![]() |
|
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை (/showthread.php?tid=6571) |
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை - hari - 10-21-2004 <span style='font-size:23pt;line-height:100%'>பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது! [size=14]மனுக்குலத்தின் தலையில் சாதனை மகுடம் சூட்டி அமெரிக்கன் ஒருவன் நிலவில் நின்றானே அந்த நாள் தமிழனும் ஆடிப்பாடினான். "ஆம்ஸ்ரோங்" இங்கு பலருக்கு "அத்தை பையன்" ஆனான். சாள்ஸ்சும் டயனாவும் லண்டனில்தான் கைபிடித்துக் கொண்டார்கள். தமிழன் சந்தோசத்தில் இங்கே சந்தனம் பூசிக் கொண்டான். "வேல்ஸ்" பரம்பரைக்கு விசுவாசம் தெரிவித்து வெற்றிலை போட்டுக் கொண்டான். வாழ்த்து அனுப்பி வைத்த வரலாறும் இங்கே சிலருக்கு உண்டு. "எலிசபெத் மகாராணி" எங்களுக்கு எந்தவழி உறவு? "யாதும் ஊரே யாவரும் கேளிர்" சொன்னவன் தமிழன் தானே அந்த உறவில் போலும் தமிழர்கள் ஆனந்தம் கொண்டார்கள் குதுகலித்தோர் மீது குற்றமில்லை. ஆனால்... நேற்றிரவு பூநாகரியில்... பகைவன் இருந்த படைத்தளத்தினுள்ளே இவர்களின் பிள்ளைகள் புகுந்தார்கள். விடியும் வரை வெடிச்சத்தங்கள் கேட்டன. உறக்கம் கலைந்தவர் மட்டும் உற்றுணர்ந்து கொண்டனர். "பூநகரிக்குள்ளே பொடியாள் போட்டாங்கள்" "அப்பனே முருகா பிள்ளைகளைக் காப்பாற்று "கர்த்தரே! எங்கள் குஞ்சுகளைக் காத்தருளும்" என்றபடி விடியும் வரை விழித்திருந்தார்கள். அடுத்த நாள் அடிவானம் சிவந்தது. காகங்களின் சத்தங்கள் கூடச் சங்கீதமானது. வழமைக்கு மேலாக பூக்கள் புன்னகைத்தன. "வழுக்கி ஆறு " பெருக்கெடுத்து ஓடியது. ஆயிரம் பகைவரைப் போரினில் அழித்து அள்ளிய ஆயுதங்களைத் தோளினிற் சுமந்து சாவினைத் தழுவிய தோழர்களையும் தோழியரையும் தங்கள் கைகளில் ஏந்தியபடி முகத்தில் வெற்றியின் வீரியத்தோடும் நெஞ்சினில் இழப்பின் சோகத்தோடும் எங்களின் வீதியால் எங்கள் பிள்ளைகள் உலா வந்தனர். பூநகரிக்கு பக்கத்து ஊரிலே...பாதை கேட்டாலே.. திக்குக் காட்டத் தெரியாத சின்ன ஊர். மொட்டைக் கறுப்பன் அரிசிக்கு முகவரி இதுதான். மடுமாதா திருப்பதிக்கும் மாதோட்ட நன்நகருக்கும் தலயாத்திரை போவோரின் தங்குமிடம். எங்கும் போல் இங்கும் காற்று வீசும் மாரி காலம் என்றால் மழை பொழியும் ஊர்கூடி உழுவார்கள் வயல்கள் விளைந்திருக்கும் போது வடிவாக இருக்கும் வரம்புகளில் வெண்கொக்குகள் பூத்திருக்கும். சின்னக் கோவில்களிலும் திருவிழா நடக்கும் பூமியெங்கும் பேர் பதியும் பொசிப்பில்லாமல் பூநகரி ஊமையாய் உறங்கிக்கிடந்தது. "நாகதேவன்துறை" பேரைப் பார்த்துப் பிரமிக்கக் கூடாது இது கப்பல் துறைமுகமல்ல. கட்டுமரத் துறைதான். என்றாலும் எங்கள் முந்தையரின் பாதம் படிந்துள்ள படகுத்துறை இந்தியப் படைகளின் இருண்ட நாட்களில் வரிப்புலிகள் வன்னிக்குப் போய் வந்த வரலாறு இதற்குண்டு 10.11.1993 அன்று சாமம் கழிய மறு நாள் சந்தித்துக் கொண்டது. ஞானிமடத்துக்கு மேலே நின்ற நிலவு காணாமல் போயிருந்தது. மேகம் உருகி மழையாகத் தூற்றலிட்டது கௌதாரிகளும் ஆட்காட்டிப் பறவைகளும் குளிரில் விறைத்துக் குறண்டிப் போயிருந்தன நடக்கப் போவதை அறிந்த கடல் மட்டும் ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தது. புலிகள் பூநகரிக்குள் புகுந்து கொண்டனர். அவர்கள் இட்ட ஒவ்வொரு அடிக்குள்ளும் பூமி புல்லரித்துக் கொண்டது இருளை ஊடறுத்து "எங்கள் பிள்ளைகள்" பகைவனின் பாசறையைப் பார்த்தார்கள். காயவிட்டிருந்த "கருப்புச் சட்டைகள் " தெரிந்தன குருதி வழியும் வெட்டரிவாள்கள் எதிரியின் இடுப்பில் இருப்பது தெரிந்தது "செல்லுங்கள் வெல்லுங்கள்" தலைவனின் தாரக மந்திரம் காதில் ஒலித்தது புலிகளின் கால்களுக்குள்ளே புயல் புகுந்து கொண்டது விழிகள் சிவப்பேறி விரிந்து கொண்டன. விடிந்த போது யானை உழக்கிய கரும்புக் காடாய் எதிரிகள் சிதறிக்கிடந்தனர். பூமிப்பந்தின் நெற்றியிலே பூநகரி சுவரொட்டியானது துருவப்பகுதிகள் கூடச் சூடேறின பசுபிக் சமுத்திரம் நாகதேவன் துறைக்குப் பாதை கேட்டது. உலக அசைவியக்கம் ஒரு கணம் நின்று பிரபாகரன் பெயரை உச்சரித்துக் கொண்டது. "தலைதப்பியது தம்பிரான் புண்ணியம்" அன்றே வந்தது நன்றே என்று பக்கத்து நாடு சுவாசத்தைச் சீராக்கியது. உறங்கிக் கிடக்கும் தமிழனே! எழடா! உன் வேலிக்கு அப்பாலும் உலகம் இருப்பதை உணர்ந்துகொள் கடாரம் வென்ற தமிழனைச் சொல்லி கவிதை எழுதிக் குவிக்கும் கவிஞனே! பூநகர் வென்ற புலிகள் மீதிலே புதிய பரணியை எப்போது எழுதுவாய்? இது விடுதலைக்கு விலை கொடுக்கும் காலம் பதுங்குகுழி உனது பாதுகாப்பிற்கே தவிர பயந்து கிடக்கும் படுக்கையறை அல்ல விடுதலையை உயிர் மூச்சாக உள்வாங்கிக் கொண்டு சாவைச் சாதாரண நிகழ்வாக நினைத்துக்கொள். காற்றுக்கு வேலியிட்டு கதவு சாத்த நினைப்பவர்களே! ஆற்று வெள்ளத்தை அள்ளிக் குடிக்க நினைப்பவர்களே! சிஙகள தேசமே! எங்களைத் தெரிந்துகொள். மாணிக்க கங்கையை மடியிற் கட்டும் ஆசை எமக்கில்லை. கொழும்பில் கொடியேற்றும் குறிக்கோளும் கிடையாது நம்புங்கள் நாங்கள் எங்கள் நாட்டிலும் நீங்கள் உங்கள் நாட்டிலும் நல்ல நண்பர்களாக வாழ்வோம். மதித்தால் மதிப்போம் மிதித்தால் மிதிப்போம்!</span> <b>புதுவை இரத்தினதுரை</b> மார்கழி - தை 1994 (தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........) முந்தைய கவிதைகள் தாயகத்தை காதல் செய் குந்த ஒரு குடிநிலம் - shanmuhi - 10-21-2004 புதுவை இரத்தினதுரை ¢ý ¸Å¢¨¾ ¾ó¾து ¸ñடு Á¸¢ú............ - kavithan - 10-21-2004 கவிதை அருமை கவிதையை இங்கு தொடர்ச்சியாக பிரசுரிக்கும் ஹரி அண்ணாவுக்கு நன்றிகள் Re: பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை - வெண்ணிலா - 10-22-2004 hari Wrote:இது விடுதலைக்கு விலை கொடுக்கும் காலம் <b>ஹரி அண்ணா நன்றிகள் இங்கு தந்தமைக்கு. சிரமம் பாராது தொடர்ந்தும் கவிஞர் புதுவையின் கவிதைகள் தருவீர்கள் என நம்புகிறேன்.</b> Re: பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!- புதுவை - hari - 10-22-2004 vennila Wrote:[quote=hari] <b>ஹரி அண்ணா நன்றிகள் இங்கு தந்தமைக்கு. சிரமம் பாராது தொடர்ந்தும் கவிஞர் புதுவையின் கவிதைகள் தருவீர்கள் என நம்புகிறேன்.</b>தொடர்ந்து வரும் வெண்ணிலா போல |