Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 361 online users.
» 0 Member(s) | 359 Guest(s)
Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,068
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  இனத்தை விடுவிக்க முயற்சிப்போம்
Posted by: Thiyaham - 11-04-2004, 07:57 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (8)

இந்த தளத்திற்கு சென்று வத்தளையை சேர்ந்த தமிழர் தர்மேந்திரா ராஜரட்ணத்தை
ஈராக்கில் இருந்து விடுவிக்க முயற்சி எடுப்போம்

http:// ****

Print this item

  சின்னச் சின்ன "பில்லைகல்"! எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள
Posted by: சாமி - 11-03-2004, 12:05 AM - Forum: புலம் - Replies (35)

சின்னச் சின்ன "பில்லைகல்"!
எங்கள் சிறுவர் சிறுமிக் "கில்லிகள்"!

விமல் சொக்கநாதன்

டாக்குத்தர் தகலிங்கநாதன் 85க்கு பிறகுதான் லண்டனுக்கு வந்தவர். தனி ஆளா வந்து 'பிளாப்' சோதனை பாஸ் பண்ணி ஆஸ்பத்திரியில வேலையிலும் சேர்ந்தார். இவற்றை அன்ரி மூலம் அவருக்கு கலியாணமும் பேசிச் செய்து வைக்கப்பட்டது. பெட்டை நல்ல வடிவு. உவள் சினிமா நடிகை திரிஷா மாதிரி மெல்லிய, கவர்ச்சியான பெடிச்சி. பெயர் - பிரார்த்தனா.

85க்கு முதல் லண்டனிலை குடியேறின 'டமில் பீப்பிளை' கண்டா தகலிங்கநாதனுக்கு விசர் பிடிக்கும். 'அவையும் அவயின்ரை கார்களும் கதையளும்'. 'அவயின்ரை பிள்ளையளுக்கோ ஒரு சொல்லுத் தமிழிலை கதைக்க ஏலாது.' என்று சதா மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தார்.

சிலோனிலை, மெடிக்கல் கொலிஜிலை படிக்கேக்கை தகவிங்கன் MGR பேச்சுக்களை ரசிப்பான். கைதட்டுவான். விசிலடிப்பான். குறிப்பாக ஒரு MGR
பேச்சு அவன் காதிலை சதா ஒலிக்கும்.

MGR சொன்னாராம்:-

'தமிழ் நாட்டில் தமிழ்க் குழந்தை பிறந்ததும் 'அம்மா' என்று அழுகிறது!' தூரதேச அமெரிக்காவில் லண்டனில், குழந்தை பிறந்ததும், 'மம்மி' என்று அழுவதில்லை. 'ம்மா' என்றுதான் அழுகிறது. இப்படி அனைத்துலக பெருமை மிக்கது எமது தமிழ் மொழி!..' என்று MGR அன்று சொன்னது அவன் மனதில் ஆழமாக பதிந்திருந்தது.

"எனக்கு கலியாணமாகி பிள்ளை பிறந்ததும் பிள்ளைக்கு இங்கிலிசை கண்ணிலும் காட்டமாட்டன். பள்ளிக்கு போன பிறகு பிள்ளை இங்கிலிசு படிக்கட்டும். அதுவரை தமிழ் தான்" என்று நடவடிக்கை எடுத்தான்! வீட்டில் இங்கிலிஷ் பேப்பர் வாங்குவதில்லை. வாற ஓசிப் பேப்பரையும் குப்பையில் உடனே போட்டுவிடுவான். தொலைக்காட்சியில் 24 மணிநேரமும் லண்டன் தமிழ் டி.வி, கொழும்பு தமிழ் டி.வி, பாரீஸ் தமிழ் டி.வி, சென்னை தமிழ் டி.விகள் மூண்டு. குழந்தை பிறந்தது வளர்ந்தது. தமிழ்ப்பள்ளியில் இடம் கேட்டு "பதிவு செய்து வைத்தார் அப்பா டாக்டர். தன் இளம் சிட்டு 'டடி-மம்மி!' சொல்லிடக் கூடாது 'அப்பா அம்மா!' என்றே சொல்ல வேண்டும் என்று இராப்பகலாக பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டார் தகலிங்கநாதன் என்ற தமிழ்ப்பற்றாளர்.

பிள்ளையும் வளர்ந்தது!

ஆனால் 'அப்பா அம்மா' என்று அழகான தமிழ் அதன் வாயில் வரவில்லை! அப்படியானால் என்ன வந்தது? 'டடி' 'மம்மி' என்ற இங்கிலிஷா? இல்லவே இல்லை! அதன் வாயில் வந்த முதற் தமிழ் மழலைச் சொற்கள்:- 'கில்லி-கில்லி .. சுள்ளான்! சுள்ளான்!.. அப்பிடிப்போடு! போடு!' இவைதான்! அப்பாவும் அம்மாவும் தமது தலையில் கையை வைத்துக் கொண்டு திகைப்படைந்து உட்கார்ந்திருக்கிறார்கள்.

இந்தத் திகைப்பு அனாவசியம் டாக்டர். பின் கதவால் ரகசியமாக நுழைந்து உங்கள் குழந்தையின் அப்பாவித்தனத்தை பால்மணத்தை திருடி பரிதவிக்க வைத்த இந்திய மீடியாக்கள் பக்கம் சற்று கவனம் செலுத்துங்கள்.

புத்தனும் காந்தியும் இன்னும் பல மகான்களும் பிறந்த புனித மண்ணில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாட்டில், கம்பனும் வள்ளுவனும் ஒளவையும் பாரதியும் வளர்த்தெடுத்த தமிழ் மாதாவை மீடியாக்கள் - ஊடகங்கள் இன்று பட்டப்பகலில் அப்பட்டமாக கொலை செய்வதைப் பார்த்து தமிழக தமிழ் அறிஞர்களே திகைத்து நிற்கிறார்கள்.

சில உதாரணங்கள்:
1. பென்கள், பில்லைகல் பெறும் யந்திரமல்ல என்று போராடுவோம்.
2. ஈராக்கில் குண்டுகளினால் ஏராளமான பாலங்கள் உடைந்தது.
3. இன்றைய செய்தியில் இனி, தங்கம் மட்டும் வெல்லி விளை நிலவரம்.

தொலைக்காட்சிகளும் வானொலிகளும் இப்படி என்று சொல்ல முடியாது. பத்திரிகைகள், சினிமா ஞூம சகீகீ;கீமகி;கிகுகி

எல்லாமே ஒரே காமெடி சார்! சினிமாப் பாடல்கள் என்றால் கதாநாயகனும் நாயகியும் 28 பேருடன் துள்ளிக் குதித்து ஆடாமல் படமே இல்லை. அந்த ஆட்டத்திற்கு
எழுதப்படும் பாடல்கள் ஏதோ 'லப்படத்திற்கு' எழுதப்பட்ட பாடல் போல இருக்கும்?

'என் தேகமெங்கும் அவன் முத்தமிட்டபோது என் தலையில் நட்சத்திரங்கள் சிதறின! அந்த இடத்தில் அவன் முத்தமிட்டபோது ஆயிரம் சூரியன்கள் எனக்குள்
உடைந்தன!'
பாடல்: வெள்ளைக்கார முத்தம். படம்: செல்லமே.

'பஞ்சு மெத்தையில் பந்தயம் நடக்கும் அந்தப் பந்தயத்தில் இருவருமே ஜெயிப்பார்கள்'
பாடல்: கும்மியடி. படம்: செல்லமே

(இந்த பாடல் வரிகளை எழுதிய கவிஞர் யார் என்று நான் அடையாளம் காட்டி புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்க விரும்பவில்லை.)

இந்தப் பாடல்களை ஏதோ பிரபல்யமான மெட்டுகள் என்று எண்ணி எங்கள் இளம் கலைஞர்கள் கானக்குயில்- இன்னிசை மாலை மெல்லிசைக் கதம்பம் போன்ற மேடை நிகழ்ச்சிகளில் அர்த்தம் தெரியாமல் பாடும் போது - எந்தச் சுவரில் எங்கள் தலையை முட்டி சாவது என்பது எங்கள் எண்ணமாக இருக்கும். சினிமா கவிஞர்கள் எழுதுவது ஆபாசமான அருவருப்புப் பாடல். அதைப் பாட இசையமைப்பாளர் அழைப்பது தமில் சினிமாப் பாடகர் சுக்விந்தர்சிங், உதித்
நாராயண் ஆகியோரை!

சில உதாரணங்கள்:

1. 'அச்சச்சோ புண்ணகை! ஆல் தின்னும் புண்ணகை! கைக்குட்டையில் நான் பிடித்து கையோடு மறைத்து கொல்வேன்'
படம்: ஷாஐகான் பாடியவர்கள்:உதித்நாராயண், கவிதா.

2. 'காதல் டகூடிடிஹசே' 'நானும் அவளும் பருவால்லே தனிமை பருவால்லே, தவீப்பூகளும் பருவால்லே..
படம்: ரன் பாடியவர்: உதித் நாராயண்.

இனிய தமிழில் இசை ரசம் ததும்பப் பாடும் பத்மஸ்ரீ யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்றோர் ஹிந்தியில் பாட அழைத்து செல்லப்பட்டபோது தென்னாட்டு தமிழ் பாடகனுக்கு உச்சரிப்பு சரியில்லை என்று ஊடகங்கள் கண்டித்து அவர்களின் ஹிந்திப் பாடல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தன. ஆனால் இன்று சுக்விந்தர் சிங்குகள், உதித் நாராயண்கள் எங்கள் தமிழை கொலை செய்து பாடும் போது தமிழக ஊடகங்கள் ரசித்து எழுதுகின்றன. எங்கள் குழந்தைகள் பாடலைப் பாடமாக்கி மேடையில் பாடுகின்றன.

இனிமையான உச்சரிப்புடன் பாடும் பாடகி வாணி ஜெயராம் அண்மையில் ஒரு பல்கலைக் கழகத்தில் பேசும் போது - 'மொழி தெரியாமல் ஒரு பாடலை சிதைப்பது மகாபாவம்' என்று கண்டித்தார்.
பழசு கண்ணா! பழசு!

தமிழ்க் கொலை, தமிழ் உச்சரிப்புக் கொலை பற்றி கட்டுரைகள் எழுதுவது கூட்டங்களில் பேசுவது நான் மட்டும்தான் என்றில்லை. இது ஒரு புது விஷயமல்ல. புதிய போராட்டமும் அல்ல! தமிழ் நாட்டில் திபதி மோகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வை.ஜி.மகேந்திரன் போன்றவர்கள் தமிழ் நாட்டு ஊடகங்கள் நடத்தும் அடங்காப் பிடாரித்தனமான - நிர்வாகத்தை அலட்சியமான போக்கை, மக்கள் மீதான அவமதிப்பை கண்டித்து குரல் எழுப்பியிருக்கிறார்கள். தற்போதைய சினிமா இசையால் வக்கிரப்படுத்தப்பட்ட தமிழ் நெஞ்சங்கள் பண்படுத்தப்பட வேண்டும். சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் தமிழ் கொச்சைப் படுத்தப்படுவதை எதிர்க்க வேண்டும் என்று போராட்டம் ஒன்றை டிசம்பர் 20ல் நடத்துகிறார் பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ். இவை போன்றதுதான் நான் எழுப்பிக் கொண்டிருக்கும் இந்தக் கூக்குரல், இதனைச் செவிமடுத்து ஆவன செய்யாவிட்டால் எங்கள் எதிர்கால லண்டன் தமிழ் சிறார்கள் இங்கிலிஸ் குஞ்சுகளாக அல்ல ஸ்டன்ட் மாஸ்டர்களை குருவாக வணங்கும் கில்லிகளாகவும் சுள்ளான்களாகவும் தான் வளர்வார்கள்.

வால்க லண்டன் களைகள்! வால்க தமில்!

உருவியது ஒரு பேப்பர்
http://www.orupaper.com/

Print this item

  ஜெயலலிதாவின் சுய தம்பட்டம்...!
Posted by: kuruvikal - 11-02-2004, 08:41 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவின் இடமாற்றம் தொடர்பாக... காங்கிரஸ் மத்திய ஆட்சியின் உள்துறை அமைச்சருடன் தர்க்கம் புரிந்த ஜெயலலிதா....அமைச்சருடனான தொலைபேசிப் பரிவர்த்தனையை.... அரச சத்தியப் பிரமாணத்துக்கு புறம்பாக களவாக ஒலிப்பதிவு செய்து... ஆளுநர் இடமாற்றத்தை எதிர்த்து நீதிமன்றில் பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு சாட்சியாக சமர்ப்பித்ததனால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக.... அவர் விட்ட சமீபத்திய அறிக்கையை கீழே காணலாம்....!

<b>நினைவாற்றலில் நான் நெப்போலியன் மாதிரி: ஜெயா</b>

மற்றவர்களுடன் பேசும்போது அவர்கள் கூறியதையும், முன்பு படித்தையும், பிறரது பேச்சையும் மீண்டும் அப்படியே நினைவுகூறும் நெப்போலியனைப் போன்ற மிகச் சிறந்த நினைவாற்றல் தனக்கு உண்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதியும் ராமதாசும் சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கவர்னர் இடமாற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று மீண்டும் இன்று மறுத்துள்ள முதல்வர், தான் நினைவுப்படுத்தித் தான் அந்த விவரங்களை தலைமைச் செயலாளரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இன்றுடன் கவர்னர் ராம்மோகன் ராவ் தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லும் சூழலில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளுநர்களை நியமிக்கும் முன், மாற்றும் முன் மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரையை குப்பையில் தூக்கிப் போட்டுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.

டீ பார்ட்டி தரவில்லை என்ற மட்டமான காரணத்துக்காக மாநில ஆளுநரை மாற்றியிருக்கிறார்கள். இந்த உண்மை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான எனது உரையாடலின் மூலம் வெளியாகிவிட்டது.

முறையாக ஆட்சி நடத்தினால், எந்த கவர்னர் இருந்தால் என்ன?, ஜெயலலிதா ஏன் கவலைப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிரிஜா வியாஸ் கூறியிருக்கிறார்.

நான் வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்கி வருகிறேன். ஆனால், கவர்னரை மாற்றும் விஷயத்தில் மத்திய அரசின் தவறை நான் ஆதாரப்பூர்வமாக (தொலைபேசி உரையாடல்) வெளியிட்டுவிட்டதால் கிரிஜா வியாசுக்கும் அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் கவலையில் ஆழ்ந்து போயுள்ளன.

உச்ச நீதிமன்றம் ஆதாரம் கேட்டதால் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலின் சாரம்சத்தை ஒளிவு, மறைவில்லாமல் தாக்கல் செய்தோம். எங்களது இந்த வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற செயல் காங்கிரசுக்கும் கிரிஜா வியாசுக்கும் வேண்டுமானால் தவறாகத் தெரியலாம்.

எனக்கு முன்பு படித்ததை, மற்றவர்கள் சொன்னதை, பேசியதை அப்படியை முழுமையாக மீண்டும் நினைவுகூறும் நினைவாற்றல் உண்டு. இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு (கருணாநிதி, ராமதாஸ்) சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.

போர் விவரங்கள், வரைபடங்கள், எண்கள் அப்படியே மிகச் சிறப்பாக நினைவுகூறும் திறன் கொண்ட நெப்போலியன் மாதிரியானவர்கள் வரலாற்றில் பலர் உண்டு.

நீதித்துறைகளில் கூட பழைய தீர்ப்புகளை அப்படியே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் சட்ட நிபுணர்கள், நீதிபதிகள் இருக்கிறார்கள். அது போலத்தான் எனக்கும், பழைய சம்பவங்களை, உரையாடல்களை மறக்கமால் அப்படியே நினைவு கூறும் திறன் உண்டு.

உண்மை இப்படி இருக்க, அமைச்சருமான பேச்சை நான் டேப் செய்தேன் என்று கருணாநிதி போன்றவர்களின் மோசடி பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

உரைடாலை டேப் செய்த ஜெயலலிதா, இதனால் சட்டரீதியான பிரச்சனை வரும் என்பதால் அதை மறைக்க முயல்வதாக நேற்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். டான்சி வழக்கில் ஆவணத்தில் இருப்பது தனது கையெழுத்தே இல்லை என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன ஜெயலலிதா என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக ஜெயலலிதா இன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

thatstamil.com

Print this item

  ஏட்டிக்கு போட்டி? அடுத்தது என்ன?
Posted by: Mathan - 11-02-2004, 07:29 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

அடுத்தது என்ன?

இலங்கை அரசியல் நிகழ்வுகளை உற்று நோக்குபவர்களுக்கு அண்மையில் அரசாங்கமும் புலிகளும் ஏட்டிக்குப் போட்டியாக செய்துவரும் காரியங்கள் வியப்பைத் தரலாம்.
கருணா என பூதமொன்று கிளம்பியது அதனைச் சாக்காக வைத்து இரண்டு பகுதியினரும் பிடிக்காதவர்களை களையெடுத்ததும் ஒரு புறத்தில் நடந்தது என்றால் இன்னொரு புறத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் தூதுவர்களுடன் சந்திப்பு,வெளிநாட்டுக்குத் தங்கள் தூதுவரை அனுப்பி அங்குள்ள பெருந்தலைகளை சந்திப்பு என்று இருபெரும் நாடுகளின் இராஜ தந்திர நடவடிக்கைகளில் இரு பகுதியும் ஈடுபட்டிருந்தன.



சமாதனப் பேச்சுவார்த்தைக்கான இரு பகுதியினரதும் முன்னெடுப்புகள் தான் கூர்ந்து நோக்கப்படவேண்டியவையாகின்றன.

ஒரு புறத்தில் அரசானது தந்திரோபாயக் காய்நகர்த்தல்களில் ஒரு படியாக ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை வளைத்துப் போட்டது.

வெளியிலிருந்து ஆதரவு உள்ளிருந்து ஆதரவு என்று பலவிதமாகவும் பேசிக்கொண்டிருந்த ஆறுமுகம் இப்போது அமைச்சர் பதவிகளீயும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.இந்நிகழ்வுடன் தொங்குபறியில் ஊசலாடிக்கொண்டிருந்த அரசாங்கம் பெரும்பான்மை பலத்தைப் பெறாவிட்டாலும் ஓரளவுக்கு ஊசலாட்டத்தைக் குறைத்துக் கொண்டது.

அத்தோடு தொங்குபறியில் அரசாங்கம் நிற்பதால் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு தொடரமுடியவில்லை என்ற் அரசின் பிரச்சாரமும் அடியுண்டு போயிற்று.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ அரசாங்கத்தை குறை சொல்வதோடு மாத்திரம் நின்றுவிடாமல் இடைக்கால நிர்வாக சபையின் அடிப்படையில்-நியாயமான தீர்வு யோசனையின் அடிப்படையில் நடக்கும் எவ்விதமான முன்னெடுப்புக்கும் தாங்கள் சம்மதம் என்று வெளியிட்ட அறிக்கையுடன் பந்தை சந்திரிக்காவின் பக்கம் தூக்கிப் போட்டுவிட்டு பந்து எப்போதோ வந்துவிட்டது இன்னும் நீங்கள் தான் உதைக்க ஆரம்பிக்கவில்லை என குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆளும் கட்சியும் தன் பங்குக்கு தீர்வுப்பொதி,தீர்வுத்திட்டம் அது இது என்று பூசி மெழுகி இப்போது புதிதாக தேசிய ஆலோசனைச் சபை என்பதில் வந்து நிற்கிறது.இதுவரை பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காகிய அனுபவத்தில் குரங்கென்று நினைத்தே பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்

இதே காலப்பகுதியில் புலிகள் சமாதானத்துக்கான தங்களின் விருப்பை பலவேறு வழிகளிலும் வெளியிட்டதோடு சமாதனப்பேச்சுவார்த்தைகளுக்கு தாங்கள் எப்பவோ தயார் அரசாங்கம் தான் பின்னடிக்கிறது என்று வெளியுலகிற்கு நிரூபிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன் ஒரு வெளிப்பாடு தான் அண்மையில் புலிகளின் அதி உயர் அரசியல் ஆலோசனைக் குழுவின் ஐரோப்பியச் சுற்றுப்பயணம்.

புலிகளின் முக்கிய பிரமுகர்களுடன் வள ஆலோசகர்களாக பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்த சட்டவல்லுனர்கள் அடங்கிய குழு பாலசிங்கம் அவர்களையும் இணைத்துக்கொண்டு உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலான இடைக்கால நிர்வாக சபை என்ற தமது திட்டத்தைச் சீர் செய்வதில் முனைந்தார்கள்.

வழமை போலவே சட்டவல்லுனர்களையும் பாலசிங்கத்தையும் வன்னிக்கு அழைத்து தீர்வுத்திட்டம் தயாரித்து பின்னர் செய்தியாளர் மாநாட்டில் அதனை வெளிப்படுத்தியுமிருக்கலாம் ஆனால் அவ்வாறு செய்யாமல் உலகறிய பல்வேறு முக்கியமான நாடுகளிலும் வதியும் தமது சட்டவல்லுனர்களை அழைத்து தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரித்ததன் மூலம்.இது ஒன்றும் மேம்போக்கான திட்டம் அல்ல இலங்கையின் அரசியலமைப்பு இறையாண்மை இனஙக்ளுக்கிடையிலான வேற்றுமை ஒற்றுமைகளை கருத்தில் கொண்டு உலக வழக்கிலுள்ள அரசியல் அமைப்புகளுக்கு இணையாகத் தயாரிக்கப்பட்ட திட்ட வரைபு என்பதை உலகறியச் செய்வதெ இந்த ஐரோப்பியச் சந்திப்பின் முக்கிய நோக்கம்.

தொடர்ந்தும் அவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில் பல்வேறு தலைவர்களையும் சந்தித்து உரையாடி சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தாங்கள் அறிக்கையளவில் மட்டுமன்றி செயலளவிலும் த்யார் என்பதை விளக்கியிருக்கிறார்கள்.

இப்போது புலிகள் வசம் எழுந்தமானமாக இன்றி சட்ட வல்லுனர்களால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்டம்.

அரசாங்கத்தின் வசம் ஆக்கபூர்வமான திட்டம் எதுவுமில்லை.ஆனால் தம்மிடம் இனப்பிரச்சனைக்கு சரியான தீர்வு உண்டு என இரு பெரும் தேசியக் கட்சிகளும் அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன.புலிகள் செய்ததுபோல் சரியானதொரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து அதனை உலகறியச் செய்வதே முறை

பந்து இப்போது அரசாங்கத்தின் பக்கம்

அடுத்தது என்ன?

நன்றி - ஈழநாதன்

Print this item

  [size=18]வீடியோ கற்றுக்கொள்ள[/size]
Posted by: Suji - 11-02-2004, 03:52 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (23)

நீங்கள் யாராவது எடிட்டிங் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கின்றீர்களா?
என்குத் தெரிந் மென்பொருளில் மிகவும் இலகுவாக தரமான ஒரு மென் பொருள் வாங்க விரும்பினால் இருக்கவே இருக்கிறது பினாக்கிள் ஸ்ருடியோ இது மிகவும் தரமாக உங்கள் குடும்ப நிகழ்வுகளை (வீடியோ) தொகுத்துக் கொள்ள உதவுகிறது. இதில் அழகான தலைப்புகள்( டைட்டில்) உருவாக்க டைட்டில் டெக்கோ என்ற பகுதி இருக்கிறது கண்கவர் தலைப்புகளை உருவாக்கலாம். இரண்டு காட்சிகளை இணைக்க (எபெக்ட்) மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பின்னணிக் காட்சிகளை சேர்ப்பதற்கும் புதிய வெளியீட்டீடில் வழி இருக்கின்றது.
இதை கற்றுக்கொள்ள விரும்புகின்றவர்கள் தொடர்புகொண்டால் உதவி செய்ய முடியும்.
என்னுடைய முகவரி

Print this item

  கருணாகத்தின் வதந்தீ
Posted by: Suji - 11-02-2004, 02:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

உசார் நண்பர்களே வதந்தீ (நெருப்பு) மீண்டும் புகைய ஆரம்பித்துவிட்டது
நூர்க்க தயாராகுங்கள்

Print this item

  இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்....!
Posted by: tamilini - 11-02-2004, 02:07 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (52)

[b]<span style='font-size:25pt;line-height:100%'>யாழ் நண்பர்கள் நண்பிகள் சகோதரிகள் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்....!

அன்புடன் தமிழினி...</span>

Print this item

  பெண்மை இங்கு புலியானதால்-புதுவை
Posted by: hari - 11-02-2004, 08:00 AM - Forum: கவிதை/பாடல் - Replies (16)

<span style='color:red'>பெண்மை இங்கு
புலியானதால்
புறநானுறு புதிதாய்
எழுதப்படுகிறது!</span>

<img src='http://www.lttepeacesecretariat.com/mainpages/images/i1010_04.jpg' border='0' alt='user posted image'>
"பெண்ணான மாயப் பிசாசு"
சித்தர்கள் திருவாய் மலர்ந்தனர்.
"தூமகேதெனப் புவிமிசை தோன்றிய
வாமமேகலை மங்கையரால் வரும்
காமமில்லையேல்...."
சொன்னவன் கம்பன்.
"அரக்குமங்கையர் அழகுடல் தழுவியும்..."
பக்தி இலக்கியப் பாவலர் முத்தமிட்டனர்.
"பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்தவந்தோம்"
சொல்லுக்கு வெடிமருந்துபூசி தீமூட்டினான் பாரதி
"தாயென்றார்" இராமகிருஷ்ண பரமஹம்சர்.
"சக்தியென்றான்" பாரதிதாசன்.
"பேய்" என்றார்கள் இன்னும் சிலர்.
பூசித்தும் தூசித்தும்
பெண்களைப் புரட்டியெடுத்தனர்
எங்கள் காப்பியக் கவிஞர்கள்;
"ஐயிரண்டு திசைமுகந்து" ஐயன் மனைவி
மண்டோதரியும் போர்க்களம் போனாள்.
குருதிக்கடலில்குளித்த கணவனுக்கு
உருகி அழவன்றி.... போராட அல்ல.
கர்ணன் வீழ்ந்து கண்மூடும் நேரத்தில்
குந்திதேவி "குருஷேத்திரம்" போனாள்.
போராட அல்ல...மகனென்று பிரகடனப்படுத்த.
புற நானூற்றுப் பாடலிலும்
ஒருதாய் போர்க்களம் ஓடினாள்.
போராட அல்ல....
மகனுக்கு அம்பு மார்பில்பட்டதா?
முதுகில்பட்டதா?
பட்டிமன்ற விவாதத்துக்குப் பதில்சொல்ல.
"கோதண்டம்" இராமனுக்கு,
"கோடரி" பரசுராமனுக்கு,
"சக்கரம்" கிருஷ்ணனுக்கு,
"கதாயுதம் வீமனுக்கு,
"கண்டீபம்" அருச்சுனனுக்கு,
காவியங்களெல்லாம் கண்களை மூடிக்கொண்டு
ஆண்களை ஆயுதங்களுடனேயே அவதரிக்கச் செய்தன.
மீசைமுளைத்த தேகத்தில்தானே வீரம் விளையாடும்.
ஆகவே ஆண்மைதான் அதிகாரம் மிக்கது
பஞ்சப்புலவன் பாரதியின் காலம் வரை
பழைய சாதமே எங்களுக்குப் பரிமாறப்பட்டது.
நேற்றுவரை பெண்மைப் புயல்கள்
அடுப்புக்குள்ளே புகையூதிக்கிடந்தன.
வேலித்துவாரத்தினூடேதான் வெளியுலகைப் பார்த்தன.
அடிவளவுக்குப் போகவும் அடுத்தவரின் துணை நாடின.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
நேசிக்கும் காதலுடன் பேசிமுடிக்க முன்னர்
நூறுமுறைகள் கூனிக்குறுகியவர்.
உரலை உருட்டக்கூட பலமற்றவர்களென்று
கேலிப்பொருளாகிக் கிடந்தவர்.
கட்டெறும்பு கடித்தால் போதுமே
அட்டதிக்கும் அதிரக் கத்தியவர்.
கண்ணுக்கு மை காலுக்குக் கொலுசு
சின்ன இடையினுக்கு... சிங்காரப் பொன்னாரம்
பட்டுச்சேலை.. பவளவாய்ச்சாயம்
மொட்டுவிரியாத முல்லை மலர்மாலை
இந்தளவும் போதுமென இருந்தவர்களைத்தான்
"வல்வைப் பிள்ளை" நிமிரச்செய்தான்.
பெண்களுக்குச் சரியாசனம் கொடுத்தவன் பாரதி
இன்று அரியாசனம் கொடுத்தவன் பிரபாகரன்.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
பூத்துக்குலுங்கிய நந்தவனத்துக்குள்ளே
வானரச்சேனையை ஏவி
பூவையும் பிஞ்சையும் பொசுக்கினான் ஒருவன்.
ஆத்தாள் கண்திறந்தாள்.
மறத்தமிழ் மாதொருத்தி
அரக்கனின் நெஞ்சில் நெருப்பாய் வெடித்தாள்.
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
தொட்டுவிட யாருண்டு? என்ற துணிவில்
பகைவனின் ஒரு கட்டளைக்கப்பல்
எங்கேயும் நிற்பேன் என்ற திமிரில்
நங்கூரம் பாய்ச்சிக்கிடந்தது.
பரந்தகடலில் எவர்போனாலும் இது பார்த்துவிடும்
பிறகென்ன?
பக்கத்தில் படுக்கும் படகுகள் உயிர்க்கும்
மணலை மீனுக்கு வலைவிரித்தவன் பிணமாவான்.
மறுநாள் ஊதிப்பெருத்த உடல் கரையொதுங்கும்.
இந்தக் கப்பலுக்கு இலக்குவைத்து
வேள்விக்குத் தயாரானாள் வீரமகளொருத்தி
வெடிமருந்து சுமந்து மீன்குஞ்சு நீந்தியது.
நேரம்கரைந்து காற்றுக்கு குளிர்ந்தது
எதிரியின் நெஞ்சுக்கூட்டையும்
அவனின் இரும்புக் கோட்டையையும்.
தங்கை தவிடு பொடியாக்கினாள்
கட்டளைக் கப்பலையும் காணவில்லை
அங்கயற்கண்ணியும் திரும்பவில்லை
எப்படி எழுந்தார்கள்?
கனவிலும் காணாத நிமிர்வு.
"சாகரவர்த்தனா"
பகைவன் உலாவந்த "கடல் மிருகம்"
தமிழனின் குருதி இதற்குத் தனிருசி
நாளாயினியும் மங்கையும் போர்க்கோலம் பூண்டனர்.
வெடியதிர்ந்து கப்பல் கண்மூடியபோது
மீசைமுளைத்த கப்பலின் கப்டன்
உயிர்ப்பிச்சை கேட்டுக் கைகளை உயர்த்தினான்.
ஆண்மை அதிகாரம் மிக்கதா?
யார் சொன்னது?
பெண்மை இங்கு
புலியானதால்
புறநானுறு புதிதாய்
எழுதப்படுகிறது

<b>புதுவை இரத்தினதுரை</b>

ஐப்பசி கார்த்திகை 1994


முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!
கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்.

Print this item

  போருக்குப்பின் (குறும்படம்)
Posted by: yarlmohan - 11-02-2004, 12:20 AM - Forum: குறும்படங்கள் - Replies (5)

இராணுவத்தால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமலிருக்கும் தந்தையைப் பற்றி அறியத் துடிக்கும் , ஒரு சிறுவனின் ஆக்ரோசம்.

http://www.yarl.com/mediaarticles.php?articleId=9

Print this item

  மனிதரைக் கடிக்கும் முஸ்லீம் மதப்பயங்கரவாதம்.!
Posted by: kuruvikal - 11-02-2004, 12:19 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (7)

<b>ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிக்கும் முஸ்லீம் மதப்பயங்கரவாதம்...!</b>


<b>மட்டக்களப்பு காத்தான்குடியில் மீண்டும் பதட்டம் கிரனைட் வீச்சில் 15 காயம் </b>

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் மதப் பிரிவினரிடையே மீன்டும் இன்றிரவு வன்முறை வெடித்துள்ளது. இதன் காரணமாக 15 ற்கும் மேற்பட்டவர்கள்; கிரனைட் வீச்சில் காயமடைந்து காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காத்தான்குடி-4ல் உள்ள இரும்புத் தைக்கா பள்ளி வாசல் மீது இரவு 10.45 மணியளவில் இனந் தெரியாத நபர்களினால் கிரனைட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்தே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த ஜாமியத்துல் உலமா சபையின் கோட்பாட்டை பின்பற்றும் முஸ்லிம்கள் அப்துல் ரவ10ப் மௌலவியின் அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவைக்குரிய -முசு மௌலானா கபுறடியை- தீ வைத்து எரித்துள்ளார்கள். இதனையடுத்தே மீண்டும் பதட்ட நிலை உருவாகியுள்ளது.

இரு தரப்பு பள்ளி வாசல்களிலும் ஒலிபெருக்கிகளில் விடுக்கப்பட்ட அறிவிப்புகளையடுத்து முஸ்லிம்கள் தத்தமது பள்ளிவாசல்களில் தற்போது கூடியிருக்கின்றார்கள்.

பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக நின்று வன்முறைகளை தூன்டிவிடும் வகையில் செயல்பட்டவர்கள் பொலிசாரினால் தடியடிப் பிரயோகம் மற்றும் கண்ணீர் புகையடித்து கலைக்கப்பட்டுள்ளார்கள்.

தங்கள் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த கிரனைட் தாக்குதலுக்கு அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவையே பொறுப்பு என ஜாமியத்துல் - உலமா சபை குற்றம் சுமத்தியுள்ளது.

மேலதிக பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் வன்முறைகள் வெடித்துள்ளது.

அகில இலங்கை இஸ்லாமிய மெய்ஞானப் பேரவையின் மதக் கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் வசிக்கும் காத்தான்குடி-6 பிரதேசத்தில் மின்சாரம் அணைக்கப்பட்டு மக்கள் இருளில் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

அவர்களுடய பள்ளிவாசல் ஒலி பெருக்கியில் மாற்று மதப் பிரிவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

தைக்கா பள்ளி வாசல் மீதான தாக்குதல் சம்பவத்திற்கும் எங்களுக்கும் தொடர்புகள் இல்லை .இது ஒரு சதி நாசவேலை. உங்கள் பிரதேசத்தில் ஆங்காங்கே வசிக்கும் எமது சகோதரர்களுக்கு ஏதாவது நடக்குமானால் எமது பள்ளிவாசலுக்கு அருகில் உங்கள் ஆட்கள் வசிக்கின்றார்கள் என்பதையும் நினைவு படுத்த விரும்புகின்றோம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

puthinam.com

+++++++++++++++++++++++

<b>காத்தான்குடியில் இந்திய பாகிஸ்தான் உளவுத்துறை மக்களைப்பகடைக்காய் ஆக்குகிறது. </b>

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான் குடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இந்திய உளவுத்துறை இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு முஸ்லீம் ஆயதக்குழுக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் நிகழ்வில் இந்திய றோ அமைப்பு ஈடுபட்டுள்ளது. காத்தான்குடியில் நீண்டகாலமாக இந்திய றோ அமைப்பினர் தமது பிரிவினரைத் தொழிற்பட வைத்துள்ளார்கள். இவர்களுக்கு எதிராக பாகிஸ்தான் உளவுத்துறையும் தற்போது மட்டக்களப்பில் நிலை கொள்ளத் தொடங்கியுள்ளது. எனவே இவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு செயலாக இரண்டு தரப்பினரையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் தொழிலில் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது.

தற்போது பாகிஸ்தான் நாட்டின் புதிய இலங்கைக்கான தூதுவரான முன்னைநாள் பாகிஸ்தான் நாட்டு புலனாய்வுத்துறை அதிகாரியான பசீர் வலியின் ஆதரவுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் பள்ளிவாசலொன்றும் சேதமாக்கப்பட்டுத் தீ வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட இப் பிரதேசத்தில் இஸ்லாமிய மதக்கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான முரண்பாடுகளை உருவாக்கி அதன் எதிரொலியாக இந்த வன்முறைகள் இடம்பெற்றுள்ளது. முஸ்லீம் ஏவலாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தடிகள், பொல்லுகள் சகிதம் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

nitharsanam.com

Print this item