Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜெயலலிதாவின் சுய தம்பட்டம்...!
#1
தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவின் இடமாற்றம் தொடர்பாக... காங்கிரஸ் மத்திய ஆட்சியின் உள்துறை அமைச்சருடன் தர்க்கம் புரிந்த ஜெயலலிதா....அமைச்சருடனான தொலைபேசிப் பரிவர்த்தனையை.... அரச சத்தியப் பிரமாணத்துக்கு புறம்பாக களவாக ஒலிப்பதிவு செய்து... ஆளுநர் இடமாற்றத்தை எதிர்த்து நீதிமன்றில் பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு சாட்சியாக சமர்ப்பித்ததனால் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக.... அவர் விட்ட சமீபத்திய அறிக்கையை கீழே காணலாம்....!

<b>நினைவாற்றலில் நான் நெப்போலியன் மாதிரி: ஜெயா</b>

மற்றவர்களுடன் பேசும்போது அவர்கள் கூறியதையும், முன்பு படித்தையும், பிறரது பேச்சையும் மீண்டும் அப்படியே நினைவுகூறும் நெப்போலியனைப் போன்ற மிகச் சிறந்த நினைவாற்றல் தனக்கு உண்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது எப்படி சாத்தியம் என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதியும் ராமதாசும் சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கவர்னர் இடமாற்றம் தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலை டேப்பில் பதிவு செய்யவில்லை என்று மீண்டும் இன்று மறுத்துள்ள முதல்வர், தான் நினைவுப்படுத்தித் தான் அந்த விவரங்களை தலைமைச் செயலாளரிடம் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

இன்றுடன் கவர்னர் ராம்மோகன் ராவ் தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் செல்லும் சூழலில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆளுநர்களை நியமிக்கும் முன், மாற்றும் முன் மாநில அரசுடன் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரையை குப்பையில் தூக்கிப் போட்டுள்ளது காங்கிரஸ் கூட்டணி அரசு.

டீ பார்ட்டி தரவில்லை என்ற மட்டமான காரணத்துக்காக மாநில ஆளுநரை மாற்றியிருக்கிறார்கள். இந்த உண்மை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான எனது உரையாடலின் மூலம் வெளியாகிவிட்டது.

முறையாக ஆட்சி நடத்தினால், எந்த கவர்னர் இருந்தால் என்ன?, ஜெயலலிதா ஏன் கவலைப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கிரிஜா வியாஸ் கூறியிருக்கிறார்.

நான் வெளிப்படையான, நேர்மையான ஆட்சியை வழங்கி வருகிறேன். ஆனால், கவர்னரை மாற்றும் விஷயத்தில் மத்திய அரசின் தவறை நான் ஆதாரப்பூர்வமாக (தொலைபேசி உரையாடல்) வெளியிட்டுவிட்டதால் கிரிஜா வியாசுக்கும் அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியும் கவலையில் ஆழ்ந்து போயுள்ளன.

உச்ச நீதிமன்றம் ஆதாரம் கேட்டதால் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுடனான தொலைபேசி உரையாடலின் சாரம்சத்தை ஒளிவு, மறைவில்லாமல் தாக்கல் செய்தோம். எங்களது இந்த வெளிப்படையான, ஒளிவு மறைவற்ற செயல் காங்கிரசுக்கும் கிரிஜா வியாசுக்கும் வேண்டுமானால் தவறாகத் தெரியலாம்.

எனக்கு முன்பு படித்ததை, மற்றவர்கள் சொன்னதை, பேசியதை அப்படியை முழுமையாக மீண்டும் நினைவுகூறும் நினைவாற்றல் உண்டு. இது எப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்கு (கருணாநிதி, ராமதாஸ்) சராசரி அறிவு கூட இல்லாதவர்கள் என்று தான் அர்த்தம்.

போர் விவரங்கள், வரைபடங்கள், எண்கள் அப்படியே மிகச் சிறப்பாக நினைவுகூறும் திறன் கொண்ட நெப்போலியன் மாதிரியானவர்கள் வரலாற்றில் பலர் உண்டு.

நீதித்துறைகளில் கூட பழைய தீர்ப்புகளை அப்படியே வரிக்கு வரி நினைவு வைத்திருக்கும் சட்ட நிபுணர்கள், நீதிபதிகள் இருக்கிறார்கள். அது போலத்தான் எனக்கும், பழைய சம்பவங்களை, உரையாடல்களை மறக்கமால் அப்படியே நினைவு கூறும் திறன் உண்டு.

உண்மை இப்படி இருக்க, அமைச்சருமான பேச்சை நான் டேப் செய்தேன் என்று கருணாநிதி போன்றவர்களின் மோசடி பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

உரைடாலை டேப் செய்த ஜெயலலிதா, இதனால் சட்டரீதியான பிரச்சனை வரும் என்பதால் அதை மறைக்க முயல்வதாக நேற்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். டான்சி வழக்கில் ஆவணத்தில் இருப்பது தனது கையெழுத்தே இல்லை என்று நீதிமன்றத்திலேயே பொய் சொன்ன ஜெயலலிதா என்ன வேண்டுமானாலும் பேசுவார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இதற்கு பதிலடியாக ஜெயலலிதா இன்று இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

அம்மா! தாயே! மூகாம்பிகையே!! அன்னை வேளாங்கன்னியே!! அண்றைய கவற்சிப் புயலே!! அண்றைய அரை குறை ஆடை ராணியே!! ஞாபகக் குயினே???????

ஒரே ஒரு கேள்வி கேட்கட்டா? இக்கேள்வி எனது அரசியல் அறிவை பெருக்குவதற்கு!!

* எம்.ஜி.ஆரை விட எத்தனை பேரோடு .......?

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#3
கறுணா அம்மான்... அம்மான் தான்...கேட்டாரே ஒரு கேள்வி..ஜெயசுக்குறு மாதிரி "ஜெ" சுக்குநூறாக....கறுணா உதவியை கருணாநிதி பெற்றால்....எங்கையோ போயிடுவார்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
உவ எல்லாம் ஒரு ஆளே..கருணாவே உங்க தான் பாடம் படிச்சுதோ..என்னவோ...?
[b][size=18]
Reply
#5
ஏன் "கூனல் களுணா",

ஜெயலலிதாவிடம் இப்போது வேக்கன்சி இல்லையாம்! அவ இப்போ கொஞ்சும் காலமாக சசிகாலாவுடன் இருக்கிறாவாம். என்னத்துக்கும் அப்பிளை பண்ணிப் பாருங்கோ? சில சமயம் அவ மைன்டை சேஞ் பண்ணலாம்? நீர் வாட்ட சாட்டமான ஆள்தானே?
" "
Reply
#6
புலியாக இருக்கும் போதுதான் வாட்ட சாட்டமான ஆள், இப்ப நாய்களுடன் சேர்ந்து சொரி நாய் ஆகிட்டார்.
Reply
#7
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!

என்னை அன்னை ஜெயலலிதாவுடன் கிசுகிசுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். கீழ்க்கண்ட அறிக்கையை உடனடியாக விடுத்துள்ளேன் ........

அன்னையே! தாயே!! மூகாம்பிகையே!!! அன்னை வேளங்கன்னியே!!!!

* தாங்கள் நெப்போலியன் மட்டுமல்ல நெப்போலியையும் எனது திடமான நம்பிக்கை!
* தாங்கள் சசிகலாவுடன் கொஞ்சும் காலம் இருப்பதை நான் கொள்கையளவில் ஏற்கின்றேன்!
* தாங்கள் செல்வியா? இன்னும் கன்னியா?
* "நாயுக்கு எங்கே அடித்தாலும் முன்னங்காலைத் தான் தூக்குமாம்" அப்படி தாங்களும் தமிழ் நாட்டில் என்ன நடந்தாலும் புலிதான் என்கிறீர்கள். நன்று!! தங்களுடைய இந்த பூத உடம்பிற்கும் விடுதலைப் புலிகள் தான் என்பது திடமான நம்பிக்கை!
* தங்கள் தாயாரும் வாத்தியாருடன் இருந்ததாகவும் பின்பு தாங்களும் ...... என்ன குடும்பம் வாழ்த்துக்கள்!
* ..........................

டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
" "
onionkaruna@hotmail.com
www.eddappar.com
Reply
#8
ஜெயலலிதாவின் சுயதம்பட்டத்துக்கு கருணாநிதி எனும் கிழநரியின் பதில்...


<b>நினைவாற்றலை விட மறதியே சிறந்தது: கருணாநிதி</b>

நான் நினைவாற்றலில் நெப்போலியன் மாதிரி என்று முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, நினைவாற்றலை விட மறதியே சிறந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

மறைந்த திமுக நிர்வாகி பழக்கடை ஜெயராமனின் பேரனும், தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் மகனுமான ராஜாவின் திருமணத்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது:

இந்த சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைப்பதில் பெருமை அடைகிறேன். ஜெயராமனை பழக்கடை ஜெயராமன் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். தமிழகம் முழுவதும் அறிமுகமான ஒரு தன்மான வீரர்.

அவர் பெயரிலே 'ஜெய' என்று இருக்கின்ற காரணத்தினால் பொய் பேசுவார் என்றும் யாரும் எண்ணிவிடக் கூடாது. தவறை தவறுதான் என்று ஒப்புக் கொள்வார். அப்படிப்பட்ட ஒரு அருமைத் தம்பியை நான் இழந்த போது எந்த அளவிற்கு கதறினேன் என்பதை அவருடைய குடும்பத்தார் அறிவார்கள்.

இங்கே பேசியவர்கள் அனைவரும் நினைவாற்றலை பற்றி பேசினார்கள். அரசு நிலத்தை (டான்சி நிலம்) சொந்தமாக்கிக் கொண்ட வழக்கில் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள். நீதிபதிகள் கேட்ட 25 கேள்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் (முதல்வர் ஜெயலலிதா) தெரியாது என்று பதிலளித்தார். அவர் தனக்கு நினைவாற்றல் இருக்கிறதென்று சொன்னால் அதை எந்த பைத்தியக்காரனும் நம்ப மாட்டான்.

எதையும் சொல்லிவிட்டு, இல்லை என்று மறுநாளே மறுக்கலாமென்றால், ஒன்று பணம் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பதவி இருக்க வேண்டும். இவை இருந்தால் எதையும் செய்யலாம் என்கின்ற ஆணவம் ஏற்பட்டு விடுகிறது.

எல்லாவற்றையும் நினைவிலே வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியமாகும். நினைவை விட மறதிதான் ஒரு மனிதனை வாழவைக்கும். என் வீட்டில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியை நான் நிமிடத்திற்கு நிமிடம் நினைத்துக் கொண்டிருந்தால், நான் நிம்மதியாக வாழ முடியாது.

எனவே நினைவாற்றலை விட மறதிதான் சிறப்பானது. மறதி இல்லாவிட்டால் மனிதன் சுகமாகவோ, மகிழ்ச்சியாகவோ வாழ முடியாது.

மறதி இருக்கின்ற காரணத்தினால்தான் எத்தனையோ கொடுமைகளை மக்கள் மறந்து, யார் யாரையோ (ஜெயலலிதா) எங்கேயோ கொண்டு வந்து உட்கார வைத்து விடுகிறார்கள்.

இந்த மறதி மணமக்களுடைய வாழ்க்கைக்கும் மிகவும் முக்கியமானது. அதனால்தான் அண்ணா, மறப்போம்.. மன்னிப்போம் என்று சொன்னார். மன்னிப்பது கூட இரண்டாவது; மறப்பதுதான் முக்கியம்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)