Yarl Forum
களத்தில் ஓர் சதிகாரி....! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: களத்தில் ஓர் சதிகாரி....! (/showthread.php?tid=6525)

Pages: 1 2 3 4 5 6 7 8


களத்தில் ஓர் சதிகாரி....! - kuruvikal - 10-31-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/bird1.jpg' border='0' alt='user posted image'>

காதல் என் முதல் எதிரி
கன்னி கடும் எதிரி
காளை என் களத்தில்
கணமேதும் எதிரிகள்
கால் பதிக்க அனுமதித்ததில்லை...!
களம் காணும் முன்னே
களமாடிச் சரித்திடுவேன் எதிரிகளை...!
கால ஓட்டத்தில்
கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....
கண் கவரும் மங்கையாய் அன்றி
மனக் கண் முன்னால்
மாய மலராய் மனதோடு...!
மனிதம் மலர வைத்து
மனம் கவர்ந்தாள்
மாயமாய் களம் புகுந்தவள்
மறைந்துதான் இன்னும்
மனதை வாட்டுறாள்....!
மலருக்குள் அவளாய்
மலர்ந்ததால் களத்தில்
கருத்துக்கரம் பிடித்த வாள்
கசங்கிக் கிடக்கிறது
கன்னியும் தப்பிப் பிழைக்கிறாள்
தப்பியும் களத்தில்
மோதலில்லை மலருடன் என்பதால்....!

காதல் மோகத்தில் இல்லை
இந்தக் காளை
கொண்ட கொள்கைதான்
உயிரினும் மேல்
கன்னியே முகம் காட்டு
மலரை ஆக்காதே
களத்தில் கேடயமாய்....!
களம் பல கண்டும்
கறைபடியாக் காளை மீது
கனிவான மலரை
களமாடிச் சரித்ததாய்
சரித்திரம் வேண்டாம்....!
சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!


நன்றி.... http://kuruvikal.yarl.net/


- kavithan - 10-31-2004

Quote:காதல் மோகத்தில் இல்லை
இந்தக் காளை
கொண்ட கொள்கைதான்
உயிரினும் மேல்

ம்ம்ம்.. ஒகே வாறவ எப்படி இருக்கிறாவோ...எப்படி மாத்துறாவோ....

வாழ்த்துக்கள்


- hari - 10-31-2004

குருவியாரே! சதிகாரியின் சதி வெல்ல வாழ்த்துக்கள்,


- sOliyAn - 10-31-2004

எனக்கு ஒண்டுமா விளங்கேலை.. இது எங்கைபோய் முடியப்போகுதோ?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- kuruvikal - 10-31-2004

வாழ்த்துக்கள் தந்த அனைவருக்கும் நன்றிகள்...!

இதுதான் சொல்லுறது சோழியான் அண்ணா... களத்துக்க ஊடுருவ விட்ட அடிக்கிறதெண்டது...இப்ப ஜெயசுக்குறு போல...! என்ன இங்க வெளிப்படையா ஊடுருவலும் தெரியாது அடிவிழுகிறதும் தெரியாது....எல்லாம் ஒரு கற்பனைதான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- tamilini - 10-31-2004

Quote:கள்ளி அவள்
கண்ணெதிரே தோன்றினாள்....

கள்ளி வேறையா பாவம் மலர்..! :wink:
Quote:சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!

இந்த களத்தில ரொம்ப மர்மம் எல்லாம் நடக்கிது போல.. நமக்கு தான் ஒன்டும் தெரியல.. சதி செய்ய வேறை ஆக்களா..?? குருவிக்கும் மட்டுமா.. வேறையும் ஆரோ யாரையோ தேடின மாதிரி இருந்திச்சு... குருவிகளே நீங்கள் சரண்அடைய அல்லது சதிகாரியை சரிக்க வாழ்த்துக்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 10-31-2004

Quote:ம்ம்ம்.. ஒகே வாறவ எப்படி இருக்கிறாவோ...எப்படி மாத்துறாவோ....

வாறவா மனித ஜாதியா இருக்க மாட்டா இப்படி தான் குருவி கிளி புலுனி மலர் மதி இப்படி ஏதாவதாய் இருப்பா அப்படி தானே குருவிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sothiya - 10-31-2004

Quote:எனக்கு ஒண்டுமா விளங்கேலை..



- aathipan - 10-31-2004

Quote:மனம் கவர்ந்தாள்
மாயமாய் களம் புகுந்தவள்
மறைந்துதான் இன்னும்
மனதை வாட்டுறாள்....!

ஓ அப்படியா சங்கதி


- kuruvikal - 10-31-2004

tamilini Wrote:
Quote:ம்ம்ம்.. ஒகே வாறவ எப்படி இருக்கிறாவோ...எப்படி மாத்துறாவோ....

வாறவா மனித ஜாதியா இருக்க மாட்டா இப்படி தான் குருவி கிளி புலுனி மலர் மதி இப்படி ஏதாவதாய் இருப்பா அப்படி தானே குருவிகள்..! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏதோ நீங்கள் சொல்லுறியள்...நாங்கள் கேட்க வேண்டிய காலம்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 10-31-2004

Quote:ஏதோ நீங்கள் சொல்லுறியள்...நாங்கள் கேட்க வேண்டிய காலம்....!

அப்படியா என்டு தானே கேட்டம்... சரி நீங்களும் உங்கள் சதியும் ஏதோ சதிகள் நீங்கள் களம் நன்றாய் இருந்தால் சரி ....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 11-01-2004

அனைவரினதும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மீண்டும் நன்றிகள்... குறிப்பாக அதீபனுக்கு விசேட நன்றிகள்... காதல் தொடர்பில் அவருடன் கருத்தால் முரண்பட்டதில் குருவிகள் முன்னணி வகித்தவை....அதை அவரும் மறக்கமாட்டார் குருவிகளும் மறக்கமாட்டா...!

இப்பவும் தான் சொல்கிறோம் எங்களுக்கு எந்தக் காதல் அநுபவமும் இல்லை....எல்லாம் கற்பனையில் எழுந்தவையே...மலரோடு மட்டும் தான் காதல்....அது ரகசியக் காதல்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:


- வெண்ணிலா - 11-01-2004

சதிகாரியின் ரகசியக் காதல் வாழ வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sothiya - 11-01-2004

Quote:இப்பவும் தான் சொல்கிறோம் எங்களுக்கு எந்தக் காதல் அநுபவமும் இல்லை....எல்லாம் கற்பனையில் எழுந்தவையே...மலரோடு மட்டும் தான் காதல்....அது ரகசியக் காதல்...!

நீங்கள் பிழைத்துக்கொள்வீர்கள் குருவியாரே


- shanmuhi - 11-01-2004

Quote:களம் பல கண்டும்
கறைபடியாக் காளை மீது
கனிவான மலரை
களமாடிச் சரித்ததாய்
சரித்திரம் வேண்டாம்....!
சதிகாரி நீயே
சதி வென்று சரிப்பேன் உன்னை
இன்றேல்
சரணடைவேன் உன்னிடம் மட்டும்....!
Áħáடு Áðடுõ ¸¡¾Ä¡...
Áí¨¸§Â¡டு ÁÄáö ÁÄ÷óது
Á½õ ¸Áúóது º¾¢À¾¢Â¡ö
ºÃ½¨¼óது ¸¡¾லு¼ý Å¡Æ
Å¡úòதுì¸û...

<b>¸Å¢¨¾ «ரு¨Á... Å¡úòதுì¸û...</b>


- kuruvikal - 11-01-2004

கருத்துக்களுக்கு நன்றி... அக்கா மற்றும் வெண்ணிலாத் தங்கை ஜோதிகா அனைவருக்கும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Sothiya - 11-02-2004

Quote:ஜோதிகா

:roll: :roll:


- kuruvikal - 11-02-2004

சொறிங்க... ஜோதிகா நினைப்பில சோதியா ஜோதிகாவா வந்திட்டுது.... தவறுக்கு வருந்துகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- tamilini - 11-02-2004

Quote:ஜோதிகா நினைப்பில சோதியா ஜோதிகாவா வந்திட்டுது

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 11-02-2004

kuruvikal Wrote:சொறிங்க... ஜோதிகா நினைப்பில சோதியா ஜோதிகாவா வந்திட்டுது.... தவறுக்கு வருந்துகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குருவிகளுமா? :roll: :roll: