Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 397 online users.
» 0 Member(s) | 394 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,488
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  மலரும் நினைவில்...
Posted by: kuruvikal - 10-22-2004, 01:20 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

<img src='http://kuruvikal.yarl.net/archives/roserose.jpg' border='0' alt='user posted image'>

தென்றல் தரும் தாலாட்டு
தெம்மாங்கு தரும் சங்கீதம்
தோழமை கொண்டு தொடர்ந்திருக்க
தோழமையின் இனிமை சுவைத்திட
சோடிக் குயிலிரண்டு சோலையில்....
சோலை வழி சாலையில்
சேலை ஒன்று காட்டுது ஜாடை
சலனமில்லா சின்ன மனம்
சந்திக்கத் துடிக்குது
காதல் தரிசனம்...!

மனதோடு ஏழ்மையாய்
ஏழ்மைக்கு ஏற்றதாய்
சோலைக்குள் குடிசை கட்டி
சோடி கட்டுது ஒரு மனசு....
வேஷம் போட்டே வாழ்ந்திட்டது
கோஷம் போட்டு கொடுமை பண்ணுது...
மாளிகை கட்டிக் காவல் வைத்துக்
காத்திருக்குது மற்றது...!

கனவுகள் கலையாது
கானகத்தில் கருங்குயில்கள்
கானம் இசைக்குது....
சோடிகள் இரண்டும்
சேர்ந்தும் இசைக்குது
பிரிந்தும் இசைக்குது ராகம்
சங்கீத சபை இருந்து ரசிக்குது
சோடி மனம்...!
காலத்தோடு போட்டியாய்
கனவுகள் தொடருது
நினைவுகள் பெருகுது...!

உதயத்து ஆதவன்
இருளரக்கன் உதைந்து தள்ள
உடையுது நினைவு
உடனிருந்த கணணி இசைக்குது
சோலை கொள்
சேலை பறக்கும் இனிய கீதம்....!
நிசி கடந்தும்....
மலரும் நினைவில்
நடந்தது ஒரு காதல்
தென்றல் தாலாட்ட
தெம்மாங்கு சீராட்ட
நினைவோடு நிம்மதியாய்....!

நன்றி... http://kuruvikal.yarl.net/

Print this item

  புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள்
Posted by: aathipan - 10-21-2004, 09:36 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (17)

<img src='http://home.hetnet.nl/~pictures/afbeeldingen/darshan/04.jpg' border='0' alt='user posted image'>

புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள் பற்றி அறிய இந்தப்பக்கத்திற்கு செல்லவும்.

http://www.exbaba.com/

சாயி பக்தர்கள் மனம் நோகடிக்கப்ட்டிருந்தால் மன்னிக்கவும்.

Print this item

  பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை
Posted by: hari - 10-21-2004, 07:51 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

<span style='font-size:23pt;line-height:100%'>பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!

[size=14]மனுக்குலத்தின் தலையில்
சாதனை மகுடம் சூட்டி
அமெரிக்கன் ஒருவன் நிலவில் நின்றானே
அந்த நாள்
தமிழனும் ஆடிப்பாடினான்.
"ஆம்ஸ்ரோங்"
இங்கு பலருக்கு "அத்தை பையன்" ஆனான்.
சாள்ஸ்சும் டயனாவும்
லண்டனில்தான் கைபிடித்துக் கொண்டார்கள்.
தமிழன் சந்தோசத்தில்
இங்கே சந்தனம் பூசிக் கொண்டான்.
"வேல்ஸ்" பரம்பரைக்கு விசுவாசம் தெரிவித்து
வெற்றிலை போட்டுக் கொண்டான்.
வாழ்த்து அனுப்பி வைத்த வரலாறும்
இங்கே சிலருக்கு உண்டு.
"எலிசபெத் மகாராணி"
எங்களுக்கு எந்தவழி உறவு?
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
சொன்னவன் தமிழன் தானே
அந்த உறவில் போலும்
தமிழர்கள் ஆனந்தம் கொண்டார்கள்
குதுகலித்தோர் மீது குற்றமில்லை.
ஆனால்... நேற்றிரவு
பூநாகரியில்...
பகைவன் இருந்த படைத்தளத்தினுள்ளே
இவர்களின் பிள்ளைகள் புகுந்தார்கள்.
விடியும் வரை வெடிச்சத்தங்கள் கேட்டன.
உறக்கம் கலைந்தவர் மட்டும்
உற்றுணர்ந்து கொண்டனர்.
"பூநகரிக்குள்ளே பொடியாள் போட்டாங்கள்"
"அப்பனே முருகா பிள்ளைகளைக் காப்பாற்று
"கர்த்தரே! எங்கள் குஞ்சுகளைக் காத்தருளும்"
என்றபடி விடியும் வரை விழித்திருந்தார்கள்.
அடுத்த நாள் அடிவானம் சிவந்தது.
காகங்களின் சத்தங்கள் கூடச் சங்கீதமானது.
வழமைக்கு மேலாக பூக்கள் புன்னகைத்தன.
"வழுக்கி ஆறு " பெருக்கெடுத்து ஓடியது.
ஆயிரம் பகைவரைப் போரினில் அழித்து
அள்ளிய ஆயுதங்களைத் தோளினிற் சுமந்து
சாவினைத் தழுவிய தோழர்களையும் தோழியரையும்
தங்கள் கைகளில் ஏந்தியபடி
முகத்தில் வெற்றியின் வீரியத்தோடும்
நெஞ்சினில் இழப்பின் சோகத்தோடும்
எங்களின் வீதியால்
எங்கள் பிள்ளைகள் உலா வந்தனர்.
பூநகரிக்கு
பக்கத்து ஊரிலே...பாதை கேட்டாலே..
திக்குக் காட்டத் தெரியாத சின்ன ஊர்.
மொட்டைக் கறுப்பன் அரிசிக்கு
முகவரி இதுதான்.
மடுமாதா திருப்பதிக்கும்
மாதோட்ட நன்நகருக்கும்
தலயாத்திரை போவோரின் தங்குமிடம்.
எங்கும் போல் இங்கும் காற்று வீசும்
மாரி காலம் என்றால் மழை பொழியும்
ஊர்கூடி உழுவார்கள்
வயல்கள் விளைந்திருக்கும் போது
வடிவாக இருக்கும்
வரம்புகளில் வெண்கொக்குகள் பூத்திருக்கும்.
சின்னக் கோவில்களிலும்
திருவிழா நடக்கும்
பூமியெங்கும் பேர் பதியும் பொசிப்பில்லாமல்
பூநகரி ஊமையாய் உறங்கிக்கிடந்தது.
"நாகதேவன்துறை"
பேரைப் பார்த்துப் பிரமிக்கக் கூடாது
இது கப்பல் துறைமுகமல்ல.
கட்டுமரத் துறைதான்.
என்றாலும் எங்கள் முந்தையரின்
பாதம் படிந்துள்ள படகுத்துறை
இந்தியப் படைகளின் இருண்ட நாட்களில்
வரிப்புலிகள் வன்னிக்குப் போய் வந்த
வரலாறு இதற்குண்டு
10.11.1993 அன்று
சாமம் கழிய மறு நாள் சந்தித்துக் கொண்டது.
ஞானிமடத்துக்கு மேலே
நின்ற நிலவு காணாமல் போயிருந்தது.
மேகம் உருகி மழையாகத் தூற்றலிட்டது
கௌதாரிகளும் ஆட்காட்டிப் பறவைகளும்
குளிரில் விறைத்துக் குறண்டிப் போயிருந்தன
நடக்கப் போவதை அறிந்த கடல் மட்டும்
ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது.
புலிகள் பூநகரிக்குள் புகுந்து கொண்டனர்.
அவர்கள் இட்ட ஒவ்வொரு அடிக்குள்ளும்
பூமி புல்லரித்துக் கொண்டது
இருளை ஊடறுத்து "எங்கள் பிள்ளைகள்"
பகைவனின் பாசறையைப் பார்த்தார்கள்.
காயவிட்டிருந்த "கருப்புச் சட்டைகள் " தெரிந்தன
குருதி வழியும் வெட்டரிவாள்கள்
எதிரியின் இடுப்பில் இருப்பது தெரிந்தது
"செல்லுங்கள் வெல்லுங்கள்"
தலைவனின் தாரக மந்திரம் காதில் ஒலித்தது
புலிகளின் கால்களுக்குள்ளே
புயல் புகுந்து கொண்டது
விழிகள் சிவப்பேறி விரிந்து கொண்டன.
விடிந்த போது
யானை உழக்கிய கரும்புக் காடாய்
எதிரிகள் சிதறிக்கிடந்தனர்.
பூமிப்பந்தின் நெற்றியிலே
பூநகரி சுவரொட்டியானது
துருவப்பகுதிகள் கூடச் சூடேறின
பசுபிக் சமுத்திரம்
நாகதேவன் துறைக்குப் பாதை கேட்டது.
உலக அசைவியக்கம் ஒரு கணம் நின்று
பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டது.
"தலைதப்பியது தம்பிரான் புண்ணியம்"
அன்றே வந்தது நன்றே என்று
பக்கத்து நாடு சுவாசத்தைச் சீராக்கியது.
உறங்கிக் கிடக்கும் தமிழனே! எழடா!
உன் வேலிக்கு அப்பாலும்
உலகம் இருப்பதை உணர்ந்துகொள்
கடாரம் வென்ற தமிழனைச் சொல்லி
கவிதை எழுதிக் குவிக்கும் கவிஞனே!
பூநகர் வென்ற புலிகள் மீதிலே
புதிய பரணியை எப்போது எழுதுவாய்?
இது விடுதலைக்கு விலை கொடுக்கும் காலம்
பதுங்குகுழி உனது பாதுகாப்பிற்கே தவிர
பயந்து கிடக்கும் படுக்கையறை அல்ல
விடுதலையை உயிர் மூச்சாக உள்வாங்கிக் கொண்டு
சாவைச் சாதாரண நிகழ்வாக நினைத்துக்கொள்.
காற்றுக்கு வேலியிட்டு கதவு சாத்த நினைப்பவர்களே!
ஆற்று வெள்ளத்தை அள்ளிக் குடிக்க நினைப்பவர்களே!
சிஙகள தேசமே! எங்களைத் தெரிந்துகொள்.
மாணிக்க கங்கையை
மடியிற் கட்டும் ஆசை எமக்கில்லை.
கொழும்பில் கொடியேற்றும் குறிக்கோளும் கிடையாது
நம்புங்கள்
நாங்கள் எங்கள் நாட்டிலும்
நீங்கள் உங்கள் நாட்டிலும்
நல்ல நண்பர்களாக வாழ்வோம்.
மதித்தால் மதிப்போம்
மிதித்தால் மிதிப்போம்!</span>

<b>புதுவை இரத்தினதுரை</b>

மார்கழி - தை 1994


(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)

முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்

Print this item

  செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?
Posted by: shanthy - 10-21-2004, 02:47 PM - Forum: கவிதை/பாடல் - Replies (9)

<span style='font-size:25pt;line-height:100%'>செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?- </span>
- சாந்தி ரமேஷ் வவுனியன் -

'வீரப்பன்"
பெயருக்குள்ளேயே வீரத்தை
விதைத்து வைத்த விழுது நீ.
போர்ப்பித்தனாய் உன்னைப்
புதுப்பித்துப் புதுப்பித்து....
பெருலாபமடித்தோர்க்கு
பெரும்பலமாய் இருந்தாயாம்.

செத்தாயா....? சாகடிக்கப்பட்டாயா...?

மர்மங்கள் நிரம்பிய உன் சாவில்
கொலைகாரர் , கொள்ளையர்கள் ,
எல்லோரும் வெற்றியென்று மார்தட்ட
நீ மட்டும் மௌனப் பிணமாக....?
உண்மை ஊமையாக....
ஊகங்கள் செய்திகளாய்....ஆய்வுகளாய்....

சந்தனக்கடத்தலும் , தந்தக்கடத்தலும்
தனியே நீ செய்தாயா....?
இல்லையில்லை....கொள்ளையிடும் வல்லவரின்
கைப்பைகள் நிரம்புதற்கு
கைப்பொம்மையானாய் நீ.
இதுவே உண்மையாகும்.

உன்பக்கம் எல்லாம்
நியாயமென்று சொல்லமாட்டேன்.
தம்பக்கம் இருந்த கறை கழுவுதற்கு
உன்பெயரைத் தமதாக்கிக் கொண்டவரே
முதற்குற்றவாopகள்....முகமூடிக்கள்வர்கள்....

வாழ்வில் வலிகண்டோர்
வாழ்வைப் பலிகொள்ளும்
வஞ்சகர் வலையுந்தன்
வாழ்வைப் பலிகொண்டதென்பேன் நான்.

வனாந்திரத்தெருவெங்கும்
வழக்கமாய் நடக்கும் உன் கால்களுக்கு
வாகனத்தேவையென்ன வந்ததுவோ....?
தேவையைத் தமக்குரிய தேர்வாய் தெரிந்தோரின்
வஞ்சக வலையில் நீ.
வலமெது இடமெது வஞ்சகர்க்கே வெளிச்சம்.

ஓர் வீரப்பன் மறைந்து போனாய்
இன்னும் எத்தனை வீரப்பன்களை
உருவாக்கிப் போனாயோ.....?

21.10.04.

Print this item

  வீரப்பனைப் பற்றி 540 செய்திகள்
Posted by: Sriramanan - 10-21-2004, 09:02 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சந்தனக் கடத்தல்காரன் வீரப்பன் தமிழக அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டதையடுத்து அதைப் பற்றிய 540 வரையான செய்திகள் மற்றும் கட்டுரைகள் இந்திய மற்றும் உலக ஆங்கில இணையத் தளங்களில் வெளியாகியுள்ளது.

இவற்றைவிட தொலைக் காட்சிகள், வானொலிகள் மற்றும் பத்;திரிகைகள் என்பனவும் வீரப்பனின் மரணச் செய்திக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன.

Print this item

  வெளியே வருகிறது டக்கிளசின் சுயநல அரசியல்
Posted by: Nitharsan - 10-21-2004, 12:18 AM - Forum: அரசியல் / பொருளாதாரம் - Replies (4)

ஈ.பி.டி.பி கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களை அடுத்து கடந்த இரு நாட்களாக யாழ்.நகரிலும், ஈ.பி.டி.பி கட்சியின் அலுவலகங்களுக்கு அண்மையிலும் வைத்து விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களையே இங்கே காண்கிறீர்கள். இராணுவ மற்றும் பொலீஸ் பாதுகாப்புடன் பிக்கப் வாகனங்களில் வந்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர்களே இவற்றை விநியோகித்துள்ளனர்,என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன வெளியே வருகிறது டக்கிளசின் சுய நல அரசியல். எத்தனை நாளைக்குத்தான் பொறுப்பது என்று அவரின் தோழர்களே தோலுரித்துக் காட்டுகின்றனர் அவரைப்பற்றி
<img src='http://www.geocities.com/vannitendral/epdp1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.geocities.com/vannitendral/epdp2.jpg' border='0' alt='user posted image'>
[b]எத்தனை நாட்கள சொன்னோம் கேட்டீர்களா? என்ன செய்வத இப்போதாவது புரிந்து விட்டீர்களே உங்களுடன் இருக்கும் பச்சோந்தி யார் என்று......

<img src='http://www.geocities.com/vannitendral/speaktamil.gif' border='0' alt='user posted image'>
-நேசமுடன் நிதர்சன்-
www.vannithendral.tk

Print this item

  கரிகாலன் காலம் இது...
Posted by: shanxp - 10-20-2004, 03:54 PM - Forum: அறிமுகம் - Replies (2)

இது எம் தலைவரின் காலம் ...
வரும் தடைகளை வெல்லும் நேரம்...
இனி பகைவன் பிறப்பினும்..
அவன் தலை உருள்வது திண்ணம்..

நன்றி

Print this item

  வணக்கம் இது புது உறவு !
Posted by: shanxp - 10-20-2004, 03:23 PM - Forum: அறிமுகம் - Replies (33)

வணக்கம் !
நான் புதிதாக இணைந்து கொண்டுள்ளேன்.
என்னாலான உதவியை செய்ய காத்திருக்கின்றேன்.

நன்றி

Print this item

  கல்வி...செல்வம்...சக்தி..!
Posted by: kuruvikal - 10-20-2004, 03:10 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<img src='http://dgreetings.com/newimages/navratri/nav7.gif' border='0' alt='user posted image'>

அகிலம் இயக்கும் சக்தி
வளம் தந்த செல்வம்...!
செல்வம் தந்த வளம்
கல்வி தரும் செல்வம்
அறிவின் அடிப்படை
உலகை இயக்கும் சக்தி...!

உலகின் அடிப்படை
தந்தை தாய் தந்த உயிர்
உலகில் வாழத் தேவை
கல்வி தரும் செல்வம்
செல்வம் தரும் சக்தி
சக்தி தரும் கல்வி
கல்வி தரும் செல்வம்...!

Print this item

  வீரப்பன் சுட்டுக் கொலை ஒளி(vedio news)வடிவ செய்திகள்
Posted by: Nitharsan - 10-20-2004, 08:25 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

வீரப்பன் சுட்டுக் கொலை தொடர்பான செய்திகள் மற்றும் வீரப்பனின் கடத்தல் மற்றும் கொள்ளை கொலைச்சம்பவங்கள் பற்றிய ஒளி வடிவங்களை sun தொலைகாட்சி செய்திகளில் இப்போது காணலாம்
இச் செய்தியை இணையத்தினுர்டே பார்ப்பதற்கு கீழ் வரும் இணைப்பை அழுத்துங்கள்
http://indiamoviezone.com/videos/tv/tvnews.wmv

-நேசமுடன் நிதர்சன்-
www.vannithendral.tk
<img src='http://www.geocities.com/vannitendral/speaktamil.gif' border='0' alt='user posted image'>

Print this item