Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஓ இரத்த உறவே.......
#1
ஈரக்கில் வாகன ஓட்டுனராக தொழில் புரிந்த தமிழராகிய தினேஸ் தர்மேந்திரா இராஜரத்தினம் என்பவர் தீவிரவாதிகளால் கடத்தப் பட்டதாக செய்திகள் திரிவிக்கின்றன. முன்பு குவைற்றில் வேலை செய்த இவர் சரியான வேதனம் கிடைக்கவில்லையென்பதைக் காரணமாக ஈராக்கிற்கு சென்றதாகவும் அங்குதான் இக்கடத்தல் நாடகம் நடந்ததாக கூறப்படுகிறது.

தமிழன், திரை கடலோடித் திரவியம் தேடித்தான் குடும்பத்தைக் காக்க வேண்டும். பாவம் இலங்கைத் தீவினுள் பிறந்து விட்ட காரணத்திற்கு இந்தத் தமிழனாலும் தப்ப முடியவில்லை.

ஓ இரத்த உறவே, உன் விடுதலைக்கு நாம் இன்று செய்யக் கூடியது பிராத்தனையொன்றே. எமக்கொரு தேசம், எமக்கொரு அரசு இருந்திருந்தால் ஓடோடி வந்திருப்போம்.

ஓ இறைவா, இவ்விரத்த உறவு உடனடியாக விடுதலையாக உன்னிடம் மண்டாடுகின்றோம்.
" "
Reply
#2
தமிழனை இலங்கை அரசு கைவிட்ட நிலையில் காப்பாற்ற குரல் கொடுப்போம்.

இது பற்றி பிரித்ததானியாவிலிருந்து வெளிவரும் நிதர்சனம் இணைய செய்தி வெளியட்ட தகவல்:-

ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பாரஊர்திச் சாரதி டினேஸ்
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/rasaratnam.JPG' border='0' alt='user posted image'> இராசரத்தினம் விடுதலைக்கு அனைத்துத் தமிழர்களும் போராட வேண்டும் என டினேஸ் இராசரத்தினம் அவர்களின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தமிழ் இளைஞன் குடும்பச்சுமை காரணமாக ஈராக்கில் உள்ள குவைத் கம்பனி ஒன்றில் வேலை செய்து வந்தவர். இவர்கள் அமரிக்கப் படைகளின் உதவியாளராகத் தொழிற்படவில்லையென்று சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜரோப்பாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் உறவுகள் பலர் தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்து கொள்வதாகவும் இவரின் விடுதலைக்கு உதவுவதாகவும் எமக்கு மின் அஞ்சல் ஊடாக அறிவித்துள்ளார்கள்.

இந்த விடயம் தொடர்பாக அல்யசீரா தொலைக்காட்சி நண்பர் ஒருவனுடன் தமிழ் ஊடகத்துறையினர் தொடர்பு கொண்டு இவரது விடுதலைக்குப் போராடி வருவதாகவும் அறியக்கிடைக்கிறது.
நன்றி: நிதர்சனம்

நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
http://www.hindustantimes.com/news/181_108...64,00050002.htm
:?: :?: :?: :?:.......
Reply
#4
மணிமாறன்,

இதற்கேன் கேள்விக்குறி! அதுதான் உண்மை!! இன்றைய ஞாயிறு தினகரன், ஒப்சேவர் , மற்றும் சிங்களப் பத்திரிகைகளே இதற்குச் சான்று.

பி.கு: தினகரன், ஒப்சேவர் போன்றன அரச கட்டுப்பாட்டிலிருந்து வரும் பத்திரிகைகளென்பது குறிப்பிடத்தக்கது.
" "
Reply
#5
தகவலுக்கு நன்றிகள் அந்த சகோதரர் நலமாய் திரும்பி வர இறைவன் அருள்புரிய வேண்டுகிறோம்...!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
சும்மா பிரார்த்தித்துக் கொண்டிருந்தால் தலை துண்டிக்கப்பட்ட முண்டம் தான் மிஞ்சும்...!

இப்படியான ஆட்கடத்தல்களுக்கு அமெரிக்க பிரித்தானியப் படைகளே பொறுப்பேற்று அவர்களை பாதுகாப்பாக விடுவிக்க ஏதாவது உருப்படியாகச் செய்ய வேண்டும்...!

இஸ்லாமிய மதவாத பயங்கரவாதத்தின் முன் மனிதாபிமானம் என்பது மண்டியிட்டு பல ஆண்டுகள் ஆயிற்று....! இருந்தாலும் இக்கடத்தலில் எந்த நியாயமும் இல்லை என்பதை சாதாரண இஸ்லாமிய உலக மக்கள் புரிந்து கொண்டு பயங்கரவாதத்தைக் கைவிட்டு எதிரிகளை மட்டும் இலக்கு வைத்து தகர்க்கும் உக்தியை தமது உறவுகளுக்கு கற்றுக் கொடுத்து அநியாய மனித உயிர்ப்பலிகளை தவிர்க்க வேண்டும்...! அது அமெரிக்க பிரித்தானிய இலங்கை இந்திய நேபாளம் என்று இல்லாமல் எந்த நாட்டினதும் சாதாரண பிரஜையாக இருந்தாலும் சரி....!

அதேவேளை அப்பாவி ஈராக்கிய மக்கள் தினமும் கொல்லப்படுவதை கண்டிக்காத, தினமும் கடத்தப்பட்டு கொல்லப்படும் பன்னாட்டு.... இராணுவ, அரச தொடர்புகள் இல்லாத.... அப்பாவி மக்களின் இழப்புக்களை கண்டிக்காத எவருக்கும் இக்கடத்தல் குறித்து கருத்துரைக்க மனிதாபிமானத்தின் பெயரால் தார்மீக உரிமை இருக்க முடியுமா....???!

நீங்களே உங்கள் மனட்சாட்சிகளைக் கேட்டுக் கொள்ளுங்கள்.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
cannon Wrote:மணிமாறன்,

இதற்கேன் கேள்விக்குறி! அதுதான் உண்மை!! இன்றைய ஞாயிறு தினகரன், ஒப்சேவர் , மற்றும் சிங்களப் பத்திரிகைகளே இதற்குச் சான்று.

பி.கு: தினகரன், ஒப்சேவர் போன்றன அரச கட்டுப்பாட்டிலிருந்து வரும் பத்திரிகைகளென்பது குறிப்பிடத்தக்கது.

(http://www.hindustantimes.com/news/181_1...050002.htm)
The LTTE's Tamil website www.nitharsanam.com put out a story on Friday saying.....................

இதுதான் உண்மையா?????
Reply
#8
நிதர்சனம் எல் ரீ ரீ ஈ யின் வெப் தளம் என்பதற்கு என்ன ஆதாரம் உண்டு...???! எல் ரீ ரீ ஈ க்காக இல்லாமல் உண்மையச் சொன்னால் அது எல் ரீ ரீ ஈ சார்பு காட்டுவதாகத் தெரிவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு...! எல் ரீ ரீ ஈ தன்னுடைய தளங்களுக்கு தானே உரிமை கோரித்தான் நடத்துகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தல் நன்று...! Idea

இந்தக் கடத்தலை வைத்து இந்திய இலங்கை அமெரிக்க உளவுப்படைகள் புலிகளுக்கு நெருக்கடி கொடுக்கவும் புலிகளுக்கு இல்லாத தொடர்புகளை இருப்பதாகக் காட்டி சர்வதேச பயங்கரவாதப் பட்டியலில் அவர்களின் அந்தஸ்தை நிரூபிக்கவும் முயலக் கூடும்....அதன் ஒரு பகுதிதானோ இது...! Idea :roll:

இந்தத் தமிழரின் விடுதலையில் தமிழ்மக்களே அக்கறைகாட்டி அவரை சார்ந்த நியாயங்களை கடத்தல்காரர்களுக்கு விளக்கி விடுவிக்க எத்தனிக்கின்றனர் என்பதை அனைவரும் கவனித்தலும் நன்று....! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
கதையப் பாத்தா கடத்தல்காரர்களை விட இந்தியப் பத்திரிகைகள் மோசம் போலக் கிடக்கு....சிலவேளை கடத்தல்காரர்கள் மனமிரங்கினாலும் இந்த இந்தி வெறி பிடிச்சதுகள் இரங்காதுகள் போல...தூண்டிவிட்டு அதிலும் இலாபம் தேடும் கொடிய பயங்கரவாதிகள் இவங்கள் தான்... இங்களுக்கெல்லாம் ஜனநாயகம் காந்தீயம் ஒரு கேடு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<b>இலங்கை தமிழரை கடத்திய இராக் தீவிரவாதிகள்</b>

இராக்கில் அமெரிக்கப் படைகளுக்கு லாரி டிரைவராகப் பணியாற்றிய இலங்கைத் தமிழர் தினேஷ் தர்மேந்திரன் ராஜரத்தினம் (36) என்பவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.

தினேஷ் கடத்தப்பட்டது குறித்து அவரது பெற்றோர் கொழும்பில் கூறியதாவது:

தினேஷýக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முதலில் தினேஷ் குவைத்தில்தான் வேலை பார்த்தார். ரூ.68,000 கொடுத்துதான் குவைத்தில் அவருக்கு டிரைவர் வேலை வாங்கினோம். அவரது உரிமையாளர்கள் அவரை வலுக்கட்டாயமாக இராக்குக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

3 வாரங்களுக்கு முன்பு தான் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தினேஷ் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் தீவிரவாதிகள் அவரைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

அவரை மீட்பதற்கான முயற்சியை இலங்கை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இராக்கில் இலங்கைக்கு தூதரகம் கிடையாது. லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் தினேஷை மீட்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையே, இராக்கில் கடத்தப்பட்டுள்ள எங்கள் சகோதரரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று இலங்கையில் உள்ள முஸ்லீம் லீக் அமைப்பு இராக் தீவிரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
தினேஸ் இன் நிலைமை அவரது குடும்பத்தின் நிலைமை நன்றாக வழங்குகின்றது. ஆனால் எத்தனையோ ஆயிரம் தழிழ÷களுகாக எதையும் செய்யாத சிறீலங்கா அரசா இந்த ஒரு அப்பாவி தழிழனுக்காக பேசப்போகின்றது. தயவுசெய்து சம்பிருதாயத்திற்கு எவரும் கதைக்காதி÷கள். அரசு நடவடிக்கை எடுக்வேணடும் நடவடிக்கை எடுக்வேணடும் நடவடிக்கை எடுக்வேணடும் என்று அவா்கள் தான் தழிழா்களை பாதுகாக்கின்றனா் என்ற தவறான தகவலை எவரும் கொடுக்கவேண்டாம். இதற்கு பத்திாிகைத்துறையினை சே÷ந்த எமது உறவுகளும் வெளிநாடுகளில் உள்ள எமது சகோதரா்களுமே இதனை கருத்தில் கொண்டு செயல்ப்பட வேண்டும்.
Reply
#12
<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/vdp2.jpg' border='0' alt='user posted image'>

<b>நான் ஈராக் செல்கிறேன் எனது பிள்ளைகளுக்கு நல்ல உணவு கொடு. </b>

குவைத்தில் சம்பளம் போதாமையினால் நான் ஈராக் செல்கிறேன். நான் அனுப்பும் முதல் சம்பளத்தில் தாலி ஒன்றும் சங்கிலியும் செய்துகொள். ஈராக் சென்றதும் அதை மறக்காமல் செய்து படம்பிடித்து அனுப்பு. இவ்வாறு ஈராக்கிய தீவிரவாதிகளினால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ட்ரக் சாரதியான தினேஷ் ராஜரட்ணம் தனது மனைவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கல்நெஞ்சையும் கதறி அழவைக்கும் வகையில் அவர் எழுதியுள்ள இறுதிக் கடிதத்தில் மனைவி பிள்ளைகள் மீது அவர் எந்தளவு து}ரம் அளவு கடந்த அன்பைச் செலுத்தியுள்ளார் என்பது நன்கு புலனாகின்றது. எவ்வளவு செலவு போனாலும் பரவாயில்லை.

நல்ல சாப்பாடுகளை செய்து கொடுப்பதுடன் மூன்று பிள்ளைகளுக்கும் சைக்கிள் ஒன்று வாங்கிக் கொடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
<b>டினேஸ் இராசரத்தினம் விடுதலை தொடர்பாக ஈராக்கிய பிரதிநிதி ஒருவரின் தகவல். </b>

ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பார ஊர்திச் சாரதி டினேஸ் இராசரத்தினம் விடுதலைக்கு இலண்டனில் உள்ள ஈராக்கிய ஆயுதக்குழுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்பு கொண்டால் டினேஸ் இராசரத்தினம் விடுதலையாகலாம் என ஈராக்கில் படைநகர்த்தும் மிகப்பெரும் தளபதி ஒருவரின் குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துள்ளார். டினேஸ் இராசரத்தினம் தொடர்பாகத் தாம் கேள்விப்பட்டதாகவும் இவருடைய விடுதலை தொடர்பாக இலண்டனில் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக அவரின் விடுதலையை இலகுவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

ஈராக்கில் நீண்டகாலமாக பெயர் குறிப்பிட விரும்பாத மிகப்பெரும் அமைப்பினை நாடாத்தி வரும் தலைவரின் உடன் பிறந்த பெயர் குறிப்பிட விரும்பாத சகோதரர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு ஈராக்கிற்குள் அதிக தொடர்புகளை மக்கள் மத்தியில் பேணிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது கருத்து...

தமிழ் இளைஞரின் விடுதலை தொடர்பாக ஈராக்கில் போராடிவரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவருடன் தொடர்பு கொண்டு ஓர் தமிழ்ப் பத்திரிகையாளர் கலந்துரையாடி இத்தகவலை எமக்கு மின்னஞ்சலூடாக அனுப்பி வைத்துள்ளார்.

சமீபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தின் நன்மை கருதி இச்செய்தியைப் பிரசுரம் செய்கிறோம். இச்செய்தியை அனுப்பியவரின் செய்தியே தவிர நிதர்சனத்தின் செய்தி இல்லை என்பதையும் நிதர்சனம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது. பல காரணங்களிற்காக தீவிரவாத அமைப்பின் பெயரும் அதன் தலைவரின் பெயரும் குரல் கொடுத்தவரின் பெயரும் மறைக்கப்பட்டிருக்கிறது.

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/em0aillll.JPG' border='0' alt='user posted image'>

nitharsanam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
அவர்கள் நினைப்பதில் தவறில்லை என்றே நான் எண்ணுகின்றேன் ஏனெனில் நிதர்சனம் என்பது உண்மையை வெளிக்கொணரும் வெளியீட்டுப்பிரிவான தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப்பிரிவின் ஒரு பகுதியாகும். ஆனால் ஆதே பெயரில் இணையம் நடத்தும் போது சந்தேகங்கள் எழுவது தவிர்க்க முடியாதவை... ஆனால் நிதர்சனம் பிரித்தானியாவிலிருந்து தனியாரால் நிர்வகிக்கப்படும் இணையம் என்பது ஈழத்தமிழர்களுக்கும் அதை உங்று நோக்கும் தமிழர்களுக்கும் தெரியுமு; இவர்கள் புலிகளை உள்ளே கொண்டு செல்ல வேண்டும் (செய்தி பற்றி விடையத்துள்) என்று எழுதியிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. தவறான புரிந்துணர்வால் எழுதியிருந்தால் இது திருத்தப்பட் வேண்டியது
-நேசமுடன் நிதர்சன்-

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டுள்ள ட்ரக் வண்டி சாரதியான தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினம் 'அன்சாருள் சுன்னா" என்ற அமைப்பினாலேயே கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் குவைத்திலுள்ள இலங்கை தூதராலயம் ஊடாக இன்று தொலைநகல் தகவலொன்று அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், கடத்தல் காரர்களினால் இதுவரை எந்தவொரு கோரிக்கையும் முன் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் டைம்ஸ் பத்திரிகை உட்பட அந் நாட்டில் வெளியாகும் அநேகமான பத்திரிகைகளில் கடத்தப்பட்டவரின் குடும்பம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் இன்று பிரசுரமாகியுள்ளது.

இது அவரது விடுதலைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதே வேளை குறிப்பிட்ட ட்ரக் வண்டி சாரதி பணியாற்றிய குவைத் அல் ஜசீரா போக்குவரத்து நிறுவனம் கடத்தல் காரர்கள் கப்பம் கோரினால் அதனை செலுத்துவதற்கு தாம் தயார் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை வெளி விவகார அமைச்சு அதிகாரிகள் இன்று தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினத்தின் வத்தளை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு காரணமாக தனது கணவன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவரது மனைவி டொரீன் ரீட்டா ராஜரத்தினம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வாகனச் சாரதி தினேஸ் இராசரத்தினத்தின் விடுதலைக்கு அனைத்துத் தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமென தினேஸ் இராசரத்தினம் அவர்களின் குடும்பத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தனது கணவர் குடும்பச்சுமை காரணமாகவே ஈராக்கில் உள்ள குவைத் கம்பனி ஒன்றில் வாகனச் சாரதியாக வேலை செய்து வந்தவர்.

குடும்பத்தைக் காப்பாற்ற தொழில் hPதியாக இவர் குவைத் கம்பனியில் இணைந்து கொண்டார் என்றும், இவர் அமெரிக்கப் படைகளின் உதவியாளராகத் தொழிற்படவில்லை என்றும், குடும்பத்தைப் பாதுகாக்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் இளம் குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவரை விடுதலை செய்து உதவும்படியும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைத் தாயகமாகவும் தற்போது வத்தளையில் வசித்து வருபவருமான இவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் உறவுகள் பலரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் இவரின் விடுதலைக்கு உதவுவதாகவும் பலவித ஊடகங்களுடாகவும் இணையத் தளங்களுடாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட 38 வயதுடைய தினேஸ் தர்மேந்திரா இராசரத்தினம் விடுதலை செய்யப்படலாம் என நம்புவதாக அல்-ஜசீரா தொலைக்காட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

puthinam.com
Reply
#16
nitharsanam news il enna thavaru irukku. Tamil makkalin nanma karuthi antha news podappaddirukku.

same time antha news kkum web kkum no connection endum irukku. so it is grate matter. jarum Iakuvaka tamilana viduthala seija ithu nalla news. nitharsan karuththu pilai
Reply
#17
ஏதோ அப்பா... அந்த தமிழன் தலை தப்பி வந்தால் போதும்...இல்ல அல்லாகோ அப்பர் என்று கொண்டு ஆடறுக்கிற மாதிரி மனிசர அறுக்கிறாங்கள்...நரபலிக்கூட்டம்... :evil: :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
நேற்று திங்கட்கிழமை ஈராக் தலைநகர் பக்தாத்தின் அல்-மன்சுூர் பகுதியில் வைத்து மேலுமொரு இலங்கையர் தீவிரவாதிகளால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஒரு அமெரிக்கர், இரு அரபுக்கள் மற்றும் ஒரு இலங்கையர் என நான்கு பேர் பக்தாத்தில் வைத்து பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு காவலாளியும், ஒரு கடத்தல்காரரும் பலியானதாக பக்தாத்திலுள்ள அமெரிக்கத் து}தரக அதிகாரியான பொப் கலகான் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்.கொம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
<img src='http://tamilchurch.homestead.com/MrsThineshRajaratnam.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டுள்ள ட்ரக் வண்டி சாரதியான தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினம் 'அன்சாருள் சுன்னா" என்ற அமைப்பினாலேயே கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால இன்று தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில் குவைத்திலுள்ள இலங்கை தூதராலயம் ஊடாக இன்று தொலைநகல் தகவலொன்று அமைச்சிற்கு கிடைத்துள்ளதாகவும், கடத்தல் காரர்களினால் இதுவரை எந்தவொரு கோரிக்கையும் முன் வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈராக் டைம்ஸ் பத்திரிகை உட்பட அந் நாட்டில் வெளியாகும் அநேகமான பத்திரிகைகளில் கடத்தப்பட்டவரின் குடும்பம் விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோள் இன்று பிரசுரமாகியுள்ளது.

இது அவரது விடுதலைக்கு சாதகமாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதே வேளை குறிப்பிட்ட ட்ரக் வண்டி சாரதி பணியாற்றிய குவைத் அல் ஜசீரா போக்குவரத்து நிறுவனம் கடத்தல் காரர்கள் கப்பம் கோரினால் அதனை செலுத்துவதற்கு தாம் தயார் என்று அறிவித்துள்ளது.

இதற்கிடையில் இலங்கை வெளி விவகார அமைச்சு அதிகாரிகள் இன்று தினேஷ் தர்மேந்திரா ராஜரத்தினத்தின் வத்தளை வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு காரணமாக தனது கணவன் விடுவிக்கப்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக அவரது மனைவி டொரீன் ரீட்டா ராஜரத்தினம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈராக்கியத் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வாகனச் சாரதி தினேஸ் இராசரத்தினத்தின் விடுதலைக்கு அனைத்துத் தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டுமென தினேஸ் இராசரத்தினம் அவர்களின் குடும்பத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

தனது கணவர் குடும்பச்சுமை காரணமாகவே ஈராக்கில் உள்ள குவைத் கம்பனி ஒன்றில் வாகனச் சாரதியாக வேலை செய்து வந்தவர்.

குடும்பத்தைக் காப்பாற்ற தொழில் hPதியாக இவர் குவைத் கம்பனியில் இணைந்து கொண்டார் என்றும், இவர் அமெரிக்கப் படைகளின் உதவியாளராகத் தொழிற்படவில்லை என்றும், குடும்பத்தைப் பாதுகாக்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் இளம் குழந்தைகளின் தந்தை என்ற வகையில் அவரை விடுதலை செய்து உதவும்படியும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைத் தாயகமாகவும் தற்போது வத்தளையில் வசித்து வருபவருமான இவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜரோப்பா, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியாவில் வாழ்கின்ற இலங்கைத் தமிழ் உறவுகள் பலரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை இவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் இவரின் விடுதலைக்கு உதவுவதாகவும் பலவித ஊடகங்களுடாகவும் இணையத் தளங்களுடாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட 38 வயதுடைய தினேஸ் தர்மேந்திரா இராசரத்தினம் விடுதலை செய்யப்படலாம் என நம்புவதாக அல்-ஜசீரா தொலைக்காட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நன்றி புதினம்..!
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
not puthinam Thanks virakesari.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)