Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 320 online users.
» 0 Member(s) | 317 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,066
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,490
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  பாடல்கள் தரவிறக்கம்
Posted by: Thiyaham - 10-28-2004, 03:47 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (11)

புதிதாக upload செய்யப்பட்ட பாடல்கள்களுக்கான தரவிறக்கம்(இடைக்கால படல்கள்) இங்கே உள்ளது

http://www.coolgoose.com/go/music?user=pra...ratheeps26&go=1

Print this item

  நேற்று நாங்களும் நாளைய நிலவுகளும்...!
Posted by: V.T Tamileelathasan - 10-28-2004, 02:19 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<b>நேற்று நாங்களும்
நாளைய நிலவுகளும்...!</b>

காலை
கடலும் கதிரவனும்
பனித்துளி படர்ந்த புல்வெளியும்...
உப்புக்காற்றும் ஊர்குயிலும்
இசைபாடும் காலை...!

ஆழக்கடலும் அங்கிருந்து
துயில்கலையும் கதிரவனும்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
அருகினில் சென்று பாராமல்
அப்போது...
காலைவிடியாது எனக்கு...!

தூரத்தில்...
கட்டுமரத்தை தரையிறக்கி
அள்ளிவந்த மீனையெல்லாம்
அன்னையிடம் கொடுத்துவிட்டு
அண்ணார்ந்து பார்த்துக்கொண்டே
"அப்பாட" என்று சொல்லி
உப்பு நீரும் முத்துவியர்வையும்
வடிந்த முகத்தை
தொளிலிருந்த
துண்டால் துடைத்துவிட்டு
என்னைக்கண்டு
கையசைத்துக்கொண்டே
கூப்பிடுவான் என் பள்ளித்தோழன்..!

இதுவரை...
"குருவிநேவி" அடிக்க
முள்ளில்பாய்ந்து
ஒருதடவை
"கிபிர்" விமானம் வட்டமிட
வடலிக்குள் விழுந்து
ஒரு தடவை
ஆனையிறவிலிருந்து
"செல்" அடிக்க
வேலியைக் கடந்து
ஒருதடவையென
மூன்று தடவைகள்
பழுதாயப் போன
இரண்டுவாரங்களுக்குமுன்
வாங்கிய - என்
புது மிதிவண்டியில்
நானும் அவனும் பள்ளிசெல்வோம்...!

வெள்ளைச் சீருடையில்
சின்னச் சின்ன நிலவுகள்
வீதியெங்கும் மெதுவாகநகர
வேகமாக நாங்கள்
முந்தியடித்துக்கொண்டு போவோம்..!

ஆசிரியர் பாடம் நடத்த
பயங்கர இரச்சலுடன்
பயம்காட்ட "கிபிர்" வரும்
வானத்தில் வட்டமிட
வளமைபோல..
திட்டமிட்ட பாடங்கள்
பாதியில் நின்றுபோகும்..!

அன்றும் அப்படித்தான்...
பயங்கர இரச்சலுடன்
அது வந்தது...!
நாங்கள் பயந்தோடி
உயிர்காக்க
வெளியேறி வேலிபாய்ந்தோம்
அல்லதுபோனால்...
அன்றுவந்த
அந்திவானமாய்
வெள்ளைச் சீருடைநிலவுகள்
சிவந்திருக்கும்
கனவுகள் சிதைந்தபடி
வாழ்வும் முடிந்திருக்கும்...!

<b>வே.த.தமிழீழதாசன்
27.10.2004 (பாரீஸ்)</b>

Print this item

  ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் திருமணம்
Posted by: yarl - 10-28-2004, 10:29 AM - Forum: சினிமா - Replies (101)

அக்டோபர் 28, 2004

ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் நவ.18ல் திருமணம்

சென்னை:

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுசுக்கும் அடுத்த மாதம் 18ம் தேதி திருமணம் நடக்கவுள்ளது.

முதலில் சிலம்பரசனுடன் கிசுகிசுக்கப்பட்ட ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, பின்னர் அவரிடம் இருந்து விலகிவிட்டார். சிலம்பரசனும் ஐஸ்வர்யாவும் இணைந்து பாப் பாடல் கேசட்டுகளை வெளியிட்டு வந்தனர். நெருக்கமாக பழகி வந்த இருவரிடையே திடீரென பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து தனுசுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் காதல் மூண்டுள்ளதாக பேசப்பட்டது. ஆனால், அதை இருவருமே மறுத்து வந்தனர்.

சுள்ளான் படப்பிடிப்பின்போது, சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஐஸ்வர்யா அடிக்கடி ஆஜராக ஆரம்பித்தார். இந்தக் காதலை வதந்தி என தனுஷ் மறுத்தார். ஐஸ்வர்யா என் அக்காவுக்கு தோழி. அவ்வளவுதான் என்றார்.

இந்தக் காதலை தனுஷ் வீட்டில் உடனே ஏற்றுக் கொண்டாலும், ரஜினி தரப்பில் ஆரம்பித்தில் எதிர்ப்பு காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காதலில் ஐஸ்வர்யா தீவிரமாக இருக்கவே திருமணம் செய்து வைக்க ரஜினி சம்மதித்துவிட்டார்.

இதையடுத்து தனுசின் தந்தை கஸ்தூரிராஜாவும், அவருடைய மனைவி விஜயலட்சுமியும் ரஜினிகாந்த், லதா தம்பதியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தனுஷ், ஐஸ்வர்யா திருமணத்தை அடுத்த மாதம் 18ம் தேதி ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா மண்டபத்தில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

திருமணம் தொடர்பாக தனுஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆஸ்ரம் பள்ளியில்தான் நான் படித்தேன். அப்போது ஐஸ்வர்யாவும் என்னோடு படிச்சாங்க. என் சகோதரியும் ஐஸ்வர்யாவும் நல்ல தோழிகள். பள்ளியில் படிக்கும்போது நானும், ஐஸ்வர்யாவும் நட்பாகத்தான் பழகினோம். படிப்பு முடிந்து நான் சினிமாவுக்கு வந்த பின்பு, நீண்ட நாட்கள் நாங்கள் சந்திக்கவில்லை.

துள்ளுவதோ இளமை படம் வெளியானபோது ஐஸ்வர்யா எனக்கு போன் பண்ணி பாராட்டினாங்க. ஒவ்வொரு காட்சியையும் புகழ்ந்தாங்க. எங்கள் நட்பு மீண்டும் தொடர்ந்தது. பிறகு அடிக்கடி என் வீட்டுக்கு அக்காவை பார்க்க வந்தபோது, என்கிட்டேயும் நிறைய நேரம் பேசுவாங்க.

காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுள்ளான் படங்களையும் பார்த்து விட்டு பாராட்டினாங்க. அந்த சமயங்களில்தான் எங்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாய் காதலாக மலர்ந்தது. வீட்டுக்குத் தெரியாமல் நீண்ட நாட்கள் காதலிச்சோம்.

பின்பு திருமணம் செய்துக்க முடிவெடுத்து, எங்கள் காதலை இரு வீட்டு பெற்றோரிடமும் சொன்னோம். அவர்களும் ஏத்துக்கிட்டாங்க. எங்கள் திருமணம் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கிறது. மிகப் பெரிய நடிகர் ரஜினிகாந்த். அவர் மகள் ஐஸ்வர்யாவை மனைவியா அடையப் போறதை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. உலகிலேயே பெரிய அதிர்ஷ்டசாலி நான் என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
thatstamil.com

Print this item

  இந்து பத்திரிகை ஆசிரியர் ராமுக்கு பகிரங்க கடிதம்...by Presid
Posted by: paandiyan - 10-28-2004, 07:11 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

Open Letter to the Editor, The Hindu - India - Mr.Ram

Dear editor Mr.Ram,

This refers to your editorial ?INDIA-SRI LANKA DEFENCE AGREEMENT? ( The Hindu ? October 26. 2004).

As usual your editorial lacks balance, objectiveness and profound disregard for facts. It is completely biased, ill-informed and borders on stupidity. Indeed your propensity for self-delusion, hallucination and paranoia are remarkable!

You must be the dumbest among the dumb to assert that the LTTE poses a threat to India?s security. It is an illogical argument and based on unfounded fear. How could 3 million people of a tiny state pose a threat to mighty India with a population of one billion?






You may be rest assured that unlike the Sinhalese the Thamils for historical reasons are the natural allies of India due to common culture, language, religion and ethnicity.


In fact not long ago the Sinhalese politicians were accusing Thamils of owing extra territorial allegiance to India rather than Sri Lanka. It is because of this perception that Thamils, including those of Indian origin, have suffered physical violence and discriminatory laws at the hands of the majority Sinhalese since independence.




You claim, albeit naively, that ?At the same time the draft defence cooperation agreement, which is likely to be signed by the end of the year, is not meant to encourage the Sri Lankan Government to go for a military solution to the Tamil question.? On the contrary, the defence agreement is bound to weaken the LTTE by altering the current military parity between the LTTE and Sri Lankan army. Furthermore, it will hearten Sri Lankan ruling circles to get bolder in their attempt to provoke a war in the belief that India is behind them by virtue of the defence agreement.

Mr. Ranil Wickremesinghe, who initiated this defence agreement, has claimed more than once that it is part of an international security safety net against military threat faced by Sri Lanka. Mr. Ranil Wickremesinghe clearly meant the LTTE as the organization posing a military threat since Sri Lanka faces no threat from its neighbours. Therefore, the defence agreement will and shall enhance the ?steroid injection to Sri Lanka's existing military capabilities.?



You have also conveniently overlooked the fact that the previous government of Ranil Wickremesinghe did accept the LTTE proposal in October, 2003 for an "Interim Self-Governing Authority" as the basis for further talks. It was President Chandrika who rejected the ISGA out of hand and took over the defence portfolio after claiming that the ?reasons for taking this action was in the national interest and it was taken after careful consideration, in order to prevent further deterioration of the security situation? a claim dismissed by Prime Minister Ranil Wickremesinghe as "an attempt to subvert the mandate for peace." (The Hindu November 04,2003)

You are, therefore, sticking your tongue in your cheek when you wrongly accuse the LTTE by saying ?is nothing but a transparent delaying tactic even as the extremist organisation consolidates its de facto hold on North-East Sri Lanka by physically eliminating all Tamils who dare to oppose it.?



Contrary to your assertion there are no Thamils opposed to the ISGA and no one is eliminated because of that fact.


Again, if as you claim that the LTTE is resorting to delaying tactics because it wants to consolidate its de facto hold on North-East of Sri Lanka should that not be a good reason for President Chandrika to commence talks without further foot-dragging and prevarication? Since more delay will mean LTTE's de jure rule?



Ironically you did not thought it fit to knock some sense into the heads of extremist Sinhalese forces like the Hela Urumaya and JVP that are opposed to any peaceful settlement of the ethnic conflict based on internal self-determination, democratic pluralism and justice. The Hela Urumaya consisting of yellow robed Buddhist monks wedded to majoritarian political hegemony is openly espousing the racist theory that the whole island belongs to Buddhist Sinhalese only and Thamils who are invaders must live at their mercy and goodwill!



It is nothing new and no surprise The Hindu, being part of the anti- Thamil establishment that is out to denigrate and destroy Thamil nationalism, has emerged as the darling of Sinhalese chauvinistic elements!



Yours truly,



Veluppillai Thangavelu
President / Tamil Creative Writers Association

Contact: Tel. (416) 281 1165 (416) 447 6314 (905) 949 0824
Fax (416) 261 6745

E-mail: athangav@sympatico.ca
_______________________________________________________
source: http://www.tamiloosai.com/oosai.asp?id=2903&catID=0

Print this item

  ஏக்கம்..!
Posted by: kuruvikal - 10-27-2004, 10:39 AM - Forum: கவிதை/பாடல் - Replies (21)

<img src='http://kuruvikal.yarl.net/archives/nicebluebird.jpg' border='0' alt='user posted image'>

கவி வடித்தேன்
காதல் கொண்டல்ல
நாவிருந்து கவியாய் எழும்
அன்னைத் தமிழ் வரியில் விழ
கவியாய் விழுவதால் - என்று
மனம் சொல்லுது
உண்மை அதுவா...?!
ஏக்கம் தான் மிச்சம்
உண்மை சொல்ல உலகில் யாரும் இல்லை....!
சரி அதுபோக...
மலர் மீது நேசம் கொண்டேன்
மட்டக் காதலுக்காய் அல்ல
மகத்தான காதலுக்காய்
மலரோ என் நேசம் உணரவில்லை
மெளனமே பதில் தந்து
வண்டுக்காய் காத்திருக்காக்கும்
மலரின் மனதில் என்ன கோலமோ...!
மொத்தத்தில் குருவிதன் நேசம்
மனதோடு புதைகுழி சேர்ந்தாயிற்று
அங்கும் ஏக்கதான் மிச்சம்...!

கணணியில் கண்விட்டு
தாய் மண்ணில் அமைதியாம்
தன்னாட்சி உரிமையாம்
கணத்துக்கு கணம் செய்திகள்
கனத்த மனசுக்கு சுகந்தம் வரும்
கனவில இருக்க
கனதியாய் ஒரு செய்தி
களம் மாறியது கவனம் கலைந்தது
அங்கும் ஏக்கம் தான்...!
சரி அதுபோக...
தனிச் சுவையில் உண்டி தேடி
தனித்திருந்து உண்டி பண்ணி
பரிமாறும் வேளை கைவிட்டு
படார் என்று விழுந்தது பாத்திரம்
முயற்சியெல்லாம் மண்ணோடு மண்ணாய்
அங்கும் ஏக்கம் தான்...!

ஏக்கமே வாழ்வா...
சா...என்றெண்ணி
அன்னையவள் குரல் கேட்டால்
அமைதி கிட்டும் என்பதற்காய்
பொத்தானை அழுத்தி
பொறுத்திருந்து பார்த்தால்
"லைன் என்கேஷ்"
பாவம் அம்மாவுக்கு என்னவோ
அங்கும் ஏக்கம் தான்...!
இப்படியாய் ஏங்கிக் கொண்டிருந்தால்
நாளை வயிற்றுக்கு
ஏக்கம் தான் உணவாகும் என்றெண்ணி
வேலைத்தளம் ஏகினால்
அன்று வேலையில்லையாம்
அட அங்கும் ஏக்கம் தான்...!

மொத்தத்தில் வாழ்வே ஏக்கத்தில்
அப்படியா....???!
இல்லையே யாழ் களமிருக்கே
சுதந்திரமாய் பறந்திட
தடையே இல்லாது மனம் சொல்வது
கொட்டித் தீர்த்திட....!
அங்கு மட்டும்
நினைத்தது நடந்தது
மனமோ பூரிப்பில்
ஏக்கம் மறந்த சுகம் உணர்ந்தேன்
சுதந்திரவானில் சிறகடிக்கும்
நவகாலக் குருவி நான்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

நன்றி ; http://kuruvikal.yarl.net/

Print this item

  கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்
Posted by: hari - 10-27-2004, 05:53 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (10)

<span style='color:red'>கருணாவிற்கு முன்னாள் போராளியின் கடிதம்</span>

<b> உங்களின் கீழிருந்து வளர்ந்து வருவதாகக் கனவுகண்டு படுகுழிக்குள் வீழ்ந்திருக்கும் முன்னாள் போராளி எழுதுவது,</b>


நான் இப்போது தாயகத்தில் இல்லை. ஆனால் உங்களை நம்பி போராட்ட வாழ்க்கையைத் தொலைத்துவிட்ட பலர் இன்று தாயகத்தில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அல்லாடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். அவர்களை விட என் வாழ்க்கை கடினமானதல்ல. உங்கள் வழிகாட்டலை நம்பி தேசியத் தலைமையைப் பற்றிய உங்கள் விமரிசனங்களை நம்பி நாங்கள் ஏமாந்து விட்டதால் எங்களால் மீண்டும் எங்கள் போராளிச் சகோதரர்களின் முகத்தில் விழிக்க முடியவில்லை. அதனால் மீண்டும் மட்டு. அம்பாறை மாவட்டத்தில் இருக்க முடியாமல் வெளிநாடொன்றில் வாழ்கிறேன். தாய் நாட்டிற்கும் என்னோடிருந்து போராடி, என் பயிற்சியிலும் வழிகாட்டலிலும் களமிறங்கி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும் முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கிறேன். துரோகியின் வழிகாட்டலில் தவறு செய்தவனின் பிள்ளை என்று என் அடுத்த தலைமுறை அவமானப்படக் கூடாது என்பதற்காகவும், தக்க தருணத்தில் என் பிள்ளைகளாவது தாய்நாட்டிற்கான முழுச்சேவையைச் செய்யும் பேறு பெற்றிட வேண்டும் என்பதற்காகவுமே இந்த அஞ்ஞாத வாசம்.

அது நிற்க, இப்போது விடயத்திற்கு வருவோம். நீங்கள் கட்சியொன்றை ஆரம்பித்திருப்பதாகத் தகவல். அரசியல்வாதிகளைப் பற்றிய உங்கள் மட்டரகமான விமரிசனங்கள் நமது படையணியில் மிகவும் பிரசித்தம். அதுவும் குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றிய உங்களின் பிரசித்தமான 'அந்த" விமர்சனத்தை நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். இப்போது நீங்கள் அதே டக்ளசோடு அரசியல் பாணி வேட்டி சட்டை அணிந்து மாலை போட்டு வரும்போது நான் முன்னே வந்து அந்த வசனத்தை ஞாபகப்படுத்தினால் உங்கள் முகம் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன். வேதனையை மீறி கொஞ்ச நேரம் வயிறுகுலுங்கச் சிரிக்க முடிந்தது.

அரசியல் என்பது உங்களைப் பொறுத்தளவில் ஒரு வியாபாரம். அங்கே வசனங்களை விற்று வாழ்க்கையை நடத்தலாம் என்பது உங்களின் நப்பாசை. அதுவும் நீங்கள் கூட்டுச் சேர்ந்திருக்கும் பரந்தன் ராஜனும் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லை. மாடு கடத்தி விற்றவர், ஆனந்தசங்கரியோடு சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளரை எழுபதுகளின் நடுப்பகுதியில் சுட்டுக்கொன்றவர். சகோதரியின் கணவரையே காசுத் தகராறில் சீவி எறிந்தவர் என்று அவருக்கும் ஏகப்பட்ட விருதுகள். அவரின் தம்பியே உங்கள் கட்சியின் 'செயலாளர் நாயகமாக" இருப்பது உங்களுக்கு மிகப்பெரும் பேறு. சபாஷ்! பலே! சரியான கூட்டணி என்று கூவவேண்டும் போல் இருக்கிறது.

தவிர பரந்தன் ராஜனுக்கு ஊட்டியிலே ஏகப்பட்ட அசையாச் சொத்துக்கள் இருப்பதாகப் பேசிக்ககொள்கிறார்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு அந்தப்பக்கம் 'உல்லாசப்பயணம்" போகும் நோக்கமும் இருக்கலாம். எதற்கும் பார்த்து நடவுங்கள் அம்மான்.

இப்போது உங்களைப் பீடித்திருக்கும் நோய்க்கு என்ன மருந்து தேவை என்பது யாருக்கும் தெரியவில்லை. நீங்கள் நோயாளி என்பதில் எனக்குக் கிஞ்சித்தேனும் சந்தேகம் இல்லை. ஏனென்றால் அந்த நாட்களில் நாங்கள் பார்த்த கருணா வேறு. இப்போது அறிக்கைகள் மூலமும் கட்சியமைத்துக் கூட்டுச் சேர்ந்திருக்கும் ஆட்களின் மூலமும் வெளிப்படும் கருணா வேறு. முன்பொரு நாள் முல்;லைத்தீவுக் கடற்பரப்பில் ஏழு கடற்கலங்களின் அணிவகுப்பில் நீங்கள் பயணிக்கிறீர்கள். உங்கள் பயணத்திற்குக் காவலாக இரண்டு கரும்புலிப் படகுகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தக் கரும்புலி வீரர்கள் மட்டும் அன்று தங்களின் உயிர்களைத் தாரை வார்த்திருக்கா விட்டால் இன்று இந்த மண்ணில் ஒரு துரோகியின் எண்ணிக்கை குறைந்திருக்கும். அன்று தப்பிவந்த நீங்கள் கரையை அடைந்ததும் சொன்ன வாக்கியத்தை என்னால் மறக்க முடியவில்லை. 'இன்று இந்தப் பயணத்தில் வந்த எவரும் உயிருள்ளவரை தமிழீழ இலட்சியத்திற்காக போராட வேண்டும்" என்பதே அந்த வசனம். அதைக் கேட்டிருந்த பலர் இன்று மாவீரராகி விட்டார்கள். ஆனால் அதைச் சொன்ன நீங்கள் இன்று உயிரோடிருந்து தமிழீழத்திற்கு மாபெரும் துரோகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

அன்று அந்தத் தியாகத்தைச் செய்தவர்களி;ல் ஒருவர் வாழைச்சேனையைச் சேர்ந்த கண்ணாளன். மற்றவர் நகுலன். வடபகுதியைச் சேர்ந்தவர். பிற்பட்ட நாட்களில் வட தமிழீழம் பற்றி வாய் கிழியப் பிரதேசவாதம் பேசித்திரிந்த போது அந்தத் தியாக நிமிடத்தை ஒரு பொழுதாவது சிந்தித்திருந்தீர்களா? அல்லது உங்களுக்குப் பிடித்த நோயின் காரணமாக அப்போதே அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?

மட்டக்களப்பிலிருந்து விரட்டியடிக்கப்படும் முன்னான நாற்பத்தியொரு நாட்களில் நீங்கள் கக்கிய பிரதேசவாத விஷத்தையும் வடபகுதித் தமிழர்களைக் விரட்டுவோம் என்ற நிலைப்பாட்டையும் இப்போது திடீரென்று கைவிட்டு விட்டீர்கள். பெரிய நாயைக் கண்டதும் வாலைச் சுருட்டிக்கொண்டு மூலைக்குப் போகும் சிறிய நாயின் நிலைப்பாட்டை அங்கே காண்கிறேன்.

உங்கள் கட்டளையில் பல நு}று போராளிகள் வீரச்சாவடைந்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்களின் முகங்களில் கரிபூசியதைப் போல் போராளிகளைக் கொன்ற சிங்களப் படைகளின் கொல்லைப்புறத்தில் குறுகிக் கிடக்கிறீர்கள். உங்களின் உணர்வுகள் கூடக் காயடிக்கப்பட்டே இருக்கும் என்பது என் திடமான நம்பிக்கை. இல்லாவிட்டால் மட்டக்களப்பில் எண்ணிலடங்காத மௌனப் புதைகுழிகளை விதைத்த சிங்களக் கரங்களிடம் சோற்றுப்பிச்சை கேட்பீர்களா?

இன்று வெளியிலே தலை காட்ட முடியாத தலைவருடனும் இந்தியாவில் தஞ்சம் புகுந்து கிடக்கும் செயலருடனும் தோன்றிய ஒரு கட்சிதான் தமிழருக்கு விடிவு தேடித்தரும் என்று உலகத்தை நம்பச் சொல்கிறீர்கள். புதிதாகப் பிறக்கும் துரோகிகள் முந்திய துரோகிகளை விட பெரிதாக ஏதாவது செய்து தங்கள் எஜமானர்களின் அபிமானத்தைப் பெற விரும்புவார்கள். அந்த இயல்பான உளவியல் உங்களிடமும் வெளிப்படுவது ஆச்சரியமில்லை. நீங்களும் என்னதான் செய்வீர்கள்! போட்டிருப்பது நாய் வேஷம் அல்லவா? குரைக்காது இருந்தால் விடுவார்களா? உங்கள் பார்வையைச் சூழ்ந்திருக்கும் மாயையை விலக்கிவிட்டுப் பாருங்கள் அம்மான், உங்களின் நிருவாணம் புரியும். பல உளவியல் உண்மைகள் விளங்கும். அடங்காத மனைவியை அடக்கமுடியாத ஆற்றாமையை நீங்கள் சுய பச்சாத்தாபமாகப் பார்த்து ஏமாந்தது விளங்கும். அதனால் நீங்கள் பட்டமிழந்து பதவியிழந்து உலகின் முன் ஈனப்பயலாகி இழிந்து நிற்பது தெளிவாகும்.

தமிழீழத்தின் பெரிய தளபதியொருவர் தங்கள்வசம் இருப்பதாக சிங்களப்படை எண்ணக்கூடும். ஆனால், பின்புறம் எதிரி இருக்கும் நிலையில் அந்தத் தளபதி ஒருபோதும் களத்தில் கால் வைத்ததில்லை என்பது எனக்கல்லவா தெரியும்? முன்னுக்கும் பின்னுக்கும் எதிரி இருக்கத்தக்கதாக நீங்கள் ஒரு சண்டையாவது பிடித்திருக்கிறீர்களா என்பதை அப்போது ஒருவரும் யோசித்துப் பார்த்ததில்லை. நான் யோசித்தேன். மற்றத் தளபதிகளுக்கும் உங்களுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம். சண்டையில் காயப்படாத எந்தத் தளபதியையாவது இந்த இயக்கத்தில் காட்டமுடியுமா? ஆனால் அதற்கு விதிவிலக்காக இருந்த அந்த ஒரேயொரு அற்புத மனிதர் தாங்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். கேவலம் கம்பி றோல் கீறிய தழும்பாவது... என்ன சங்கடமான இடமொன்றில் கைவைத்து விட்டேனா? அப்போது சொல்லத் துணியவில்;லை. இப்போது சொல்கிறேன். தமிழீழத் தளபதிகளில் மிகப்பெரி;தாகப் பேசப்பட்டவரும் மிகப்பயந்தவரும் நீங்கள்தான். உங்களோடு நின்ற எவராவது இதை வாசித்தால் இந்த உண்மை அவர்கள் மனதில் சட்டென்று உறைக்கும்.

துரோகம் என்பது தமிழனுக்கும் புதிதல்ல. ஆனால் அதையே வாழ்க்கை முறையாகக் கொண்டு துரோகத்தை நியாயப்படுத்தும் அரசியலில் ஈடுபடும் தமிழர்கள் இலங்கையில் மட்டுமே உண்டு. அதில் பட்டறிவு பெற்ற பலர் உங்களுக்கு பால பாடம் சொல்லித் தந்திருப்பார்கள். நீங்களும் கெட்டிக்காரன் தானே. சுலபமாகக் கற்றுவிட்டீர்கள். ஒரு கையில் ஒலிவாங்கியையும் மறுகையில் கொலை வாளுமாகக் களத்தில் இறங்கி விட்டீர்கள். நீங்கள் எதைப் பேசினாலும், எதைச் சேர்த்து வைத்தாலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைத்திருப்பது துரோகியின் பிள்ளை என்ற சொத்தை மட்டும்தான். தமிழர் வாழும் எந்த இடத்திலும் நாளைய உணவிற்கு நாதியற்ற பிள்ளைக்கு இருக்கும் கௌரவம் கூட உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல, சந்ததிக்கே இருக்கப் போவதில்லை. தங்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக உங்கள் பிள்ளைகள் உங்கள் பெயரை முன்னெழுத்தாகப் போடாது விடும் காலம் து}ரத்தில் இல்லை. அந்தப் பிள்ளைகளைத் து}க்கித் திரிந்தவன் என்ற வகையில் அவர்களுக்கு என் அனுதாபங்கள்.

உங்களால் உங்கள் குடும்பம் பெற்றதுதான் என்ன? உங்கள் அண்ணனையும் சுயமுடிவு எடுக்கவிடாது துரோகியாக்கி விட்டீர்கள். உங்களின் அண்மைக்கால அறிக்கையிலும் நடத்தையிலும் கூட முதிர்ச்சியைக் காணமுடியவில்லை. நீங்கள் அமைக்கும் வியூகங்கள் உங்களையே இடறிவிடக் கூடியதாகவே இருக்கின்றன. உங்களோடு சேர்ந்துள்ளவர்கள் அன்றாட வியாபாரிகளின் தன்மையுடையவர்கள். நீங்களோ நீண்ட காலத்திற்கு இருக்கலாம் என்ற விதத்தில் அறிக்கை விடுகிறீர்கள். அந்த அறிக்கைகளில் அவலத்தின் ஓலமும் மரண பயத்தின்; நடுக்கமும் இருப்பது உங்களோடு நெருங்கிப் பழகிய எனக்குக் கேட்காமல் போகவில்லை. மொத்தத்தில் பயன்படுத்தப்படுகிறீர்கள், பரிதாபகரமான முறையில். தற்போது நீங்கள் நடத்திவரும் கொலைகளில் நீங்கள் எதிர்பார்க்கும் இலாபம் உங்களுக்குக் கிடைக்கும் என்றும் நான் நம்பவில்லை. உங்களின் ஆட்களை நீங்கள் அதற்குப் பயன்படுத்தினாலும் நீங்கள் சேர்ந்துள்ள அணியில் இருக்கும் வேறு சிலருக்கே அதனால் அதிக நன்மைகள். உதாரணமாக நமது பற்பொடிக் கொம்பனிக் கொலை வீடுகள் து}சு தட்டப்படுவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அங்கிருந்து வெளியே வரும் எவரையும் எதனையும் மட்டக்களப்பு வாசிகள் எப்படிப் பார்ப்பார்கள் என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் அதற்குள் கால் வைக்கிறீர்கள் என்றால் நீங்கள் எங்கோ போய்விட்டீர்கள் என்று பொருள்.

சரியம்மான். உங்கள் அடுத்த நகர்வுகளைப் பார்த்து அடுத்த மடலை எழுதுகிறேன். அதுவரை நீங்கள் நலமாயிருந்தால்தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கும்.

<b>-அருகிலிருந்தவன் (The man who was nearby)</b>
நன்றி தமிழ்நாதம்

Print this item

  செல்லமே உன்னை என் செல்லமாய் கொண்டு..!
Posted by: tamilini - 10-26-2004, 10:06 PM - Forum: கவிதை/பாடல் - Replies (8)

[b]சுகமாய் தான் உன்..
நினைப்பு என் நெஞ்சில்..
நாம் பேசிவிட்ட வார்த்தைகள்...
எண்ணில் அடங்காதவை..
பழகியது
எத்தனை ஆண்டுகள்
என்ன தான் இருந்தும்...
என்மேல் அடிக்கடி
ஏனோ கோவம் வரும் உனக்கு...
எனக்கு சிறிதும்
ஏனோ கோவிக்க தெரியாது உன்மேல்...
ஏன் கோவம் என்றால்..??
அடிக்கிற கைதான்
அணைக்கும் என்பாய்...
அட பாவி நீ
அடிச்சால் கூட தாங்கிடலாம்...
நீ கதைக்காது போனால்..
என்னால் முடியாது...

என்னோடு கோவித்து
எத்தனை நாள் நீ பட்டினி...
எனக்கு மட்டும் கதைவிடுவாய்
உன் நண்பன் சொல்லித்தான்
எனக்கு தெரியும்...
உன் கோவங்களின் கோலங்கள்...!
நினைத்து நினைத்து
நான் மகிழ்வதுண்டு..
நீ எனக்கு கிடைத்ததையிட்டு..

செல்லமாய் நான் பேசிடும்
செல்லப்பிராணியாகிவிட்டாய் இன்று
சின்னனாய் நீ செய்யும்
சில்மிசங்கள் கண்டு...
சின்னதாய் ஒரு புன்னகையுடன்..
நான் உன்னை ரசித்துக்கொண்டு..
செல்லமே உன்னை என்
செல்லமாய் கொண்டு..
சின்னனாய் இந்த உயிர்..
உனக்காய் வாழுது
என்றும் என்றென்றும்..
உனக்காய்....!

யாவும் கற்பனை

Print this item

  சந்தனக்காட்டை சரித்தது முந்திரிக்காடா? வீரப்பனைப் பற்றி.....
Posted by: ஜீவன் - 10-26-2004, 02:05 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

http://www.tamiloosai.com/oosai.asp?id=2893&catID=0

Print this item

  இலையுதிர்ந்துபோகும் எம் வசந்தகாலங்கள்
Posted by: V.T Tamileelathasan - 10-26-2004, 01:03 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...! </b>


மனிதனைவிட
மரங்கள் மேலானது...!

கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை...!

கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்னகுற்றம்
செய்தன...?

மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்கரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
©த்துக் குலுங்கியது..!

சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்...!

அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?

எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!

இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

<b>வே.த. தமிழீழதாசன்
24.10.2004 (பாரீஸ்)</b>

Print this item

  இனிய அன்பு உறவுகளே
Posted by: V.T Tamileelathasan - 10-26-2004, 11:35 AM - Forum: அறிமுகம் - Replies (19)

வணக்கம் இனிய அன்பு உறவுகளே
இன்றிலிருந்து நானும் உங்கள் சகோதரனாக உங்கள் முன் வருகிறேன்

அத்துடன் எனது கவிதைகளையும் உங்கள் முன் பிரசுரித்து விமர்சனங்களைப் பெற்றுக்கொள்ளவும் ஆவலாக இருக்கிறேன்

களப் பொறப்பாளர் கவனத்திற்கு ஒரு பணிவான வேண்டுகோள்
நான் எனது கவிதைகளை பிரசுரிக்க வேண்டியுள்ளதாy; கவிதை பகுதியில் நுளைவதற்கு எனக்கு அனுமதி தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்

எனது முதல்கவிதை இதோ...




<b>இலையுதிர்ந்துபோகும்...
எம் வசந்தகாலங்கள்...!

மனிதனைவிட
மரங்கள் மேலானது...!

கோபம்
பொறாமை
ஆணவம்
பழிவாங்கும் எண்ணம்
மூடநம்பிக்கை
இவை எதுவுமே
அவைகளுக்கு இல்லை...!

கொலைகள்
கொடுமைகள்
இரத்தம்
இவையெல்லாம்
மனிதனோடு போகட்டுமே
மரங்கள் என்னகுற்றம்
செய்தன...?

மரணம் வருமுன்பு
புன்னகைக்கும்
புற்றுநோய்க்கரன்போல...
இடம்பெயர்வதற்கு
இரண்டு நாள் முன்பு
©த்துக் குலுங்கியது..!

சுமைகளை
தோளிலும்
நெஞ்சிலும்
சுமந்துகொண்டு
ஊரைவிட்டு ஓடிவந்தோம்...!

அதை...
சுமந்துவர முடியாது
என்ன செய்வேன்...?

எதிரிகளுக்கு அது...
வெறும் மரம்...!
எனக்கு அது
மாறாத ரணம்...!

இப்போது...
இலையுதிர் காலம் இல்லாமலே
இலையுதிர்ந்து நிற்கிறதாம்
என்
முற்றத்து மாமரம்...!!!

வே.த. தமிழீழதாசன்
24.10.2004 (பாரீஸ்)</b>

Print this item