![]() |
|
புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள் (/showthread.php?tid=6570) |
புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள் - aathipan - 10-21-2004 <img src='http://home.hetnet.nl/~pictures/afbeeldingen/darshan/04.jpg' border='0' alt='user posted image'> புட்டபத்தி சாய்பாபாவின் லீலைகள் பற்றி அறிய இந்தப்பக்கத்திற்கு செல்லவும். http://www.exbaba.com/ சாயி பக்தர்கள் மனம் நோகடிக்கப்ட்டிருந்தால் மன்னிக்கவும். - shanmuhi - 10-21-2004 ¾¸Åலுìகு ¿ýÈ¢¸û...... - hari - 10-22-2004 நக்கீரன் (கனடா) அவர்களால் எழுதப்பட்ட "சோதிடப் புரட்டு" தொடர் கட்டுரையில் இருந்து... 'ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்" என்று சொன்னவர் வேறு யாரும் அல்ல. புகழ்பெற்ற பகுத்தறிவுவாதியும் உளவியல் வல்லுனருமான டாக்டர் ஏப்ரகாம் கோவூர். கோவூர் கடவுள் அவதாரங்களுக்கும், பேய், பில்லி சூனியம், மாயமந்திரம், செப்படி வித்தை செய்பவர்களுக்கு எல்லாம் சிம்மசொப்பனமாக விளங்கினார். கடவுள் அவதாரம் என்று கருதப்படும் சாயி பாபாவுக்கு கோவூர் சங்கிலி, மோதிரம், கடிகாரம் என்றெல்லாம் வரவழைத்துக் காட்டுகிறீர்கள, முடியுமென்றால் உங்களால் ஒரு பூசனிக்காயை வரவழைத்துக் காட்ட முடியுமா?" என்று அறைகூவல் விடுத்தார். கடவுள் அவதாரங்கள் என்று சொல்பவர்கள் எப்போதும் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய விபூதி, சங்கிலி, மணிக்கூடு, சிவலிங்கம் போன்றவற்றை வரவழைத்துக் காட்டுவார்களேயொழிய பூசனிக்காய் போன்ற பருமனான பொருளை வரவழைத்துக் காட்டுவது கிடையாது. காட்டவும் முடியாது. கொஞ்சக் காலத்துக்கு முன் தில்லியில் சாயி பாபா கலந்து கொண்ட விழாவில் காற்றில் கையசைத்து ஒரு சங்கிலியை வரவழைத்தார். உண்மையில் அவரது உதவியாளர் கொடுத்த சிலைக்கு அடியில் ஒட்டப்பட்டிருந்த அந்தச் சங்கிலியை அவர் கையால் தடவி எடுத்ததை கையும் மெய்யுமாக வீடியோ கமரா காட்டிக் கொடுத்துவிட்டது. பின்னர் அந்த விழா நிகழ்ச்சியை இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் அந்தக் காட்சியை பிபிசி தயாரித்த Guru Busters என்ற குறும்படத்தில் போட்டுக் காட்டினார்கள். டாக்டர் கோவூர் 1978 செப்தெம்பர் 18ம் நாள் இயற்கை எய்தியபோது அவரது விருப்பத்திற்கு இணங்க அவரது கண்கள் இரண்டும் மருத்துவக் கல்லூரிக்கு கொடுக்கப்பட்டது. அவரது உடல் அவர் நீண்ட காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரிக்குக் (ColomboTheurstan College) கொடுக்கப்பட்டது. இவை தான் இறந்த பின்பும் தன்னால் மானிடம் (Humanity) பயன்பட வேண்டும் என்ற அவரது உயரிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். முழு தொடரையும் படிக்க இங்கே சொடுக்கவும் - hari - 10-22-2004 "Guru Busters" குறும்படத்தை பார்க்க இங்கே சொடுக்கவும் அல்லது Click: http://home.hetnet.nl/~kla-jen/bababusters.wmv (15 MB, broadband quality) Click: http://home.hetnet.nl/~kla-jen/bababusterssmall.wmv (2 MB, modem quality) - aathipan - 10-22-2004 சத்திய சாய்பாபா கல்விக்கூடம் ஒன்றில் கல்வி கற்ற மாணவர் ஒருவர் ஆனுப்பிய மெயில் நான் சத்திய சாயி உயர் நிலைப்பளள்ளி மற்றும் கல்லூரியில் கல்விகற்றவன். எனது சொந்த அனுபவத்தில் அவர் பற்றி பேசப்பட்டுவரும் செகஸ் லீலைகள் உண்மை என்று தெரிந்து கொண்டேன். நான் மட்டுமல்ல அங்கு வேலைசெய்யும் அலுவலர்களும் அதிகாரிகளும் இந்த உண்மையை அறிவார்கள். குறிப்பாக பழைய மாணவர்கள் அனைவரும் இதில் பாதிக்கப்பட்டவர்களாவர். ஆனால் வௌ;வேறு காரணங்களால் யாரும் வெளியே சொல்ல விரும்புவதில்லை. பெரும்பாலான மாணவர்ளின் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இல்லை. மணமுறிவில் முடிந்து உள்ளது. இதற்கெல்லாம் அவர்கள் உடல் hPதியாகவும் மனதளவிலும் பாதிக்கப்ட்டுள்ளமையும் காரணம். More later, An Ex-student of Sri Sathya Sai Schools - hari - 10-25-2004 ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான். - yarlmohan - 10-25-2004 முன்னைய கருத்தாடல்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->http://www.yarl.com/forum/viewtopic.php?t=1512 http://www.yarl.com/kalam/viewtopic.php?t=859 http://www.yarl.com/forum/viewtopic.php?t=1546 - hari - 10-25-2004 நன்றி மோகன் அண்ணா, - kavithan - 10-25-2004 hari Wrote:ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான். இதிலை கருத்து சொல்ல என்ன இருக்கு அவரை பற்றி நாங்கள் கருத்து சொல்லி என்ன இருக்கு.. அவரை நாம் என்றும் கடவுளாக நினைத்ததும் இல்லை ஏமாந்ததும் இல்லை.. அதைவிட நீங்களோ நாங்களோ சொல்வதை வைத்து மத்திய அரசோ, மானில அரசோ நடவடிக்கை எடுக்க போவது இல்லை.. ஏன் என்றால் இந்த சாமியின் பக்கதர்கள் தான் அவர்களில் பலர்... பாக்க போனால் காட்டிலை வளர்ந்த வீரப்பன் ஒரு நல்லவன்.. இவரை இப்ப நாட்டிலை வளர்கிற வீரப்பன் எண்டு சொன்னாலும் தப்பிலை ஆனால் வீரப்பன் போலீசுக்கும் அதன் ஆதரவாளருக்கும் எதிரி.சாயிபாபா மக்களுக்கு எதிரி அழிக்க படவேண்டியவன் இவன்..அவன் இல்லை... அந்த வீரப்பன் காப்பற்றப்பட்டு பல வீர வசனம் பேசுபவர்கள் அழிக்கப்பட்டிருக்க வேண்டும்....
- tamilini - 10-25-2004 Quote:ஆதிபன், ஒன்றை கவனித்தீர்களா? எங்கள் கள உறுப்பினரகள் பலர் இந்த பகுதிக்கு பதில் அளிப்பதை தவிர்த்துள்ளனர். காரணம் பயம் . இதைத்தான் இந்த மூட நம்பிக்கையை வளர்த்தவர்களும் எதிர்பார்த்தனர். எப்பவும் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். நானும் நீரும் தொண்ட கிழிய கத்திபோட்டு கிடக்கவேண்டியதுதான். நமக்கு இதுபற்றி தெரியாதுங்க.. நீங்கள் போட்ட லிங்குகளை பாத்தம்... நன்றிகள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sriramanan - 10-26-2004 Quote:நீங்கள் போட்ட லிங்குகளை பாத்தம்... நன்றிகள்...!இணைப்புக்களைப் பார்த்தாச்சு இனி எப்போ திருந்துறது. I mean எப்ப சாக்கடை சாயிபாபாவை கும்பிடுறதை நிறுத்திறது??? - sOliyAn - 10-26-2004 நான் தினகரனை 'பொலோ'பண்ணலாமான்னு யோசிக்கிறேன்! - Sriramanan - 10-26-2004 Quote:நான் தினகரனை 'பொலோ'பண்ணலாமான்னு யோசிக்கிறேன்!சோழியன் யார் இந்தத் தினகரன்??? ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் தினகரனா? - sOliyAn - 10-26-2004 இவர் ஒரு சுவிசேக சபைப் பிரச்சாரகர்.. மேடையில் வைத்து பலருடைய வியாதிகளை குணப்படுத்துவதாக வீடியோ நாடா காண்பிக்கிறது.. இவருக்கும் இந்தியால சொந்தமாக பாடசாலை.. மருத்துவமனை என்று ஏகப்பட்டவை இருக்குது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Sriramanan - 10-26-2004 Quote:இவர் ஒரு சுவிசேக சபைப் பிரச்சாரகர்.. மேடையில் வைத்து பலருடைய வியாதிகளை குணப்படுத்துவதாக வீடியோ நாடா காண்பிக்கிறது.. இவருக்கும் இந்தியால சொந்தமாக பாடசாலை.. மருத்துவமனை என்று ஏகப்பட்டவை இருக்குது..சோ அவரோடை சேர்ந்து சனத்தை ஏமாத்தப் போறியளே! இல்லை சனத்தோடை சனமா ஏமாறப் போறியளோ? - hari - 10-26-2004 sOliyAn Wrote:இவர் ஒரு சுவிசேக சபைப் பிரச்சாரகர்.. மேடையில் வைத்து பலருடைய வியாதிகளை குணப்படுத்துவதாக வீடியோ நாடா காண்பிக்கிறது.. இவருக்கும் இந்தியால சொந்தமாக பாடசாலை.. மருத்துவமனை என்று ஏகப்பட்டவை இருக்குது.. <!--emo&மேடையிலேயே குணப்படுதுபவர் ஏன் மருத்துவமனை கட்டினார்? மேலதீக அவசர சிகிச்சைக்கா? - hari - 10-26-2004 கவிதன் யார் சொல்லியும் இந்த பித்தலாட்டத்தை நிறுத்த முடியாது.எனினும் இங்கே என்னும் பாபா வை கடவுளாக வணங்கும் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு தெளிவு படுத்துவது எங்கள் கடமையல்லவா? இந்த பகுதியை நான் பல நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்.அவர்களும் பலருக்கு அதை அனுப்புகின்றனர். இதன் மூலம் ஒரு சிலரையாவது திருத்தலாம் என ஒரு நம்பிக்கை. சக கள உறுப்பினர்களும் பல ஆதாரங்களை தருவார்கள் என நினைத்தேன். ஆனால் யாரும் பதில் அளிக்காததால் அப்படி எழுதினேன். தவறு இருந்தால் மன்னிக்கவும். - சாமி - 10-26-2004 விபூதியை நீரில் குழைத்து சிறுசிறு துணிக்கைகளாக உருட்டி உலரவிடுங்கள். பிறகு அதை விரல் இடுக்குகளில் மறைத்து வையுங்கள். முழுக்கை சட்டை வசதி. பிறகு ஒரு உருண்டையை நைசாக உள்ளங்கைக்கு எடுத்து மெதுவாக நசித்தால்... விபூதி கொட்டோ கொட்டென்று கொட்டும்.. பொறுங்கோ.. மற்றதுகளை எங்கையாலும் கேட்டுக்கொண்டு வாறன்.. அதுக்கிடையிலை.. ஒரு முட்டையை மெழுகுதிரியிலை அல்லது மண்ணெய் விளக்கிலை சுவாலையின் புகை உதவியால் கருமை படியச் செய்யவும். முழுதாய் கருமை படிஞ்சுதா? ஒரு வாயகலமான போத்தலுள் நீih எடுங்கள். அதனுள் அந்த கரும்புகை படிந்த முட்டையை போடுங்கள். முழுதாக தண்ணிக்குள் அழிழ வேண்டும். போத்தலுக்குள் வெளியால் முட்டையை பாருங்கள்.. வெள்ளி முட்டைபோல தோன்றும். இல்லாவிட்டால் தாமரை இலையை (எப்படியாவது) போத்தல் தண்ணிக்குள் அமுக்கிப் பாருங்கள்... வெள்ளி இலைபோல தெரியும். இதுக்குத்தான் சொல்லுறது... 'கண்ணை நம்பாதே.. உன்னை ஏமாற்றும்!!!" வெப்பமானிக்குள் இருக்கிற பாதரசம் (மேர்க்குரி) தெரியுமா? எலுமிச்சைப் பழத்தில் சிறிய துவாரம்போட்டு, பாதரசத்தின் ஒரு துளியை பழத்தின் நடுப்பகுதிக்குள் புகுத்துங்கள். பிறகென்ன.. எலுமிச்சம்பழம் தரையில் பேய் பிடித்ததுபோல துள்ளும்.. யாற்றையாலும் பேயை பழத்திலை இறக்கியாச்சுன்னு புலத்திலை பேய்க்காட்டி வறுகலாம்.. தாறதுக்கு கனபேர் இருக்கினம்... செவ்வரத்தைப் பூ தெரியுமா? அந்த சாற்றை ஒரு கத்தியில் தோய்த்து உலரவிடுங்கள். கத்தியில் அடையாளம் தெரியாது.. அந்த கத்தியால் எலுமிச்சம் பழத்தை வெட்டுங்கள். இரத்த நிறத்தில் சாறு ஒழுகும். பில்லி சூனியம் வெட்டியாச்சுன்னும் உழைக்கலாம்.. நெருப்புப் பெட்டியின் இருமருங்கிலுமுள்ள மருந்து தடவிய பேப்பரை உரிச்சு.. ஒரு தாம்பாளத்தின் பின் பக்கத்தில் வைத்து எரியுங்கள். எரிந்து முடிய தாம்பாளத்திலை ஒரு காவி பாணி தோன்றும். மற்றப் பக்கத்திலை விபூதியை போடுங்கோ.. பரணி மந்திரம் சொல்லி தருவார். அதை சொல்லிக்கொண்டு காவியை இரு விரலால் தொட்டு இரு விரல்களையும் உரசுங்கோ... புகை வரும்.. பேந்தென்ன.. நீங்கள் விபூதிச் சாமியாரேதான்.. இதிலை காவி கந்தகமுங்கோ... சொந்தத் தொழில் செய்ய ஐடியா கொடுத்த சோழியானுக்கு நன்றிகள். வேறு ஏதாவது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கோ |