![]() |
|
செல்லமே உன்னை என் செல்லமாய் கொண்டு..! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: செல்லமே உன்னை என் செல்லமாய் கொண்டு..! (/showthread.php?tid=6544) |
செல்லமே உன்னை என் செல்லமாய் கொண்டு..! - tamilini - 10-26-2004 [b]சுகமாய் தான் உன்.. நினைப்பு என் நெஞ்சில்.. நாம் பேசிவிட்ட வார்த்தைகள்... எண்ணில் அடங்காதவை.. பழகியது எத்தனை ஆண்டுகள் என்ன தான் இருந்தும்... என்மேல் அடிக்கடி ஏனோ கோவம் வரும் உனக்கு... எனக்கு சிறிதும் ஏனோ கோவிக்க தெரியாது உன்மேல்... ஏன் கோவம் என்றால்..?? அடிக்கிற கைதான் அணைக்கும் என்பாய்... அட பாவி நீ அடிச்சால் கூட தாங்கிடலாம்... நீ கதைக்காது போனால்.. என்னால் முடியாது... என்னோடு கோவித்து எத்தனை நாள் நீ பட்டினி... எனக்கு மட்டும் கதைவிடுவாய் உன் நண்பன் சொல்லித்தான் எனக்கு தெரியும்... உன் கோவங்களின் கோலங்கள்...! நினைத்து நினைத்து நான் மகிழ்வதுண்டு.. நீ எனக்கு கிடைத்ததையிட்டு.. செல்லமாய் நான் பேசிடும் செல்லப்பிராணியாகிவிட்டாய் இன்று சின்னனாய் நீ செய்யும் சில்மிசங்கள் கண்டு... சின்னதாய் ஒரு புன்னகையுடன்.. நான் உன்னை ரசித்துக்கொண்டு.. செல்லமே உன்னை என் செல்லமாய் கொண்டு.. சின்னனாய் இந்த உயிர்.. உனக்காய் வாழுது என்றும் என்றென்றும்.. உனக்காய்....! யாவும் கற்பனை - kuruvikal - 10-27-2004 உள்ளம் கொண்ட செல்லம் செல்லத்தின் மீது பொழிய செல்லத்துக்கு செல்லம் கூடியதோ...??! கற்பனையோ மெய்யோ பொய்யோ மெய் கலந்த பொய்யோ பொய் கலந்த மெய்யோ செல்லமிரண்டும் செல்வமாக காலமெல்லாம் செல்லம் பொழிந்து செல்லங்களாய் வாழ்ந்திட வாழ்த்துக்கள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 10-27-2004 அக்கா என்ன அசத்துறிங்கள் இப்படி வாழ்த்துகள் - hari - 10-27-2004 நல்ல கவிதை வாழ்த்துக்கள்! தமிழினி. - V.T Tamileelathasan - 10-27-2004 மிக நல்ல கவிதை வாழ்துக்கள் தமிழினி - tamilini - 10-27-2004 வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-27-2004 அக்கா கவிதை நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். - shanmuhi - 10-27-2004 Quote:செல்லமாய் நான் பேசிடும் ¦ºøÄÁ¡ö Åடிò¾ ¸Å¢¨¾ «ரு¨Á. Å¡úòதுì¸û ¾Á¢Æ¢É¢. - tamilini - 10-27-2004 அக்காவுக்கும் தங்கைக்கும் நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|