Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 425 online users.
» 0 Member(s) | 422 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,066
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  அமெரிக்க அதிபர் தேர்தல் - பின்லேடன் 'அறிவுரை'
Posted by: kuruvikal - 10-30-2004, 12:34 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (3)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40471000/jpg/_40471471_binladen1_203.jpg' border='0' alt='user posted image'>

Bin Laden (bbc.com)

<b>அமெரிக்க அதிபர் தேர்தல்: பின்லேடன் 'அறிவுரை'</b>

முஸ்லீம்களை மிரட்டுவதை அமெரிக்கா கைவிட்டால், நியூயார்க்கில் நடந்தது போன்ற இன்னொரு தாக்குதலை தவிர்க்கலாம் என ஒசாமா பின் லேடன் கூறியுள்ளார்.

4 நாட்களில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு ஒரு வீடியோவை அனுப்பி வைத்துள்ளார் லேடன். அதில்,

அமெரிக்க மக்களாகிய உங்களது பாதுகாப்பு ஜார்ஜ் புஷ்ஷின் கையிலோ, ஜான் கெர்ரியின் கைகளிலோ இல்லை. உங்கள் பாதுகாப்பு எங்கள் கைகளில் தான் உள்ளது.

எந்த நாடு எங்களது (முஸ்லீம்கள்) பாதுகாப்பில் தலையிடவில்லையோ, அந்த நாட்டுக்கு நிச்சயம் பாதுகாப்பு உண்டு. யார் எங்களை மிரட்டவில்லையோ அவர்களை நாங்கள் ஏதும் செய்வதில்லை.

செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க்கில் நடந்த தாக்குதலுக்கு நான் தான் உத்தரவிட்டேன். (இத் தாக்குதலுக்கு பின் லேடன் பொறுப்பேற்பது இதுவே முதன்முறை) பாலஸ்தீன, லெபனான் மக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அநியாயங்களால் பாதிக்கப்பட்டதற்கு பழி வாங்கவே அந்தத் தாக்குதல் நடந்தது.

இவ்வாறு லேடன் கூறியுள்ளார். அல்ஜசீராவுக்கு 5 நிமிடம் ஓடக் கூடிய வீடியோவை லேடன் அனுப்பியுள்ளார். அதில் ஒரு நிமிட காட்சியை மட்டும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

சுமார் ஓராண்டுக்குப் பின் லேடன் அனுப்பியுள்ள வீடியோ இது. பிரௌன் நிற திரைக்கு முன் போடப்பட்ட மேஜையின் அருகே நின்றவாறு லேடன் பேசியுள்ளார்.

இந்த வீடியோ சமீபத்தில் தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டாக் மெக்லெலன் தெரிவித்துள்ளார்.

<b>இராக்கில் 1 லட்சம் பேர் பலி...?</b>

இதற்கிடையே இராக்கில் போர் தொடங்கிய இதுவரை 1 லட்சம் பொது மக்கள் பலியாகியுள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சிலும், இராக்கியப் படைகளின் தாக்குதலிலும், தீவிரவாதிகளின் தாக்குதல்களிலும் ஏற்பட்ட சாவுகளின் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டும் என இராக் பாடி கவுன்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது.

thatstamil.com

----------------------------------

எல்லாம் சரி லேடன்...உங்களட்ட ஒரு கேள்வி... கூட இருந்து காட்டிக்கொடுக்கிற முஸ்லீம்களுக்கு நீங்கள் என்ன தண்டனை கொடுக்கிறனீங்கள்... இல்ல சில இடங்களில முஸ்லீம்களின் அநியாயத்தால அழியுற அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்கத்தானே வேண்டும் அதற்கு அமெரிக்காவோ மேற்குலகோ இல்ல இதர முஸ்லீம் எதிர்ப்பு நாடுகளோ தேவையில்லை...நீங்களே உதவலாமே....என்றுதான்....!

அதுசரி...இது பின்லாடன் விட்டதோ இல்ல புஷ் பேரில சி ஐ ஏ விட்டதோ...???! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

Print this item

  பிரபாகரனை ஒருதடவையேனும் பார்க்கத் துடித்தார் வீரப்பன்!
Posted by: ஜீவன் - 10-30-2004, 11:17 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (2)

இலங்கையைச் சேர்ந்தவராக நடித்த அதிரடிப்படை எஸ்.ஐ.வெள்ளைத்துரையை நம்பி விடுதலைப் புலிகளைச் சந்திக்க சம்மதித்து வீரப்பன் காட்டைவிட்டு வெளியேறினான் என்ற ரீதியிலும் தகவல்கள் வந்துகொண்டிருக்க, இவ்விஷயம் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின்
நண்பரும், வீரப்பனைக் கண்டு அறிந்தவர்களில் ஒருவருமான தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

Print this item

  ஒரு கடிதம்
Posted by: kavithan - 10-30-2004, 08:23 AM - Forum: கவிதை/பாடல் - Replies (42)

[size=18]<b>ஒரு கடிதம் [ கவிதன் ]</b>

<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/kaathaliyin_kaditham-thumb.JPG' border='0' alt='user posted image'>

[u][size=18]<b>ஒரு கடிதம்</b>

[size=18]முத்தான உன் எழுத்துக்களால்
நீ.!
எனக்கு
முகவரி இட்டு அனுப்பிய
அஞ்சல் என் கைகளில்
தவழ்கின்றது.

பத்தும் பலதும்
பறைந்த
பாசமான உன் கடிதம்
பார்க்கும்
என் கண்களில்,
ஆனந்த கண்ணீர்.
மனதிலோ,
பொங்கும் மகிழ்ச்சி
மட்டுக்கடங்காது.

சொல்லில் அடங்காத
ஓர் பேரின்பத்தை
உன்
சிறிய
மடல் மூலம்
எனக்கு
நீ ஏற்படுத்தினாய்.

பக்கம் பக்கமாய்
நான் படிக்கும்
கவிதைகளில்
இல்லாத
ஒரு சுகத்தை
உன்
ஒரு பக்க
கடிதத்தில்
நீ தந்தாய்.

கட்டுக் கட்டாய்
நான் பாட்டியிடம்
கேட்ட
கட்டுக் கதைகளில்
கிடைத்த
மகிழ்ச்சியை விட
உன் கடிதத்தினால்
எனக்கு அதிக
இன்பத்தை
நீ ஊட்டினாய்

"கடுகு சிறிதானலும்
காரம் பெரிது"
ஆமாம்,
உன் கடிதம்
கடுகு தான்
ஆனால்,
நீ சொன்னவை
காரம் அல்ல
இனிப்பு.
ஆம், இனிப்பு
என் உமிழ்நீரில்
கரையவில்லை
என் மனதில்
கரைகிறது.

அழகாக,
அழகழகாக,
எழுத்துக்களை கோர்த்து
வரிவடிவம் தந்து
அஞ்சல் எழுதிய
அப்பேனாவுக்கு
ஒரு முத்தம்.
பேனாவை இயக்கிய
அவ்
அழகிய விரல்களுக்கு
ஒரு முத்தம்.
கருத்துக்களை
கோர்த்து
அழகாக தந்த
உன் மனதுக்கு
ஒரு முத்தம்.
எஞ்சிய முத்தங்கள்
எனக்காக
காத்திருக்கும்
உனக்கே
உனக்காக.

எனக்கொரு
முத்தம்
கிடைக்குமா செல்லம்?

[யாவும் கற்பனை]

கவிதன்
29/10/2004
[9.56 இரவு]

http://kavithan.yarl.net

Print this item

  இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ?
Posted by: shanmuhi - 10-30-2004, 07:39 AM - Forum: புலம் - Replies (31)

இலண்டனில் பொங்கு தமிழ் பொங்குமோ?

நான் தான் யாப்;பாணத்திலை இருந்து உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச சுப்பைய வாத்தியார்தான் இந்த கடிதத்தை எழுதிறன். லண்டனிலை இருக்கிற எங்கடை சனத்தோடை ஓருக்கா கதைக்க வேணும் என்று பலநாள் யோசிச்சு கொண்டு இருந்தனான் இப்பதான் சரியான நேரம் கிடைசிருக்குது.

என்ன யோசி;க்கிறியள்? இவர் யார் எங்களோடை கதைக்க என்றுதானே? நீங்கள் யோசிக்கிறது சரிதான் புள்ளையள். என்ன செய்யிறது மனம் கேக்குது இல்லையே நீங்கள் உங்கை இருந்து செய்யிற விளையாட்டை கேக்கேக்க தம்பியவை ஒருக்கா யோசிச்சுப் பாருங்கோ இங்கை இருக்கிற பெடியள் எல்லாம் அடுத்ததா ஒரு பொங்கு தமிழை யாப்பாணத்திலை நடாத்துவம் என்று யோசித்து கொண்டிருக்கிறாங்கள். நீங்கள் என்னடாப்பா செய்யிறியள்? உங்களை மாதிரி பெடியங்கள் தானே கனடாவிலையும் ஓடியாடி செய்தவங்களாம். தம்பியவை உங்களை மாத்திரம் குறை சொல்லேல உங்கை இருக்கிற எல்லாருக்குந்தான் சொல்லுறன்.

போன கிழமை தான் என்ர பாலிய சினேகிதன் ஒருத்தன் உங்கை இருந்து இங்கை வந்தவன். ஒரு எட்டு அவனைப்போய் சந்தி;ச்ச பிறகுதான் உங்கை என்ன நடக்குது என்று தெரியுது. எங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது போலதான் கிடக்குது. இருக்கிற இடத்திலாவது நிம்மதியா இருங்கோவன் புள்ளையள்.

எதுக்கெடுத்தாலும் போட்டி. எதுதில போட்டியா இருக்கிறது என்று ஒரு வரமுறை தெரியாமல் எல்ல இருக்கிறியள் போல கிடக்கு. நான் என்னத்தை சொல்லுறன் என்று விளங்கேலையே? அதுதான் உங்கை இருக்கிற கோயில்களை தான் சொல்றன். கடவுள் என்ன பாவம் செய்தவர் அவற்றை பேரை சொல்லி அடிபடாதைங்கோ. அவர் ஒன்றை செய்தா நானும் அதிலையும் பாக்க கூட செய்ய வேணும் என்டு யோசிக்காதைங்கோ? அவர் கோயிலை சுத்தி தேர் இழுத்தா நான் றோட்றோட்டா இழுப்பன் எண்டு வெளிக்கிடாதைங்கோ. உங்கடை இந்த போட்டியலை நல்ல விசயத்திலை காட்டுங்கோ. அதுதான் தம்பியவை கனடாவிலை செய்த பொங்கு தமிழிலும் பாக்க பெரிசா செய்ய வேணும் என்று யோசிங்கோ?

அடுத்தது தம்பியவை உந்த பேப்பர்- இரண்டு முண்டு பேர் சேர்ந்தோனை இலவசமா பேப்பரை தொடங்கறியளாம். நல்ல விசியம் தான் புள்ளையள் பேப்பர் தொழில் தம்பி புனிதமானது. உதுக்காவே தம்பி நிமலராசன் நடேசன் எல்லாம் உயிரைக் கொடுத்திருக்கினம். நீங்கள் என்;னண்டா யாரோ கஷ்டபட்டு எடுத்த செய்தியை இருந்த இடத்திலை இருந்து கொண்டு இந்தியாவிலை இருந்து வாறா புத்தகத்திலை இருந்தும் எதாவது கொஞ்சத்தை எடுத்து பத்தாததுக்கு இப்பதானையாம் கொம்பிரரிலை எல்லாம் வருதாமே அதையும் எடுத்து போட்டு எங்கையாவது ஒரு இடத்திலை உங்களுக்கு வேண்டாத ஆக்களை பற்றி எழுதிவிட பேந்து என்ன குடும்பி பிடி சண்டை தானே. உங்கை இருந்து வாற பேப்பர் இரண்டு முண்டை என்ர நண்பன் பாக்க தந்தவன். அதை பாக்கேக்கை விளங்குது. தயவு செய்து இப்படி அடிபடாதைங்கோ. உங்கடை பேப்பருக்குளாலை மக்களை ஒண்டுதிரட்டி உந்த பொங்கு தமிழை ஒருக்கா நடாத்துங்கோவன்.

மற்றது என்ர சினேகிதன் சொன்னான். உங்கையாம் சமரோ கிமரோ அதுதான் வெய்யில் காலம் வந்த உடனேயாம் புத்துக்கிலை ஒழிஞ்சிருக்கிற சங்கம் எல்லாம் ஆண்டு விழா கொண்டாட தொடங்கிடுவியளாம்.. அதுக்கெண்டே நல்ல கலர் பக்கத்திலை புத்தகம் வேறையடிக்கிறியள் பாத்தன். அதிலை ஏதேன் நல்ல விசியம் இருக்குமெண்டால் உங்களுக்கிலேயே ஓருத்தரை ஓருத்தர் புகழ்ந்து எழுதிறியள்.

ஏன் ராசா இந்த வேலை. அதுதான் பரவாயில்லை எண்டு பாத்தா ஒரு பள்ளிக்கூடத்துக்கு இரண்டு சங்கம் வேறை என்னடாப்பா உதுகள். தம்பியவை. அதுமாத்திரமே! உந்த பல்கலைக்கழகத்திலை படிக்கிற பெடியள் என்ன எண்டு பாத்தாவாம் டிஷ்கோவோ குஷ்கோவோ என்று நோட்டிசு அடிச்செல்ல நிகழ்ச்சி வைக்கிறிங்களாம். தம்பியவை உங்கடை வயதுப்பெடியள் தான் இங்கை ஆமிக்காரனுக்குள்ள இருந்துகொண்டு முதலாவது பொங்கு தமிழை நடாத்தினவங்கள் தெரியும்தானே? கனடாவிலையும் இப்படி பெடியங்கள் தானாம் முன்னுக்கு நிண்டு செய்தவங்களாம்.

தம்பியவை அதுக்காக உங்களை டிஷ்கோவுக்கு போகவேணாம் எண்டு சொல்லலே. உந்த வயதிலை தான் எல்லாம் செய்ய வேணும். ஆனாலும் அதிலும் பாக்க பெரிய கடமை எல்ல ஒன்று முன்னுக்கு இருக்குது.

சினேகிதன் சொன்னான் உங்கையாம் கிட்டத்தட்ட இருப இருபதைஞ்சு கோயில் இருக்காம். இலவச பேப்பர் என்று பார்த்தா எல்லாஞ் சேர்ந்து ஒரு பத்து வருமாம். உந்த சங்கங்கள் சின்னன் பெருசு என்று எடுத்து பார்த்தா ஒரு முப்பது நாப்பது வருமாம். இப்படி நல்ல வசதியா தான் இருக்கிறியள். நீங்கள் எல்லாரும் ஒருக்கா ஒண்டா சேந்தா இந்த பொங்கு தமிழை நல்லா நடாத்தலாம் தானே?. என்ன காசுக்கு என்ன செய்யுறது என்று யோசிக்கிறியளே? அதுக்கு கவலை படாதைங்கோ. சும்மா சும்மா யார் யாருக்கோ பாரட்டு விழா செய்யிறம். அங்கை கூழ் ஊத்திறம் இச்ச கஞ்சி ஊத்திறம் என்று வெளிக்கிட்டு திரியிறவங்களுக்கெல்லாம் காசு கொடுக்கிற எங்கடை வியாபாரிமார் பொங்கு தமிழுக்கு காசு தரமாட்டினமா?

சும்மா இருந்தா நடக்காது. எல்லாரும் ஒருக்கா வெளிக்கிடுங்கோ. இலண்டனில பொங்கு தமிழை பொங்க வைச்சிடுவம் என்று பொங்குங்கோ. இந்த கட்டை கட்டையில போறத்துக்கு முதல் இலண்டன் பொங்கு தமிழ் நடந்ததாம் என்று கேட்டுட்டு போவம்.

சரி தம்பியவை நல்ல செய்தி கேள்விப்பட்டா மீண்டும் கடிதம் எழுதுறன். கோவிக்காதைங்கோ. ஒரு வேகத்திலை எல்லாருக்கும் பேசிப்போட்டன் திரும்பவும் து}ஷணத்திலை பேச வைச்சிடாதைங்கோ. நல்ல செய்தியா பதிலை போடுங்கோ.

இப்படிக்கு
உங்கள் அன்புள்ள
சுப்பையா வாத்தியார்


நன்றி:தமிழ்நாதம்

Print this item

  எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?
Posted by: Mathan - 10-29-2004, 07:51 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (17)

எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.

எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.

மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.

இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.

அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.

அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.

முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

நன்றி - சந்திரவதனா

Print this item

  பேய்களின் திருநாள்...Halloween festival
Posted by: kuruvikal - 10-29-2004, 02:39 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (16)

<img src='http://logosresourcepages.org/images/reaper.gif' border='0' alt='user posted image'>

<b>மேற்குலகில் பிரசித்தி பெற்ற விசேட தினங்களில் கலோவின் பண்டிகையும் (Halloween festival) முக்கியம் பெறுகிறது...! </b>

<b>வருடம் ஒன்றில் ஒளி தந்த காலப்பகுதியில் (சமர் -summer) இருந்து இருள் சூழும் காலப்பகுதியுள் உலகம் செல்லும் போது (Winter - வின்ரர் ஆரம்பிக்கும் காலம்) பூவுலகுக்கும் விண்ணுலகுக்கும் இடையே உள்ள தடைகள் தற்காலிகமாக விலக அக்காலப்பகுதியில் பேய்களின் பூவுலக ஊடுருவல்களும் செயற்பாடுகளும் உச்சம் பெறுகின்றனவாம்...அதனாலேயே காத்திகை முதலாம் (November 1 ) திகதியை பேய்கள் உச்சம் பெறும் நாளாகக் கருதி பேய்களைப் போல வேடம் இட்டு தீ மூட்டி இப்பண்டிகையை கொண்டாடுகிறார்களாம்...!
தீ மூட்டி வெளிச்சம் தந்து பேய்களை விரட்டுவதாக நம்பியே இவ்வாறு செய்கின்றார்களாம்...!</b>

இப்பண்டிகை ஐயர்லாந்தில் பிறந்து உலகெங்கும் வியாபித்ததாகவும் வரலாறுகள் சொல்கின்றன...! இருப்பினும் இது கீழத்தேச நாடுகளில் அவ்வளவு செல்வாக்குச் செலுத்தவில்லை...!

நவீன விஞ்ஞான உலகிலும் இப்பண்டிகை நம்பிக்கையோடும் பல இடங்களில் ஆடம்பரத்துக்காகவும் கொண்டாடப்படுகிறது...!

இப்பண்டிகை பற்றிய மேலதிக விபரங்கள் இங்கு...ஆங்கிலத்தில்.... மேலதிக தகவலுக்கு இங்கு அழுத்தவும்..

<img src='http://www.goblinville.com/downloads/new-graphics/skeletons/skeleton_hung_ani.gif' border='0' alt='user posted image'>

----------------------------

<b>எங்கள் கேள்வி....ஆவிகள் பேய்கள் உண்மையா...??! இது மேற்குலக மூடநம்பிக்கையில்லையா...??! அல்லது இது அவர்களின் வாழ்வியலில் பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களை எடுத்துச் சொல்ல கொண்டாடப்படுகிறதா..???!....என்பதே..!
உங்கள் பார்வையில் இப்பண்டிகை எவ்வாறு தோன்றுகிறது...! </b>

<img src='http://logosresourcepages.org/images/reaper.gif' border='0' alt='user posted image'>

Print this item

  காலத்தை வென்ற தலைவன்
Posted by: தமிழன் - 10-29-2004, 02:31 AM - Forum: நூற்றோட்டம் - Replies (5)

வணக்கம்

"காலத்தை வென்ற தலைவன்"

ீPrabhakaran A Leader For All Seasons" இந்த புத்தகம் இப்போது இணையத்தில் விற்க்கப்படுகிறது.

www.eelamstore.co.uk

ஆர்வமுள்ளோர் பெற்றுக்கொள்ளலாம்.


நன்றி

தமிழன்.

Print this item

  திருமண வாழ்த்துக்கள்
Posted by: yarlmohan - 10-28-2004, 11:25 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (20)

கடந்த 26ம் திகதி பதிவுத் திருமணத்தினை முடித்துக் கொண்ட பரணியிற்கு திருமண வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Print this item

  போலித்தமிழன் கருணா [ கவிதன் ]
Posted by: kavithan - 10-28-2004, 11:01 PM - Forum: கவிதை/பாடல் - Replies (11)

<span style='font-size:25pt;line-height:100%'><b>போலித்தமிழன் கருணா [ கவிதன் ]</b></span>



<img src='http://kavithan.yarl.net/kavithan_pic/pooli_thalaivan_karuna.JPG' border='0' alt='user posted image'>


<span style='font-size:21pt;line-height:100%'>
பொங்கும் தமிழரில்
போலி தமிழன் இவன்
பங்கம் விளைவித்து - தமிழரை
பங்கு போடவே
சிங்களவன் காலை கட்டி நிற்கிறான்

எட்டி நிற்பவனுக்கு
எட்டப்பன் வேலை
கிட்ட இருந்து பார்த்து
தொக்கி நிக்கும் தமிழரை
தொங்கி இழுக்க நிற்கிறான்

மட்டு நகர் மானத்தை
மட்டமாக விலை பேசி
மாற்றான் குகையில்
மறைந்திருந்து
மாற்று கட்சி அமைக்கிறான்.

வில்லுப்பாட்டுக்கு ஆமா போட
அஞ்சாறு பிணந்தின்னிகள்
இவன் பின்னாலே..
அதனை அகிலத்துக்கு சொல்லிட
ஆறேழு அடிவருடிள் முன்னாலே.

நீண்டு கொண்டிருக்கும்
பனிப்போரில்
நெருப்பாய், தேனியாய், மீனாய்பாடி
அதிரடியாய் வந்தாலும்
நீறாக போய்விடுவாய் நீ.

கட்டு கட்டாய் பணம் இருந்தால்
கடைசிவரை நன்றாக வாழலாம் என்று
கானாக்கண்டாய் போலும்- ஆனால்
சொட்டு சொடாய் மக்கள் சிந்தும் கண்ணீர்
சீக்கிரத்தில் உனக்கு பதில் சொல்லும்.</span>



கவிதன்
27/10/2004

http://www.kavithan.yarl.net

கருத்து எதுவும் மாறாது சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளது.... கவிதையில் கூட அச்சொல் பாவிக்க கூடாது என நினைக்கும் தமிழ்விரும்பிகளுக்காக

Print this item

  தயவுசெய்து நிறுத்துங்கள்
Posted by: Nellaiyan - 10-28-2004, 05:42 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

கள உறுப்பினர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்

தயவு செய்து தேவையற்ற, களத்திற்கு சம்பந்தமேயில்லாத, அருவருப்பான விவாதங்களை நிறுத்துங்கள். இவை எல்லை மீறி அநாகரிகமாகச் சென்றுகொண்டிருக்கின்றன. இதைத் தொடர்வதால் எதிரி, துரோகிகளுக்கு நாமே தீனியைக் கொடுக்கின்றோம், அவர்களும் பலபல முகமூடிகளில் இங்கு உலாவ முற்படுகின்றார்கள்.

போதும் போதும் சலித்தும் விட்டது. தயவுசெய்து நிறுத்துங்கள்.

Print this item