Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 426 online users.
» 0 Member(s) | 423 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,315
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,066
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,491
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.!
Posted by: kuruvikal - 11-01-2004, 03:17 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (25)

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40474000/jpg/_40474529_kez203.jpg' border='0' alt='user posted image'>

<b>நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்....!</b>

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிக்கும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜான் கெர்ரிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

3 தினங்களுக்கு முன்பு யாருக்கு வெற்றிவாய்ப்பு என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவில் ஜார்ஜ் புஷ்ஷுக்கு 50 சதவீத ஆதரவும், ஜான் கெர்ரிக்கு 44 சதவீத ஆதரவும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒரு சதவீத ஆதரவும் இருப்பது தெரியவந்தது.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் புஷ்ஷுக்கு 48 சதவீதமும் கெர்ரிக்கு 46 சதவீதமும் ஆதரவு இருந்தது. எனவே இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவது தெரிய வந்துள்ளது.

இந் நிலையில் முஸ்லீம் அடிப்படைவாதி பின் லேடனின் விடியோ டேப் வெளியாகியுள்ளது, புஷ்ஷýக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பின் லேடனை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டுவர ஏற்பாடு செய்யப்படும் என்று 3 ஆண்டுகளுக்கு முன்பு புஷ் உறுதி கூறியிருந்தார். ஆனால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

thatstamil.com

Print this item

  மட்டக்களப்பில் ஆயிரக்கணக்கான பாம்புகள் பேரணி!!!
Posted by: Sriramanan - 11-01-2004, 07:36 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (23)

மட்டக்களப்பு வாவியில் திடீரெனப் பிர வேசித்த ஆயிரக்கணக்கான பாம்புகளால் சுமார் 3 மணி நேரம் அப்பிரதேசம் பெரும் அல்லோலகல்லோலப்பட்டது.
நேற்றும், நேற்றுமுன்தினமும் இரவு 7 மணி யளவில் மட்டக்களப்பு, கல்லடிப்பாலத்தின் ஒருமுனையில் வாவியின் மேல் ஆயிரக்கணக் கான தண்ணீர்ப்பாம்புகள் நெளிய ஆரம்பித் தன. தண்ணீரே தெரியாத அளவுக்கு மிகப்பெரு மளவில் பாம்புகள் நீரின் மேல் புரண்டன.
பொலீஸாரின் தகவலையடுத்து அந்த இடத் திற்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட தலை மையக பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹரிச்சந்திர பண்டார ஊடகவியலாளர்களை அழைத்துப் பாம்புகளைக் காண்பித்தார்.
இரவு 10 மணியாகியும் அப்பாம்புகள் நீரின் மேல் நெளிந்த வண்ணமே இருந்தன. பெரு மளவிலான பொதுமக்கள் பெரும் ஆச்சரியத் துடன் இப்பாம்புகளைப் பார்வையிட்டனர்.

நன்றி: உதயன்

Print this item

  தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ?
Posted by: aswini2005 - 11-01-2004, 12:18 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (45)

பொது வாழ்வில் இருக்கின்ற பெருந்தகைகள் புரிகின்ற சில்மிசங்களை அம்பலப்படுத்தப்படுவது சரியா தவறா ?

அல்லது தனிப்பட்ட வாழ்வு வேறு ? பொது வாழ்வு வேறா ?

உங்களுக்குத் தெரிந்ததை எங்களுக்கும் பகிருங்கோ ! Idea

Print this item

  ஓ இரத்த உறவே.......
Posted by: cannon - 10-31-2004, 08:08 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (51)

ஈரக்கில் வாகன ஓட்டுனராக தொழில் புரிந்த தமிழராகிய தினேஸ் தர்மேந்திரா இராஜரத்தினம் என்பவர் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதாக செய்திகள் திரிவிக்கின்றன. முன்பு குவைற்றில் வேலை செய்த இவர் சரியான வேதனம் கிடைக்கவில்லையென்பதைக் காரணமாக ஈராக்கிற்கு சென்றதாகவும் அங்குதான் இக்கடத்தல் நாடகம் நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழன், திரை கடலோடித் திரவியம் தேடித்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும். பாவம் இலங்கைத் தீவினுள் பிறந்து விட்ட காரணத்திற்கு இந்தத் தமிழனாலும் தப்ப முடியவில்லை.

ஓ இரத்த உறவே, உன் விடுதலைக்கு நாம் இன்று செய்யக் கூடியது பிராத்தனையொன்றே. எமக்கொரு தேசம், எமக்கொரு அரசு இருந்திருந்தால் ஓடோடி வந்திருப்போம்.

ஓ இறைவா, இவ்விரத்த உறவு உடனடியாக விடுதலையாக உன்னிடம் மண்டாடுகின்றோம்.

Print this item

  ஜே.விபி யின் அராஜக வரலாறும் ஜனநாயக போர்வையும்.....
Posted by: Nitharsan - 10-31-2004, 07:15 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

<span style='font-size:25pt;line-height:100%'>ஜே.விபி யின் அராஜக வரலாறும்
தற்போதைய ஜனநாயக போர்வையும்</span>

இன்று 16 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று ஜனநாயகம் மற்றும் பயங்கரவாதம் பேசி சிறிலங்கா சுகந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜே.வி.பி யின் முன்னைய அராஜக காலத்தில் (1987 –1992) அக்கட்சியால் புரியப்பட்ட கொலைகள் கொள்ளைகள் பாலியல் வல்லுறவுகள் பொதுச் சொத்துக்கள் நாசமாக்குதல் மற்றும் மறக்கப்பட முடியாத இனவாத அச்சுறுத்தல்கள். என்பன மறக்கப்பட முடியாத வரலாற்று கறைகளாகும்.

இது இவ்வாறிருக்க இன்று ஜனநாயக முகமூடி அணிந்து தற்போது அரசியலில் நுழைந்துள்ள சிறிலங்கா சுகந்திரக் கட்சியின் தலைவி ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் அன்புக் கணவர் வி;ஜய குமாரதுங்க அக்காலப்; பகுதியில் இவர்களால் கொல்லப்பட்டவராவார் இவர்களது கூட்|டு உடன்படிக்கைக்காக இலண்டனில் தலைமறவாயிருந்து தற்போது இலங்கை வந்துள்ள ஜேவி.பி.யின் மாண்பு மிகு தலைவர் சோமவன்ச அமரசிங்க என்பவரே இக் கொலையின் சூத்திரதாரியாவார்.

மக்கள் விடுதலை முண்ணணி செய்த கொலைகள் பற்றி இரகசிய தகவல் பிரிவு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு

<span style='color:red'>ஆண்டு தோறும
கொலைசெய்யப்பட்டோர் எண்ணிக்கை
1987 -129
1988 -1532
1989 -4715
1990 -181
1991 -11
1992 -09

[size=18](1987-1992) ஜே.வி.பி. யினரால் கொல்லப்பட்டவர்களை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.</span>
பௌத்த பிக்குகள் -30
கத்தேலிக்க மதகுருமார் -02
ஜ.தே.க ஆதரவாளர்கள்- 1735
அரச ஊழியர்கள் - 487
பொலிஸ் -342
இராணுவம் -209
பிரதேச சபை உறுப்பினர்கள் -64
தகவல் வழங்கியோர் -260
அரசியல் ஆதரவாளர்கள் -06
பல்கலைக்கழக போராசிரியர்கள் - 02
பாடசாலை அதிபர்கள் - 50
ஊடகவியலாளர்கள் -04
சட்டத்தரணிகள் -10
வைத்தியர்கள் -04
பொறியியலாளர்கள் -03
தோட்டத் துரைமார் -18
வர்த்தகர்கள் -06
தொழிற் சங்கவாதிகள் - 27
பொலிஸ் குடும்ப அங்கத்தவர்கள் - 93
இராணுவ குடும்ப அங்கத்தவர்கள் -69
சிறீல.சு.கட்சி ஆதரவாளர்கள் -102
ஜ.சோ.மு. ஆதரவாளர்கள் -64
ஊர்காவற் படை -98
வேறு கொலைகள் -2892
மொத்தம் -6577

<span style='font-size:25pt;line-height:100%'>இவர்களால் அழிக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் விபரம்</span>
பேரூந்துகள் - 613
ரயில்கள் -16
பஸ் டிப்போக்கள் -16
ரயில் நிலையங்கள் -24
கிராம சேவை அலுவலகங்கள் -294
பெருந்தோட்ட தொழிற்சாலைகள் -73
பிரதேச செயளாளர் பணிமனைகள் -79
அஞ்சல் அலுவலகங்கள் -680
விவசாய சேவை நிலையங்கள் -103
பாடசாலைகள் -08
கூடடுறவு பண்டகசாலைகள் - 16

நிலமை இவ்வாறிருக்க தமிழருக்காகவும் தமிழர்தம் விடுதலைக்காகவும் போராடிவரும் தமிழர்களின் காவலர்களாகிய தமிழீழ விடுதலைப் புலிகளை ஜே.வி.பி யினர் விமர்சிப்பது வேடிக்கையானது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.

இவாறு இனவாத கட்டுக்குள் இருந்து கொண்டு தற்போது கூட்டுச் சேர்ந்துள்ள இவர்கள் தமிழர்களுக்கு தக்க தீர்வு அளிப்பார்கள் என்று எவரும் எதிர்பாக்க முடியாது மாறாக தமிழர்கள் ஒன்றுபட்டு ஓர் அணியில் திரண்டு ஒர் குரலாக ஒலிப்பதுதான் தமிழர்களின் தலையாய வரலாற்றுப் பொறுப்பு மட்டுமன்றி காலத்தின் தேவையுமாகும். இதனை தமிழ் அரசியல் தலைவர்கள் புரிந்துகொள்வார்களா? இல்லாவிடின் பேரினவாதத்துக்கு துணைபோவார்களா? காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
நன்றி: யாழ்தமிழ்.கொம்

-நேசமுடன் நிதர்சன்-

Print this item

  ரி.ரி.என் தொலைக்காட்சியில்
Posted by: Manithaasan - 10-31-2004, 04:07 PM - Forum: குறும்படங்கள் - Replies (4)

இன்று மாலை 6 மணிக்கு ரிரிஎன் தொலைக்காட்சியில் புகலிட குறும்படமான கனவுகள் ஒளிபரப்பாகவுள்ளது..
சென்ற வாரம் அழியாதகவிதையும் இருமாதங்களுக்கு முன் விலாசமும் ஒளிபரப்பாகியிருந்தன.....
புகலிட திரைக்கலை வளர்ச்சிக்கு உற்சாகமளிக்கும் வகையில் ரிரிஎன் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது .மகிழ்ச்சிக்குரியதுதான்

Print this item

  TARAKI`S ARTICLE...
Posted by: விது - 10-31-2004, 03:46 AM - Forum: அறிமுகம் - Replies (1)

இடைக்கால தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தைத் தொட்டாலே மகா பாவம் என சிங்கள தேசத்தில் நாளாந்தம் புதுப்புது பரப்புரைகள் செய்யப்படுகின்றன. பல சிங்கள மேலாண்மைக் கருத்தியலாளர்கள் புலிகளின் தன்னாட்சி அதிகாரசபை வரைவை படிக்காமலேயே அது கிழித்தெறியப்பட வேண்டுமென காரசாரமாக எழுதிவருகின்றனர்.

புலிகள் கேட்பது போல இந்த வரைபின் அடிப்படையில் அமைதிப் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்குப் பதிலாக தமது மாற்று வரைபொன்றைப் பற்றியும் சமாந்தரமாகப் பேசலாம் என சந்திரிகா அரசு கூறிவருகிறது. ஆனால், சிங்கள தேசத்தில் புலிகளின் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை பற்றிக் கிளப்பப்பட்டு வரும் அனைத்துப் பூச்சாண்டிகளும் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கும் போது தாமாகவே மறைந்துவிடும் என்பதே உண்மை. எமது பிரச்சினையைத் தீர்த்து வைப்பதை விட சிங்கள அரசியல் தலைமைகளுக்கு வரப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெல்வது, எப்படி வியுூகம் வகுப்பது என்பன பற்றிய கவலைகளும் அக்கறைகளுமே மேலோங்கியுள்ளன. இது விடயத்தில் நாம் அனைவரும் தெளிவாயிருக்க வேண்டும். அதைவிடுத்து நேரத்துக்கு நேரம் வெளியாகும் சந்திரிகா அரசின் அறிக்கைகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் பசப்பு வார்த்தைகளையும் கண்டு மயங்கி மீண்டும் இலவு காத்த மடக் கிளிகளாவதை நாம் தவிர்க்க வேண்டும்.
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைபின் அடிப்படையில் தாம் பேசத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது கூறத் தலைப்பட்டுள்ளமையும் ஒரு நயவஞ்சக நாடகமே. ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளை மட்டுமே நம்பி வெல்லக்கூடிய வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கோ சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கோ தற்போது இல்லை. ஹெல உறுமய, ஜே.வி.பி. எப்படியான நிலைப்பாடு எடுத்தாலும் சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள தேசத்தின் வாக்கு பிரிவது தவிர்க்க முடியாது. இதற்கு முக்கிய காரணம் துரிதமாக உயர்ந்து செல்லும் வாழ்க்கைச்செலவு சந்திரிகா அரசு மீது சிங்கள மக்களிடையே ஏற்படுத்திவரும் வெறுப்பாகும். இதேவேளை சந்திரிகா - ஜே.வி.பி அரசின் மீது உள்ள வெறுப்பால் தன்பக்கம் திரும்பக்கூடிய சிங்கள வாக்குகளை மட்டும் நம்பி ஜனாதிபதித் தேர்தலை வெல்லமுடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெளிவாகத்தெரிகிறது.

ஆகவே தற்போது இரு பெரும் சிங்களக் கட்சிகளும் ~பிரேமதாசா சூத்திரத்தின்| மீது நாட்டம் கொள்கின்றன. 1988ம் ஆண்டிலே அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜே.வி.பி. யும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுமாக சிங்கள மக்களிடையே பெரும் அரசியல் கிளர்ச்சியொன்றைக் கிளப்பிக் கொண்டிருந்தன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதன் மூலம் சிங்கள் தேசத்தை ஐக்கிய தேசியக்கட்சி இந்தியாவிற்கு விற்றுவிட்டது என அவர்கள் பரப்புரை செய்தனர். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பண்டங்களுக்கு ஜே.வி.பி. தடைவிதித்தது. அவற்றை மீறி விற்ற ஒரு சில வர்த்தகர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இப்படியாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக மாபெரும் வெறுப்பலையொன்று வீசிக்கொண்டிருந்த நேரத்தில் தான் பிரேமதாசா அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பிரிந்த சிங்கள வாக்கின் ஒரு பகுதியோடு பிரிபடாத வடக்குக் கிழக்கு தமிழ் வாக்குகளையும் முஸ்லிம் வாக்குகளையும் இணைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்குத் தேவையான மொத்த வாக்கின் 50 சதவீதத்துக்கு மேல் பெறலாம் என்பது அப்போது பிரேமதாசா போட்ட கணக்கு. இதையே சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலை வெல்வதற்கான பிரேமதாசா சூத்திரம் என அந்நேரத்தில் சில சிங்கள அரசியல் ஆய்வாளர்கள் அழைத்தனர்.

சிங்கள தேசத்தில் எப்படியான எதிர்ப்பலைகள் கிளம்பினாலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தென்னிலங்கையில் அடிப்படையில் மாறா வாக்கு வங்கியொன்று இருக்கின்றது. மொத்த வாக்காளர் தொகையில் இது 30-35 சதவீதம் எனக் கருதப்படுகிறது. இதோடு பிளவுபடாத தமிழர் தாயக மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெற்றால் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள தேசத்தில் ஏற்படக்கூடிய தனக்கெதிரான எந்த அலையையும் மேவி ஜனாதிபதித் தேர்தலில் வெல்லலாம் என பிரேமதாசா சூத்திரம் கூறுகிறது.

1988ம் ஆண்டிலே சிங்கள தேசத்தில் வீசிக்கொண்டிருந்த இந்திய வெறுப்பலைக்கு மத்தியில் பிரேமதாசாவும் அவருடைய அரசியல் மதியுரைஞர்களும் இரகசியமாக இந்தியத் து}தரகத்தை அணுகினர். வடக்குக் கிழக்கின் பிரிபடாத தமிழ் வாக்கு மொத்தமாக ஜனாதிபதி வேட்பாளர் பிரேமதாசாவுக்கு விழுவதற்கு அப்போது தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம் ஆவன செய்யவேண்டுமென அன்றைய இந்தியத் து}துவர் ஜே.என். தீட்சித்திற்கு சில து}துகள் அனுப்பப்பட்டன. வடக்குக் கிழக்கில் விழப்போகும் வாக்குகள் பிரேமதாசாவுக்கு வெற்றியை நிச்சயம் பெற்றுக்கொடுக்குமெனவும் இதன் காரணமாக ~அவர் இந்தியாவிற்கு என்றும் நன்றியுடையவராக இருப்பார்| ("ர்ந றழரடன டிந நவநசயெடடல பசயவநகரட வழ ஐனெயை") எனவும் அன்றைய இந்தியத் து}துவர் ஜே.என். தீட்சித் ஒருமுறை 1988 ஜனாதிபதித் தேர்தலைப்பற்றி காரசாரமாக உரையாடிக்கொண்டிருந்த போது குறிப்பிட்டார். அவர் கூறியது போலவே அந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரேமதாசாவுக்கு வடக்கு கிழக்கில் அமோகமான வாக்குகள் கிடைத்தன.

இந்தியப் படைகள் பெட்டி பெட்டியாகத் திணித்த இந்த வாக்குகளே அவருடைய வெற்றியைத் தீர்மானித்தன. இது முடிந்த கையோடு கொழும்பில் நான் தற்செயலாக வரதராஜப்பெருமாளைச் சந்திக்க நேர்ந்த போது அவரும் பிரேமதாசாவைப்பற்றி தீட்சித் சொன்ன அதே வசனத்தைச் சொன்னார். தேர்தலில் வெற்றிபெற உதவியதற்குக் கைமாற்றாக பிரேமதாசா மாகாணசபை திறம்பட இயங்க தனக்கு ஆவன செய்வார் என வரதராஜப்பெருமாள் சொன்னார்.

இதையொட்டித்தான் அந்த நேரத்தில் ~நினைத்ததை முடிப்பவர் பிரேமதாசா| ("Pசநஅயனயளய ளை ய பழ பநவவநச") என அவருக்கு பெருமாள் புகழாரம் சூட்டினார். தனது நன்றிக்கடனை நிறைவேற்ற வடகிழக்கு மாகாண சபைக்கு பிரேமதாசா வாரி வழங்கிடுவார் என கனவு கண்டார் பெருமாள். அந்த உற்சாகத்தில் தமிழர் தலைநகர் திருமலையில் சிங்கக் கொடியை ஏற்றி அவர் ~சாதனை| படைத்தார். ஆனால் நடந்ததென்ன? தனது மாகாண சபைக்கு கொடுக்கப்பட்ட எள்ளளவு அதிகாரங்களைக் கூட பிரேமதாசாவின் ஆட்சி கபளீகரம் செய்துவிட்டதென அவர் புலம்பியதும் இனித் தமிழீழம் அமைப்பதைவிட வேறு வழியில்லை என்று பிரகடனம் செய்து இந்தியாவிற்கு ஓடியதும் நாம் யாவரும் அறிந்த வரலாறு. ~ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி| கடந்த பின்னே நீ யாரோ, நான் யாரோ?| என்ற கதையை சிங்கள தேசம் அன்று மீண்டுமொருமுறை அரங்கேற்றியது.

அந்தப் பிரேமதாசா சூத்திரத்தை மீண்டும் து}சுதட்டி கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் இன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் தோன்றியுள்ளது. அது எப்படியென்று பார்ப்போம். ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வேண்டுமானால் இலங்கையின் மொத்த வாக்குகளில் 50சதவீதத்துக்கு மேலான தொகையை ஒரு வேட்பாளர் பெறவேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் வெற்றி வாய்ப்பு யாருக்கென்பதை நாம் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

இந்தத் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி - ஜே.வி.பி. கூட்டு பெற்ற மொத்த வாக்கு 4,223,970 அதாவது 45.60 சதவீதம். ஐக்கிய தேசியக் கட்சி 3,504,200 அதாவது 37.83 சதவீதம். ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கா வெல்வதென்றால் மேலும் 12.17 சதவீத வாக்குகளைப் பெறவேண்டும். விலைவாசி ஏற்றத்தால் சந்திரிகா அரசு மீது ஏற்பட்டுள்ள வெறுப்பின் காரணமாக சராசரி 5-6 சதவீதமான வாக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் தற்போது சாய்ந்துள்ளது எனக் கொண்டாலும் இன்னும் 6-7 சதவீத வாக்குகளை தேட வேண்டிய கட்டாயம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உண்டு. 2004 ஏப்ரல் தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற மொத்த வாக்கு 633,654 அதாவது 6.84 சதவீதம்.

இது பிரிபடாத மொத்த வாக்காக இருக்கிறது. இதைக் கபளீகரம் செய்யாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெல்வது கடினம் என ஐக்கிய தேசியக்கட்சி கவலை கொள்கிறது. ஆகவே அது புலிகளை வசப்படுத்தும் நோக்கத்தில் பல வேலைகளைச் செய்யவும் ஆசைவார்த்தை பேசவும் இப்போதே தொடங்கிவிட்டது. ஏதோ ஒருவகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டால் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் வாக்கு தனக்கே கிடைக்குமென சிறிலங்கா சுதந்திரக்கட்சி கணக்குப் பண்ணுகிறது. இவையெல்லாம் இறுதியில் ஆற்றைக்கடந்த கதையாகத்தான் இருக்குமென்பதில் யாரும் எந்தச் சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை
நு

Print this item

  களத்தில் ஓர் சதிகாரி....!
Posted by: kuruvikal - 10-31-2004, 02:07 AM - Forum: கவிதை/பாடல் - Replies (146)

<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>

காதல் என் முதல் எதிரி
கன்னி கடும் எதிரி
காளை என் களத்தில்
கணமேதும் எதிரிகள்
கால் பதிக்க அனுமதித்ததில்லை...!
களம் காணும் முன்னே
களமாடிச் சரித்திடுவேன் எதிரிகளை...!
கால ஓட்டத்தில்
கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....
கண் கவரும் மங்கையாய் அன்றி
மனக் கண் முன்னால்
மாய மலராய் மனதோடு...!
மனிதம் மலர வைத்து
மனம் கவர்ந்தாள்
மாயமாய் களம் புகுந்தவள்
மறைந்துதான் இன்னும்
மனதை வாட்டுறாள்....!
மலருக்குள் அவளாய்
மலர்ந்ததால் களத்தில்
கருத்துக்கரம் பிடித்த வாள்
கசங்கிக் கிடக்கிறது
கன்னியும் தப்பிப் பிழைக்கிறாள்
தப்பியும் களத்தில்
மோதலில்லை மலருடன் என்பதால்....!

காதல் மோகத்தில் இல்லை
இந்தக் காளை
கொண்ட கொள்கைதான்
உயிரினும் மேல்
கன்னியே முகம் காட்டு
மலரை ஆக்காதே
களத்தில் கேடயமாய்....!
களம் பல கண்டும்
கறைபடியாக் காளை மீது
கனிவான மலரை
களமாடிச் சரித்ததாய்
சரித்திரம் வேண்டாம்....!
சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!


நன்றி.... http://kuruvikal.yarl.net/

Print this item

  களத்துக்கு புதியதொரு உறவு
Posted by: Suji - 10-31-2004, 12:03 AM - Forum: அறிமுகம் - Replies (15)

வணக்கம் நண்பர்களே...............
கருத்துக் களத்துக்கு புதியதொரு உறவு

Print this item

  கரும்புலி அடிமுடி அறிய முடியாத அற்புதம்-புதுவை
Posted by: hari - 10-30-2004, 04:07 PM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

<span style='color:red'>கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்.</span>
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/Ltte/black_tigers67.jpg' border='0' alt='user posted image'>
கரும்புலி
சாவுக்குத் தேதிகுறிக்கும் சரித்திரம்.
கந்தகத்தை மேனியிற் கட்டிய சந்தனம்.
வீதியுலாவுக்காக வெளியில் வராத விக்கிரகம்.
உயிர்மூச்சை ஊதிவிடும் உன்னதம்.
அடிமுடியை அறியமுடியாத அற்புதம்
தென்றலும் புயலும் சேர்ந்ததான கலவை.
இவர்களை எழுதத் தொடங்கினால்...
எந்தமொழியும் தோற்றுப்போகும்.
வார்த்தைகள் வறுமை அடையும்
உளவியலாளர்கள் உள்ளே புகுந்தாலும்
வெறும்கையோடுதான் வெளியே வருவார்கள்.
கற்பனைக்கவிஞர்கள் கவிதை எழுதினால்
அற்புதம் என்பார்கள்
அடுத்தவார்த்தை வராது.
சித்திரக்காரர்களும்
தீப்பிழம்பைத்தானே தீட்டமுடியும்.
பக்கத்திலிருந்து பழகியவர்கள் கூட
குறிப்புக்கள் மட்டும் தான் கூறமுடியும்.
ஆழத்தோண்டினாலும் மூலவேர் தெரியாது.
சமுத்திர நீரை
அகப்பையால் அள்ளி அளக்கமுடியுமா?
ஓடும் முகிலை
ஏணிவைத்து எட்டித்தொட முடியுமா?
எதிரியின் எந்தவலுவும்
இறுதியில் இவர்களிடம் சரணடையும்.
கடைசி நொடிவரை சிரித்தபடி திரிவர்.
மறுநாள்
வெடித்த செய்தி வெளிவரும்போது
ஜாதகமும் சோதிடமும்
தங்களுக்குத் தாங்களே தீமூட்டிக் கொள்ளும்
காலால் நடந்து
வாயால் மொழிந்து
கையால் தலைவாரிக் கொண்டு
எல்லோரையும் போலவேதான் இவர்களும்.
உள்ளே எரியும் விடுதலைக் கனல்மட்டும்
வேறுபட்டது.
உயிர்ப் பூவை கிள்ளி எடுத்து
விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமானவர்கள்.
கிட்ட நெருங்க முடியாத இலக்குகளைக்கூட
தொட்டு அசைத்துவிடும் துணிச்சலர் இவர்.
முதுகில் வேர்க்குரு போட்டாலே..
முந்நூறு மருந்துகள் தேடும் உலகில்
சாவைத் தம் தோள்களில் சுமந்து
நொடிகளை கணக்கிட்டு நகரும் நூதனங்கள்
காற்றிலும் நீரிலும் இவர்கள் கலக்கும்போது
காற்றுக்கு வேர்க்கும்.
நீர் நெருப்பாகிவிடும்.
இவர்களுக்கு;
சூரியன் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.
பசுபிக் சமுத்திரம் முழங்கால் ஆழம்.
கரும்புலிகள்;
தலைவன் தலைவாரிவிடும் புயல்கள்.
தாயை நேசிக்கும் அளவுக்கு
தலைவனையும் நேசிப்பவர்கள்.
தாயகத்தை மட்டும் பூசிப்பவர்கள்.
ஆவிபிரியும் அடுத்த கணம்பற்றிய அச்சம்
இவர்களின் அகராதியில் அச்சிடப்படுவதில்லை.
யுலை 5.1987
கருமைக்கும் பெருமை வந்த நாள்.
புலியொன்று முதல் கரும்புலியான தினம்
நெல்லியடியில்
"மில்லர்" புதிய வரலாற்றை தொடக்கிய நாள்.
"எல்லாம் சரி
வடமாராட்சி எமது கட்டுப்பாட்டில்"
கொழும்புக்குச் செய்தி அனுப்பியவனின்
வாய் மூட முன்னர்
செவிப்பறைகள் கிழிந்தன.
சாவு நேரே ஓடிவந்து
முகத்தில் சந்திக்குமென்று
எதிரி எப்படி எதிர்பார்த்திருப்பான்.
"உயிராயுதம்" வலுவானது.
கரும்புலிகள்
தேவை அறிந்து செல்பவர்களே அன்றி
சாவை விரும்பிச் சந்திப்பவர்களல்ல..
இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ
முகில்கள் முத்தமிடாத மலைமுகடுகளோ அல்ல.
இதயம் இரும்பாலானவர்களும் அல்ல.
பனியாய் உருகும் நெஞ்சுக்கும்
பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும்
உரிமையாளர்கள்.
வெடித்த பின்னரும்
இவர்கள் எல்லோரும் வெளிச்சத்துக்கு வருவதில்லை.
சுவரொட்டியில் சிரிப்பவர்கள் சிலர்தான்.
"நடுகல் நாயகர்கள் " ஆகும் வாய்ப்பும்
எல்லோருக்கும் ஏற்படப் போவதும் இல்லை.
கல்லறை கூட இல்லாத காவியமாய்
வாய்விட்டு சொல்லியழும் வாய்ப்பும் இல்லாமல்
சிலருக்கு வெளியே தெரியாத
வேரின் வாழ்வு.
பலருக்கு மரணம் வாழ்வின் முடிவு
கரும்புலிகளின் ஜனனம் மட்டும்
மரணத்தில்தான் ஆரம்பம்
கால நதியில்
இவர்கள் ஓடிக் கரைய மாட்டார்கள்.
மற்றவர்களுக்கு
இனி என்ன செய்வதுதென்று
தலைவெடிக்கும் போதுதான்
இந்த சுகந்த ஊதுபத்திகள்
உடல்வெடித்துப் போகிறார்கள்.
<b><i> "ஊரறியாமலே உண்மைகள் கலங்கும்
ஒருபெரும் சரித்திரம் ஊமையாய் உறங்கும்
வேருக்கு மட்டுமே விழுதினைப் புரியும்
வெடிமருந்தேற்றிய வேங்கையைத் தெரியும்"</i></b>
பூகம்பத்தை போத்தலில் அடைத்தது போல
வந்தவரிகளில் வென்றவரிகள் இவை.
கரும்புலிகளுக்கு காணிக்கை என்ன?
கண்ணீரா?
கல்லறையா?
இல்லை.
எதுவுமே இல்லை
நெஞ்சின் நினைவே
நெடிய கோபுரம்.
கரும்புலி அடிமுடி
அறிய முடியாத அற்புதம்!

<b>புதுவை இரத்தினதுரை</b>

ஆனி,ஆடி 1994


(தாயகக்கவிஞரின் உணர்வின் வரிகள் தொடரும்........)

முந்தைய கவிதைகள்
தாயகத்தை காதல் செய்
குந்த ஒரு குடிநிலம்
பூமிப்பந்தின் நெற்றியில் பூநகரி சுவரொட்டியானது!

Print this item