikal - 11-06-2004, 09:44 PM - Forum: கவிதை/பாடல் - Replies (20)

<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>

மனது மயக்கி
மாயமாய் மலராய் வந்தது
மலருமல்ல மங்கையுமல்ல
பிசாசு...!
பிசாசின் பாதையில் நடைபயின்று
விசித்திரமாய் கதை பேசி
குணமறிந்து கண்டுணர்ந்து
அதுவாய் அழிய பாதை காட்டிட
தானாய் அழிந்தது....!
சதியும் முடிந்தது
களத்தில் போரும் ஓய்ந்தது...!

கண்டதும் கழியதும் கண்டு
மனதோடு மயங்கி
குருவிதன் கொள்கைகள்
இறந்ததாய் வரலாறு
என்றும் இல்லவே இல்லை....!
சதியழிப்பு இனிதே நடந்தது
சதிவென்று
சந்தோஷக் கடலில் வெண்மனம்
தூய்மையோடு மிளிர்கிறது....!
அதுபோதும்
நிம்மதி நீடித்து
சுதந்திரமாய் வாழ்ந்திட....!

நன்றி : http://kuruvikal.yarl.net/

Print this item

  யாழ் அரச பரம்பரையின் வாரிசு
Posted by: kirubans - 11-06-2004, 08:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (96)

தமிழீழம் விரைவில் கிடைத்தால் கீழ்காணும் படத்திலுள்ள யாழ் அரச பரம்பரையின் வாரிசை பெயரளவிற்கேனும் நாட்டின் தலைவராக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும்.

<img src='http://img118.exs.cx/img118/6319/jaffnaroyal.jpg' border='0' alt='user posted image'>

http://www.jaffnaroyalfamily.org/

Print this item

  துரோகிகளுக்கு.. தமிழின உணர்வாளர்களே! களப் பொறுப்பாளருக்கு...
Posted by: Nitharsan - 11-06-2004, 11:42 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (36)

<span style='color:red'>துரோகிகளுக்கு மட்டும்.....

உண்மையில் அரசியல் நன்றாக தெரியும் எனபதைக் காட்டி விட்டீர்கள். ஒரு தமிழனின் உயிரிலே உங்கள் அரசியலை திணிக்க முற்படும் உங்களுக்கு வெட்கமாய் இல்லையா? பாருங்கள் கழுதையிடம் கற்புூர வாசனைபற்றி நான் கேட்பது என் முட்டாள் தனம் தான் ஏனெனில் ஒரு கையிலே ஆயுதமும் மறு பக்கம் பதிவு செய்யப்படாத இணையக்கட்சியும் வைத்திருக்கும் உங்களைப் போனறவர்களை என்ன செய்ய முடியும் என்று ஈறுமாப்பு கொள்ளாதீர்கள் எங்கள் மின்னஞ்சல்கள் உங்களிடம் இருந்த என்ன செய்யப்போகின்றீர்கள்?? வைத்திருங்கள் போனல் போகட்டும் தாயகத்தமிழரின் நின்மதியைக் குலைத்து போதாதென்று புலம் பெயர் நாட்டுத்தமிழரிடமும் உங்கள் வேலைகளை காட்டி விட்டீர்கள் உணர்வுக்கு அடிமையான தமிழின உணர்வு இணையங்கள் அனைத்தையும் உங்கள் துரோகத்திற்கு பயன்னபடுத்தி விட்டதாய் பெருமிதம் கொள்ளாதீர்..காலம் பதில்சொல்லுமென்று காத்திருக்க நாம் ஒன்றும் அந்தக்காலத்து அடிமைகள் அல்ல இந்தக்காலத்து தமிழர் (தன்மானத்தமிழர்) விரைவில் பதில் சொல்வொம் உங்கள் இணையங்களுக்கு..
தமிழ் தேசிய உணர்வுள்ள இணையங்களை நீங்கள் மக்களிடமிருந்து வேறு படுத்த எடுத்த முயற்ச்சியாகக் கூட இருக்கலாம்.. ஆனால் மக்கள் நாம் கருணாவின் கவிழ்ப்பிற்க்குப் பிறகு ஊசார் நிலையில் இருப்பதாய் உங்கள் கொள்கை மறந்த தலைவ(லி)ரிமும் முகவரியற்ற செயலாளரிடமும் சொல்லி விடுங்கள். இந்தியாவில் ஆஞ்ஙாத வாசம் செய்து உயிர் காக்கும் உங்கள் தலைவ(லி)ர் உங்களுடன் கதைப்பார் என்று நான் என்ன வில்லை இருப்பினும் உங்குளுக்கு துரோகப் பணமனுப்பும் நபரிடம் சொல்லி விடுங்கள் தமிழன் ஏமாற்றத்ருந்து பிறந்தவன் எனவே அவனை ஏமாற்று வது கடினமென்று..

[size=18]தமிழின உணர்வாளர்களே!
அவர்கள் எதை எதிர்பார்த்து இதை செய்தார்களோ அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற உங்களில் சிலர் முற்ப்படுவதாய் நான் உணர்கின்றேன். தவறுகள் எங்கும் நடைபெறும் அதை மன்னிப்பது மனித இயல்பு ஆனால் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் கதைப்பதில் அர்த்தமில்லை. நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு கையோப்பமிட்டதாய் சொல்லும் நீங்கள் என் இணைய நிர்வாகிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க மறுக்கிறீர்கள்?? ;தமிழர் என்ற உணர்வு உங்களுக்கு மட்டுமல்ல இணைய நிர்வாகிகளுக்கும் இருக்கிறது எனவே அவர்களும் உணாச்சிவசப்பட்டு இணைத்து விட்டார்கள் என்பதை ஏன் புரிந்த கொள்ள மறுக்கின்றீர்... குறிப்பாக தமிழ் நாதம் இணையத்திற்கெதிராக சந்தர்ப்பம் பார்த்திருந்த சிலர் எழுதுவது கண்கூடு...
அவர்களது (துரோகிகளின்) இலக்கு தமிழின உணர்வாளர்களை சிதறடிப்பது எனவே அந்த வலைக்குள் நீங்களும் வீழ்ந்து தமிழினத்தின் ஒற்றுமைக்கு கலங்கம் கற்ப்பிக்காதீர்கள்

[size=18]களப்பொறுப்பாளருக்கு:-

தமிழ் உணர்வு பேசி சிலர் களத்தினுள் புகுந்துள்ளனர் போல தெரிகிறது சிறிது கவனமெடுக்கவும்....
-நேசமுடன் நிதர்சன்-
[size=18]மன்னிக்கத் தெரிந்தவன் மனிதஜாதி...
மன்னிக்க மறுத்தவன்__________________</span>

Print this item

  அழியா நினைவுகளிலிருந்து.... &quot;மேஜர் கணேஸ்&quot;
Posted by: Nellaiyan - 11-05-2004, 10:50 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

எனது மனத்தில் இன்னும் அழியா நினைவாக இருக்கும் அந்த 86ம் ஆண்டு இதேமாதம் இதேநாள் நடைபெற்ற .....................

........... இதேநாள் நான் சிறுவனாக இருந்தபோது எனது உறவினருடன் அவரது மோட்டார் சைக்கிளில் முல்லைத்தீவைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறோம். திடீரென சோக இசை எங்கும் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஓரிடத்தில் நாம் வந்த வாகனத்தை நிறுத்தி, சோக இசைக்காண காரணத்தை அறீய முற்பட்டோம். என்ன நடந்தது என வழியால் வந்தவரிடம் விசாரித்தோம், அவரோ திருமலையில் "மேஜர் கணேஸ்" இன்று வீரமரணமடைந்ததாக கூறிச் சென்றார். எமக்கோ அப்போ "மேஜர் கணேஸை" பார்த்ததுமில்லை, கேள்விப்படவுமில்லை! நாமும் சென்று விட்டோம்.

நாம் திரும்பி வரும் வழியில், தற்சமயம் திருமலை மூதூரிலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கும் ஓர் கிராமம் வழியே வர நேர்ந்தது. அக்கிராமத்தில் கண்டது ............. இருபது இருபத்தைந்து இளம்பெண்களிருக்கும் கதறி ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தார்கள். ஒண்று மட்டும் புரிந்தது குடும்ப உறவொண்றைத் தொலைத்து விட்டார்களென்று! என்னவென்று விசாரிக்க முற்பட்டோம், "மேஜர் கணேஸ்ஸின்" இழப்புத்தானென்பது புரிந்தது. அம்மாமலையின் கதைகளை சொல்லிச் சொல்லியழுதார்கள். ................

............ 85, 86ம் ஆண்டுகளில் முஸ்லீம் ஊர்காவற் படையினர் எனும் பெயரில் கிழக்கு மாகாணத்தில் செய்த அட்டூளியங்கள், சொல்லிலடங்காது. குறிப்பாக வெளியுலகு தொடர்பற்ற மூதூர் பிரதேசம் ஜிகாத், ஊர்காவற்படை என பல முஸ்லீம் காடையர்களினால் அரச படைகளின் ஆதரவுடன் சவற்காடாக மாற்றப்பட்டிருந்து. ஏராளமான பெண்கள் கூட பிடித்துச் செல்லப்பட்டு கற்பளித்தும், மார்பகங்கள் அறுக்கப்பட்டும் சித்திரைவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்............... ஓர் நாள் இக்காடையர்களினால் மூதூரை அண்டிய அயற் கிராமங்களிலிருந்து பிடித்துகொண்டு செல்லப்பட்ட ஏராளமான தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட இந்த மனிதத்தெய்வம் தனது தோழர்கள் சிலருடன் உயிராபத்து நிறைந்த இராணுவ, முஸ்லீம் பகுதிகளுக்குள் உட்புகுந்து அக்காடையர்களை அழித்து அவர்களை மீட்டு வந்தான்................
.................. எங்கிருந்தோ வந்தான், தமக்கு பாரதத்தில் வந்த கண்ணனே இந்தக் கணேஸாக வந்ததாக சொல்லியழுதார்கள். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களே அப்பெண்கள் என்பதைப் புரிந்து கொண்டோம்.

எண்பதுகளில் தமிழீழத்தில் காரைநகர் தொடக்கம் திருக்கோவில் வரை இம்மனிதத் தெய்வத்தின் முழக்கங்கள் கேட்காத இடமேயில்லையாம். திருமலையில் சீலனின் நண்பனாக, இயக்கத்தில் சூரியத் தேவனுக்கு பலம் பொருந்திய தோழனாக, மூத்த தளபதியாக, அம்மக்களின் தெய்வமாக பிறப்பிற்கே அர்த்தம் கூறி மாவீரனாகி விட்டான்.............

Print this item

  தமிழ் நாதத்துக்கு வேண்டுகோள்
Posted by: Suji - 11-05-2004, 07:02 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (8)

தமிழ்நாதத்தின் நீண்டகால அபிமானி என்ற வகையில் இந்தமடலை வரைகின்றேன்.
உங்கள் இணையம் ஈழத்திற்கு ஆதரவான இணையம் என்ற கருத்தில் எனக்கு துளி கூடசந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு மிகவும் வேலைப்பழுவின் மத்தியில் நீங்கள் இந்த இணையத்தை நடத்தி வருவதையும் உணர்வுள்ள தமிழ்மக்கள் அனைவரும் அறிவர். அந்தவகையில் உங்கள் இணையத்தில் இராசரத்தினத்தின் விடுதலைக்கு வந்த செய்தியைப் பார்த்து எங்கள் மின்னஞ்கல் முகவரிகளை அனுப்பிவைத்தோம். ஆனால் பின்பு அது டென்மார்க்கைச் சேர்ந்த மதி குமாரதுரை என்ற துரோகியின் வேலை என்று பரவலாக கூறப்படுகிறது. இதனால் ஒரு தமிழனின் விடுதலைக்காக மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்த தமிழ்மக்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். நாங்கள் கண்ட இணையங்களில் வந்திருந்தால் அவற்றை
பொதுபடுத்தியிருக்கமாட்டோம். தமிழ்நாதத்தின்மேல் உள்ள நம்பிக்கையில் இதனைச் செய்துள்ளோம். ஆதலால் உங்கள் இணையத்தின்மேல் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உங்களுக்கு
இருக்கின்றது. (திடீரென அந்த இணைப்பு வேறு உங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.)

துரோகிகளுக்கு துணைபோனதாக கவலைப்படும் எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டியதும் இதற்கு
எதிர்நடவடிக்கை எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்கள் முன்னால் உள்ளது. தமிழ்நாதமே நீ மௌனமாக இருக்கப்போகின்றாயா?
அல்லது ஏதாவது செய்யப்போகின்றாயா?
ஃ இது சம்மந்தமாக டென்மார்க் தூதுவரலாயங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவர்கள் தங்கள் முகவரிகள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று முறைப்பாடு கொடுக்க முடியுமா? அப்படியாயின் அதற்கான புகாரை ஆங்கிலத்தில் அல்லது டென்மார்க் மொழியில் இணையத்தில் தருவீர்களர்? உங்கள் மௌனம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் தயவுசெய்து தமிழ்நாதத்தில் பதில் தாருங்கள்
ன இந்த மடலின் பிரதியை யாழ் இணையத்தின் கருத்துக்களத்திலும் இணைக்கினறேன்.

தமிழால் இணைவோம் தாயகத்திற்காய்

Print this item

  வீரப்பவதம்
Posted by: AJeevan - 11-05-2004, 06:59 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (5)


<img src='http://www.kumudam.com/reporter/071104/pg1-t.jpg' border='0' alt='user posted image'>
ரிப்போர்ட்டர் டீம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக மாநில அதிரடிப்படைகளுக்கு ஒரு பெருத்த தலைவலியாக இருந்துவந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் அத்தியாயம் கடந்த 18_ந் தேதியன்று முடிவுக்கு வந்தது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படையின் தந்திரவலையில் வகையாகச் சிக்கிக்கொண்ட வீரப்பனை அவனது கூட்டாளிகளுடன் அதிரடிப்படையினர் சுற்றி வளைத்தனர் என்றும், அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் நடத்திய மோதலின்போது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் அதிரடிப்படையின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார். ஆனால், ‘வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் அல்ல’ என்று இப்போது பரவலாக ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

<img src='http://www.kumudam.com/reporter/071104/pg1.jpg' border='0' alt='user posted image'>

இந்த மோதலைப் பற்றிய உண்மைகளைக் கண்டறிய தமிழகம், புதுவை, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை அமைப்புகள் ஒரு குழுவினை ஏற்படுத்தின. வீரப்பனின் மரணம் குறித்த பலவகையான சந்தேகங்களை, உண்மைகளை அறிய ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தக் குழுவினரிடம் பலரும் எழுப்பினர். அவை... வீரப்பன் வந்ததாகக் கூறப்படும் ஆம்புலன்ஸ், அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலினால் 250_க்கும் மேற்பட்ட புல்லட்டுகளால் துளைக்கப்பட்டுக் காணப்பட்டது. ஆனால், அந்த வேன் நின்ற இடத்தில் சிறிதும் ரத்தம் காணப்படவில்லை. வேனில் பாய்ந்த குண்டுகளின் சிதறல்கள், உள்ளே இருந்ததாகக் கூறப்படும் நால்வரின் உடலில் பாய்ந்திருந்தால் கூட, அவர்கள் அனைவரின் உடலும் சல்லடையாகத் துளைக்கப்பட்டிருக்கும். சாதாரணமாக ஒரு உடலைத் துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தாலே அதிக அளவில் ரத்தம் வெளியேறும். இந்தச் சம்பவத்தில் இறந்ததோ நால்வர். அப்படியிருக்க... கட்டுக்கடங்காத அளவுக்கல்லவா ரத்தம் வெளியேறியிருக்கும்?

நூற்றுக்கணக்கான குண்டுகள் ஆம்புலன்ஸ் வேனைத் துளைத்திருந்த போதிலும், வீரப்பனின் இடது பக்க நெற்றியில் ஒற்றைக் குண்டு மட்டுமா பாய்ந்திருக்கும்? வீரப்பன் தவிர, மற்றவர்களுக்குக் குண்டு பாய்ந்ததா இல்லையா, என்ற விவரம்கூட அறிவிக்கப்படவில்லையே, அது ஏன்?

இப்படிப்பட்ட பல சந்தேகங்களை மனதில் கொண்டு, இந்தக் குழு தனது விசாரணையை ஆரம்பித்தது. மோதல் நடந்ததாகக் கூறப்படும் பாப்பாரப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான பென்னாகரம், மேட்டூர், கொளத்தூர் மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாம் போன்ற இடங்களுக்கு மூன்று குழுக்களாகப் பிரிந்து சென்ற இந்தக் குழுவினர், பொது மக்கள், அரசு அலுவலர்கள், இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைத் திரட்டினர். அதிரடிப்படைத் தரப்பிலிருந்து தங்களுக்குச் சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்று கூறிய உண்மை அறியும் குழுவினர், கடந்த 27_ம் தேதியன்று சேலத்தில் பத்திரிகையாளர்களைக் கூட்டி இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், ‘‘மோதல் நிகழ்வு பற்றிப் பதில் தர வேண்டிய அதிகாரிகள், அதிரடிப்படையின் கண்டிப்பான நிர்ப்பந்தம் காரணமாக எங்களுடன் பேச மறுத்து மவுனம் சாதித்தனர். பிரேதப் பரிசோதனைகளை தேசிய மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியதைப்போல வீடியோப் படம் எடுக்கவில்லை. இறந்தவர்களின் உடல்களைப் பார்வையிட அவர்களது உறவினர்களுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலின் காயங்களை மறைக்கும் முயற்சியாக இது இருக்கக் கூடும். வீரப்பனின் சடலம் தவிர, மற்ற மூவரின் உடல்களும் போலீஸாரின் வற்புறுத்தல் காரணமாக எரிக்கப்பட்டு விட்டன. உடலை எரிப்பதன் மூலம் மூவரின் உடலிலும் சித்திரவதையால் ஏற்பட்ட தடயங்களை அழிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே, வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் கொல்லப்பட்டதாகக் கருதமுடியவில்லை. அதிரடிப்படையினருடன் வீரப்பன் தரப்பினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. உண்மையில் துப்பாக்கியால் சுட்டது ஒரு தரப்பினரே. அப்படிச் சுட்டவர்களும் அதிரடிப்படையினரே!’’ என்று தங்களது இடைக்கால அறிக்கையின் முடிவாக அந்தக் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர்.

உண்மை அறியும் குழுவின் இந்த இடைக்கால அறிக்கையால், தற்போது பெரும் பரபரப்பு கிளம்பியிருக்கிறது. இந்தப் பரபரப்பையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக அதன் இறுதி அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. புயலைக் கிளப்பப்போகும் அந்த இறுதி அறிக்கையில், வீரப்பன் கொல்லப்பட்டது பற்றிய உறைய வைக்கும் உண்மைகள் பல வெளியாகப் போகின்றன. அதை மனதில் வைத்தே தி.மு.க. தலைவர் கருணாநிதியும், ‘‘காட்டில் நடந்த காட்சிகளையெல்லாம் விளக்கிட முன்வராமல், இருப்பவர்களை உசுப்பிவிடும் விதமாக ஜெயலலிதா பேசிக் கொண்டிருக்கிறார். இது அவருக்கு நல்லதல்ல. அவரிடம் பரிசும், பாராட்டும் பெற்றுத் தோள் தட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்லதல்ல. அந்த விஷயங்களைக் கிளறுகிற நிலைமையை உருவாக்கிடாமல் இருப்பதே முதலமைச்சருக்கும் அவரது தளபதிகளுக்கும் நல்லது’’ என்று மறைமுகமாக எச்சரிப்பதைப் போன்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டுச் சூடேற்றியுள்ளார்.

உண்மை அறியும் குழுவினர் சென்ற இடங்களுக்கு நாமும் மின்னலெனப் பயணத்தை மேற்கொண்டோம். குழுவின் முன்பாகத் தங்களது கருத்துக்களைக் கூறியவர்களை நாமும் சந்தித்து செய்திகளைத் திரட்டினோம். அந்தச் செய்திகள் மர்ம நாவலைக் காட்டிலும் நம்ப முடியாத பல தகவல்களை உள்ளடக்கியதாக இருந்தன. நாம் சந்தித்தவர்கள் பத்திரிகையில் தங்களைப் பற்றிய எந்தத் தகவலையும் வெளியிட்டு விடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தயங்கித் தயங்கிப் பேசினார்கள். நடந்தது இதுதான் என, அவர்கள் கூறுவது இதைத்தான்...

கடந்த அக்டோபர் மாதம் 18_ந் தேதி தர்மபுரி பாப்பாரப்பட்டி அருகே நடந்த மோதலில் வீரப்பனும் அவனது குழுவினரும் கொல்லப்படவில்லை. உண்மையில் அதற்குச் சில நாட்களுக்கு முன்னரே அதாவது 15_ம் தேதி வாக்கிலேயே வீரப்பனைப் பிடித்துவிட்டிருக்கின்றனர். பாலாற்றங்கரையை அடுத்துள்ள பகுதிதான் சிங்காபுரம். அது வீரப்பனின் மாமனார் ஊர். அங்குதான் வீரப்பன் பிடிபட்டிருக்கிறான். வீரப்பன் கதை முடிவின் மர்மமுடிச்சே சிங்காபுரம்தான் என்கின்றனர் நம்மிடம் பேசிய மக்கள். வீரப்பனைப் பிடித்துத் தரச்சொல்லி அதிரடிப்படையினர் வீரப்பனின் தங்கை முனியம்மாவுக்கு ஒரு பெருந்தொகையைத் தர முன்வந்ததாகவும் ஆனால், அதற்கு தான் ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியிடம், முனியம்மாளே கூறியிருந்திருக்கிறார். அதேபோல வீரப்பனுக்கு உணவில் விஷ மருந்தைக் கலந்து அதிரடிப்படையிடம் பிடித்துக் கொடுத்ததே முத்துலட்சுமியின் சொந்த அண்ணன் செங்கோடனின் மனைவி என்றும், சிலர் முத்துலட்சுமியிடம் குறிப்பிட்டிருக்கின்றனர்.

மிகவும் சிறிய கிராமமான சிங்காபுரத்தில் மொத்தமே பதினைந்திலிருந்து இருபது வீடுகள் மட்டுமே உள்ளன என்று கூறும் அவர்கள், அங்கே இரு வீடுகளுக்கிடையே குறைந்தபட்சம் இடைவெளி ஒரு கிலோ மீட்டராவது இருக்கும் என்றும் கூறுகின்றனர். வீரப்பன் முன்பு நடமாடிய பகுதி அது என்பதால் பாலாற்றங்கரைப் பகுதியில் அதிரடிப்படையின் முகாம் ஒன்று வீரப்பனின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனால் அண்மைக் காலமாக அந்தப் பகுதியில் வீரப்பன் அங்கு வருவதையே தவிர்த்து விட்டிருக்கிறான். நல்லூர் பிலேந்திரன் போன்று தனக்கு மிக நெருங்கிய நம்பிக்கைக்கு உரிய ஒரு சிலரின் வீட்டுக்கு மட்டுமே சென்று உரிமையாகச் சாப்பிட்டு வருவானாம் வீரப்பன். அதிரடிப்படையால் பிடிக்கப்பட்ட பிலேந்திரன், தற்போது சிறையில் இருக்கிறார்.

தன் நம்பிக்கைக்குரிய ஆட்களெல்லாம் சிறையில் இருந்த நிலைமையில், வீரப்பனுக்கு ஆள் பலத்தைப் பெருக்கியாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிங்காபுரத்தில் உள்ள தனது நெருங்கிய உறவினர்களை எப்படியேனும் சந்தித்து, தன்னுடைய ஆள் பலத்தைப் பெருக்க வேண்டும் என்று பெருமுயற்சி எடுத்து வந்திருக்கிறான் வீரப்பன். இதை அரசல்புரசலாக அறிந்த அதிரடிப்படையினர், வீரப்பன் அங்கே வருவதற்கு வாய்ப்பைத் தருவதைப்போல முகாமின் கெடுபிடியான கண்காணிப்புகளை, சிங்காபுரத்திலிருந்து விலக்கிக் கொண்டதைப் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

அதிரடிப்படையின் கண்காணிப்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்ற தகவலை வீரப்பனின் உறவினர்கள் தெரிவிக்க, சிங்காபுரத்துக்கு வர வீரப்பனும் எத்தனித்திருக்கிறான். இந்த சந்தர்ப்பத்துக்குக் காத்திருந்த அதிரடிப்படை, வீரப்பனின் உறவினர்களுக்குக் கடுமையான பிரஷர்களைத் தந்து, அவர்களைத் தங்களுடைய திட்டத்துக்கு ஒத்துழைக்க வைத்திருக்கிறது. சிங்காபுரத்திலுள்ள தனது மிக நெருங்கிய உறவினர் வீட்டுக்கு சகாக்களுடன் வந்திருக்கிறான் வீரப்பன். அப்போது அவனுக்காக விருந்து பரிமாறப்பட்டிருக்கிறது. தனக்கு அம்மை போட்டிருக்கிறது என்பதால் விருந்து வேண்டாமென மறுத்த வீரப்பன், சிம்பிளாக தயிர் சாதத்தை மட்டும் சாப்பிட்டிருக்கிறான். அந்தச் சாப்பாட்டில் கலக்கப்பட்ட மருந்து கச்சிதமாக வேலை செய்ய, சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்திருக்கிறான் வீரப்பன். அதே நேரத்தில் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, சேதுமணி ஆகியோரை மடக்கிப் பிடித்த அதிரடிப்படை, அவர்களைச் சித்திரவதை செய்து அவர்களிடமிருந்து பல உண்மைகளைக் கறந்திருக்கிறது.

தொடர்ந்து மயக்கமாகவே இருந்த வீரப்பனிடமிருந்து எந்தத் தகவலையும் உருப்படியாகப் பெற முடியாத நிலைமையில், அவர்கள் நால்வரையும் உயிருடன் விட்டு வைக்க விரும்பாத அதிரடிப்படை, கடந்த 18_ம் தேதியை அவர்கள் கதையை முடிக்கும் நாளாகக் குறித்திருக்கிறது. குறிப்பிட்ட அந்த நாளில், சிங்காபுரத்தை ஒட்டிச் செல்லும் ஆற்றுப்பகுதியின் கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், வழக்கத்துக்கு மாறாக மாலை நான்கு மணிக்கே அந்தப் பகுதியிலிருந்து கெடுபிடியாக விரட்டப்பட்டிருக்கின்றனர். அதேநாளில் ஆற்றைக் கடக்க பரிசல் ஒன்றையும் 3000 ரூபாய் தந்து அதிரடிப்படையினர் வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பரிசலில் வீரப்பன் மற்றும் அவனது சகாக்களும் தூக்கி வரப்பட்டிருக்கின்றனர். இதை அந்த மீனவர்கள் உண்மை அறியும் குழுவிடம் சொல்லியிருக்கிறார்கள்.

பரிசலிலிருந்து குற்றுயிராகவோ (அ) பிணமாகவோ ஆற்றங்கரையில் இறக்கப்பட்ட நால்வரையும், அங்கே தயாராக நின்றிருந்த ஆம்புலன்ஸ் வண்டி ஏற்றிக்கொண்டு கிளம்பியிருக்கிறது. பாப்பாரப்பட்டி அருகே வீரப்பன் தனது குழுவினருடன் வந்து பிடிபட்டதாகக் கூறப்பட்ட, அந்த ஆம்புலன்ஸ் வண்டியே இது என்றும், அதில் யார் இருந்தார்கள் என்பதைத் தாங்கள் கவனிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கொளத்தூர் செக் போஸ்ட் பகுதியைக் கடந்து, பாலாற்றங்கரையை நோக்கி 18_ம் தேதி மாலை 5.30 மணியளவில் ஆம்புலன்ஸ் சென்றதாகவும், பின்னர் 8.30 மணிக்கு அதே ஆம்புலன்ஸ் வண்டி திரும்பி வந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். போகும்போது தனியாகச் சென்ற ஆம்புலன்ஸ், திரும்பும்போது முன்னே ஒரு போலீஸ் ஜீப், பின்னே ஒரு போலீஸ் ஜீப் தொடர வந்ததாம். கொளத்தூர் செக்போஸ்டில் உண்மை அறியும் குழுவினர் விசாரித்தபோது, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களின் எண்களைக் குறிப்பது வழக்கம் இல்லை என்ற பதிலே கிடைத்திருக்கிறது. அதன்பின்னர் பாப்பாரப்பட்டிக்குக் கொண்டு வரப்பட்ட அந்த ஆம்புலன்சை நிறுத்தி அதைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்திருக்கின்றனர் அதிரடிப்படையினர். அதன்பின்னர் வீரப்பன் அதிரடிப்படையினருடன் நடத்திய மோதலில் கொல்லப்பட்டான் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீரப்பனும் அவனது சகாக்களும் கொல்லப்பட்டது பற்றி, உண்மை அறியும் குழு இன்னும் சில நாட்களில் வெளியிட்டு பூகம்பத்தைக் கிளப்பப் போகும் உண்மைகள் இவைகளாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.

உண்மை அறியும் குழுவின் பொதுச் செயலாளரான சேசைய்யா நம்மிடம் பேசும்போது, ‘‘வீரப்பன் விவகாரத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன. வீரப்பனின் டைரிகள் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிரடிப்படையினர் கூறுகிறார்கள். உண்மையில் அவை வீரப்பனின் டைரிகளே அல்ல. பயங்கர நாசத்தை ஏற்படுத்தவல்ல குண்டுகளைப் போன்றவை அவை. அவற்றில் வேண்டாதவர்களின் பெயரை இடைச்செருகலாகச் செருகி ஆபத்தை விளைவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. எங்களுக்குத் தேவையெல்லாம் மத்திய அரசின் பாரபட்சமற்ற விசாரணையே!’’ என்றார். இவர் நக்சலைட்டுகளுக்கும் ஆந்திர அரசுக்குமிடையே மீடியேட்டராகச் செயல்பட்டு வருபவர்.

அந்த உண்மை அறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் அரிபாபுவைச் சந்தித்தோம். ‘‘வீரப்பனைக் கொன்றதற்காக உண்மை அறியும் குழுவை ஏற்படுத்தி ஆய்வை மேற்கொண்ட நீங்கள், வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் குறித்து ஏன் உண்மையை ஆராய முன்வரவில்லை?’’ என்ற கேள்வியை அவர்முன் வைத்தோம்.

‘‘வீரப்பன் செய்த கொலைகளை நாங்கள் ஒருபோதும் நியாயப்படுத்த முன்வரவில்லை. வீரப்பனால் கொல்லப்பட்டவர்களும் மனிதர்களே, அவர்களுக்கும் மனித உரிமை உண்டு என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து கிடையாது. வீரப்பன் செய்த கொலைகளுக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதற்கான விசாரணைகள் அந்தந்தப் பகுதி நீதிமன்றங்களிலே நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு சில வழக்குகள் இறுதிக் கட்டத்தையும் எட்டிவிட்டன. முறையாக விசாரணை நடத்தப்பட்டு விசாரிக்கப்படும் அந்த வழக்குகளில் மனித உரிமை அமைப்புகள் தலையிட வேண்டிய தேவை எழவில்லை. ஆனால், வீரப்பன் விவகாரம் அப்படியல்ல.’’

‘‘வீரப்பன் கொல்லப்பட்டிருக்கக்கூடாது என்று நீங்கள் கூறக் காரணம்?’’

‘‘பல நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகளை வீரப்பன் மேலும் அவன் கூட்டாளிகள் மேலும் சுமத்தியுள்ள அரசு, அவற்றை விசாரித்து அதன் பின்னணி என்ன என்று கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். உயிருடன் பிடிக்கப்பட்ட வீரப்பனிடமும் அவனது கூட்டாளிகளிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தால் உண்மையில் அவர்களை இயக்கிக் கொண்டிருந்தது யார், வீரப்பனுடன் தொடர்புடையவர்கள் யார்? என்ற உண்மை, மற்றும் வீரப்பனால் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பல கோடிக்கணக்கான பணம் ஆகியவை குறித்து ஆதாரபூர்வமான தகவல்களைப் பெற்று ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்கியிருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், வீரப்பனைப் பேசவிடாமல் கொன்றுவிட்டதன் மூலம் பல திடுக்கிடும் உண்மைகளும் அவனுடனேயே கொல்லப்பட்டுவிட்டன. உண்மைகள் கல்லறைக்குச் செல்லக் காரணமான இந்த அவசர நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.’’

‘‘எண்ணற்ற கொலைகளை ஈவு இரக்கமில்லாமல் செய்த ஒரு கொலைகாரனை வதம் செய்தது தவறில்லைதானே?’’

‘‘அப்படிப் பார்த்தால் ஒன்றரை இலட்சம் குர்திஷ் இன மக்களைக் கொன்றதாக அமெரிக்க அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்தான் சதாம் உசேன். பதுங்கு குழியில் மறைந்திருந்த சதாம் உசேனை உயிருடன் பிடித்த அமெரிக்க ராணுவத்தினர் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கல்லவா உட்படுத்தியுள்ளார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பதுங்கு குழியிலேயே சதாமின் கதையைச் சடுதியில் முடித்திருக்க முடியுமே! எனவே, மனித உரிமை மீறல் நடைபெற்றிருக்குமேயாயின், அதைக் கண்டறிந்து சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஜனநாயகக் கடமையுள்ள அரசுக்கு நிச்சயம் உண்டு. வீரப்பனைத் தேடிச் சென்ற அதிரடிப் படையினர் நடத்திய எண்ணற்ற கொலைகளும் கற்பழிப்புகளும் நீதிபதி சதாசிவா கமிஷன் முன்பாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய மனித உரிமை மீறலை மேற்கொண்ட அதிரடிப்படையினர் மேல் இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள்தாம் என்ன? வீரப்பனுக்கு ஒரு நீதி. அவனைத் தேடிச் சென்று குற்றங்கள் பல செய்த அதிரடிப்படைக்கு இன்னொரு நீதியா?’’ என்ற அரிபாபு,

‘‘உண்மை அறியும் குழுவின் இறுதிக் கட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் உண்மைகளைக் கொண்டதாக இருக்கும். இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்து அந்த அறிக்கையைப் படியுங்கள்!’’ என சஸ்பென்ஸாகக் கூறி முடித்துக் கொண்டார்.

Print this item

  ho for all
Posted by: londonboy - 11-05-2004, 06:48 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

hi this is my first time for this web site i hope all my bloods welcome to me.

bye
shahsi

Print this item