Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 362 online users.
» 0 Member(s) | 359 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,314
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,489
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  அரக்கர்கள் செய்யும் அநியாயம்!!!
Posted by: Sriramanan - 10-23-2004, 09:35 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (5)

எமது (இந்து)சமயத்தில் சொல்லப்படும் கதைகளில் வரும் அரக்கர்கள் பெரும்பாலனவர்கள் செய்யும் அநியாயம் என்னவென்றால் தேவர்கள்(பார்பனர்) செய்யும் யாகத்தை அல்லது வேள்வியைத் தடுப்பது அல்லது குழப்புவது. ஏன் இந்த அரக்கர்களுக்கு தேவர்கள் செய்யும் யாகமோ அல்லது வேள்வியோ பிடிக்கவில்லை?? இதற்கான விடையை எந்தச் (சமயக்)கதையும் சொல்லவில்லை.

ஏன் இந்த யாகத்தை வேள்வியை அந்த அரக்கர்கள் தடுத்திருப்பார்கள்?

இந்தக் கேள்விக்கு உங்களின் பதில் என்ன???

Print this item

  ஆறு கள உறுப்பினருக்கு 1000MB GMAIL கணக்கு
Posted by: hari - 10-23-2004, 05:25 PM - Forum: இணையம் - Replies (29)

1000MB GMAIL மின்னஞ்சல் கணக்கு தேவையா? உடனே இந்த பகுதியில் உங்கள் தற்போதய மின்னஞ்சலுடன் பதில் அளிக்கவும். என்னிடம் 6 GMAIL இனைப்பு உள்ளது. அதை முதல் ஆறு பேருக்கு உடனே அனுப்பிவைக்க முடியும்.

Print this item

  வீரப்பன் மரணமும் புளுகு மூட்டைகளும் திசைதிருப்பல்களும்.....!
Posted by: kuruvikal - 10-23-2004, 12:57 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (7)

<img src='http://www.thatstamil.com/images24/sheelarani-360.jpg' border='0' alt='user posted image'>

<b>வீரப்பனை வெளியே இழுத்து வந்த 'இலங்கை திட்டம்'</b>

கண் சிகிச்சையோடு அப்படியே திருச்சி வழியாக இலங்கைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறித்தான் வீரப்பனை ஆம்புலன்சில் ஏற்றி வந்திருக்கின்றனர் அதிரடிப்படையின் உளவாளிகள்.

ஆபரேசன் குக்கூன் குறித்த புதிய தகவல்கள்:

தன்னை தமிழ் தேசிய தீவிரவாதியாக அறிமுகம் செய்து கொண்ட இன்ஸ்பெக்டர் வெள்ளை துரை, தீவிரவாதியாகவே சுமார் 4 மாத காலம் வீரப்பன் மற்றும் அவனுக்கு நெருக்கமானவர்களுடன் வாழ்ந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கண் வழியால் வீரப்பன் படாதபாடு பட ஆரம்பித்திருக்கிறான். அவனுக்குத் தரப்பட்ட மருந்துகள் ஒத்துக் கொள்ளாமல் போய் நோய் வாய்ப்பட்டுள்ளான். இந் நிலையில் தான் இனியும் இந்தக் காட்டுக்குள் ஓடியாட முடியாது என்று வீரப்பன் கருதியிருக்கிறான்.

இதையடுத்து தீவிரவாதி வெள்ளை துரை, தனக்கு இலங்கையில் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வீரப்பனை இலங்கைக்குத் தப்ப வைக்கதாகவும் 'பிட்டை' போட்டுள்ளார். இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் அதற்கான ஏற்பாடு செய்யச் சொல்லி இருக்கிறான்.

இந்தத் தகவல்கள் அதிரடிப்படைத் தலைவர் விஜய்குமாருக்கு வந்து சேர, காட்டை விட்டு வீரப்பன் வெளியில் வர ஒப்புக் கொண்ட திட்டத்தை முதல்வருக்குத் தெரிவித்து அவனை அதிரடியாய் எதிர்கொள்ள அனுமதி வாங்கியுள்ளார்.

இந் நிலையில் வீரப்பனுக்கு கண் பிரச்சனை மிகவும் அதிகமாகிவிட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இலங்கைக்குக் கிளம்பிவிடலாம் என வீரப்பன் கூறியிருக்கிறான். இதையடுத்து திருச்சிக்குப் போய் விடுதலைப் புலிகளை சந்தித்து ஏற்பாடுகள் செய்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு முகாமுக்குத் திரும்பியுள்ளார் வெள்ளைதுரை.

அங்கு விஜய்குமார் மற்றும் உயர் மட்ட டீமுடன் கலந்து பேசிய வெள்ளைதுரை, ஒரு ஆம்புலன்ஸை தயார் செய்து வைக்குமாறும், நான் சொல்லும்போது அனுப்புமாறும் கூறிவிட்டுத் திரும்பி காட்டுக்கு வந்துள்ளார்.

இதையடுத்து வீரப்பன் உள்ள பகுதியில் இருந்து தர்மபுரிக்குச் செல்லும் 3 கிளைச் சாலைகளையும் இன்ச் பை இன்ச் ஆக ஆராய ஆரம்பித்தது அதிரடிப்படை. வீரப்பனை எதிர்கொள்ள ஏதுவான இடம் எது என்று ஆராய்ந்தனர்.

யாருக்கும் சந்தேகம் வராதபடி சாலை பழுதுபார்ப்பவர்களாக, சாலையோர மைல் கல்களுக்கு பெயிண்ட் அடிப்பவர்களாக அவர்கள் ஆராய்ந்து ஒவ்வொரு கிளைச் சாலையிலும் தலா ஒரு இடத்தை தேர்வு செய்தனர்.

இதில் ஒரு இடம் தான் பாடி. தர்மபுரியில் இருந்து 7 மைல் தொலைவில் உள்ள இந்த இடத்தில் இருக்கும் பழைய பள்ளிக் கட்டடம் மறைந்திருந்து தாக்க ஏதுவாக இருந்ததால், இந்த இடத்தை தேர்வு செய்தனர். அதே போல மற்ற இரு கிளைச் சாலைகளில் ஒன்றில் பழைய கோவிலையும் இன்னொன்றில் பெரிய மரத்தையும் தேர்வு செய்தனர்.

இந் நிலையில் காட்டுக்குள் திரும்பிய வெள்ளைதுரை, வீரப்பனிடம் தனது திட்டத்தை சொல்லியிருக்கிறார்.

ஆம்புலன்ஸ் மூலமாகக் கிளம்புவது. முதலில் தர்மபுரி அருகே ஒரு மருத்துவமனையில் கண்ணுக்கு சிகிச்சை எடுப்பது, அதற்கு டாக்டரை ரெடி செய்தாயிற்று, கண் சிகிச்சையை முடித்துக் கொண்டு அப்படியே திருச்சி போவது, அங்கு காத்திருக்கும் விடுதலைப் புலிகளின் டீம் உங்களை பத்திரமாக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் என வெள்ளைதுரை அடுக்க அப்படியே நம்பியிருக்கிறான் வீரப்பன்.

திருச்சியில் இருந்து வேதாரண்யம் போய் அங்கிருந்து கடல் வழியாக உங்களை இலங்கைக்குக் கூட்டிச் சென்றுவிடுவார்கள் விடுதலைப் புலிகள் என்று வெள்ளை துரை கூற, வீரப்பனின் ஆளாக இருந்து அதிரடிப்படையின் உளவாளியாக மாறிய கனகராஜும், இவர் மூலமாக ஏற்கனவே வீரப்பனின் கும்பலுக்குள் நுழைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர் முருகேசனும் இத் திட்டத்தை மிகவும் சிலாகித்துப் பேயிருக்கின்றனர்.

இத் திட்டம் சேத்துக்குளியானுக்கும் சரியென்று தோன்ற வீரப்பன் தலையை ஆட்டியிருக்கிறான்.

இதையடுத்து ஆளுக்கு ஒரு ஏ.கே.47, ரூ. 5 லட்சம் பணம், 3 ரவுண்டு சுடும் அளவுக்கு குண்டுகள், மேகசீன்களை எடுத்துக் கொண்டு தயார் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இதன் பின்னர் வெள்ளைதுரை போய் ஆம்புலன்ஸை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். கூடவே, இது நம் பாதுகாப்புக்கு என்று சொல்லி ஆலிம் பீடி என்று கன்னடத்தில் எழுதப்பட்ட ஒரு வேனையும் கொண்டு வந்தார்.

ஆம்புலன்சில் வீரப்பன் கும்பலுக்கு சாப்பாடு, 4 செட் டிரஸ் எல்லாம் இருந்திருக்கிறது. உணவை எல்லோரும் சாப்பிட, கண் வழியால் அவதிப்பட்ட வீரப்பன் சாப்பிடவில்லையாம்.

வேனில் ஏறும் முன் வீரப்பனையும் சேத்துக்குளியானையும் மீசையை டிரிம் செய்யச் சொல்லியிருக்கிறார் வெள்ளைதுரை. அப்போது தான் யாருக்கும் அடையாளம் தெரியாது என்ற துரை கூற, நம் மீது இவ்வளவு அக்கரையாக இருக்கிறானே என்று துரையை புகழ்ந்தபடி மீசையை வெட்டியிருக்கிறான்.

அத்தோடு பச்சை டிரஸ் வேண்டாம், அடையாளம் தெரிந்துவிடும். இந்தாங்க இதைப் போட்டுங்குங்க என்று 4 பேருக்கும் வேனில் கொண்டு வந்த பேன்ட், சட்டையை கொடுத்தார் வெள்ளை துரை.

ரொம்ப காலத்துக்குப் பின் சிவில் உடையை அணிந்த வீரப்பன் கும்பல் நம்பிக்கையுடன் ஏறி உட்கார்ந்தது. இந்த வேனை பின் தொடர்ந்தது ஆலிம் பீடி வேன். இதை ஓட்டியதும் அதிரடிப்படை கமாண்டோ தான்.

இன்னொரு புத்திசாலித்தனமான வேலையையும் செய்தார் விஜய்குமார். இந்த இரு வேன்களிலும் அப்அன்ட்டௌன் 30 கி.மீ. தூரம் ஓடுவதற்குத் தான் டீசல் இருந்தது. ஒருவேளை அதிரடிப்படையினரை வீரப்பன் அடையாளம் தெரிந்து கொண்டு துப்பாக்கி முனையில் வேனை வேறு பக்கம் ஓட்ட வைத்தால், அதைத் தவிர்க்கவே இந்த டீசல் குறைப்பு.

திட்டமிட்ட, பாடி அருகே வந்தவுடன் வேன் மக்கர் செய்வதாக சொல்லி அதை ஆப் செய்த டிரைவர் சரவணனும், வெள்ளை துரையும் கதவைத் திறந்து கொண்டு இறங்க, முன்னால் நின்றிருந்த லாரி லேசாக மூவ் ஆகி சாலையை அடைத்தது. அதே போல பின்னால் வந்த ஆலிம் பீடி வேன், ரோட்டின் குறுக்கே திரும்பி நின்றது.

கைகளில் துப்பாக்கிகளுடன் விஜய்குமாரும், செந்தாமரைக் கண்ணனும் அதிரடிப்படையை டீமுக்கு சைகை காட்ட, அடுத்த நொடியில் ஆம்புன்ஸ் வேனின் ஜன்னல் வழியாக வந்து விழுந்து கிரனைட் குண்டு.

வேன் அப்படியே அரையடி மேலே குதித்து கீழே லேண்ட் ஆன அடுத்த நிமிடத்தில் டி.எஸ்.பி. ஹூசேன் தலைமையிலான டீம் வேனை சூழ்ந்து துப்பாக்கிளின் ட்ரிக்கர்களில் கை வைக்க,

லாரியில் மண்மூட்டை போட்டு மறைந்திருந்த அதிரடிப்படையினரும், பள்ளிக் கட்டட மாடியில் இருந்த அதிரடிப்படையினரும் வேனை குறி வைத்து தொடர்ந்து சுட, சில நிமிடங்களில் எல்லாம் ஓவர்.

வீரப்பன் கும்பலின் உடலை தங்களது லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு தர்மபுரி காவல் நிலையத்துக்கு வந்தது விஜய்குமார் டீம். வரும் வழியிலேயே செல்போனில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்தத் தகவலைத் தந்தார் விஜய்குமார்.

அரை மணி நேரம் தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்களுடன் பேசிக் கொண்டிருந்த விஜய்குமார் உடனே கிளம்பி அதிரடிப்படை டிராவலர்ஸ் பங்களாவுக்கு வந்து, தனது மனைவி குழந்தைகள் சகிதம் பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுவிட்டு, மீண்டும் தர்மபுரிக்கு வந்தார்.

thatstamil.com

++++++++++++++++++++++++++++++

20 வருடமா இலங்கைக்குள் நடப்பதையும் அங்கு செல்வதில் உள்ள ஆபத்தையும் அறியாதவனாக பால்குடியாக வீரப்பனை ஜெயலலிதா ஆட்சிகாட்ட நினைக்கிறது போல...பாவம் ஜெயலலிதா இன்னும் பால்குடிதான்..புலியைச் சீண்டுவதிலேயே குறியா இருக்கிறார் அம்மையார்.... சீறாது என்ற துணிவு போல.... இல்ல ஒரு கல்லில் இரண்டு மாங்காய் விழுத்தும் இந்திய உளவுப்படைகளின் பேராசையின் பிந்திய திட்டமோ...??! உண்மை எது என்பதைச் சொல்ல வீரப்பன் இல்லைத்தானே...எனிக் கட்ட வேண்டியதுதானே விதம்விதமா சினிமா ஸ்ரோறி....! (our view) :evil: :twisted: Idea

Print this item

  தடங்கல்
Posted by: yarlmohan - 10-23-2004, 11:59 AM - Forum: களம் பற்றி - Replies (7)

இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை களத்தில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகின்றோம். இவ் இடைப்பட்ட நேரத்தில் எழுதப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் தற்போது பதிவில் இல்லை என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மோகன்

Print this item

  வன்னித்தென்றலின் சினிமாவிற்கு மட்டுமேயான இணையம் TOUCHTAMIL
Posted by: Nitharsan - 10-23-2004, 06:37 AM - Forum: இணையம் - Replies (2)

வணக்கம் யாழ் இணைய நண்பர்களே! [size=18]வன்னித்தென்றல்இன்றே வாருங்க்ள வருவது மட்டுமன்றி உங்கள் கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
[size=18]புதிதாய் மலரும் விடியலில்.....
பதியன செய்வோம்.....
<img src='http://www.freewebs.com/tamileelan/tt.JPG' border='0' alt='user posted image'>
www.touchtamil.tk

Print this item

  சேது அண்ணா உளவு....
Posted by: shanxp - 10-23-2004, 12:50 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (62)

எதற்காக "சேதுவின் உளவு " மூடப்பட்டுள்ளது ?

Print this item

  வணக்கம்
Posted by: Ravi_Germany - 10-23-2004, 12:14 AM - Forum: அறிமுகம் - Replies (19)

அனைவருக்கும் எனது வணக்கம்

Print this item

  stop sending tamils
Posted by: paadai - 10-22-2004, 09:59 PM - Forum: புலம் - Replies (13)

ஜேர்மன் தமிழ் அகதிகளை திருப்பி அனுப்பவேண்டாம் என்று ஆனந்த சங்கரி அவர்களின் புதிய கையெழுத்து சேகரிப்பு --.com

தகவல் வனொலி 8 மணி செய்திகள்

Print this item

  நவராத்திரி வாழ்த்துக்கள்...!
Posted by: kuruvikal - 10-22-2004, 08:46 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (58)

<img src='http://kuruvikal.yarl.net/archives/saraswathy.jpg' border='0' alt='user posted image'>

கள உறவுகள் அனைவருக்கும்
கல்வித்தாயாம் கலைவாணியின்
கருணை கிடைத்திட
நாவிருந்து நாவன்மை காத்து
சத்தியம் விளங்கிட...
அவள் நாமம் துதித்து
சகலகலாவல்லி மாலை பாடிப்
பயன்பெற்றிட வாழ்த்தி வணங்குகிறோம்...!

Print this item

  பழைய உலகுப் பறவை...!
Posted by: kuruvikal - 10-22-2004, 07:18 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் - Replies (4)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40200000/jpg/_40200822_bird203x203.jpg' border='0' alt='user posted image'>
image from bbc.com

121 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருத்தப்படும் பறவை இனம் ஒன்றின் (arboreal bird) இறகுகளின் (feathers) கூடிய முட்டை நிலை முளையம் சுவடாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது...!நவீன பறவை இனங்கள் பெரும்பாலானவற்றில் குஞ்சுகள் முட்டையில் இருந்து பொரிக்கும் நிலையில் கூட இறகுகள் இருப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது...!

For more details...

Print this item